under review

பரலி சு. நெல்லையப்பர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(33 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:


[[File:பரலி சு.நெல்லையப்பர்.jpg|thumb|பரலி சு.நெல்லையப்பர்]]
[[File:பரலி சு.நெல்லையப்பர்.jpg|thumb|பரலி சு.நெல்லையப்பர்]]
பரலி சு.நெல்லையப்பர்  (செப்டம்பர் 18, 1889 - மார்ச் 28, 1971) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட வீரர், [[வ.உ. சிதம்பரனார்|வ.உ. சிதம்பரம் பிள்ளைக்குத்]] தொண்டர், [[சி.சுப்ரமணிய பாரதியார்|சுப்பிரமணிய பாரதிக்குப்]] புரவலர்.
பரலி சு.நெல்லையப்பர் (செப்டம்பர் 18, 1889 - மார்ச் 28, 1971) விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர். வ.உ. சிதம்பரம் பிள்ளையின்  நெருங்கிய நண்பராகவும், தொண்டராகவும்,  சுப்பிரமணிய பாரதியின் புரவலராகவும் இருந்தார்.  பாரதியின் பாடல்களை வெளியிட்டு அவை  மக்களிடையே பிரபலமாவதற்கும் தேசிய எழுச்சிக்கும் காரணமாக இருந்தார். பாரதி வாழும் காலத்திலேயே அவரது பாடல்களின் தொகுப்புகளை வெளியிட்டது அவரது குறிப்பிடத்தக்க பணி.  
== பிறப்பு மற்றும் குடும்பம் ==
==பிறப்பு, கல்வி==
பரலி சு.நெல்லையப்பர், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரலிக்கோட்டை என்னும் சிற்றூரில்  செப்டெம்பர் 18, 1889 அன்று சுப்பிரமணிய பிள்ளை, முத்துலட்சுமி அம்மாள் என்னும் இணையரின் மூன்று ஆண் மக்களுள் இரண்டாவது மகனாகப் பிறந்தார். சு. நெல்லையப்பருக்கு மூத்தவர் பரலி சு. சண்முகசுந்தரம் பிள்ளை. இவர் வ.உ. சிதம்பரனாரோடு இணைந்து அவர்தம் சுதேசி இயக்கத்தைப் பரப்புவதில் முனைப்போடு இருந்தவர். சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குகள் பலவற்றை திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தின் பல இடங்களில் விற்றுப் பல்லாயிரம் ரூபாயைத் திரட்டிக் கொடுத்தவர். அன்றைய மதுரை மாவட்டம் வத்தலக்குண்டில்  பிறந்த சுப்பிரமணிய சிவாவை தூத்துக்குடிக்கு  அழைத்து வந்து வ.உ.சிதம்பரனாருக்கு அறிமுகம் செய்து வைத்தவர். [[சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவாவால்]] 'வந்தே மாதரம் பிள்ளை' என அழைக்கப்பட்டார்.
பரலி சு.நெல்லையப்பர், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரலிக்கோட்டையில் செப்டெம்பர் 18, 1889 அன்று சுப்பிரமணிய பிள்ளை, முத்துலட்சுமி அம்மாள் இணையருக்கு மூன்று ஆண் மக்களுள் இரண்டாவது மகனாகப் பிறந்தார். சிறு  வயதில் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். நெல்லையப்பர் மெட்ரிக்குலேஷன் வரை பள்ளியில் படித்தார். தமிழிலக்கிய, இலக்கணங்களைக் கற்று, கவிதை எழுதும் திறமை பெற்றிருந்தார்.


நெல்லையப்பருக்கு இளையவரான பரலி சு. குழந்தைவேலன். சு.  நெல்லையப்பரோடு இணைந்து வ.உ. சிதம்பரனாரின் கப்பல் கம்பெனியில் கணக்கராக வேலைப் பார்த்தவர். பின்னாளில் [[லோகோபகாரி]] என்னும் இதழை நடத்துவதில் நெல்லையப்பருக்குத் துணைநின்றவர்.
நெல்லையப்பரின் மூத்த சகோதரர்  பரலி சு. சண்முகசுந்தரம் பிள்ளை. வ.உ. சிதம்பரனாரோடு சுதேசி இயக்கத்தில் பங்கு பெற்றார். சிதம்பரனாரின் சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குகளை விற்றுப் பல்லாயிரம் ரூபாயைத் திரட்டிக் கொடுத்தார்.  சுப்பிரமணிய சிவாவை  வ.உ.சிதம்பரனாருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.[[சுப்பிரமணிய சிவா|சுப்பிரமணிய சிவாவால்]] 'வந்தே மாதரம் பிள்ளை' என அழைக்கப்பட்டார்.


நெல்லையப்பர் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே, தன்னுடைய இறுதிக் காலத்தில் பூங்கோதை என்னும் பெண்ணைத் தத்தெடுத்து வளர்த்தார்.
நெல்லையப்பருக்கு இளையவரான பரலி சு. குழந்தைவேலன். சு. நெல்லையப்பரோடு இணைந்து வ.உ. சிதம்பரனாரின் கப்பல் கம்பெனியில் கணக்கராக வேலை பார்த்தவர். பின்னாளில் [[லோகோபகாரி]] என்னும் இதழை நடத்துவதில் நெல்லையப்பருக்குத் துணைநின்றவர்.
== கல்வி மற்றும் இளமை ==
 
பரலி சு. நெல்லையப்பர் மெட்ரிக்குலேஷன் வரை பள்ளியில் படித்தார். அதற்கு அப்பால் தமிழிலக்கிய, இலக்கணங்களைக் கற்று, கவிதை எழுதும் திறமை பெற்றிருந்தார். 1907- ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த சில நாள்களிலேயே தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனார் நடந்திய சுதேசி கப்பல் கம்பெனியில் கணக்கராகப் பணியாற்றத் தொடங்கினார்.  மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள  சூரத் நகரில் நடைபெற்ற  இந்திய தேசிய காங்கிரஸ்  மாநாட்டில் கலந்து கொள்வதற்கு [[வ.உ. சிதம்பரனார்]] உள்ளிட்டவர்களைத் திரட்டுவதற்காகத் தூத்துக்குடிக்கு வந்த  சி. சுப்பிரமணிய பாரதியை பரலி சு. நெல்லையப்பர்  முதன்முறையாக, வ.உ. சிதம்பரனாரின் வீட்டில்  கண்டார். அங்கிருந்த பாரதியின் கவிதைகள் அடங்கிய நான்கு பக்க வெளியீடு ஒன்றையும் இந்தியா இதழையும்  படித்தவுடன் [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி. சுப்பிரமணிய பாரதி]]மேல் அன்பு கொண்டார்.
==தனி வாழ்க்கை==
== விடுதலைப் போரில் பங்கேற்பு ==
சு. நெல்லையப்பர் 1907-ம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த சில நாள்களிலேயே தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனார் நடந்திய சுதேசி கப்பல் கம்பெனியில் கணக்கராகப் பணியாற்றத் தொடங்கினார். மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சூரத் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு [[வ.உ. சிதம்பரனார்|வ.உ. சிதம்பரனா]]ரை அழைப்பதற்காக  தூத்துக்குடிக்கு வந்த சி. சுப்பிரமணிய பாரதியை பரலி சு. நெல்லையப்பர் முதன்முறையாக, வ.உ. சிதம்பரனாரின் வீட்டில் கண்டார். அங்கிருந்த பாரதியின் கவிதைகள் அடங்கிய நான்கு பக்க வெளியீடு ஒன்றையும் [[இந்தியா (இதழ்)|இந்தியா]] இதழையும் படித்த நெல்லையப்பர்  [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி. சுப்பிரமணிய பாரதி]]மேல் மிகுந்த ஈடுபாடு  கொண்டார்.
 
நெல்லையப்பர் திருமணம் செய்துகொள்ளவில்லை, தன்னுடைய இறுதிக் காலத்தில் பூங்கோதை என்னும் பெண்ணைத் தத்தெடுத்து வளர்த்தார்.
== விடுதலைப் போராட்டம்==
[[File:ஆரம்ப பள்ளி.jpg|thumb|ஆரம்ப பள்ளி]]
[[File:ஆரம்ப பள்ளி.jpg|thumb|ஆரம்ப பள்ளி]]
வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, சி. சுப்பிரமணிய பாரதி,  நீலகண்ட பிரமச்சாரி, [[அரவிந்தர்]], [[வ.வே. சுப்ரமணிய ஐயர்|வ.வே.சு.ஐயர்]] முதலிய விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரோடு தொடர்ந்து பழகிய பரலி சு.  நெல்லையப்பர் தானும் விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றார். அவற்றுள் சில:
*வ.உ. சிதம்பரனார், பிரிட்டிஷாரின் வீடுகளில் பணிசெய்த பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் சமையற்காரர்களைத் திரட்டி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியபோது  பரலி சு. நெல்லையப்பர் அப்போராட்டத்தில் பெரிதும் உதவினார்.
* ஆங்கிலேயருக்கு இயன்ற வழிகளில் எல்லாம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கில் இருந்த வ.உ. சிதம்பரனார், ஆங்கிலேயர்களின் வீடுகளில் வேலைபார்த்த துணி வெளுப்பாளர்கள், வேலையாட்கள், சமையற்காரர்களைத் திரட்டி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினார். அப்போராட்டத்திற்கு பரலி சு.  நெல்லையப்பர் பெரிதும் உதவியாக இருந்தார்.
*விபின் சந்திரபால் சிறையிலிருந்து  விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாட காவல்துறையினரின் தடையை மீறி வ.. சிதம்பரனார் தூத்துக்குடியில் சுப்பிரமணிய சிவாவோடு இணைந்து மார்ச் 9, 1908 அன்று  நடத்திய ஊர்வலத்தில்    பரலி சு. நெல்லையப்பரும் கலந்துகொண்டார். தடையை மீறியதற்காகவும், கப்பல் கம்பெனி நடத்தியதற்காகவும்  வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா  இருவரும் மார்ச் 12, 1908 அன்று  கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைக் கண்டித்துக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான துண்டறிக்கையை அச்சிட்டு  விநியோகித்ததற்காக  நெல்லையப்பரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
*1930-ல் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு  ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.
*1932-ல் காந்தியடிகளின் ஆணையின்பேரில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.
*1941-ல் தனிநபர் சத்தியாகிரகத்தில்  கலந்துகொண்டு  ஆறு மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.


* மார்ச் 3, 1908 அன்று விடுதலைப் போராட்ட வீரர் விபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்டார். அந்நிகழ்வைக் கொண்டாடுவதற்காக காவல்துறையினரின் தடையை மீறி வ.உ. சிதம்பரனார் தூத்துக்குடியில் சுப்பிரமணிய சிவாவோடு இணைந்து மார்ச் 9- ஆம் நாள் ஊர்வலம் ஒன்றை நடத்தினார். அதில் பரலி சு. நெல்லையப்பரும் கலந்துகொண்டார். கப்பல் கம்பெனி நடத்தியது, ஊர்வலம் நடத்தியது, வந்தே மாதரம் எனக்கூவியது ஆகிய குற்றங்களுக்காக திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா ஆகிய இருவரும் மார்ச் 12- ஆம் நாள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைக் கண்டித்துக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான துண்டறிக்கை ஒன்றினை அச்சிட்டு பரலி சு.  நெல்லையப்பர் வெளியிட்டார். அதற்காக அவரை காவல்துறை கைது செய்து, வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோரோடு  பாளையங்கோட்டைச் சிறையில் அடைத்தது.
நாட்டு விடுதலைக்குப்பின் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு அரசு நிலம் வழங்கியது. தனக்குக் கிடைத்த நிலத்தை  பள்ளி ஒன்று துவக்குவதற்காக அரசுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார் நெல்லையப்பர். பரலி. சு. நெல்லையப்பர் நகராட்சிப் பள்ளி என்ற பெயரில் இயங்கிவந்த அந்தப்பள்ளி குறைவான மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி  2010-ல் மூடப்பட்டது.


* 1930- ஆம் ஆண்டில்  வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டதனால் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.
======புதுவையிலும் கோவையிலும்======
நெல்லையப்பர் 1909-சென்னையில்  நீலகண்ட பிரமச்சாரியையும்  சி. சுப்பிரமணிய பாரதியையும்  சந்தித்தார்.  1910-ன் தொடக்கம் முதல் ஜூன், 1911 வரை பாரதியாரின் வீட்டில் தங்கினார்.  பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த '[[சூரியோதயம் (இதழ்)|சூரியோதயம்]]' என்னும் பத்திரிக்கையின் துணையாசிரியராகப் பணியாற்றினார்.  ஏப்ரல் 1910- ல் மாதம் கடல் வழியாக புதுவைக்கு வந்த அரவிந்தரை துறைமுகத்திற்குச் சென்று அழைத்து வந்தார்.  ஜூன் 1911-ல்  கோவை  சிறையிலிருந்த வ.உ. சிதம்பரனார் அழைத்ததால் அங்கு சென்றார். 


* 1932- ஆம் ஆண்டில் காந்தியடிகளின் கட்டளையை ஏற்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.
வ.உ. சிதம்பரனாருக்கு பாரதியார் எழுதிய மூன்று விருத்தங்கள் கொண்ட சீட்டுக்கவியை எடுத்துக்கொண்டு பரலி சு. நெல்லையப்பர் கோயம்புத்தூர் சென்றார். அங்கு வழக்கறிஞர் சி. கே. சுப்பிரமணிய முதலியார் உதவியோடு கோவை, பேரூர் சாலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்துத் தங்கினார். முடிந்த போது  சிறையில் இருந்த  வ.உ. சிதம்பரனாரைச் சந்தித்து, அவரது கட்டளைகளை அந்த ஆசிரமத்தில் இருந்தவாறே நிறைவேற்றினார். வ.உ.சி.யை தன்வரலாறு எழுதும்படி வேண்டினார். 1912- ன் மத்தியில் சிதம்பரனார்  கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டதும் நெல்லையப்பர் நெல்லைக்குத் திரும்பினார். டிசம்பர் 1912-ல் சிதம்பரனார் விடுதலை பெற்று சென்னையில் குடியேறியபின் நெல்லையப்பர் அவரது வீட்டிலும் வேறு இடங்களிலுமாக வாழ்ந்தார்.
* 1941- ஆம் ஆண்டில் நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரகம் என்னும் தனியாள் அறப்போராட்டத்தில் கலந்துகொண்டதனால் பெல்லாரி சிறையில் ஆறு மாதங்கள் அடைக்கப்பட்டார்.
== புதுவை வாழ்க்கை ==
1909-ஆம் ஆண்டில் இறுதியில் வ.உ. சிதம்பரனாருக்கு சட்டப்படி விடுதலைப் பெற்றுத்தர ஏதேனும் வழியிருக்கிறதா என அறிவதற்காக பாரிஸ்டர் பாலசுப்பிரமணிய ஐயர், வழக்கறிஞர் சாமிநாதன் ஆகியோரைச் சந்திக்க சென்னைக்கு வந்த பரலி சு.  நெல்லையப்பர் வாய்ப்பில்லை என அறிந்தார். அப்பொழுது புதுவையில் இருந்து சென்னை வந்திருந்த நீலகண்ட பிரமச்சாரியைச் சந்தித்தார். அவரோடு சேர்ந்து புதுவையில் வாழும் சி. சுப்பிரமணிய பாரதியைச் சந்திக்க சென்றார். 1910-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 1911- ஆம் ஆண்டு ஜூன் வரை சி. சுப்பிரமணிய பாரதி வீட்டில் தங்கினார். அப்போது பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த '[[சூரியோதயம் (இதழ்)|சூரியோதயம்]]' என்னும் பத்திரிக்கையின் துணையாசிரியராகப் பணியாற்றினார்.  1910- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடல் வழியாக புதுவைக்கு வந்த அரவிந்தரை துறைமுகத்திற்குச் சென்று அழைத்து வந்தார். 1911- ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கோயம்புத்தூர் சிறையிலிருந்த வ.உ. சிதம்பரனாரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார்.
== கோயம்புத்தூர் வாழ்க்கை ==
வ.உ. சிதம்பரனாருக்கு பாரதியார் எழுதிய மூன்று விருத்தங்கள் கொண்ட சீட்டுக்கவியை எடுத்துக்கொண்டு பரலி சு. நெல்லையப்பர் கோயம்புத்தூர் சென்றார். அங்கு வழக்கறிஞர் சி. கே. சுப்பிரமணிய முதலியார் உதவியோடு கோவை, பேரூர் சாலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்துத் தங்கினார். அவ்வப்பொழுது சிறைக்குள் சென்று வ.உ. சிதம்பரனாரைச் சந்தித்து, அவர் இடும் கட்டளைகளை அந்த ஆசிரமத்தில் இருந்தவாறே நிறைவேற்றினார். வ.உ.சி.யை தன்வரலாறு எழுதும்படி வேண்டினார். 1912- ஆம் ஆண்டின் மத்தியில் வ.உ. சிதம்பரனாரை கேரளாவிலுள்ள  கண்ணனூர் சிறைக்கு மாற்றியதும், நெல்லையப்பர் சொந்த ஊருக்குத் திரும்பினார்.
== சென்னை வாழ்க்கை ==
1912-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  விடுதலை பெற்ற வ.உ. சிதம்பரனார் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் குடியேறினார். அவரைக் காண்பதற்காக அங்கு வந்த நெல்லையப்பர் முதலில் வ.உ. சிதம்பரனாரின் வீட்டிலும் பின்னர் வெவ்வேறு இடங்களிலும் தன் இறுதிக் காலம் வரை வாழ்ந்தார்.
== இதழாளர் ==
ஜூலை  7,1908  அன்று வ.உ. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் தண்டனையும் சுப்பிரமணிய சிவாவிற்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டன. இதனைக் கண்டித்து நெல்லையப்பர் கட்டுரையொன்று எழுதினார். அது பாரதியார் நடத்திய '[[இந்தியா (இதழ்)|இந்தியா]]' இதழில் வெளியிடப்பட்டது. இதுவே அச்சில் வந்த இவரின் முதல்  படைப்பு.


புதுவையில் இருந்து பாரதியர் வெளியிட்டு வந்த 'சூரியோதயம்'  இதழில் 1910- ஆம் ஆண்டிலும் கர்மயோகி மாத இதழில் 1911- ஆம் ஆண்டிலும் நெல்லையப்பர் துணையாசிரியராக இருந்தார்.
==இதழியல்==


சென்னையிலிருந்து [[கோ.வடிவேலு செட்டியார்]] வெளியிட்ட [[லோகோபகாரி]]  இதழில் 1913-1915- ஆம் ஆண்டுகளிலும் 1917-1918- ஆம் ஆண்டுகளிலும் துணையாசிரியராக இருந்தார்.
*சிதம்பரனார், சுப்ரமண்ய சிவா இருவரின் கைதையும் கண்டித்து நெல்லையப்பர் எழுதிய கட்டுரை பாரதியார் நடத்திய '[[இந்தியா (இதழ்)|இந்தியா]]' இதழில் வெளிவந்தது.
*புதுவையில் இருந்து பாரதியார் வெளியிட்ட  'சூரியோதயம்' இதழிலும்(1910) கர்மயோகி மாத இதழிலும் (1911)நெல்லையப்பர் துணையாசிரியராக இருந்தார்.
*சென்னையிலிருந்து [[கோ. வடிவேலு செட்டியார்]] வெளியிட்ட [[லோகோபகாரி]] இதழில் 1913-1915 மற்றும் 1917-1918 ஆண்டுகளில் துணையாசிரியராக இருந்தார்.
*[[தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்|தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவல]]ருடன் இணைந்து பாரதியின் பாடல்களையும், புகழையும் பரப்புவதற்காக [[பாரதி|'பாரதி']] என்ற  இதழை நடத்தினார்( 1915-1916).
*'[[தேசபக்தன் (இதழ்)|தேசபக்தன்]]' இதழில் [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்|திரு.வி.க]]., [[வ.வே. சுப்ரமணிய ஐயர்|வ.வே.சு.ஐயர்]] ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தபொழுது நெல்லையப்பர் துணையாசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றினார் (1917-செப்டெம்பர் 1921).
*1922-ல் 'லோகோபகாரி' இதழை விலைக்கு வாங்கி நடத்தத் தொடங்கி  1941 வரை அதன்  ஆசிரியராக இருந்தார். ஐ. மாயாண்டி பாரதி இவ்விதழின் துணையாசிரியராக இருந்தார். மீண்டும் 1943- முதல் 1948 வரை 'லோகோபகாரி' இதழில் ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் [[நாரண துரைக்கண்ணன்|நாரண. துரைக்கண்ண]]னை லோகோபகாரி இதழுக்கு ஆசிரியராக்கினார்.


[[தெ.பொ.கிருட்டிணசாமிப் பாவலர்]] என்பவருடன் இணைந்து 1915-1916- ஆம் ஆண்டுகளில் [[பாரதி|'பாரதி']] என்னும் இதழை நடத்தினார்.
==இலக்கிய வாழ்க்கை==
[[File:வ..சி. சரித்திரம்.jpg|thumb|வ.உ.சி. சரித்திரம்]]
நெல்லையப்பர் வ.உ. சிதம்பரனாரோடு தூத்துக்குடியில் இருந்தபொழுதே கவிதைகள் இயற்றினார். பாரதியோடு இருந்த பொழுது அவருடைய பாடல்களைப் படித்து கருத்தும், திருத்தமும் கூறும் அளவிற்குக் கவிதை நுட்பங்களை அறிந்திருந்தார். 'தேசபக்தன்' இதழில் பணியாற்றியபோது பாரதிதாசன், [[வெ. இராமலிங்கம் பிள்ளை|நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை]] எழுதிய பாடல்களில் திருத்தம் செய்து வெளியிட்டு வந்தார்.


1917- ஆம் ஆண்டு முதல் 1921- ஆம் ஆண்டு செப்டம்பர் வரை '[[தேசபக்தன் (இதழ்)|தேசபக்தன்]]' இதழில் [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்|திரு.வி.க]]., [[வ.வே.சு.ஐயர்]] ஆகியோர் ஆசிரியர்களாக  இருந்தபொழுது நெல்லையப்பர் துணையாசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
ஏறத்தாழ 50 ஆண்டுகளாகத் தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 142 பக்கங்களில் 'நெல்லைத் தென்றல்' என்னும் நூலாக 1966- ஆம் ஆண்டு வெளியிட்டார். மேலும், ;பாரதி வாழ்த்து', 'உய்யும் வழி' ஆகிய கவிதை நூல்களையும் வெளியிட்டார்.


1922- ஆம் ஆண்டில் 'லோகோபகாரி'  இதழை விலைக்கு வாங்கி 1941-ஆம் ஆண்டு வரை ஆசிரியராக இருந்தார். அப்பொழுது மதுரையைச் சேர்ந்த ஐ. மாயாண்டி பாரதி இவ்விதழில் துணையாசிரியராக இருந்தார்.
பரலி சி. நெல்லையப்பர் இதழ்களில் பணியாற்றிய பொழுது தலையங்கம், செய்திக் கட்டுரைகள், மதிப்புரைகள் எனப் பலவற்றை தன்னுடைய இயற்பெயரிலும் பாரி என்னும் புனைபெயரிலும் எழுதினார்.


மீண்டும் 1943-ஆம் ஆண்டு முதல் 1948-ஆம் ஆண்டு வரை 'லோகோபகாரி' இதழில் ஆசிரியராக இருந்தார்.
அவற்றுள் 'கைக்குத்தல் அரிசியின் மகத்துவம்', 'பாரதியின் தமிழ்ப்புலமை', 'கங்கைகொண்ட சோழபுரம்', 'பாரம் சுமக்கும் பள்ளிப் பிள்ளைகள்', 'குழந்தைகள் அதிகம் பெற வேண்டா,' போன்றவற்றை   ஓரிரு பக்க சிறு நூல்களாக அச்சிட்டு பலருக்கும் வழங்கினார்.
== பாரதியாருக்கு புரவலர் ==
பாரதியின் புகழைத் தமிழகம் எங்கும் பரப்ப ஆவல் கொண்ட பரலி சு. நெல்லையப்பர், நண்பர் கிருஷ்ணசாமிப் பாவலருடன் இணைந்து 'பாரதி' என்ற இதழை ஆரம்பித்தார். அவ்விதழில்தான், "பாரத தேசம் என்று..", "பாருக்குள்ளே நல்ல நாடு", "புதுமைப் பெண்", "தமிழ்மொழி வாழ்த்து", "செந்தமிழ்நாடு" ஆகிய பாடல்கள் வெளியாகின. லோகோபகாரி, பாரதி இதழ்களைத் தொடர்ந்து திரு.வி.க. நடத்தி வந்த தேசபக்தன் இதழின் துணையாசிரியராகவும் சிலகாலம் பணியாற்றினார். அதிலும் தொடர்ந்து பாரதியின் உணர்ச்சி பொங்கும் கவிதைகளை வெளியிட்டு வந்தார். பாரதியாரின் 'கண்ணன் பாட்டு' நூலை  சு.நெல்லையப்பர் பதிப்பித்தபோது, அவரது அந்தப் பணியைப் பாராட்டி நூலுக்கு அழகான முன்னுரை அளித்தார் வ.வே.சு. ஐயர். தொடர்ந்து பாரதியின் நாட்டுப் பாட்டு, பாப்பாப் பாட்டு, முரசுப் பாட்டு போன்றவற்றை தன் கடின சூழ்நிலையிலும் பரலி சு. நெல்லையப்பர் வெளியிட்டார்.  கண்ணன் பாட்டுக்கு எழுதிய முன்னுரையில் அவர், "ஸ்ரீமான் பாரதியார் ஒரு பெரிய மேதாவி; மகா பண்டிதர்; தெய்வீகப் புலவர்; ஜீவன் முக்தர்; இவர் எனது தமிழ்நாட்டின் தவப்பயன். அவருக்கு யான் கொடுக்கும் உச்சஸ்தானம் நிச்சயமானது. இதனைத் தற்காலத்தில் அறியாதவர்கள் பிற்காலத்தில் அறிவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.


1913-ஆம் ஆண்டு முதல் பாரதி சென்னைக்கு இரண்டாவது முறையாக வந்து வாழத் தொடங்கிய மார்ச் 1919  வரை தான் பணியாற்றிய இதழ்களிலும் சுப்பிரமணிய சிவா நடத்திய '[[ஞானபாநு (இதழ்)|ஞானபாநு]]' முதலிய இதழ்களிலும் பாரதியார் கவிதைகளை வெளிவரச் செய்தார். அவற்றிற்காக கிடைத்த பணத்தையும், பாரதிக்கு தேவைப்பட்ட பணத்தை வேறு வகைகளில் திரட்டியும், புதுவை நண்பர்கள் யாருடைய பெயருக்காவது அனுப்பி பாரதிக்குக் கிடைக்கச் செய்து வந்தார். அவ்வாறு செய்வது நெல்லையப்பரின் கடமையென பாரதியார் கருதினார்.  பாரதியாரால் "தம்பீ!" என அழைக்கப்பட்ட நெல்லையப்பர், 1921- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11- ஆம் நாள் இரவு ஒரு மணிக்கு இறந்த பாரதியாரின் உடலை மறுநாள் சுடுகாட்டிற்குத் தூக்கிச் சென்றவர்களுள்  ஒருவராக இருந்தார்.
பாரதியார், வ.உ.சி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை [[நாவலர் சோமசுந்தர பாரதியார்]], [[சக்கரைச் செட்டியார்]] ஆகியோருடன் இணைந்து, முறையே பாரதியார் சரித்திரம் (1928) – [[வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம்]] (1944 – சக்தி காரியாலய வெளியீடு) என்னும் பெயரில் நூல்களாக வெளியிட்டார். சிதம்பரம் பிள்ளை சரித்திரம் நூலுக்கு திரு. வி. க முன்னுரை எழுதினார்.


1950- ஆம் ஆண்டு முதல்  குரோம்பேட்டையில் வசித்த நெல்லையப்பர் தான் வாழ்ந்த பகுதிக்கு 'பாரதிபுரம்' எனவும், அங்கிருந்த பிள்ளையாருக்கு 'பாரதி விநாயகர்' எனவும் பெயரிட்டார்
'[[தமிழ்த் திருமண முறை]]' என்னும் நூலையும் எழுதினார். இவர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகள் முறையாக இதுவரை தொகுக்கப்படவில்லை.


பாரதியாரின் புகழைப் பரப்பும் நோக்குடன் தனது 'லோகோபகாரி' இதழில் 'பாரதி போட்டி'களையும் செப்டம்பர் 11-ஆம் நாள் பாரதி விழாவையும் ஆண்டுதோறும் நடத்தினார்.
======மொழியாக்கங்கள்======
== பாரதியாரின் கடிதம் ==
பரலி சு.நெல்லையப்பர் [[பங்கிம் சந்திர சட்டர்ஜி|பங்கிம் சந்திரரின்]] ராதாராணி, காந்தியின் சுயராஜ்யம் போன்ற நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்தார்.
பரலி சு. நெல்லையப்பருக்கு பாரதியார் எழுதிய ஒரு கடிதத்தின் சிறு பகுதி கீழ்காணுமாறு இருந்தது;


"தமிழ்! தமிழ்!! தமிழ்!!! எப்போதும் தமிழை வளர்ப்பதையே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி; புதிய புதிய யோசனைகள்; புதிய புதிய உண்மை; புதிய புதிய இன்பத் தமிழில் எழுதிக் கொண்டே போகவேண்டும்.
==பாரதி==
பரலி. சு. நெல்லையப்பர் பாரதியின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.  அவர் நடத்திய பாரதி' என்ற இதழில்தான் 'பாரத தேசம் என்று..', 'பாருக்குள்ளே நல்ல நாடு', 'புதுமைப் பெண்', 'செந்தமிழ்நாடு' ஆகிய பாடல்கள் வெளியாகின.  


தம்பீ! உள்ளமே உலகம். ஏறு... ஏறு... ஏறு... மேலே... மேலே... உனக்கு சிறகுகள் தோன்றுக. பறந்து போ..."
1913-1919 ஆண்டுகளில் தான் பணியாற்றிய இதழ்களிலும் சுப்பிரமணிய சிவா நடத்திய '[[ஞானபாநு (இதழ்)|ஞானபாநு]]' முதலிய இதழ்களிலும் பாரதியார் கவிதைகளை வெளிவரச் செய்தார். அவற்றிற்காக கிடைத்த பணத்தையும், பாரதிக்கு தேவைப்பட்ட பணத்தை வேறு வகைகளில் திரட்டியும், புதுவை நண்பர்கள் மூலம் பாரதிக்குக் கிடைக்கச் செய்து வந்தார்.  பாரதியாரால் "தம்பீ!" என அழைக்கப்பட்ட நெல்லையப்பர், செப்டம்பர் 11, 1921-அன்று பாரதியார் இறந்தபோது அவரது  உடலை மறுநாள் இடுகாட்டிற்குத் தூக்கிச் சென்றவர்களுள் ஒருவராக இருந்தார்.
== பாரதியார் படைப்புகளின் பதிப்பாளர் ==
1917- ஆம் ஆண்டு பாரதியாரின் [[கண்ணன் பாட்டு]] (ஆகஸ்ட்), 19 பாடல்கள் அடங்கிய நாட்டுப்பாட்டு (அக்டோபர்), [[பாப்பா பாட்டு]], [[முரசுப் பாட்டு]] ஆகியவற்றைப் பதிப்பித்தார்.


1923- ஆம் ஆண்டில் தன் நண்பர்கள் சிலரோடு இணைந்து 'பாரதி பிரசுராலயம்' என்னும் நிறுவனத்தைத் தொடங்கி அதன்வழியாக [[குயில்பாட்டு]], [[கண்ணன் பாட்டு]], [[பாரதி அறுபத்தாறு]] ஆகிய பாடல்கள் அடங்கிய தொகுதி ஒன்றை வெளியிட்டார்.
1950-ம் ஆண்டு முதல் குரோம்பேட்டையில் வசித்த நெல்லையப்பர் தான் வாழ்ந்த பகுதிக்கு 'பாரதிபுரம்' எனவும், அங்கிருந்த பிள்ளையாருக்கு 'பாரதி விநாயகர்' எனவும் பெயரிட்டார்
 
பாரதியாரின் புகழைப் பரப்பும் நோக்குடன் தனது 'லோகோபகாரி' இதழில் 'பாரதி போட்டி'களையும் செப்டம்பர் 11-ம் நாள் பாரதி விழாவையும் ஆண்டுதோறும் நடத்தினார்.
 
====== பாரதியின் படைப்புகளின் பதிப்பாளர்======
நெல்லையப்பர் 'தேசபக்தன்' இதழின் துணையாசிரியராக இருந்தபோது தொடர்ந்து பாரதியின் உணர்ச்சி பொங்கும் கவிதைகளை அவ்விதழில் வெளியிட்டு வந்தார். தொடர்ந்து பாரதியின் தேசபக்திப் பாடல்கள், பாப்பாப் பாட்டு, முரசுப் பாட்டு போன்றவற்றை நிதி நெருக்கடியிலும் பரலி சு. நெல்லையப்பர் வெளியிட்டார். கண்ணன் பாட்டுக்கு எழுதிய முன்னுரையில் அவர், "ஸ்ரீமான் பாரதியார் ஒரு பெரிய மேதாவி; மகா பண்டிதர்; தெய்வீகப் புலவர்; ஜீவன் முக்தர்; இவர் எனது தமிழ்நாட்டின் தவப்பயன். அவருக்கு யான் கொடுக்கும் உச்சஸ்தானம் நிச்சயமானது. இதனைத் தற்காலத்தில் அறியாதவர்கள் பிற்காலத்தில் அறிவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
1917- ஆம் ஆண்டு பாரதியாரின் [[கண்ணன் பாட்டு]] (ஆகஸ்ட்), [[பாப்பா பாட்டு]], [[முரசுப் பாட்டு]] ஆகியவற்றைப் பதிப்பித்தார். கண்ணன் பாட்டுக்கு வ.வே. சு ஐயர் முன்னுரை எழுதினார்.  பாரதியாரின் தேச பக்திப் பாடல்களை தேசிய கீதங்கள்  என்ற பெயரில் பதிப்பித்தால் பிரிட்டிஷ் அரசு தடை செய்யும் என்பதால்  ' நாட்டுப்பாட்டு'  என்ற பெயரில் அக்டோபர், 1917-ல் வெளியிட்டார்.
 
1923- ஆம் ஆண்டில் தன் நண்பர்கள் சிலரோடு இணைந்து 'பாரதி பிரசுராலயம்' என்னும் நிறுவனத்தைத் தொடங்கி அதன்வழியாக [[குயில் பாட்டு|குயில்பாட்டு]], [[கண்ணன் பாட்டு]], [[பாரதி அறுபத்தாறு]] ஆகிய பாடல்கள் அடங்கிய தொகுதி ஒன்றை வெளியிட்டார்.


1953- ஆம் ஆண்டில் பாரதியார் படைப்புகளை தமிழக அரசு வெளியிடுவதற்காக அமைத்த குழுவில் நெல்லையப்பர் இடம்பெற்றார்.
1953- ஆம் ஆண்டில் பாரதியார் படைப்புகளை தமிழக அரசு வெளியிடுவதற்காக அமைத்த குழுவில் நெல்லையப்பர் இடம்பெற்றார்.
== கவிஞர் ==
நெல்லையப்பர் இயல்பாகவே கவிதை மனம் கொண்டவராக இருந்தார். வ.உ. சிதம்பரனாரோடு தூத்துக்குடியில் இருந்தபொழுதே கவிதைகள் புனைந்தார். புதுவையில் பாரதியோடு இருந்த பொழுது அவருடைய பாடல்களைப் படித்து கருத்தும், திருத்தமும் கூறும் அளவிற்குக் கவிதை நுட்பங்களை அறிந்திருந்தார். 'தேசபக்தன்' இதழில் பணியாற்றியபோது பாரதிதாசன், [[வெ. இராமலிங்கம் பிள்ளை|நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை]] எழுதிய பாடல்களில் திருத்தம் செய்து வெளியிட்டு வந்தார்.


ஏறத்தாழ 50 ஆண்டுகளாகத் தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 142 பக்கங்களில் 'நெல்லைத் தென்றல்' என்னும் நூலாக 1966- ஆம் ஆண்டு வெளியிட்டார். மேலும், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களையும் வெளியிட்டார்.
சைதாப்பேட்டையில் [[பாரதி சுராஜ்]]  தலைமையில் 'பாரதி கலைக்கழகம்' உருவாகக் காரணமாக இருந்தார்.
== எழுத்தாளர் ==
 
இதழ்களில் பணியாற்றிய பொழுது தலையங்கம், செய்திக் கட்டுரைகள், மதிப்புரைகள் எனப் பலவற்றை தன்னுடைய
==மறைவு==
[[File:வ..சி. சரித்திரம்.jpg|thumb|வ.உ.சி. சரித்திரம்]]
பரலி.சு. நெல்லையப்பருக்கு இறுதிக் காலத்தில் பார்வைக்குறைவு ஏற்பட்டது. மார்ச் 28, 1971 அன்று அவர் காலமானார்.
இயற்பெயரிலும் பாரி என்னும் புனைபெயரிலும் எழுதினார்.
 
==நூல் பட்டியல்==


அவற்றுள் கைக்குத்தல் அரிசியின் மகத்துவம், பாரதியின் தமிழ்ப்புலமை, கங்கைகொண்ட சோழபுரம், பாரம் சுமக்கும் பள்ளிப் பிள்ளைகள்,  குழந்தைகள் அதிகம் பெற வேண்டா, தமிழின் பெருமை போன்ற சில ஓரிரு பக்கக் குற்றேடுகளாக அச்சிட்டு பலருக்கும் வழங்கினார்.
*தமிழர் திருமணம்
*உய்யும் வழி
*பாரதி வாழ்த்து
*பாரதியார் சரித்திரம்
*வ.உ. சிதம்பரம்பிள்ளை சரித்திரம்


பாரதியார், வ.உ.சி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை முறையே பாரதியார் சரித்திரம் (1928 – [[நாவலர் சோமசுந்தர பாரதியார்]], [[சக்கரைச் செட்டியார்]] ஆகியோருடன் இணைந்து), [[வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம்]] (1944 – சக்தி காரியாலய வெளியீடு) என்னும் பெயரில் நூல்களாக வெளியிட்டார்.
======மொழியாக்கங்கள்======


மேலும் '[[தமிழ்த் திருமண முறை]]' என்னும் நூலையும் எழுதினார். இவர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகள் முறையாக இதுவரை தொகுக்கப்படவில்லை.
*பக்கிம் சந்திர சட்டர்சியின் ராதாராணி
== மொழிபெயர்ப்பாளர் ==
*பக்கிம் சந்திர சட்டர்சியின் சோடி மோதிரம்
பரலி சு. நெல்லையப்பர் பின்வரும் நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்:
*சுவர்ணலதா (டாக்டர் பா.நடராசனுடன் இணைந்து)
* பக்கிம் சந்திர சட்டர்சியின் 'ராதாராணி'
*காந்தியடிகளின் சுயராஜ்யம்
* பக்கிம் சந்திர சட்டர்சியின் 'ஜோடி மோதிரம்'
*காந்தியடிகளின் சுகவழி
* சுவர்ணலதா (டாக்டர் பா.நடராசனுடன் இணைந்து)
* காந்தியடிகளின் 'சுயராஜ்யம்'
* காந்தியடிகளின் 'சுகவழி'
*சிவானந்தர் உபதேசமாலை[[File:பாரதி வாழ்த்து.jpg|thumb|பாரதி வாழ்த்து]]
== பதிப்பாளர் ==
லோகோபகாரி வெளியீடு, பாரி வெளியீடு ஆகிய பதிப்பகங்களை பரலி சு. நெல்லையப்பர் நடத்தினார். அவற்றின் வழியே பின்வரும் நூல்களை வெளியிட்டார்:
{| class="wikitable"
|+
|
* பாரதியார் சரித்திரம்
* வ.உ.சிதம்பரபிள்ளை சரித்திரம்
* பாரதி வாழ்த்து
* நெல்லைத் தென்றல்
* உய்யும் வழி
* தமிழ்த் திருமண முறை
* ராதாரானி (மொழி பெயர்ப்பு)
* ஜோடி மோதிரம் (மொழி பெயர்ப்பு)
* சுவர்ணலதா
* மகாத்மா காந்தியின் இந்திய சுயராஜ்ஜியம்
* மகாத்மா காந்தியின் சகவழி
*சிவானந்தர் உபதேசமாலை
*சிவானந்தர் உபதேசமாலை
|
 
* பூ லோகத்து சப்த அதிசயங்கள்
======பதிப்பித்தவை======
* பகவான் அரவிந்தர் பத்தினிக்கு எழுதிய கடிதங்கள்
 
* மகாகவி பாரதியாரின் கண்ணன் பாட்டு
*ஆத்மசிந்தனை, சி. இராஜகோபாலாச்சாரியார்
* நாட்டுப்பாட்டு, பாப்பா பாட்டு
*மாதர் கடமை, பி.பி.சுப்பையா
* முரசுப்பாட்டு, குயில்பாட்டு
*பகவான் அரவிந்தர் பத்தினியாருக்கு எழுதிய கடிதங்கள் (1948)
* பாரதி அறுபத்தாறு
*பூலோகத்தின் சப்த அதிசயங்கள்
* ராஜாஜியின் ஆத்ம சோதனை
*திருவாசகம், மாணிக்கவாசகர்
* பி.வி. சுப்பையாவின் மாதர்கடமை
*நளன் தூது (நைடதம்), அதிவீரராம பாண்டியன்
* திருவாசகம். மாணிக்கவாசகர் (மலிவுப்பதிப்பு)
 
* நளன் தூது (நைடதம்), அதிவீராம பாண்டியன்
==உசாத்துணை==
|}
*தமிழ் வளர்த்த பெருமக்கள், என். ஸ்ரீனிவாசன், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு
== இறுதிக்காலம் ==
*[http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=7370 பரலி சு.நெல்லையப்பர், தென்றல் செப்டெம்பர் 2011]
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவித்தொகையை இந்திய  அரசாங்கம் ( Government of India) இவருடைய இறுதிக்காலத்தில் வழங்கி வந்தது. அந்த உதவித்தொகையை 1967-ஆம் ஆண்டில் இவருடைய பொருளாதார நிலை உயர்ந்துவிட்டது என தமிழக அரசு அனுப்பிய குறிப்பின் அடிப்படையில் இந்திய  அரசாங்கம் நிறுத்திவிட்டது. எழுத்தாளர் எதிரொலி விசுவநாதன், அன்றைய சட்ட மேலவை உறுப்பினர்களாக இருந்த நாமக்கல் வெ. இராமலிங்கம், தி. க. சண்முகம் ஆகியோரின் முயற்சியால் 1969- ஆம் ஆண்டு முதல் மீண்டும் அவ்வுதவித் தொகை கிடைத்தது.
*[https://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=219&pno=128 பரலி சு.நெல்லையப்பர், தமிழ் இணையக் கல்விக் கழகம்]
== நெல்லையப்பரைப் பற்றிய நூல்கள்/ கட்டுரைகள் ==
* தனிப்பாடல்கள், வ.உ.சி. (1915)
* பாரதியாரின் தம்பி, எதிரொலி விசுவநாதன்
* இருவர் கண்ட பாரதி, எதிரொலி விசுவநாதன், அசோகன் பதிப்பகம் – சென்னை, 1989.
* வ.உ.சி.யும் பரலி சு. நெல்லையப்பரும், செ.திவான், வ.உ.சி.இலக்கியப்பேரவை-திருநெல்வேலி
* தியாகத்தின் இமயம் ஐயா பரலி சு.நெல்லையப்பர், நமச்சிவாயம் இராமகிருஷ்ணன், சைவநெறி – இந்திய சுதந்திரப் பொன்விழா மலர், 1998
* பரலி சு.நெல்லையப்பர், கவியோகி சுத்தானந்த பாரதியார், ந. சோமயாஜூலு பதிப்பித்த நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு, நெல்லை 1977.
* தமிழ் வளர்த்த எழுத்துச் சிற்பிகள் தொகுதி 1, கலைமாமணி விக்கிரமன், நிவேதிதா புத்தகப் பூங்கா
== மறைவு ==
பரலி சு.நெல்லையப்பர், சென்னைக்கு அருகிலுள்ள குரோம்பேட்டையில் 1971- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28-ஆம் நாள் மறைந்தார்.
[[File:உருவச்சிலை.jpg|thumb|உருவச்சிலை]]
== நினைவுப் பள்ளி ==
பரலி சு.நெல்லையப்பருக்கு 1954- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சென்னை, குரோம்பேட்டையில், 3.16 ஏக்கர் நிலத்தை வழங்கியது. அதில், 5,000 சதுர அடி நிலத்தை, ஆரம்ப பள்ளி நடத்துவதற்காக, பரலி சு.நெல்லையப்பர், அரசுக்கு தானமாக அளித்தார். 1968-ல், அந்த இடத்தில் ஆரம்ப பள்ளி ஒன்றை அரசு துவக்கியது. ஆண்டுக்கு 300 குழந்தைகளுக்கு மேல் அதில் படித்தனர். பிற்காலத்தில், செயல்படாமல் முடங்கியது. அப்பள்ளியை, 2 கோடி ரூபாய் செலவில் அறிவுசார் மையமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
== உருவச்சிலை ==
பரலி சு.நெல்லையப்பர் மறைந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 28, 1993 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் நெல்லையப்பரின் உருவச் சிலையை சென்னை குரோம்பேட்டையில் திறந்து வைத்தார்.
== உசாத்துணை ==
* தமிழ் வளர்த்த பெருமக்கள், என். ஸ்ரீனிவாசன், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு
* [http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=7370 பரலி சு.நெல்லையப்பர், தென்றல் செப்டெம்பர் 2011]
* [https://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=219&pno=128 பரலி சு.நெல்லையப்பர், தமிழ் இணையக் கல்விக் கழகம்]
*[https://www.dinamalar.com/news_detail.asp?id=3074245 பரலி சு.நெல்லையப்பர் நினைவுப்பள்ளி, தினமலர் இணையஇதழ்]
*[https://www.dinamalar.com/news_detail.asp?id=3074245 பரலி சு.நெல்லையப்பர் நினைவுப்பள்ளி, தினமலர் இணையஇதழ்]
{{Standardised}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|25-Nov-2023, 09:53:47 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:இதழாளர்கள்]]

Latest revision as of 16:48, 13 June 2024

பரலி சு.நெல்லையப்பர்

பரலி சு.நெல்லையப்பர் (செப்டம்பர் 18, 1889 - மார்ச் 28, 1971) விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர். வ.உ. சிதம்பரம் பிள்ளையின் நெருங்கிய நண்பராகவும், தொண்டராகவும், சுப்பிரமணிய பாரதியின் புரவலராகவும் இருந்தார். பாரதியின் பாடல்களை வெளியிட்டு அவை மக்களிடையே பிரபலமாவதற்கும் தேசிய எழுச்சிக்கும் காரணமாக இருந்தார். பாரதி வாழும் காலத்திலேயே அவரது பாடல்களின் தொகுப்புகளை வெளியிட்டது அவரது குறிப்பிடத்தக்க பணி.

பிறப்பு, கல்வி

பரலி சு.நெல்லையப்பர், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரலிக்கோட்டையில் செப்டெம்பர் 18, 1889 அன்று சுப்பிரமணிய பிள்ளை, முத்துலட்சுமி அம்மாள் இணையருக்கு மூன்று ஆண் மக்களுள் இரண்டாவது மகனாகப் பிறந்தார். சிறு வயதில் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். நெல்லையப்பர் மெட்ரிக்குலேஷன் வரை பள்ளியில் படித்தார். தமிழிலக்கிய, இலக்கணங்களைக் கற்று, கவிதை எழுதும் திறமை பெற்றிருந்தார்.

நெல்லையப்பரின் மூத்த சகோதரர் பரலி சு. சண்முகசுந்தரம் பிள்ளை. வ.உ. சிதம்பரனாரோடு சுதேசி இயக்கத்தில் பங்கு பெற்றார். சிதம்பரனாரின் சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குகளை விற்றுப் பல்லாயிரம் ரூபாயைத் திரட்டிக் கொடுத்தார். சுப்பிரமணிய சிவாவை வ.உ.சிதம்பரனாருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.சுப்பிரமணிய சிவாவால் 'வந்தே மாதரம் பிள்ளை' என அழைக்கப்பட்டார்.

நெல்லையப்பருக்கு இளையவரான பரலி சு. குழந்தைவேலன். சு. நெல்லையப்பரோடு இணைந்து வ.உ. சிதம்பரனாரின் கப்பல் கம்பெனியில் கணக்கராக வேலை பார்த்தவர். பின்னாளில் லோகோபகாரி என்னும் இதழை நடத்துவதில் நெல்லையப்பருக்குத் துணைநின்றவர்.

தனி வாழ்க்கை

சு. நெல்லையப்பர் 1907-ம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த சில நாள்களிலேயே தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனார் நடந்திய சுதேசி கப்பல் கம்பெனியில் கணக்கராகப் பணியாற்றத் தொடங்கினார். மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சூரத் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வ.உ. சிதம்பரனாரை அழைப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்த சி. சுப்பிரமணிய பாரதியை பரலி சு. நெல்லையப்பர் முதன்முறையாக, வ.உ. சிதம்பரனாரின் வீட்டில் கண்டார். அங்கிருந்த பாரதியின் கவிதைகள் அடங்கிய நான்கு பக்க வெளியீடு ஒன்றையும் இந்தியா இதழையும் படித்த நெல்லையப்பர் சி. சுப்பிரமணிய பாரதிமேல் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.

நெல்லையப்பர் திருமணம் செய்துகொள்ளவில்லை, தன்னுடைய இறுதிக் காலத்தில் பூங்கோதை என்னும் பெண்ணைத் தத்தெடுத்து வளர்த்தார்.

விடுதலைப் போராட்டம்

ஆரம்ப பள்ளி
  • வ.உ. சிதம்பரனார், பிரிட்டிஷாரின் வீடுகளில் பணிசெய்த பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் சமையற்காரர்களைத் திரட்டி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியபோது பரலி சு. நெல்லையப்பர் அப்போராட்டத்தில் பெரிதும் உதவினார்.
  • விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாட காவல்துறையினரின் தடையை மீறி வ.உ. சிதம்பரனார் தூத்துக்குடியில் சுப்பிரமணிய சிவாவோடு இணைந்து மார்ச் 9, 1908 அன்று நடத்திய ஊர்வலத்தில் பரலி சு. நெல்லையப்பரும் கலந்துகொண்டார். தடையை மீறியதற்காகவும், கப்பல் கம்பெனி நடத்தியதற்காகவும் வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா இருவரும் மார்ச் 12, 1908 அன்று கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைக் கண்டித்துக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான துண்டறிக்கையை அச்சிட்டு விநியோகித்ததற்காக நெல்லையப்பரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 1930-ல் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.
  • 1932-ல் காந்தியடிகளின் ஆணையின்பேரில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.
  • 1941-ல் தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.

நாட்டு விடுதலைக்குப்பின் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு அரசு நிலம் வழங்கியது. தனக்குக் கிடைத்த நிலத்தை பள்ளி ஒன்று துவக்குவதற்காக அரசுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார் நெல்லையப்பர். பரலி. சு. நெல்லையப்பர் நகராட்சிப் பள்ளி என்ற பெயரில் இயங்கிவந்த அந்தப்பள்ளி குறைவான மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 2010-ல் மூடப்பட்டது.

புதுவையிலும் கோவையிலும்

நெல்லையப்பர் 1909-சென்னையில் நீலகண்ட பிரமச்சாரியையும் சி. சுப்பிரமணிய பாரதியையும் சந்தித்தார். 1910-ன் தொடக்கம் முதல் ஜூன், 1911 வரை பாரதியாரின் வீட்டில் தங்கினார். பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'சூரியோதயம்' என்னும் பத்திரிக்கையின் துணையாசிரியராகப் பணியாற்றினார். ஏப்ரல் 1910- ல் மாதம் கடல் வழியாக புதுவைக்கு வந்த அரவிந்தரை துறைமுகத்திற்குச் சென்று அழைத்து வந்தார். ஜூன் 1911-ல் கோவை சிறையிலிருந்த வ.உ. சிதம்பரனார் அழைத்ததால் அங்கு சென்றார்.

வ.உ. சிதம்பரனாருக்கு பாரதியார் எழுதிய மூன்று விருத்தங்கள் கொண்ட சீட்டுக்கவியை எடுத்துக்கொண்டு பரலி சு. நெல்லையப்பர் கோயம்புத்தூர் சென்றார். அங்கு வழக்கறிஞர் சி. கே. சுப்பிரமணிய முதலியார் உதவியோடு கோவை, பேரூர் சாலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்துத் தங்கினார். முடிந்த போது சிறையில் இருந்த வ.உ. சிதம்பரனாரைச் சந்தித்து, அவரது கட்டளைகளை அந்த ஆசிரமத்தில் இருந்தவாறே நிறைவேற்றினார். வ.உ.சி.யை தன்வரலாறு எழுதும்படி வேண்டினார். 1912- ன் மத்தியில் சிதம்பரனார் கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டதும் நெல்லையப்பர் நெல்லைக்குத் திரும்பினார். டிசம்பர் 1912-ல் சிதம்பரனார் விடுதலை பெற்று சென்னையில் குடியேறியபின் நெல்லையப்பர் அவரது வீட்டிலும் வேறு இடங்களிலுமாக வாழ்ந்தார்.

இதழியல்

  • சிதம்பரனார், சுப்ரமண்ய சிவா இருவரின் கைதையும் கண்டித்து நெல்லையப்பர் எழுதிய கட்டுரை பாரதியார் நடத்திய 'இந்தியா' இதழில் வெளிவந்தது.
  • புதுவையில் இருந்து பாரதியார் வெளியிட்ட 'சூரியோதயம்' இதழிலும்(1910) கர்மயோகி மாத இதழிலும் (1911)நெல்லையப்பர் துணையாசிரியராக இருந்தார்.
  • சென்னையிலிருந்து கோ. வடிவேலு செட்டியார் வெளியிட்ட லோகோபகாரி இதழில் 1913-1915 மற்றும் 1917-1918 ஆண்டுகளில் துணையாசிரியராக இருந்தார்.
  • தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலருடன் இணைந்து பாரதியின் பாடல்களையும், புகழையும் பரப்புவதற்காக 'பாரதி' என்ற இதழை நடத்தினார்( 1915-1916).
  • 'தேசபக்தன்' இதழில் திரு.வி.க., வ.வே.சு.ஐயர் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தபொழுது நெல்லையப்பர் துணையாசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றினார் (1917-செப்டெம்பர் 1921).
  • 1922-ல் 'லோகோபகாரி' இதழை விலைக்கு வாங்கி நடத்தத் தொடங்கி 1941 வரை அதன் ஆசிரியராக இருந்தார். ஐ. மாயாண்டி பாரதி இவ்விதழின் துணையாசிரியராக இருந்தார். மீண்டும் 1943- முதல் 1948 வரை 'லோகோபகாரி' இதழில் ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணனை லோகோபகாரி இதழுக்கு ஆசிரியராக்கினார்.

இலக்கிய வாழ்க்கை

வ.உ.சி. சரித்திரம்

நெல்லையப்பர் வ.உ. சிதம்பரனாரோடு தூத்துக்குடியில் இருந்தபொழுதே கவிதைகள் இயற்றினார். பாரதியோடு இருந்த பொழுது அவருடைய பாடல்களைப் படித்து கருத்தும், திருத்தமும் கூறும் அளவிற்குக் கவிதை நுட்பங்களை அறிந்திருந்தார். 'தேசபக்தன்' இதழில் பணியாற்றியபோது பாரதிதாசன், நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை எழுதிய பாடல்களில் திருத்தம் செய்து வெளியிட்டு வந்தார்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளாகத் தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 142 பக்கங்களில் 'நெல்லைத் தென்றல்' என்னும் நூலாக 1966- ஆம் ஆண்டு வெளியிட்டார். மேலும், ;பாரதி வாழ்த்து', 'உய்யும் வழி' ஆகிய கவிதை நூல்களையும் வெளியிட்டார்.

பரலி சி. நெல்லையப்பர் இதழ்களில் பணியாற்றிய பொழுது தலையங்கம், செய்திக் கட்டுரைகள், மதிப்புரைகள் எனப் பலவற்றை தன்னுடைய இயற்பெயரிலும் பாரி என்னும் புனைபெயரிலும் எழுதினார்.

அவற்றுள் 'கைக்குத்தல் அரிசியின் மகத்துவம்', 'பாரதியின் தமிழ்ப்புலமை', 'கங்கைகொண்ட சோழபுரம்', 'பாரம் சுமக்கும் பள்ளிப் பிள்ளைகள்', 'குழந்தைகள் அதிகம் பெற வேண்டா,' போன்றவற்றை ஓரிரு பக்க சிறு நூல்களாக அச்சிட்டு பலருக்கும் வழங்கினார்.

பாரதியார், வ.உ.சி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை நாவலர் சோமசுந்தர பாரதியார், சக்கரைச் செட்டியார் ஆகியோருடன் இணைந்து, முறையே பாரதியார் சரித்திரம் (1928) – வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம் (1944 – சக்தி காரியாலய வெளியீடு) என்னும் பெயரில் நூல்களாக வெளியிட்டார். சிதம்பரம் பிள்ளை சரித்திரம் நூலுக்கு திரு. வி. க முன்னுரை எழுதினார்.

'தமிழ்த் திருமண முறை' என்னும் நூலையும் எழுதினார். இவர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகள் முறையாக இதுவரை தொகுக்கப்படவில்லை.

மொழியாக்கங்கள்

பரலி சு.நெல்லையப்பர் பங்கிம் சந்திரரின் ராதாராணி, காந்தியின் சுயராஜ்யம் போன்ற நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்தார்.

பாரதி

பரலி. சு. நெல்லையப்பர் பாரதியின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் நடத்திய பாரதி' என்ற இதழில்தான் 'பாரத தேசம் என்று..', 'பாருக்குள்ளே நல்ல நாடு', 'புதுமைப் பெண்', 'செந்தமிழ்நாடு' ஆகிய பாடல்கள் வெளியாகின.

1913-1919 ஆண்டுகளில் தான் பணியாற்றிய இதழ்களிலும் சுப்பிரமணிய சிவா நடத்திய 'ஞானபாநு' முதலிய இதழ்களிலும் பாரதியார் கவிதைகளை வெளிவரச் செய்தார். அவற்றிற்காக கிடைத்த பணத்தையும், பாரதிக்கு தேவைப்பட்ட பணத்தை வேறு வகைகளில் திரட்டியும், புதுவை நண்பர்கள் மூலம் பாரதிக்குக் கிடைக்கச் செய்து வந்தார். பாரதியாரால் "தம்பீ!" என அழைக்கப்பட்ட நெல்லையப்பர், செப்டம்பர் 11, 1921-அன்று பாரதியார் இறந்தபோது அவரது உடலை மறுநாள் இடுகாட்டிற்குத் தூக்கிச் சென்றவர்களுள் ஒருவராக இருந்தார்.

1950-ம் ஆண்டு முதல் குரோம்பேட்டையில் வசித்த நெல்லையப்பர் தான் வாழ்ந்த பகுதிக்கு 'பாரதிபுரம்' எனவும், அங்கிருந்த பிள்ளையாருக்கு 'பாரதி விநாயகர்' எனவும் பெயரிட்டார்

பாரதியாரின் புகழைப் பரப்பும் நோக்குடன் தனது 'லோகோபகாரி' இதழில் 'பாரதி போட்டி'களையும் செப்டம்பர் 11-ம் நாள் பாரதி விழாவையும் ஆண்டுதோறும் நடத்தினார்.

பாரதியின் படைப்புகளின் பதிப்பாளர்

நெல்லையப்பர் 'தேசபக்தன்' இதழின் துணையாசிரியராக இருந்தபோது தொடர்ந்து பாரதியின் உணர்ச்சி பொங்கும் கவிதைகளை அவ்விதழில் வெளியிட்டு வந்தார். தொடர்ந்து பாரதியின் தேசபக்திப் பாடல்கள், பாப்பாப் பாட்டு, முரசுப் பாட்டு போன்றவற்றை நிதி நெருக்கடியிலும் பரலி சு. நெல்லையப்பர் வெளியிட்டார். கண்ணன் பாட்டுக்கு எழுதிய முன்னுரையில் அவர், "ஸ்ரீமான் பாரதியார் ஒரு பெரிய மேதாவி; மகா பண்டிதர்; தெய்வீகப் புலவர்; ஜீவன் முக்தர்; இவர் எனது தமிழ்நாட்டின் தவப்பயன். அவருக்கு யான் கொடுக்கும் உச்சஸ்தானம் நிச்சயமானது. இதனைத் தற்காலத்தில் அறியாதவர்கள் பிற்காலத்தில் அறிவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

1917- ஆம் ஆண்டு பாரதியாரின் கண்ணன் பாட்டு (ஆகஸ்ட்), பாப்பா பாட்டு, முரசுப் பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தார். கண்ணன் பாட்டுக்கு வ.வே. சு ஐயர் முன்னுரை எழுதினார். பாரதியாரின் தேச பக்திப் பாடல்களை தேசிய கீதங்கள் என்ற பெயரில் பதிப்பித்தால் பிரிட்டிஷ் அரசு தடை செய்யும் என்பதால் ' நாட்டுப்பாட்டு' என்ற பெயரில் அக்டோபர், 1917-ல் வெளியிட்டார்.

1923- ஆம் ஆண்டில் தன் நண்பர்கள் சிலரோடு இணைந்து 'பாரதி பிரசுராலயம்' என்னும் நிறுவனத்தைத் தொடங்கி அதன்வழியாக குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாரதி அறுபத்தாறு ஆகிய பாடல்கள் அடங்கிய தொகுதி ஒன்றை வெளியிட்டார்.

1953- ஆம் ஆண்டில் பாரதியார் படைப்புகளை தமிழக அரசு வெளியிடுவதற்காக அமைத்த குழுவில் நெல்லையப்பர் இடம்பெற்றார்.

சைதாப்பேட்டையில் பாரதி சுராஜ் தலைமையில் 'பாரதி கலைக்கழகம்' உருவாகக் காரணமாக இருந்தார்.

மறைவு

பரலி.சு. நெல்லையப்பருக்கு இறுதிக் காலத்தில் பார்வைக்குறைவு ஏற்பட்டது. மார்ச் 28, 1971 அன்று அவர் காலமானார்.

நூல் பட்டியல்

  • தமிழர் திருமணம்
  • உய்யும் வழி
  • பாரதி வாழ்த்து
  • பாரதியார் சரித்திரம்
  • வ.உ. சிதம்பரம்பிள்ளை சரித்திரம்
மொழியாக்கங்கள்
  • பக்கிம் சந்திர சட்டர்சியின் ராதாராணி
  • பக்கிம் சந்திர சட்டர்சியின் சோடி மோதிரம்
  • சுவர்ணலதா (டாக்டர் பா.நடராசனுடன் இணைந்து)
  • காந்தியடிகளின் சுயராஜ்யம்
  • காந்தியடிகளின் சுகவழி
  • சிவானந்தர் உபதேசமாலை
பதிப்பித்தவை
  • ஆத்மசிந்தனை, சி. இராஜகோபாலாச்சாரியார்
  • மாதர் கடமை, பி.பி.சுப்பையா
  • பகவான் அரவிந்தர் பத்தினியாருக்கு எழுதிய கடிதங்கள் (1948)
  • பூலோகத்தின் சப்த அதிசயங்கள்
  • திருவாசகம், மாணிக்கவாசகர்
  • நளன் தூது (நைடதம்), அதிவீரராம பாண்டியன்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Nov-2023, 09:53:47 IST