பெருந்திணை(புறப்பொருள்): Difference between revisions
No edit summary |
|||
| Line 54: | Line 54: | ||
======பெண்பால் கூற்று====== | ======பெண்பால் கூற்று====== | ||
*[[வேட்கை முந்துறுத்தல்]] | * பெண்ணின் உணர்வுகள் | ||
*[[பின்நிலை முயறல்(பெருந்திணை)|பின்நிலை முயறல்]] | ** [[வேட்கை முந்துறுத்தல்]] | ||
*[[பிரிவிடை ஆற்றல்(பெருந்திணை)|பிரிவிடை ஆற்றல்]] | ** [[பின்நிலை முயறல்(பெருந்திணை)|பின்நிலை முயறல்]] | ||
*[[வரவு எதிர்ந்து இருத்தல்(பெருந்திணை)|வரவு எதிர்ந்து இருத்தல்]] | ** [[பிரிவிடை ஆற்றல்(பெருந்திணை)|பிரிவிடை ஆற்றல்]] | ||
*[[வாராமைக்கு அழிதல்(பெருந்திணை)|வாராமைக்கு அழிதல்]] | **[[வரவு எதிர்ந்து இருத்தல்(பெருந்திணை)|வரவு எதிர்ந்து இருத்தல்]] | ||
*இரவுத் தலைச்சேறல் | **[[வாராமைக்கு அழிதல்(பெருந்திணை)|வாராமைக்கு அழிதல்]] | ||
*[[இல்லவை நகுதல்(பெருந்திணை)|இல்லவை நகுதல்]] | **[[இரவுத் தலைச்சேறல்(பெருந்திணை)|இரவுத் தலைச்சேறல்]] | ||
*[[புலவியுள் புலம்பல்(பெருந்திணை)|புலவியுள் புலம்பல்]] | **[[இல்லவை நகுதல்(பெருந்திணை)|இல்லவை நகுதல்]] | ||
*[[பொழுதுகண்டு இரங்கல்(பெருந்திணை)|பொழுதுகண்டு இரங்கல்]] | **[[புலவியுள் புலம்பல்(பெருந்திணை)|புலவியுள் புலம்பல்]] | ||
*[[பரத்தையை ஏசல்(பெருந்திணை)|பரத்தையை ஏசல்]] | **[[பொழுதுகண்டு இரங்கல்(பெருந்திணை)|பொழுதுகண்டு இரங்கல்]] | ||
*[[கண்டு கண் சிவத்தல்(பெருந்திணை)|கண்டு கண் சிவத்தல்]] | *உறவின் தன்மை | ||
*[[காதலில் களித்தல்(பெருந்திணை)|காதலில் களித்தல்]] | **[[பரத்தையை ஏசல்(பெருந்திணை)|பரத்தையை ஏசல்]] | ||
*[[கொண்டு அகம் புகுதல்(பெருந்திணை)|கொண்டு அகம் புகுதல்]] | **[[கண்டு கண் சிவத்தல்(பெருந்திணை)|கண்டு கண் சிவத்தல்]] | ||
*[[கூட்டத்துக் குழைதல்(பெருந்திணை)|கூட்டத்துக் குழைதல்]] | **[[காதலில் களித்தல்(பெருந்திணை)|காதலில் களித்தல்]] | ||
*[[ஊடலுள் நெகிழ்தல்(பெருந்திணை)|ஊடலுள் நெகிழ்தல்]] | **[[கொண்டு அகம் புகுதல்(பெருந்திணை)|கொண்டு அகம் புகுதல்]] | ||
*[[உரைகேட்டு நயத்தல்(பெருந்திணை)|உரைகேட்டு நயத்தல்]] | **[[கூட்டத்துக் குழைதல்(பெருந்திணை)|கூட்டத்துக் குழைதல்]] | ||
*[[பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல்(பெருந்திணை)|பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல்]] | **[[ஊடலுள் நெகிழ்தல்(பெருந்திணை)|ஊடலுள் நெகிழ்தல்]] | ||
*[[பள்ளிமிசைத் தொடர்தல்(பெருந்திணை)|பள்ளிமிசைத் தொடர்தல்]] | **[[உரைகேட்டு நயத்தல்(பெருந்திணை)|உரைகேட்டு நயத்தல்]] | ||
*[[செல்க என விடுத்தல்(பெருந்திணை)|செல்க என விடுத்தல்]] | **[[பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல்(பெருந்திணை)|பாடகச் சீறடி பணிந்தபின் இரங்கல்]] | ||
**[[பள்ளிமிசைத் தொடர்தல்(பெருந்திணை)|பள்ளிமிசைத் தொடர்தல்]] | |||
**[[செல்க என விடுத்தல்(பெருந்திணை)|செல்க என விடுத்தல்]] | |||
======இருபால் கூற்று====== | ======இருபால் கூற்று====== | ||
Revision as of 03:13, 17 July 2025
தொல்காப்பியத்தில் அகத்திணையாகக் கொள்ளப்பட்ட பெருந்திணை, புறப்பொருள் வெண்பா மாலையில் புறத்திணையாக ஆக்கப்பட்டது. பொருந்தாக் காமம், மடல் ஏறுதல், மூத்த பெண்ணுடன் கூடுதல், மூத்த ஆடவனுடன் கூடுதல், முதிர்ந்த வயதில் காமம் துய்த்தல், கழிகாமம் கொள்ளுதல், விரும்பாதாரை வலிதில் புணர்தல் ஆகியவை பெருந்திணையின் பாற்படும்.
பெயர்க்காரணம்
ஏற்றத்தாழ்வான இருபக்க உறவால் உண்டாகும் தாழ்ந்த இன்ப ஒழுக்கம்’ என்றும் விளக்குகின்றனர். பெருவழக்காக இருந்ததால் பெருந்திணை என்று பெயர் பெற்றதாக இளம்பூரணர் கூறுவார்
இலக்கணம்
தொல்காப்பியம்
தொல்காப்பியம் பெருந்திணையை அகத்திணையாகக் கொள்கிறது. தொல்காப்பியர் கருத்துப்படி பெருந்திணை என்பது காதல் மிகையே ஆகும். பெரும் என்ற அடை மிகுதியையே குறிக்கிறது. மடலேறுதலும், இளமைக்காலம் சென்ற பின்பும் காதல் நுகர்வில் ஈடுபாடு காட்டலும், பிரிவின்போது ஆற்றாது மிக்க காமத்தை வெளிப்படுத்துவதும், பிரிவில் ஆற்றாது மிகுந்த துன்பம் கொள்ளலும் பெருந்திணையாகும். இவற்றைத் தொல்காப்பியர் ஏறிய மடல்திறம், இளமை தீர்திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடல் எனக் குறிப்பிடுவார்.
நம்பியகப்பொருள்
நம்பியகப்பொருள் பெருந்திணையை பொருந்தாக் காமம் எனக் குறிப்பிடுகிறது. அகப்பொருள் பெருந்திணை, அகப்புறப் பெருந்திணை என இரண்டாகப் பிரிக்கிறது,
மடலேறி வந்து மனைவியாக்கிக் கொள்ளுதல், காளையை அடக்கி மனைவியாக்கிக் கொள்ளுதல், குற்றிசை, குறுங்கலி, சுரநடை, முதுபாலை, தாபத நிலை, தபுதார நிலை, முதலான நிகழ்வுகள் அகப்புறப் பெருந்திணை எனப்படும்.
மடலேறுதலொடு , விடைதழால் என்றா ,
குற்றிசை தன்னொடு , குறுங்கலி என்றா ,
சுரநடை தன்னொடு , முதுபாலை என்றா,
தாபத நிலையொடு , தபுதார நிலை, எனப்
புகன்றவை இயற்பெயர் பொருந்தா ஆயின்
அகன்ற அகப்புறப் பெருந்திணைக்கு ஆகும்.
புறப்பொருள் வெண்பாமாலை
பெரும்பாலும் போர்த்திணைகள் பற்றிப் பேசும் புறப்பொருள் வெண்பா மாலையில் ஐயாரிதனார் பெருந்திணையைச் சேர்த்துள்ளார். புறப்பொருள் வெண்பா மாலை பெருந்திணையில் பெண்ணின் உணர்வையே மிகுதியாகக் காட்டுகிறது. பெண்பாற் கிளவி, இருபால் கிளவி என்ற பகுதிகளில் இது விளக்கப்படுகிறது. இது தவிரப் பெருந்திணை வென்றி என்ற பகுதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. பெண்பாற் கூற்று என்பது பெண்ணின் தனித்த உணர்வுகளைக் கூறுவது, பிறருடைய ஊடாட்டத்தால் ஏற்படும் உணர்வுகளைக் கூறுவது
பெண்பால் கூற்று
பெண்பாற் கூற்று என்பது பெண்ணின் தனித்த உணர்வுகளைக் கூறுவது, பிறருடைய ஊடாட்டத்தால் ஏற்படும் உணர்வுகளைக் கூறுவது. பெண்கள் தங்கள் வேட்கையை வெளிப்படுத்துதல், தலைவனிடம் அவன் அன்பை இரந்து நிற்றல், வேட்கையுடன் காத்திருத்தல், வருகையை எதிர்பார்த்திருத்தல், தலைவனைக் காணுதற்கு இரவென்றும் பாராமல் புறப்படுதல், தலைவன் செய்யாதனவற்றையும் செய்ததாகச் சொல்லி மகிழ்தல், ஊடல் மிகுதியால் வருந்துதல், மாலைப்பொழுதில் பிரிவால் வாடுதல் முதலானவை பெருந்திணைக் காதல் கொண்ட பெண் கொள்ளும் உணர்வுகள்
தலைவன் மீது கொண்ட மிகுந்த காதல் காரணமாக, அவன் மீது உரிமை கொண்டாடும் பரத்தையரை ஏசுதல், பிற பெண்களுடன் தலைவன் கொண்ட தொடர்பை அறிந்து சினத்தல், தலைவனைத் தழுவி மகிழ்தல், அவனை வீட்டிற்குள் அழைத்துச் செல்லுதல், அவனொடு கொள்ளும் புணர்ச்சியில் நெகிழ்தல், ஆசையின் காரணமாக ஊடலில் தளர்தல், தலைவனின் குரலைக் கேட்டே மகிழ்தல், அவன் தன் கால்களில் விழுந்து வணங்கிய பின்பே அவனை ஏற்றல், தலைவனைப் படுக்கையில் கட்டிவைத்தல், பரத்தையிடம் போக விரும்புபவனைத் தடுக்காமல் போகுமாறு கூறுதல் முதலான செயல்கள் பெண் தலைவனோடு கொள்ளும் உறவால் உருவானவை.
வேட்கை முந்துறுத்தல், பின்நிலை முயறல்,
பிரிவிடை ஆற்றல், வரவு எதிர்ந்து இருத்தல்,
வாராமைக் கழிதல், இரவுத் தலைச் சேரல்,
இல்லவை நகுதல், புலவியுள் புலம்பல்,
பொழுது கண்டு இரங்கல், பரத்தையை ஏசல்,
கண்டு கண் சிவத்தல், காதலில் களித்தல்,
கொண்டு அகம் புகுதல், கூட்டத்துக் குழைதல்,
ஊடலுள் நெகிழ்தல், உரைகேட்டு நயத்தல்,
பாடகச் சீறடி பணிந்த பின் நயத்தல்,
பள்ளிமிசைத் தொடர்தல், செல்கஎன விடுத்தல், என
ஒன்பதிற்று இரட்டியோடு ஒன்றும் உளப்படப்
பெண்பால் கூற்றுப் பெருந்தணை பால (16)
இருபால் கூற்று
துறைகள்
பெண்பால் கூற்று
- பெண்ணின் உணர்வுகள்
- உறவின் தன்மை
இருபால் கூற்று
எடுத்துக்காட்டு
உசாத்துணை
பெருந்திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.