under review

பிரிவிடை ஆற்றல்(பெருந்திணை)

From Tamil Wiki

பிரிவிடை ஆற்றல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட பெண்ணொருத்தி தலைவனைப் பிரிந்த காலத்து ஆற்றியிருத்தலைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் முன்கையில் உள்ள வளையல்கள் கழலும் வண்ணம் வருந்தி, பிறை நுதலினை உடையாள் தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றியிருத்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

இறைவளை நெகிழ இன்னாது இரங்கப்
பிறைநுதல் மடந்தை பிவிடை ஆற்றின்று (கொளு 16.3)

வெண்பா

ஓடுக கோல் வாயும் ஊரும் அலர் அறைக
தோடு அவிழ் தாழை துறை கமழக் - கோடுடையும்
பூங்கானல் சேர்ப்பன் புலம்பு கொள் மால் மாலை
நீங்கான் என் நெஞ்சகத்துள் நின்று (308)

பொருள்: வளையல்கள் கழன்று செல்லட்டும்; ஊர் என்னைப் பற்றி அலர் தூற்றட்டும்; ஆயினும் தாழை இதழ்கள் சங்குபோல் எங்கும் பூக்கும் கானலின் தலைவன், இந்த மயக்கம் தரும் மாலை நேரத்தில் என் நெஞ்சிலே நிலைபெற்று இருக்கிறான்.

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jul-2025, 21:05:20 IST