second review completed

இளம்பூரணர்: Difference between revisions

From Tamil Wiki
Line 21: Line 21:
==உரைச்சிறப்பு==
==உரைச்சிறப்பு==

'இச்சூத்திரத்துள் ஒழிய என்னும் வினையெச்சம் எவ்வாறு முடிந்தது எனின், அது பாத்திய என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது. அப்பெயரெச்சம் பண்பு என்னும் பெயர் கொண்டு ஐந்திணை என்னும் எழுவாய்க்குப் பயனிலையாகி நின்றது என உரைப்ப - இது இளம்பூரணரின் உரைநடை வரிகளாகும்.
'இச்சூத்திரத்துள் ஒழிய என்னும் வினையெச்சம் எவ்வாறு முடிந்தது எனின், அது பாத்திய என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது. அப்பெயரெச்சம் பண்பு என்னும் பெயர் கொண்டு ஐந்திணை என்னும் எழுவாய்க்குப் பயனிலையாகி நின்றது என உரைப்ப - இது இளம்பூரணரின் உரைநடை வரிகளுக்கான எடுத்துக்காட்டு.

இவர் உரை தெளிந்த நீரோடை போன்றது. பற்றற்ற துறவி தூய்மையான வாழ்வு நடத்திமூத்து முதிர்ந்து காவி உடையுடன் அருள் பழுத்த நெஞ்சத்துடன் முகமலர்ந்து நம்மிடம் இன்சொல் பேசுவது போன்ற இன்ப உணர்வை இவர் உரை உண்டாக்குகிறது” என்று [[மு.வை.அரவிந்தன்]] குறிப்பிடுகிறார்.  
இவர் உரை தெளிந்த நீரோடை போன்றது. பற்றற்ற துறவி தூய்மையான வாழ்வு நடத்தி மூத்து முதிர்ந்து காவி உடையுடன் அருள் பழுத்த நெஞ்சத்துடன் முகமலர்ந்து நம்மிடம் இன்சொல் பேசுவது போன்ற இன்ப உணர்வை இவர் உரை உண்டாக்குகிறது” என்று [[மு.வை.அரவிந்தன்]] குறிப்பிடுகிறார்.  

காலப்போக்கில் பல உரைகளும் உரை ஆசிரியர்களும் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கியவர் இளம்பூரணர் எனலாம். இவர் தனக்குப் பின்னால் வருபவர்கள் பின்பற்றத்தக்க உரைமரபுகள் பலவற்றைத் தோற்றுவித்த உரை முன்னோடி எனலாம்.  

Line 44: Line 44:
இளம்பூரணரின் உரைத்திறன் பற்றி மு.இராகவய்யங்கார் “பிறர் உட்புகுந்து காணமுடியாவண்ணம் இருண்டு கிடந்த தொல்காப்பியம் எனும் சரக்கறையில்  தம் அறிவெனும் விளக்கைக் கொண்டு  குவிந்து கிடந்த பொக்கிஷங்களை உலகிற்கு  முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகையர்” என்று குறிப்பிடுகிறார்.

== உசாத்துணை ==
==உசாத்துணை==

* [https://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034553.htm இளம்பூரணரின் உரைநடை-தமிழ் இணைய கல்விக் கழகம்]  
*[https://www.tamilvu.org/courses/degree/p203/p2034/html/p2034553.htm இளம்பூரணரின் உரைநடை-தமிழ் இணைய கல்விக் கழகம்]
* [https://www.valaitamil.com/ilapurnarin-urai-marapugal_9040.html இளம்பூரணரின் உரை மரபுகள், வலைத்தமிழ்]
*[https://www.valaitamil.com/ilapurnarin-urai-marapugal_9040.html இளம்பூரணரின் உரை மரபுகள், வலைத்தமிழ்]
 
{{Second review completed}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 03:45, 19 July 2026

இளம்பூரணர் (உரையாசிரியர்) (பொ.யு. 11-ம் நூற்றாண்டு) தமிழ் உரையாசிரியர். இன்றுவரை தொல்காப்பியத்துக்குக் கிடைத்த உரைகளில் மிகப்பழைய உரையை எழுதியவர். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்களுள் காலத்தால் முற்பட்டவர், தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர். இதனால் உரையாசிரியர் என்ற பொதுப்பெயர் இவருக்கே உரிய சிறப்புப் பெயராக மாறிற்று. இவரை உரையாசிரியர் அல்லது உரை முதல்வர் என்று அழைத்தனர்.

வாழ்க்கைக் குறிப்பு

இளம்பூரணர் வேளாள மரபினராக இருக்கலாம் என்று அவரது உழவுத்தொழில் மற்றும் உணவு பற்றிய குறிப்புகளைக்கொண்டு அறிஞர்கள் கருதுகின்றனர். சமண சமயத்தவர் எனவும் கருதப்படுகிறது. இளம்பூரணரும் மணக்குடவரும் ஒருவரே என்று தி.வை.சதாசிவ பண்டாரத்தார் கருதினார். மு.அருணாசலம் இளம்பூரணரின் காலம் பொ.யு. 1070 முதல் பொ.யு. 1095 வரை இருக்கலாம் என வகுத்தார்.

13-ம் நூற்றாண்டுப் பவணந்தி முனிவர் இவரது உரையைத் தழுவி நன்னூல் என்னும் இலக்கண நூலைச் செய்திருப்பதாலும், அதே 13-ம் நூற்றாண்டு சேனாவரையர் தம் உரையில் இவரது உரையை மேற்கோள் காட்டுவதாலும், 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் இவரது பெயரைச் சொல்லிப் பாராட்டுவதாலும், இவர்கள் மூவரின் காலத்துக்கு முற்பட்டவர் என அறியப்படுகிறது.

"ஊரெனப்படுவது உறையூர், நாடெனப்படுவது சோணாடு" என்று இவர் கூறும் சான்றுகளைக் கொண்டு இவர் சோழநாட்டைச் சேர்ந்தவர் எனப் புலனாகிறது. இவர் தன் உரையின் பல இடங்களில் அவனுக்குச் சோறிடுக, உழுது வரும் சாத்தன், கூழ் உண்டான் என்பது போன்ற உழவுத் தொழில் பற்றிய சான்றுகளைத் தருவதால் வேளாளர் குலத்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

உரைகள்

பொ.யு. நான்காம் நூற்றாண்டிற்குப் பின் 11-ம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஏற்பட்ட அரசிய மாற்றங்களால் தொல்காப்பியம் அதிகம் பயிலப்படவில்லை. இளம்பூரணர் உரைக்குப்பின் தொல்காப்பியம் மீண்டும் பயிலப்பட்டது; தொல்காப்பிய இயக்கங்கள் தோன்றின.

இளம்பூரணர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை வரைந்துள்ளார். தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதிய முதலுரையாசிரியர் இவரே. இளம்பூரணர், பொதுவான ஒரு நெறியை உரை முழுவதும் மேற்கொண்டுள்ளார் என்று கூறலாம். அதிகார விளக்கம், இயல் பற்றிய சுருக்கம், நூற்பா நுதலும் பொருள், தெளிவுரை, சொல்தொடர் விளக்கம், மேற்கோள் விளக்கம் என்ற பொது அமைப்பு அவர் உரையில் காணப்படும். இளம்பூரணர் உரை சிறு சிறு வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.

தொல்காப்பிய நூற்பாக்களிலுள்ள சில கடினமான சொற்களுக்கு ' குயின் என்பது மேகம்', 'அழன் என்பது பிணம்' என அருஞ்சொற்பொருள் அளித்துள்ளார். சில இடங்களில் உவமை கூறிப் பொருள் விளக்குகிறார்.

பெயர் சுட்டாது உரை கூறுதல், அடக்கமாக உரை சொல்லுதல், ஒன்றிற்கு ஒன்று தொடர்பு காணல், நினைவு கூர்தல், பின்நோக்கிப் பார்த்து உரை கூறல், பொருத்திக் காட்டுதல், தாமே வினா எழுப்பி விடை காணுதல் என்பன அவரது உரைநடைத் தன்மையில் காணப்படுவதாக 'இளம்பூரணர் உரை' என்னும் நூலில் முனைவர் சா. கிருட்டிணமூர்த்தி குறிப்பிடுகிறார்.

இளம்பூரணர் மூல நூலாசிரியரிடத்துப் பெருமதிப்பு வைத்து எழுதுதல், பிறமொழிப் பயிற்சியோடு உரை எழுதுதல், வினாவிடைப் பாங்கு, சொற்பொருள் தருதல், பலதுறை அறிவோடு உரை எழுதுதல், பல நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுதல், தம் கால வாழ்வியல் நெறிகளைப் புலப்படுத்துதல் போன்ற உரை மரபுகள் பலவற்றைக் கையாண்டு உரை எழுதியுள்ளார். புகழ்பெற்ற வடமொழி இலக்கண நூலான பாணினீயத்தை இரண்டு முறை இளம்பூரணர் தம் உரையில் பயன்படுத்தியுள்ளார்.

உரைச்சிறப்பு

'இச்சூத்திரத்துள் ஒழிய என்னும் வினையெச்சம் எவ்வாறு முடிந்தது எனின், அது பாத்திய என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது. அப்பெயரெச்சம் பண்பு என்னும் பெயர் கொண்டு ஐந்திணை என்னும் எழுவாய்க்குப் பயனிலையாகி நின்றது என உரைப்ப - இது இளம்பூரணரின் உரைநடை வரிகளுக்கான எடுத்துக்காட்டு.

இவர் உரை தெளிந்த நீரோடை போன்றது. பற்றற்ற துறவி தூய்மையான வாழ்வு நடத்தி மூத்து முதிர்ந்து காவி உடையுடன் அருள் பழுத்த நெஞ்சத்துடன் முகமலர்ந்து நம்மிடம் இன்சொல் பேசுவது போன்ற இன்ப உணர்வை இவர் உரை உண்டாக்குகிறது” என்று மு.வை.அரவிந்தன் குறிப்பிடுகிறார்.

காலப்போக்கில் பல உரைகளும் உரை ஆசிரியர்களும் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கியவர் இளம்பூரணர் எனலாம். இவர் தனக்குப் பின்னால் வருபவர்கள் பின்பற்றத்தக்க உரைமரபுகள் பலவற்றைத் தோற்றுவித்த உரை முன்னோடி எனலாம்.

சொற்பொருள் தருதல்

இளம்பூரணர் பல இடங்களில் சொற்களின் பொருளை நன்கு விளக்கிச் சொல்கிறார். மாணாமை என்ற சொல்லிற்கு மிகாமை என்ற பொருள் கூறுகின்றார். உயர்வு என்ற சொல்லிற்கு விளக்கமாகப் பின்வருமாறு கூறுகின்றார் : “உயர்வு தாம் பல, குலத்தால் உயர்தலும், தவத்தால் உயர்தலும், நிலையால் உயர்தலும், உபகாரத்தால் உயர்தலும்” என விளக்குகின்றார். எழில் என்பதற்கு அழகு என்றுபொருள் கூறுகின்றார். சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்குபோன்ற நூல்களிலிருந்து பல பாடல்களை மேற்கோள் காட்டுகின்றார்.

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான(பொருளதிகாரம், 206)

என்ற நூற்பாவிற்கு உரை எழுதுங்கால்

  • செறிவு என்பது அடக்கம்
  • நிறைவு என்பது அமைதி
  • செம்மை என்பது மனம்கோடாமை
  • செப்பு என்பது சொல்லுதல்
  • அறிவு என்பது நன்மை, தீமை பயப்பனவும் அறிதல்
  • அருமை என்பது உள்ளக்கருத்தினை அறிதல்

என்று பொருள் உரைக்கிறார்.

இளம்பூரணரின் உரைத்திறன் பற்றி மு.இராகவய்யங்கார் “பிறர் உட்புகுந்து காணமுடியாவண்ணம் இருண்டு கிடந்த தொல்காப்பியம் எனும் சரக்கறையில் தம் அறிவெனும் விளக்கைக் கொண்டு குவிந்து கிடந்த பொக்கிஷங்களை உலகிற்கு முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகையர்” என்று குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

✔ Second review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.