under review

இடைக்காடனார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Added First published date)
 
Line 102: Line 102:
*[https://vaiyan.blogspot.com/2016/12/natrinai-316.html?m=1 நற்றிணை 316, தமிழ்த்துளி இணையதளம்]
*[https://vaiyan.blogspot.com/2016/12/natrinai-316.html?m=1 நற்றிணை 316, தமிழ்த்துளி இணையதளம்]
*[https://vaiyan.blogspot.com/2014/10/042.html?m=1 புறநானூறு 42, தமிழ்த்துளி இணையதளம்]
*[https://vaiyan.blogspot.com/2014/10/042.html?m=1 புறநானூறு 42, தமிழ்த்துளி இணையதளம்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|29-Jan-2023, 08:56:32 IST}}
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Latest revision as of 12:03, 13 June 2024

இடைக்காடனார், சங்க காலப் புலவர்களுள் ஒருவர். சங்க இலக்கியத் தொகை நூல்களில் இடைக்காடனார் பாடிய பாடல்களாகப் பத்துப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

இடைக்காடனார், இடைக்காடு என்னும் ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முல்லைத் திணைப் பாடல்களை அதிகமாகப் பாடியிருப்பதனால் இடைக்காடனார் ஆயர் குலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

இரலை மான் பெண்மானுடன்

சங்கத் தொகை நூல்களில் இடைக்காடனார் பாடிய பாடல்களாகப் பத்துப் பாடல்கள் உள்ளன. அவை:

இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் 9- இல் 7 முல்லைத்திணைப் பாடல்களாகவும், 2 பாலைத்திணைப் பாடல்களாகவும் உள்ளன. புறநானூறு பாடலில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் வெற்றிகளைப் பாடியுள்ளார்.

பாடலால் அறியவரும் செய்திகள்

காயாம்பூ
மௌவல் (மரமல்லி)
  • வெள்ளை வயிறும் திருகிய கொம்பும் கொண்டது ஆண் இரலை மான். (அகம் 139). திருகுமான், வெளிமான் என்ற பெயர்களும் உண்டு.
  • மழைக்காலத்தில் அரக்கு நிறத்தில் ஈயல் மூதாய்ப் பூச்சிகள் பலவாகத் தோன்றிப் பாய் விரித்திருப்பது போல ஈர மண்ணில் மேய்கின்றன (அகம் 139). மூதாய்ப் பூச்சி தம்பலப் பூச்சி, இந்திர கோபம் எனவும் அழைக்கப்படும். மழைக்காலத்தில், ஈரமான இடங்களில் இவை படைபடையாக அடைந்திருக்கும். மருத்துவ குணம் கொண்டது. இதிலிருந்து தயாரிக்கும் எண்ணெய் முடக்குவாதத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது.
  • கிளைக்கொம்பு கொண்ட இரலைமான் ஆங்காங்கே மேய்வது போல உழவர்கள் தலையில் குடையை மாட்டிக்கொண்டு பாடிக்கொண்டே களை வெட்டுவார்கள். களை எடுத்த வரகு கதிர் வாங்கும். மயில் வரகின் கதிர்களை மேய்ந்துவிட்டு கொண்ட குருந்த மரத்தில் ஏறி இருந்துகொண்டு, கிளியோட்டும் மகளிர் பாடுவது போலக் குரல் எழுப்பி அகவும்.
  • செம்மறி ஆடுகளை மேய்க்கும் இடையர் தீக்கடைக்கோல் பால் பானை, அதனைத் தாங்கும் வலிமையான கயிற்றால் கட்டிய, தோலால் மூடிய உறி, ஊன்றுகோல் -இவற்றைத் தங்களுடன் கொண்டு செல்கின்றனர். குட்டிகளைப் பிடிக்க வரும் குள்ளநரிக் கூட்டத்தை விரட்ட கைவிரலை மடித்து வாயில் ஒலி எழுப்பினர்(நற்றிணை 142).
  • மறவர் தினையரிசியில் காய்ச்சிய கள்ளைக் குடித்தனர். கையில் தெறிகோல், விசைகொண்ட வில் ஆகியவற்றோடு முல்லைக் காட்டில் மானைத் வேட்டையாடினர்.
  • வண்டுகள் ஊதுவதால் பிடவம் பூக்கள் மலர்கின்றன. மணிக்கற்களோடு கலந்துகிடக்கும் பவளக் கற்கள் போல காயாம் பூக்கள் அழகுடன் பூத்துக் கிடக்கின்றன. வானில் ஈசலும் தரையில் மூதாய்ப் பூச்சிகளும் நிறைந்து செல்கின்றன(அகம் 304). காயாம் பூக்களுக்கு இடையில் மூதாய்ப் பூச்சிகள் ஓடுவது நீலமணியும் பவளமணியும் கொட்டிக் கிடப்பது போல் இருந்தது (அகம் 374).
  • கார் காலத்தில் மௌவல் மலர்கள் (மரமல்லி) பூத்திருந்தன(நற்றிணை 316)
  • இடைக்காடனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை பாண்டி நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். (புறம் 42)

பாடல்நடை

அகநானூறு 139

பாலைத் திணை பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது

துஞ்சுவது போல இருளி, விண் பக

இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு

ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ,

நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு,

ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்;

ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை

வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை,

புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை,

தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து

வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை;

வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல்,

காமர் துணையொடு ஏமுற வதிய;

அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய்

பரப்பியவைபோற் பாஅய், பல உடன்

நீர் வார் மருங்கின் ஈரணி திகழ;

இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்!

யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர்

கருவிக் கார்இடி இரீஇய

பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே

(தூங்குவது போல் இருட்டு. விழிப்பது போல் வானத்தைப் பிளக்கும் மின்னல். மழையைத் தூக்கிக்கொண்டு ஏறும் மேகங்கள் நெஞ்சு நடுங்க ஓயாமல் முழங்கும் இடி. இப்படி மழை பொழிந்த கடைசி நாள். மழையைக் கொட்டித் தீர்த்துவிட்டதால் மேகங்கள் வெள்ளையாகி மலையில் வைகறை நேரத்தில் உலாவுகின்றன. காலை நேரம் வந்துவிட்டது. வெள்ளை முதுகும், திருகிய கொம்பும் கொண்ட ஆண் இரலை மான் குளிர்ந்த நல்ல நீரைப் பருகிவிட்டுப் புல்லை மேய்ந்த பின்னர் நீண்ட மணலில் பிடவ மரத்து நிழலில் தன் தன் பெண் துணைமானோடு வாழும் வேளை.அரக்கு நிறத்தில் ஈயல் மூதாய்ப் பூச்சிகள் பலவாகத் தோன்றிப் பாய் விரித்திருப்பது போல ஈர மண்ணில் மேய்கின்றன.

தோழி! அவர் இன்னும் வரவில்லை. அப்படி என்றால் அவர் திரும்பிவிடுவேன் என்று சொன்னது இடி முழங்கும் இந்தக் கார் காலம் இல்லையா?)

நற்றிணை 142

முல்லைத் திணை வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்,

பாணி கொண்ட பல் கால் மெல் உறி

ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி,

பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்

நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,

தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி

சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்

புறவினதுவே- பொய்யா யாணர்,

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்,

முல்லை சான்ற கற்பின்,

மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே.

(வானமே இடிந்து விழுவது போல மழை பொழிந்திருக்கும் கடைசி நாள். தொங்கல் கயிற்றின் காலில் பண்ணிய முடிச்சுடன் கூடிய உறி, தோல் பையில் தீ மூட்டும் ஞெலிகோல், முதுகில் பால் பானை ஆகியவற்றுடன் சென்ற இடையன் பால் விற்று மீள்கிறான். தூறல் மழையின் திவலைகள் அவனை நனைத்துக் கொண்டிருக்கின்றன. கையிலிருக்கும் ஊன்றுகோலில் ஒடுங்கிக்கொண்டு அவன் நிற்கிறான். வாயிலே ‘மடி’ ஒலி எழுப்புகிறான். ஆட்டு மந்தை பாதுகாப்பாக அவனிடம் நிற்கின்றது. பொய்யாத புது வருவாய் (யாணர்) உடையவன் அவன். அவன் இருக்கும் முல்லை நிலந்தான் என் குறுமகள் இருக்கும் ஊர்.)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jan-2023, 08:56:32 IST