குளம்பனார்: Difference between revisions
SakthivelS (talk | contribs) Created page with "குளம்பனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது. ==வாழ்க்கை குறிப்பு== குளம்பனார் சங்க காலப் புலவர்..." |
SakthivelS (talk | contribs) |
||
| Line 11: | Line 11: | ||
====நற்றிணை - 288==== | ====நற்றிணை - 288==== | ||
* திணை: குறிஞ்சி | * திணை: குறிஞ்சி | ||
* கூற்று: | * கூற்று: தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது | ||
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது | |||
<poem> | <poem> | ||
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு | அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு | ||
| Line 25: | Line 24: | ||
நெடு வேள் அணங்கிற்று'' என்னும்கொல் அதுவே? | நெடு வேள் அணங்கிற்று'' என்னும்கொல் அதுவே? | ||
</poem> | </poem> | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
* [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-292-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8C சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 2:தமிழ் பல்கலைகழகம்] | * [https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-292-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8C சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 2:தமிழ் பல்கலைகழகம்] | ||
Revision as of 13:41, 18 August 2025
குளம்பனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
குளம்பனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். குளம்பன் என்னும் இயற்பெயர் கொண்டவர் என்றும் குளம்பு என்னும் ஊரில் பிறந்தவராதலால் ஊரின் பெயரால் அறியப்படுகிறார் என்று இருவேறு கருத்துகள் உள்ளன.
இலக்கிய வாழ்க்கை
குளம்பனார் பாடிய பாடல் நற்றிணையில் 288 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது. வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவியை பார்க்க வரும் தலைவனிடத்து தலைவியின் நிலையை தோழி உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- காலை இளவெயில் குளிர் காய்வதற்காக மலையுச்சி பாறையில் ஆண் மயிலானது தன் இணையான பெண் மயிலுடன் வந்து நின்று தோகை விரித்தாடும்.
- தினைப்புனத்தை நெல் கொய்யும் கிளிகளிடமிருந்து காவல் காக்க செல்லும் மகளிர் மலைநாட்டு ஆடவரை கண்டு காதல் கொள்வர். பிரிவில் துயரால் பசலை நோயால் மெலிவர்.
- மகளின் சோர்வை கண்டு குறி சொல்லும் கட்டுவிச்சியை அழைத்து முற்றத்தில் நெல்பரப்பில் விளக்கேற்றி வைத்து பூசனைக்கு ஏற்பாடு செய்வர் தாய்மார்.
பாடல் நடை
நற்றிணை - 288
- திணை: குறிஞ்சி
- கூற்று: தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு
ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப்
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று,
நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ,
கட்டின் கேட்கும் ஆயின், வெற்பில்
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற்
சிறு கிளி கடிகம் சென்றும், இந்
நெடு வேள் அணங்கிற்று என்னும்கொல் அதுவே?
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.