being created

சுதேசமித்திரன்: Difference between revisions

From Tamil Wiki
(Para Added, Inter Link Created;)
(Para Added, Images Added, Inter Link Created;)
Line 7: Line 7:
1893-ல், வாரம் இருமுறை இதழாகச் சுதேசமித்திரன் வெளிவந்தது. 1897-ல், வாரம் மும்முறையானது. 1899-ல், நாளிதழானது. அரசியல், சமூகம், தேசியம் சார்ந்து பல செய்திகளை சுதேசமித்திரன் வெளியிட்டது. நாட்டுப்பற்றுடன், மொழிப்பற்று வளரவும் உறுதுணையாக இருந்தது. மக்களிடையே அரசியல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

[[சி.வி. சுவாமிநாதையர்]] இதன் ஆசிரியராகச் சேர்ந்ததும் இதழ் மேலும் பொலிவு பெற்றது. விற்பனை உயர்ந்தது. பின் சுவாமிநாதையர் விலகி ‘[[விவேக சிந்தாமணி]]’ இதழைத் தோற்றுவித்தார் என்றாலும் விற்பனையில் மாற்றமில்லாமல் தொடர்ந்தது. 1904-ல், [[சி.சுப்ரமணிய பாரதியார்|சுப்ரமணிய பாரதியார்]] இதன் ஆசிரியராகச் சேர்ந்தார். அவருடைய எழுத்துக்களால் சுதேசமித்திரன் மேலும் பொலிவு பெற்றது. பாரதி, குறிப்பிடத்தக்க பல கவிதை, கட்டுரைகளை இவ்விதழில் எழுதினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஆசிரியருடன் எழுந்த சிறு கருத்துவேறுபாட்டால் பாரதி இவ்விதழிலிருந்து விலகினார். என்றாலும் இதழ் வெற்றிகரமாகத் தொடர்ந்தது.  

1915-ல் சுப்பிரமணிய ஐயருக்கு உடல்நலம் குன்றியது. அதனால் இதழை தஞ்சையில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த ஏ.ரங்கசாமி ஐயங்காரிடம் ஒப்படைத்தார். ரங்கசாமி ஐயங்கார் ஹிந்துவின் நிறுவனரான எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்காரின் மருமகன். ஹிந்துவில் மேலாளராகப் பணியாற்றி நல்ல அனுபவம் பெற்றவர். அந்த அனுபவம், அவருக்கு மித்திரன் ஆசிரியர் ஆனதும் கை கொடுத்தது. இதழ் மேலும் பொலிவு பெற்றது.

Line 13: Line 13:
ரங்கசாமி ஐயங்கார் பாரதியின் மீது பெரு மதிப்புக் கொண்டவர். அக்காலக் கட்டத்தில் புதுச்சேரியில் வசித்து வந்த பாரதியை தொடர்ந்து சுதேசமித்திரனுக்கு எழுத வேண்டினார். பாரதியின் புகழ் பெற்ற “தராசு”க் கட்டுரைகள் அவ்வாறு வெளியானவையே.  

ஆண்டுதோறும் வெளியான சுதேசமித்திரன் அநுபந்தம் அக்காலத்தில் பலராலும் வரவேற்கப்பட்டது. நாளடைவில் தனது உறவினரான சி.ஆர். ஸ்ரீநிவாசனை மேலாளராக நியமித்தார் ஐயங்கார். பிற்காலத்தில் [[சி.ஆர். ஸ்ரீனிவாசன்]] நல்ல அனுபவம் பெற்று சுதேசமித்திரனின் ஆசிரியரானார். இதழையும் வெற்றிகரமாக நடத்தினார். பல கதைகளை, கட்டுரைகளை சுதேசமித்திரனில் எழுதினார்.
ஆண்டுதோறும் வெளியான சுதேசமித்திரன் அநுபந்தம் அக்காலத்தில் பலராலும் வரவேற்கப்பட்டது. நாளடைவில் தனது உறவினரான [[ஸி.ஆர். ஸ்ரீநிவாசன்|ஸி.ஆர். ஸ்ரீநிவாசனை]] மேலாளராக நியமித்தார் ஐயங்கார். பிற்காலத்தில் ஸி.ஆர். ஸ்ரீநிவாசன் நல்ல அனுபவம் பெற்று சுதேசமித்திரனின் ஆசிரியரானார். இதழையும் வெற்றிகரமாக நடத்தினார். பல கதைகளை, கட்டுரைகளை சுதேசமித்திரனில் எழுதினார்.
 
கடையத்தில் வசித்து வந்த பாரதியை சுதேசமித்திரனில் சேருமாறு ரங்கசாமி ஐயங்கார் தொடர்ந்து வற்புறுத்தியதால் அதனை ஏற்றுக் கொண்ட பாரதி, 1920-ல் அதன் உதவி ஆசிரியரானார். பாரதியின் ஆசிரியத்துவத்தில் மிகச் சிறப்பாக வெளிவர ஆரம்பித்தது மித்திரன். கதை, கவிதை, கட்டுரைகள், சமூக விஷயங்கள் என்று நிறைய எழுதினார் பாரதி. பாரதியின் மறைவுக்குப் பின்னரும் இதழ் சிறப்புடன் வெளிவந்தது. சுதேசமித்திரனின் வெற்றியைத் தொடர்ந்து [[மாத்வ மித்திரன்]], [[ஷத்திரிய மித்ரன்]], [[செங்குந்த மித்ரன்]], [[யாதவ மித்ரன்]] என்று பல இதழ்கள் வெளிவந்தன.
கடையத்தில் வசித்து வந்த பாரதியை சுதேசமித்திரனில் சேருமாறு ரங்கசாமி ஐயங்கார் தொடர்ந்து வற்புறுத்தியதால் அதனை ஏற்றுக் கொண்ட பாரதி, 1920-ல் அதன் உதவி ஆசிரியரானார். பாரதியின் ஆசிரியத்துவத்தில் மிகச் சிறப்பாக வெளிவர ஆரம்பித்தது மித்திரன். கதை, கவிதை, கட்டுரைகள், சமூக விஷயங்கள் என்று நிறைய எழுதினார் பாரதி.
[[File:Mohanangi by Vaduvur K.Duraisami Iyengar.jpg|thumb|வடுவூர் கே. துரைசாமி ஐயங்காரின் மோகனாங்கி]]
 
[[File:Subbudu.jpg|thumb|துப்பறியும் சுப்புடு (படம் நன்றி: பசுபதிவுகள்)]]
பாரதியின் மறைவுக்குப் பின்னரும் இதழ் சிறப்புடன் வெளிவந்தது. சுதேசமித்திரனின் வெற்றியைத் தொடர்ந்து [[மாத்வ மித்திரன்]], [[ஷத்திரிய மித்ரன்]], [[செங்குந்த மித்ரன்]], [[யாதவ மித்ரன்]] என்று பல இதழ்கள் வெளிவந்தன.

== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==
சுதேசமித்திரன், காந்தி மற்றும் காங்கிரஸ் ஆதரவு இதழாக இருந்தது. சிறுகதை, நாவல் தொடர், கட்டுரை, பாடல்கள், துணுக்குகள், உலகச் செய்திகள், சுதேச வர்த்தமானங்கள், இசை விமர்சனங்கள், நூல் மதிப்புரை எனப் பலவற்றிற்கு இடமளித்தது. படங்களுடன் கூடிய கட்டுரைகளை வெளியிட்டது.  

[[எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு|எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு]], [[குருமலை சுந்தரம்பிள்ளை]] உள்ளிட்ட அக்காலத்தின் புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் பலர் மித்திரனில் தொடர்கதைகள் எழுதியுள்ளனர். பாரதியின் புதல்வி [[தங்கம்மாள் பாரதி]] தன் தந்தையின் நினைவுகளை, ‘பாரதி - புதுவை நிகழ்ச்சிகள்’ என்ற தலைப்பில் தொடராக எழுதினார். ’வேள்வி’ என்ற தலைப்பில் சிறு நாடகத் தொடர் ஒன்றையும், மேலும் சில கட்டுரைகளையும் அவர் எழுதினார். மகாகனம் [[வி.எஸ். ஸ்ரீநிவாஸ சாஸ்திரி|வி.எஸ். ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார்]] தன் வாழ்க்கை நிகழ்வுகளைத் தொடராக எழுதினார். விடுதலைப் போராட்ட வீரர் [[தீரர் எஸ். சத்தியமூர்த்தி]] எழுதிய கடிதக் குறிப்புகள், ‘ஸ்ரீ ஸத்யமூர்த்தியின் கடிதங்கள்’ என்ற தலைப்பில் வெளியானது. திரைப்பட விமர்சனங்களும் ஆரம்ப கால இதழில் வெளியாகியுள்ளன. பத்திரிகை/ நூல்கள் விமர்சனப் பகுதியும் ‘புஸ்தக விமர்சம்’ என்ற தலைப்பில் இடம் பெற்றது.  

[[ய.மகாலிங்க சாஸ்திரி|ய. மகாலிங்க சாஸ்திரி]], [[வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்|வடுவூர் துரைசாமி ஐயங்கார்]], [[வ.ராமசாமி ஐயங்கார்|வ.ரா]]., [[க.நா.சுப்ரமணியம்|க.நா.சுப்ரமண்யம்]] போன்றோரும் மித்திரனில் பங்களித்துள்ளனர். ’க.நா.சுப்ரமண்யம்’ பல சிறுகதைகளை, மொழிபெயர்ப்புகளை, கட்டுரைகளை இவ்விதழில் எழுதியிருக்கிறார். அவரது முதல் நாவலாகக் கருதப்படும் ‘[[சர்மாவின் உயில்]]’ சுதேசமித்திரனில் தான் தொடராக வெளியானது. புகழ்பெற்ற சான்றோர்கள் பற்றி ‘தென்னிந்தியப் பிரமுகர்கள்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. [[பி.ஸ்ரீ. ஆச்சார்யா|பி.ஸ்ரீ]]. [[மகாபாரதம்|, மகாபாரதம்]] குறித்து ஆராய்ந்து ‘மகாபாரத ஸாரம்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். [[கி. வா. ஜகந்நாதன்|கி.வா.ஜகந்நாதனின்]] ‘நாடோடிப் பாட்டுக்கள்’ உள்ளிட்ட பல இலக்கியக் கட்டுரைகள் வெளியாகின.  

‘மோகனாங்கி அல்லது திவான் திருமலைராயன் ஸாகஸம்’ என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதியிருக்கிறார் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார். இது அவரது வழக்கமான பாணி துப்பறியும் நாவல் அல்ல. சரித்திர நாவல். நாயக்கர் காலத்தைப் பின்னணியாகக் கொண்டது. [[கா.சி.வேங்கடரமணி|கா.சி. வேங்கடரமணி]] எழுதிய தமிழின் முதல் தேசிய சிந்தனை நாவலாகக் கருதப்படும் ‘[[தேசபக்தன் கந்தன்]]’ முதன் முதலில் தொடராக வெளியானது சுதேசமித்திரனில்தான். [[தி.ஜானகிராமன்|தி.ஜானகிராமனின்]] புகழ்பெற்ற ‘[[மோகமுள்]]’ இதில் தான் தொடராக வெளியானது. எழுத்தாளர் ’[[ஆர்வி]]’யின் ‘வஸூமதி’ இதில் தொடர்கதையாக வெளியாகியுள்ளது. இசைக் கச்சேரிகள் பற்றியும் இசை விற்பன்னர்கள் பற்றியும் ‘கண்டதும் கேட்டதும்’ என்ற தலைப்பில், ‘நீலம்’ என்ற பெயரில் மித்திரனின் உதவி ஆசிரியர் ‘நீலமேகம்’ கட்டுரைகள் எழுதியுள்ளார். கர்நாடக இசை தொடர்பான பாடல் ஸ்வரக் குறிப்புகளும் இதழ்தோறும் வெளிவந்தன.  
‘மோகனாங்கி அல்லது திவான் திருமலைராயன் ஸாகஸம்’ என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதியிருக்கிறார் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார். இது அவரது வழக்கமான பாணி துப்பறியும் நாவல் அல்ல. சரித்திர நாவல். நாயக்கர் காலத்தைப் பின்னணியாகக் கொண்டது. [[கா.சி.வேங்கடரமணி|கா.சி. வேங்கடரமணி]] எழுதிய தமிழின் முதல் தேசிய சிந்தனை நாவலாகக் கருதப்படும் ‘[[தேசபக்தன் கந்தன்]]’ முதன் முதலில் தொடராக வெளியானது சுதேசமித்திரனில்தான். [[தி.ஜானகிராமன்|தி.ஜானகிராமனின்]] புகழ்பெற்ற ‘[[மோகமுள்]]’ இதில் தான் தொடராக வெளியானது. எழுத்தாளர் ’[[ஆர்வி]]’யின் ‘வஸூமதி’ இதில் தொடர்கதையாக வெளியாகியுள்ளது. இசைக் கச்சேரிகள் பற்றியும் இசை விற்பன்னர்கள் பற்றியும் ‘கண்டதும் கேட்டதும்’ என்ற தலைப்பில், ‘நீலம்’ என்ற பெயரில் மித்திரனின் உதவி ஆசிரியர் ‘நீலமேகம்’ கட்டுரைகள் எழுதியுள்ளார். கர்நாடக இசை தொடர்பான பாடல் ஸ்வரக் குறிப்புகளும் இதழ்தோறும் வெளிவந்தன. துப்பறியும் சாம்புவை நினைவுபடுத்தும் வகையில் ‘துப்பறியும் சுப்புடு’ என்னும் படக்கதையும் வெளியானது.
 
Revision as of 09:45, 27 November 2022

சுதேசமித்திரன் வார இதழ் - 1931 : (படம் நன்றி : ஸ்ரீதேவி ரங்கராஜ்)
சுதேசமித்திரன் வார இதழ் - 1941

சுதேசமித்திரன், தமிழில் வெளியான முதல் நாளிதழ். 1882-ல், வார இதழாகத் தொடங்கப்பட்ட சுதேசமித்திரன், 1899 முதல் நாளிதழாக வெளிவந்தது. இதனைத் தொடங்கியவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். இவர் ஹிந்து நாளிதழின் ஆசிரியர். விடுதலை வேட்கை உணர்வை வெளிப்படுத்தும் இதழ்கள் தமிழில் அக்காலத்தில் இல்லை என்பதால், அதற்காகவே சுதேசமித்திரன் இதழைத் தொடங்கினார். மக்களிடையே அரசியல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சுதேசமித்திரன் இதழின் முக்கிய நோக்கமாக இருந்தது. பாரதியார் இவ்விதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

பதிப்பு, வரலாறு

தேசபக்தராக இருந்த ஜி. சுப்பிரமணிய ஐயர், ஹிந்து நாளிதழின் ஆசிரியர். அக்காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஆங்கில இதழ்களைப் போலத் தமிழிலும் ஒரு இதழ் கொண்டு வர வேண்டுமென்று விரும்பினார். தேசிய உணர்வையும் விடுதலை வேட்கையையும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக, 1882, மார்ச்சில் சுதேசமித்திரன் இதழைத் தொடங்கினார்.

1893-ல், வாரம் இருமுறை இதழாகச் சுதேசமித்திரன் வெளிவந்தது. 1897-ல், வாரம் மும்முறையானது. 1899-ல், நாளிதழானது. அரசியல், சமூகம், தேசியம் சார்ந்து பல செய்திகளை சுதேசமித்திரன் வெளியிட்டது. நாட்டுப்பற்றுடன், மொழிப்பற்று வளரவும் உறுதுணையாக இருந்தது. மக்களிடையே அரசியல், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

சி.வி. சுவாமிநாதையர் இதன் ஆசிரியராகச் சேர்ந்ததும் இதழ் மேலும் பொலிவு பெற்றது. விற்பனை உயர்ந்தது. பின் சுவாமிநாதையர் விலகி ‘விவேக சிந்தாமணி’ இதழைத் தோற்றுவித்தார் என்றாலும் விற்பனையில் மாற்றமில்லாமல் தொடர்ந்தது. 1904-ல், சுப்ரமணிய பாரதியார் இதன் ஆசிரியராகச் சேர்ந்தார். அவருடைய எழுத்துக்களால் சுதேசமித்திரன் மேலும் பொலிவு பெற்றது. பாரதி, குறிப்பிடத்தக்க பல கவிதை, கட்டுரைகளை இவ்விதழில் எழுதினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஆசிரியருடன் எழுந்த சிறு கருத்துவேறுபாட்டால் பாரதி இவ்விதழிலிருந்து விலகினார். என்றாலும் இதழ் வெற்றிகரமாகத் தொடர்ந்தது.

1915-ல் சுப்பிரமணிய ஐயருக்கு உடல்நலம் குன்றியது. அதனால் இதழை தஞ்சையில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த ஏ.ரங்கசாமி ஐயங்காரிடம் ஒப்படைத்தார். ரங்கசாமி ஐயங்கார் ஹிந்துவின் நிறுவனரான எஸ்.கஸ்தூரிரங்க ஐயங்காரின் மருமகன். ஹிந்துவில் மேலாளராகப் பணியாற்றி நல்ல அனுபவம் பெற்றவர். அந்த அனுபவம், அவருக்கு மித்திரன் ஆசிரியர் ஆனதும் கை கொடுத்தது. இதழ் மேலும் பொலிவு பெற்றது.

ரங்கசாமி ஐயங்கார் பாரதியின் மீது பெரு மதிப்புக் கொண்டவர். அக்காலக் கட்டத்தில் புதுச்சேரியில் வசித்து வந்த பாரதியை தொடர்ந்து சுதேசமித்திரனுக்கு எழுத வேண்டினார். பாரதியின் புகழ் பெற்ற “தராசு”க் கட்டுரைகள் அவ்வாறு வெளியானவையே.

ஆண்டுதோறும் வெளியான சுதேசமித்திரன் அநுபந்தம் அக்காலத்தில் பலராலும் வரவேற்கப்பட்டது. நாளடைவில் தனது உறவினரான ஸி.ஆர். ஸ்ரீநிவாசனை மேலாளராக நியமித்தார் ஐயங்கார். பிற்காலத்தில் ஸி.ஆர். ஸ்ரீநிவாசன் நல்ல அனுபவம் பெற்று சுதேசமித்திரனின் ஆசிரியரானார். இதழையும் வெற்றிகரமாக நடத்தினார். பல கதைகளை, கட்டுரைகளை சுதேசமித்திரனில் எழுதினார். கடையத்தில் வசித்து வந்த பாரதியை சுதேசமித்திரனில் சேருமாறு ரங்கசாமி ஐயங்கார் தொடர்ந்து வற்புறுத்தியதால் அதனை ஏற்றுக் கொண்ட பாரதி, 1920-ல் அதன் உதவி ஆசிரியரானார். பாரதியின் ஆசிரியத்துவத்தில் மிகச் சிறப்பாக வெளிவர ஆரம்பித்தது மித்திரன். கதை, கவிதை, கட்டுரைகள், சமூக விஷயங்கள் என்று நிறைய எழுதினார் பாரதி. பாரதியின் மறைவுக்குப் பின்னரும் இதழ் சிறப்புடன் வெளிவந்தது. சுதேசமித்திரனின் வெற்றியைத் தொடர்ந்து மாத்வ மித்திரன், ஷத்திரிய மித்ரன், செங்குந்த மித்ரன், யாதவ மித்ரன் என்று பல இதழ்கள் வெளிவந்தன.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்காரின் மோகனாங்கி
துப்பறியும் சுப்புடு (படம் நன்றி: பசுபதிவுகள்)

உள்ளடக்கம்

சுதேசமித்திரன், காந்தி மற்றும் காங்கிரஸ் ஆதரவு இதழாக இருந்தது. சிறுகதை, நாவல் தொடர், கட்டுரை, பாடல்கள், துணுக்குகள், உலகச் செய்திகள், சுதேச வர்த்தமானங்கள், இசை விமர்சனங்கள், நூல் மதிப்புரை எனப் பலவற்றிற்கு இடமளித்தது. படங்களுடன் கூடிய கட்டுரைகளை வெளியிட்டது. எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு, குருமலை சுந்தரம்பிள்ளை உள்ளிட்ட அக்காலத்தின் புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் பலர் மித்திரனில் தொடர்கதைகள் எழுதியுள்ளனர். பாரதியின் புதல்வி தங்கம்மாள் பாரதி தன் தந்தையின் நினைவுகளை, ‘பாரதி - புதுவை நிகழ்ச்சிகள்’ என்ற தலைப்பில் தொடராக எழுதினார். ’வேள்வி’ என்ற தலைப்பில் சிறு நாடகத் தொடர் ஒன்றையும், மேலும் சில கட்டுரைகளையும் அவர் எழுதினார். மகாகனம் வி.எஸ். ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார் தன் வாழ்க்கை நிகழ்வுகளைத் தொடராக எழுதினார். விடுதலைப் போராட்ட வீரர் தீரர் எஸ். சத்தியமூர்த்தி எழுதிய கடிதக் குறிப்புகள், ‘ஸ்ரீ ஸத்யமூர்த்தியின் கடிதங்கள்’ என்ற தலைப்பில் வெளியானது. திரைப்பட விமர்சனங்களும் ஆரம்ப கால இதழில் வெளியாகியுள்ளன. பத்திரிகை/ நூல்கள் விமர்சனப் பகுதியும் ‘புஸ்தக விமர்சம்’ என்ற தலைப்பில் இடம் பெற்றது.

ய. மகாலிங்க சாஸ்திரி, வடுவூர் துரைசாமி ஐயங்கார், வ.ரா., க.நா.சுப்ரமண்யம் போன்றோரும் மித்திரனில் பங்களித்துள்ளனர். ’க.நா.சுப்ரமண்யம்’ பல சிறுகதைகளை, மொழிபெயர்ப்புகளை, கட்டுரைகளை இவ்விதழில் எழுதியிருக்கிறார். அவரது முதல் நாவலாகக் கருதப்படும் ‘சர்மாவின் உயில்’ சுதேசமித்திரனில் தான் தொடராக வெளியானது. புகழ்பெற்ற சான்றோர்கள் பற்றி ‘தென்னிந்தியப் பிரமுகர்கள்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. பி.ஸ்ரீ. , மகாபாரதம் குறித்து ஆராய்ந்து ‘மகாபாரத ஸாரம்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கி.வா.ஜகந்நாதனின் ‘நாடோடிப் பாட்டுக்கள்’ உள்ளிட்ட பல இலக்கியக் கட்டுரைகள் வெளியாகின.

‘மோகனாங்கி அல்லது திவான் திருமலைராயன் ஸாகஸம்’ என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதியிருக்கிறார் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார். இது அவரது வழக்கமான பாணி துப்பறியும் நாவல் அல்ல. சரித்திர நாவல். நாயக்கர் காலத்தைப் பின்னணியாகக் கொண்டது. கா.சி. வேங்கடரமணி எழுதிய தமிழின் முதல் தேசிய சிந்தனை நாவலாகக் கருதப்படும் ‘தேசபக்தன் கந்தன்’ முதன் முதலில் தொடராக வெளியானது சுதேசமித்திரனில்தான். தி.ஜானகிராமனின் புகழ்பெற்ற ‘மோகமுள்’ இதில் தான் தொடராக வெளியானது. எழுத்தாளர் ’ஆர்வி’யின் ‘வஸூமதி’ இதில் தொடர்கதையாக வெளியாகியுள்ளது. இசைக் கச்சேரிகள் பற்றியும் இசை விற்பன்னர்கள் பற்றியும் ‘கண்டதும் கேட்டதும்’ என்ற தலைப்பில், ‘நீலம்’ என்ற பெயரில் மித்திரனின் உதவி ஆசிரியர் ‘நீலமேகம்’ கட்டுரைகள் எழுதியுள்ளார். கர்நாடக இசை தொடர்பான பாடல் ஸ்வரக் குறிப்புகளும் இதழ்தோறும் வெளிவந்தன. துப்பறியும் சாம்புவை நினைவுபடுத்தும் வகையில் ‘துப்பறியும் சுப்புடு’ என்னும் படக்கதையும் வெளியானது.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.