நாமக்கல் கவிஞர் மரபு: Difference between revisions

From Tamil Wiki
Line 24: Line 24:


[[ச.து.சு. யோகியார்]]
[[ச.து.சு. யோகியார்]]
[[கி. வா. ஜகந்நாதன்]]
[[பெரியசாமித் தூரன்]]


[[கொத்தமங்கலம் சுப்பு]]
[[கொத்தமங்கலம் சுப்பு]]
Line 30: Line 34:


[[மீ.ப.சோமு]]
[[மீ.ப.சோமு]]
<nowiki>:</nowiki>

Revision as of 07:38, 10 June 2022

நாமக்கல் கவிஞர் மரபு : பாரதிக்குப் பிந்தைய தமிழ் மரபுக்கவிதையின் இரண்டு மரபுகளில் ஒன்று. முதன்மை மரபாகக் கருதப்படுவது பாரதிதாசன் பரம்பரை. இன்னொரு மரபு நாமக்கல் கவிஞரை முதல் உதாரணமாகக் கொண்டிருந்தாலும் அவரை மையமாகக் கொண்டு ஒருங்கிணையவில்லை. சில பொதுப்பண்புகளே அவர்களை ஒரு மரமாகக் காண அடிப்படையாக உள்ளன

நாமக்கல் கவிஞர் மரபு

பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருவருமே சி.சுப்ரமணிய பாரதியாருடன் நேர்ப்பழக்கம் கொண்டவர்கள். இருவரையுமே பாரதியார் ஊக்குவித்ததாகச் சொல்லப்படுகிறது. பாரதிதாசன் பாடிய 'எங்கெங்கு காணினும் சக்தியடா- தம்பி ஏழுகடல் அவள் வண்ணமடா' என்ற பாடலை பாடியதும் பாரதி மகிழ்ந்து வாழ்த்தியதாகவும் , நாமக்கல் கவிஞர் பாரதியின் முன் "தம்மரசைப் பிறர் ஆளவிட்டுவிட்டுத் தாம்வணங்கிக் கைகட்டி நின்ற பேரும்" என்று பாடியபோது பாரதியார் ‘பலே, பாண்டியா! பிள்ளை நீர் ஒரு புலவன், ஐயமில்லை’ என்று கவிஞரைப் பாராட்டினார் என்றும் சொல்லப்படுகிறது. இருவரையும் பாரதியின் இரண்டு வாரிசுகளாகக் கொள்வது மரபு.

பாரதிதாசன் பின்னர் பாரதிதாசன் கவிதாமண்டலம் என்னும் அமைப்பில் தன்னைப்போன்ற கவிஞர்களை திரட்டினார். அது பாரதிதாசன் பரம்பரை என அழைக்கப்படுகிறது. நாமக்கல் கவிஞரைச் சுற்றி அப்படி ஓர் அமைப்பு உருவாகவில்லை. ஆனால் அவருடைய மரபுக்கவிதையின் பாணியையும், உள்ளடக்கத்தையும் பின் தொடரும் ஒரு கவிஞர்நிரை உருவாகி வந்தனர். அவர்களை விமர்சன வசதிக்காக நாமக்கல் கவிஞர் மரபு என அழைப்பதுண்டு.

இயல்புகள்

நாமக்கல் கவிஞர் மரபினரை தேசியக் கவிஞர்கள் என்பார்கள். அவர்கள் பெரும்பாலும் அனைவருமே இந்திய தேசிய விடுதலை இயக்கத்துடன் தொடர்புள்ளவர்களும், தேசியப்பார்வை கொண்டவர்களுமாவர். இந்த அம்சமே அவர்களை பாரதிதாசன் பரம்பரையில் இருந்து வேறுபடுத்துகிறது. நாமக்கல் கவிஞர் மரபினர் சமூகசீர்திருத்தக் கருத்துக்களையும் அரசியல் கருத்துக்களையும் பாடினாலும்கூட பொதுவாக அவர்கள் அரசியலை முதன்மையாகக் கொள்ளவில்லை. மாறாக பாரதிதாசன் பரம்பரையினர் அரசியலையே பெரிதும் பேசினர்.

நாமக்கல் கவிஞர் மரபினைச் சேர்ந்த கவிஞர்களின் வேறு இயல்புகளாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.

எளிய யாப்புமுறை: நாமக்கல் கவிஞர் மரபினர் மரபான யாப்புமுறையில் இருந்து சிந்து, ஆசிரியப்பா போன்ற எளிய யாப்பு முறைகளையே பெரும்பாலும் கையாண்டனர்.

புழக்கமொழி : நாமக்கல் கவிஞர் மரபினர் மக்கள் பேசும் மொழிக்கு அணுக்கமான மொழியில் கவிதைகள் எழுதினர். செய்யுளுக்கு உரிய கூட்டுச் சொற்கள், சொற்புணர்ச்சிகள், அரிய சொற்கள் ஆகியவற்றை பயன்படுத்தவில்லை

இசைத்தன்மை : நாமக்கல் கவிஞர் மரபினர் பெரும்பாலும் மரபிசை பயின்றவர்கள். இசை, நாடகம் போன்றவற்றில் ஆர்வமும் பயிற்சியும் கொண்டவர்கள். ஆகவே அவர்களின் பாடல்களில் இசையொழுங்கு இருந்தது. பலர் இசைப்பாடல்களையும் பாடியுள்ளனர்.

நாட்டாரியல் சார்பு : நாமக்கல் கவிஞர் மரபினர் நாட்டார் பாடல்களின் அழகியலை தங்கள் கவிதைகளில் சேர்த்துக்கொண்டார்கள். நாட்டார் பாடல்களான ஏற்றப்பாட்டு, வண்டிக்காரன் பாட்டு ஆகிய வடிவங்களில் எழுதினார்கள்.

நாமக்கல் கவிஞர் மரபு கவிஞர்கள்

கவியோகி சுத்தானந்த பாரதி

கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை

திரிலோக சீதாராம்

ச.து.சு. யோகியார்

கி. வா. ஜகந்நாதன்

பெரியசாமித் தூரன்

கொத்தமங்கலம் சுப்பு

அ.சீனிவாசராகவன்

மீ.ப.சோமு