under review

சா. ஞானப்பிரகாசர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(27 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
[[File:சா. ஞானப்பிரகாசர்.jpg|thumb|சா. ஞானப்பிரகாசர்]]
[[File:ஞானப்பிரகாசர்4.png|thumb|சா. ஞானப்பிரகாசர்]]
சா. ஞானப்பிரகாசர் (ஆகஸ்ட் 30, 1875 - ஜனவரி 22, 1947) இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர், பன்மொழிப் புலவர், மறைநூல் வல்லுநர், மொழி வல்லுநர், மத போதகர், மொழி ஆராய்ச்சியாளர், தமிழின் தொன்மையை ஆய்வு செய்தவர், எழுத்தாளர், ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி முக்கியமான பங்களிப்பு. ‘சொற்கலைப் புலவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
[[File:Swamy Gnanapirakasar.jpg|thumb|ஞானப்பிரகாசர் ]]
[[File:பண்டைத்தமிழர்1.jpg|thumb|பண்டைத்தமிழர்]]
சா. ஞானப்பிரகாசர் (S.Gnanaprakasham) (ஆகஸ்ட் 30, 1875 - ஜனவரி 22, 1947) இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர், பன்மொழிப் புலவர், மறைநூல் வல்லுநர், மொழி வல்லுநர், மத போதகர், மொழி ஆராய்ச்சியாளர், தமிழின் தொன்மையை ஆய்வு செய்தவர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர். சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி முக்கியமான பங்களிப்பு. 'சொற்கலைப் புலவர்’ என்று அழைக்கப்படுகிறார்.

(பார்க்க : [[ஞானப்பிரகாசர்]])
[[File:ஞானப்பிரகாசம்.png|thumb|ஞானப்பிரகாசர் நூல்]]
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது பரராசசேகரனின் வழித்தோன்றலான ராசலிங்கம் சாமிநாதப் பிள்ளைக்கும், தங்கமுத்துவுக்கும் மகனாக மானிப்பாய் என்ற ஊரில் ஆகஸ்ட் 30, 1875-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம். இவருக்கு ஐந்து வயதாக இருந்த போது தந்தை காலமானார். தங்கமுத்து அம்மையார் கத்தோலிக்கரான தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் புரிந்தார். தாயும் மகனும் ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவினர். அதன்பின் ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

[[File:ஞானப்பிரகாசர் வரலாறு.jpg|thumb|ஞானப்பிரகாசர் வரலாறு]]
சா. ஞானப்பிரகாசர் அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் தொடக்கக் கல்வியைக் கற்றார். யாழ் புனித பத்ரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார். இளமையிலேயே உரிய ஆசிரியர்களிடம் வயலின் வாசிக்கவும் மத்தளம் அடிக்கவும் கற்றுக்கொண்டார் சபாபதிக் குருக்களிடம் சமஸ்கிருதம் படித்தார்.
== தனிவாழ்க்கை ==
ஞானப்பிரகாசத்துக்கு பதினெட்டு வயது நடக்கும் போது நாவலப்பிட்டியில் இருந்த அவரது தாய்மாமனுடன் சிறிது காலம் தோட் டத்தில் கணக்கு எழுதுபவராக வேலை செய்து வந்தார். 1893-ம் ஆண்டில் சா. ஞானப்பிரகாசர் ரயில்வே கணக்காய தேர்வில் முதற்தரமாக வென்றமையால் கடிகமுவ என்னும் இடத்தில் ரயில்நிலைய உதவியாளராக வேலை பெற்றார். பின்னர் கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலத்தில் வேலை செய்ய அனுப்பப் பட்டார்.
====== கத்தோலிக்க குரு பட்டம் ======
ஞானப்பிரகாசரின் அன்னை அவர் கத்தோலிக்க குருவாக வேண்டும் என விரும்பி அதை கத்தோலிக்க மதத்தலைவர் ஜூல்ஸ் கோலின் அவர்களுக்கு கடிதம் வழியாக தெரிவித்துக் கொண்டிருந்தார். ஆனால் தம்பிமுத்துப் பிள்ளை அதற்கு உடன்படாமையால் சிறிதுகாலம் சா. ஞானப்பிரகாசர் தன் சிறிய தந்தையின் அச்சகத்தில் உதவியாளராக இருந்தார். ஜூன்ஸ் கோலின் அவர்களின் தம்பியும் கத்தோலிக்க மதகுருவுமான சார்ல்ஸ் கோலின் அவர்களுடைய வலியுறுத்தலால் கத்தோலிக்க மதகுருவாக ஆனார். சா. ஞானப்பிரகாசர் 1895-ம் ஆண்டு இறைப்பணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ் குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். டிசம்பர் 1, 1901-ல் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
== மதப்பணியும் சமூகப்பணியும் ==
சுவாமி ஞானப்பிரகாசர் குருவாகப்

அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் தொடக்கக் கல்வியைக் கற்றார். யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார்.
பட்டம் பெற்றபின் முதல் முறையாக ஊர்காவற்றுறை என்னும் ஊரில் தொண்டு செய்யத் தொடங்கினர். அங்கே கத்தோலிக்க நூல்நிலையம் ஒன்றை நிறுவி, நூல்களை இரவலாக கொடுத்து வாங்கி, மக்கள் இலகுவாக நூல்களைப் பெற்று வாசிக்க வழிகோலினார். இதுவே ஊர்காவற்றுறையில் முதல் முதல் ஏற்பட்ட நூல் நிலையமாகும். சுவாமி ஞானப்பிரகாசர் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணத்து ஆசனக்கோவிலில் சில மாதங்கள் சேவை செய்தபின் நல்லூரைச் சேர்ந்த திருநெல்வேலி என்னும் ஊரை தமது தலைமைத் தானமாகக் கொண்டு 1902-ம் ஆண்டு தொடக்கம் சமயத் தொண்டை விரிவாகச் செய்யத் தொடங்கினுர்
[[File:சா. ஞானப்பிரகாசர் 2.jpg|thumb|சா. ஞானப்பிரகாசர்]]

== தனிவாழ்க்கை ==
சா. ஞானப்பிரகாசர் திருநெல்வேலி, நல்லூர், கொக்குவில், கோண்டாவில், நீர்வேலி, வடகோப்பாய், தென்கோப்பாய், உரும்பிராய், மல்வத்தை (உடுவில்), கூரம்பன் (உடுவில்), சண்டிலிப்பாய், மானிப்பாய், மூளாய்,கச்சாய், மந்துவில், முகமாலை முதலிய இடங்களில் தேவாலயங்கள் நிறுவி அவற்றுடன் பாடசாலை களையும் ஆரம்பித்து நடத்தினார் நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வதற்காக நிலத்தை வாங்கி ஓர் ஊரையே அமைத்தார். மறைப்பணி புரிந்த ஜூலன் (யூலன்) பாதிரியார் பெயரில் அவ்வூருக்கு யூலனூர் என பெயரிட்டார்.  
தமது படிப்பை முடித்த பின்னர் பெருந் தோட்டமொன்றில் கணக்காளராகப் பணிபுரிந்தார். 1893-ல் இரயில்வேத் துறையில் எழுதுவினைஞர் தேர்வில் முதலாவதாகத் தேறி கடிகமுகவயிலும் பின்னர் கொழும்பிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895-ஆம் ஆண்டு இறைப்பணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ் குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். டிசம்பர் 1, 1901-ல் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
 
நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார். இறை அர்ப்பணிப்புச் சேவையில் முதல் பங்காக ஊர்காவற்றுறை எனும் ஊரில் பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். மறை நூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையைச் செயல்படுத்தினார். ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க, கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தார்.

1901-ம் ஆண்டில் யாழ், புனித மரியாள் பேராலயத்தில் 'நற்கருணை ஆராதனை இயக்கத்தைத்' தொடங்கினர். 'குடும்ப வாசக சபை'யை தொடங்கி சிறு நூல்களை வெளியிட்டார். ஞானப்பிரகாசர் முப்பதுக்கும் மேற்பட்ட கத்தோலிக்க நூல்களை எழுதியும், பதிப்பித்தும் இருக்கிறார். அவற்றில் யோசேவாஸ் முனிவர் சரித்திரம், சத்தியவேதபோதகச் சுருக்கம், லூர்தில் நடக்கும் அதிசயங்கள் போன்ற நூல்கள் புகழ்பெற்றிருந்தன.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
இலத்தின், கிரேக்கம் முதலாய பதினெண் மொழிகளில் புலமை பெற்றார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் கற்ற தமிழும் ஆங்கிலமும், எழுதுவினைஞராக கடமையாற்றிய போது கற்ற சிங்களமும், யாழ் குருமடத்தில் இலத்தீன், பிரெஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றார். மொழிகளுக்கிடையே ஒருவகை தொடர்பு இருப்பதைக் கண்டுணர்ந்து, 72 மொழிகள் வரை கற்றுப் புலமை பெற்றார். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தாமே இயற்றி முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார்.  
ஞானப்பிரகாசரின் சிறிய தந்தை தம்பிமுத்துப் பிள்ளை தமது அச்சகத்தில் சன்மார்க்க போதினி என்னும் இதழ் ஒன்றை வெளியிட்டு வந்தார். அதில் ஞானப்பிரகாசம் பிழைநோக்கவும் குறிப்புகளை எழுதவும் தொடங்கினார். புலவர் தம்பிமுத்துப்பிள்ளையிடமிருந்து செய்யுள் இலக்கணத்தைக் கற்றுக்கொண்டு அவ்விதழில் செய்யுள்களும் எழுதி வெளியிட்டார்.  

==== ஆய்வுகள் ====
சா. ஞானப்பிரகாசர் இலத்தின், கிரேக்கம் முதலாய பதினெட்டு மொழிகளில் புலமை பெற்றவராக இருந்தார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். யாழ் புனித பத்ரிசியார் கல்லூரியில் கற்ற தமிழும் ஆங்கிலமும், எழுதுவினைஞராக கடமையாற்றிய போது கற்ற சிங்களமும், யாழ் குருமடத்தில் கற்ற லத்தீன், பிரெஞ்சு ஆகிய மொழிகளும் அவருக்கு ஆய்வில் உதவின. இந்த மொழிகளுக்கிடையே ஒருவகை தொடர்பு இருப்பதைக் கண்டுணர்ந்து மொழிகளுக்கிடையேயான ஒப்பீட்டு இலக்கணத்தை உருவாக்க முயன்றார். மொழி ஆய்வில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தாமே இயற்றி முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார்.
வரலாறு, அரசியல், மானிடவியல், சமூகவியல், எழுத்துமுறை, சொல் ஒற்றுமை, இடப்பெயர்கள், சமய வரலாறு, சமய வழிபாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகிய களங்களில் ஆராய்ச்சிகளை மேற் கொண்டார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற தமிழ் ஒப்பியல் அகராதி நூலை எழுதினார். ஞான உணர்ச்சி எனும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டதென்ற கருத்துரையை மறுத்து சாங்கோபாங்க சுவாமிகள் அந்நூலை எழுதியதை நிறுவினார்.
====== மொழியியல் ஆய்வுகள் ======
ஞானப்பிரகாசர் தன் ஆய்வின் அடிப்படையை தன்னுடைய தமிழ் அமைப்புற்ற வரலாறு என்னும் நூலில் குறிப்பிடுகிறார் "தமிழ்மொழியின்கண் பொருந்திய அழகுகளில் ஒன்று யாதெனின் அதன் பன்னூற்றுத்தொகைப் பட்ட சொற்களில் பெரும்பாலானவை தம்முள் இனங்கொண்ட கூட்டம்கூட்டமாய் இயலுதலாகும்" தமிழ்ச்சொற்கள் ஒரே வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்து சிறு சொற்கூட்டங்களாக இயங்குவதை கண்ட ஞானப்பிரகாசர் அந்த வேர்ச்சொற்கள் வேறு மொழிகளின் வேர்ச்சொற்களுடன் எவ்வண்ணம் உறவுகொண்டுள்ளன என ஆராய்ந்தார். அதனூடாக தமிழ் வேர்ச்சொற்களின் தொன்மையையும் தனித்தியங்கும் தன்மையையும் கண்டறிந்ததுடன் தமிழ் வேர்ச்சொற்கள் உருமாறி வெவ்வேறு மொழிகளில் இலங்குவதையும் அறிந்துகொண்டார்.

தமது ஆராய்ச்சி முடிவுகளை ஆங்கிலம், தமிழில் எழுதியுள்ளார். ‘தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும்’ எனும் நூலில், பழந்தமிழ், ஆரியத் தொடர்புகள், பழைய தமிழ் நூல்கள், பழந்தமிழர் மத்தியில் நிலவிய சமூக நிலைமைகள்  குறித்து ஆராய்ந்து விரிவாக எழுதினார். ‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ (How Tamil wasBuilt up) என்ற நூல் தமிழ் சொற்களின் உண்மைப் பிறப்பை விளக்கும் நூல். மேலும், இந்நூலில் தமிழ் சொற் தொகுதிகள், இடம் பற்றிய பெயரிடு, முதற் சொல்லடிகள், வழிச் சொல்லடிகள், சொல் அர்த்தங்கள் விரிந்த விசித்திரம், பிரதிப் பெயர்கள், பெயர் விகுதிகள், வேற்றுமை உருபுகள், காலங் காட்டும் இடைநிலைகள், செயவெனச்சம், வியங் கோள், எதிர்மறை, பிறமொழிகளிற் தமிழடிகள் முதலிய தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியுள்ளார்.
சா. ஞானப்பிரகாசர் வரலாறு, அரசியல், மானிடவியல், சமூகவியல், எழுத்துமுறை, சொல் ஒற்றுமை, இடப்பெயர்கள், சமய வரலாறு, சமய வழிபாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகிய களங்களில் ஆராய்ச்சிகளை மேற் கொண்டார். 'சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற தமிழ் ஒப்பியல் அகராதி நூலை எழுதினார்.

தமிழ்ச் சொற் பிறப்பாராய்ச்சி (Studies in TamilEtymology) என்னும் நூலில் தமிழ் அடிச் சொல் இயல்பு, வழிச் சொல்லாக்கக் கட்டளைகள், மேலும் நான்கு கட்டளைகள், சொற்சிதைவு, பொருள் வேறுபாட்டு முறை, ஆரிய மொழிகளில் வழிச் சொல்லாக்கம் முதலிய ஆராய்சி கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
சா. ஞானப்பிரகாசர் தமது ஆராய்ச்சி முடிவுகளை ஆங்கிலம், தமிழில் எழுதியுள்ளார். 'தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும்’ எனும் நூலில், பழந்தமிழ், ஆரியத் தொடர்புகள், பழைய தமிழ் நூல்கள், பழந்தமிழர் மத்தியில் நிலவிய சமூக நிலைமைகள் குறித்து ஆராய்ந்து விரிவாக எழுதினார். 'தமிழ் அமைப்புற்ற வரலாறு’ (How Tamil was built up) என்ற நூல் தமிழ் சொற்களின் தமிழின் இன்றைய கட்டமைப்பு உருவாகி வந்ததை விளக்கும் நூல். இந்நூலில் தமிழ் சொற் தொகுதிகள், இடம் பற்றிய பெயரிடு, முதற் சொல்லடிகள், வழிச் சொல்லடிகள், சொல் அர்த்தங்கள் விரிந்த விசித்திரம், பிரதிப் பெயர்கள், பெயர் விகுதிகள், வேற்றுமை உருபுகள், காலங் காட்டும் இடைநிலைகள், செயவெனச்சம், வியங் கோள், எதிர்மறை, பிறமொழிகளிற் தமிழடிகள் முதலிய தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியுள்ளார்.

ஒப்பியல் நோக்கில் ஆய்வுகளை நிகழ்த்தினார். மரபுவழித் தமிழ்க்கல்வியாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். 1936-ல், சிந்து சமவெளியின் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளை படித்தறிவதில் ஸ்பானிய கிறுஸ்தவ சமயத்துறைவியும், மும்பை பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், இந்திய புதை பொருளாராய்ச்சிக்குக் கழகத் தலைவருமான அறிஞர் ஹெராஸ் பாதிரியாருக்கு ஞானப்பிரகாசர் உதவினார். சிந்து சமவெளி நாகரிகம் திராவிடப் பண்பாடுடன் பொருந்துவதைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளுக்கு இவை உதவின. மொழி ஆராய்ச்சியில் வேர்ச்சொல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதால் ‘வேர்ச்சொல் அறிஞர்’ என்றும் அழைக்கப்பட்டார்.
சா. ஞானப்பிரகாசர் எழுதிய தமிழ்ச் சொற் பிறப்பாராய்ச்சி (Studies in Tamil Etymology) என்னும் நூலில் தமிழ் அடிச் சொல் இயல்பு, வழிச் சொல்லாக்கக் கட்டளைகள், மேலும் நான்கு கட்டளைகள், சொற்சிதைவு, பொருள் வேறுபாட்டு முறை, ஆரிய மொழிகளில் வழிச் சொல்லாக்கம் முதலிய ஆராய்சி கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.மொழி ஆராய்ச்சியில் வேர்ச்சொல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதால் 'வேர்ச்சொல் அறிஞர்’ என்றும் அழைக்கப்பட்டார்.
====== வரலாற்று ஆய்வுகள் ======
சா. ஞானப்பிரகாசர் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவராயினும் அவர் மரபுவழித் தமிழ்க்கல்வியாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். 1936-ல், சிந்து சமவெளியின் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளை படித்தறிவதில் ஸ்பெயின் நாட்டு கிறிஸ்தவ சமயத்துறைவியும், மும்பை பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், இந்திய புதை பொருளாராய்ச்சிக்குக் கழகத் தலைவருமான அறிஞர் ஹெராஸ் பாதிரியாருக்கு ஞானப்பிரகாசர் உதவினார். சிந்து சமவெளி நாகரிகம் திராவிடப் பண்பாடுடன் பொருந்துவதைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளுக்கு இவை உதவின.  

==== யாழ்ப்பாண வைபவ விமரிசனம் ====
ஞானப்பிரகாசர் அவர் காலகட்டத்தில் வரலாற்றாய்வுகளைச் செய்துகொண்டிருந்த கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, [[கே.என். சிவராஜ பிள்ளை]], [[எஸ். வையாபுரிப் பிள்ளை]] போன்றவர்களுடன் நேரடி தொடர்பு இருக்கவில்லை என்றும், முறைசாரா ஆய்வுகள் செய்துகொண்டிருந்தவர்களுடனேயே அவர் தொடர்பிலிருந்தார் என்றும், இதனால் அவருடைய வரலாற்றாய்வுகள் கூர்மையிழந்தன என்றும் க.கைலாசபதி குறிப்பிடுகிறார். (ஞானப்பிரகாசர் சிந்தனையும் பணியும். [https://noolaham.net/project/50/4983/4983.html இணையநூலகம்])
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால் யாழ்ப்பாண வரலாற்றை எடுத்துரைக்கும் பொருட்டு எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட வரலாற்று முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் ஞானப்பிரகாசர் எடுத்துக் காட்டியுள்ளார்.
====== புனைவு ======
ஞானப்பிரகாசர் செகராசசேகரன்’ என்னும் புனைவுநூலை எழுதியுள்ளார். இது நவீன நாவலுக்கு அணுக்கமான வடிவம் கொண்டது.
====== யாழ்ப்பாண வைபவ விமரிசனம் ======
18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால் யாழ்ப்பாண வரலாற்றை எடுத்துரைக்கும் பொருட்டு எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட வரலாற்று முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் ஞானப்பிரகாசர் எடுத்துக் காட்டியுள்ளார். ([https://tamilera.blogspot.com/ இணைய நூல்] )
====== ஞானஉணர்ச்சி ======
ஞான உணர்ச்சி எனும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டதென்ற கருத்துரையை மறுத்து யாக்கோமே கொன்சால்வெஸ் என்னும் சாங்கோபாங்க சுவாமிகள் அந்நூலை எழுதியதை சா. ஞானப்பிரகாசர் நிறுவினார்.
====== தனித்தமிழ்வாதம் ======
"தமிழே உலகத் தாய்மொழியென்று பறையடித்தோதிய பன்மொழிப் புலவன்" என [[சுத்தானந்த பாரதி]] ஞானப்பிரகாசரை போற்றினார். ஆனால் அந்தவகையான பாராட்டுக்களால் அவர் ஒரு தமிழ்ப்பற்றாளர் என முத்திரையடிக்கப்பட்டு அவருடைய வரலாற்று ஆய்வுகள் வரலாற்றாசிரியர் கண்களுக்குப் படாமலாயின என க. கைலாசபதி கருதுகிறார். மொழிவெறி ஞானப்பிரகாசரிடம் இருக்கவில்லை, அவர் புறவயமான தரவுகளை ஒட்டி ஆய்வுசெய்யும் அறிஞராகவே நீடித்தார் என்கிறார். 'தமிழின் தனிச்சிறப்புகளை ஆய்ந்தறிந்து கூறியவர், ஆயினும் தனித்தமிழ்வாதியாக இருக்க அவர் விரும்பவில்லை" என்று கூறும் கைலாசபதி தருக்கசாத்திரச் சுருக்கம் என்னும் நூலில் இருந்து ஞானப்பிரகாசரின் ஒரு மேற்கோளை அளிக்கிறார்.

"தமிழ்ச்சொற்களே அன்றி வடமொழிச் சொற்கலப்புள்ள தமிழ் தக்கதன்று என்று விலக்குகின்ற நவீன நூலாசிரியர் சில்லோரது அபிமதத்தை இந்நூலில் மேற்கொண்டிலேம், ஆரியர் தமிழ்நாட்டினுற் நுழைந்த பின்னர் தமிழில் எழுந்தனவான சாத்திரங்கள் சிறுபான்மையாயினும் வடமொழிக்கலப்பின்றி இயல மாட்டாதன ஆகின்றன. வடமொழிச் சொற்களை அடியோடு நீக்கி விடுவோமாயின் தருக்கம் ஆகிய சில சாத்திரங்கள் இருந்த இடம் தெரியாமற் போய்விடும். இதனாலன்றே வேண்டுமிடந்தோறும் இந்நூலின்கண் வடசொற்களையும் எடுத்தாண்டிருக்கின்றனம்"
== இதழியல் ==
== இதழியல் ==
இலங்கையில் வெளிவந்த, ஈழகேசரி, இந்து சாதனம், பாது காவலன் மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவந்த கலாநிலையம், கலைமகள், ஞாயிறு உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். சத்திய வேதப் பாதுகாவலன், குடும்ப வாசகம், அமலோற்பவ ராக்கினி தூதன் உள்ளிட்ட மாத இதழ் களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஞானப்பிரகாசர் இலங்கையில் வெளிவந்த, ஈழகேசரி, இந்துசாதனம், பாது காவலன் மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவந்த கலாநிலையம், கலைமகள், ஞாயிறு உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். சென்னையில் இருந்து வெளிவந்த கத்தோலிக்க ஊழியன் இதழில் ஆண்டவர் சரித்திரம் என்னும் தொடரை எழுதினார்.

1897-ல் அமலோற்பவ இராக்கினி தூதன் என்னும் இதழை தொடங்கி நடத்தினார்.1905 முதல் அவ்விதழை ஆங்கிலத்தில் Messenger of our Imaculate Queen என்ற பெயரில் வெளியிட்டார். கத்தோலிக்கப் பாதுகாவலன் 1912 முதல் 1934 வரை இந்த மாத இதழ் வெளிவந்தது. ஞானப்பிரகாசர் சத்திய வேதப் பாதுகாவலன், குடும்ப வாசகம் உள்ளிட்ட மாத இதழ் களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.
== பதவிகள் ==
== பதவிகள் ==
* இலங்கைப் பல்கலைக் கழக மூதவை (Senate) உறுப்பினர்
* இலங்கைப் பல்கலைக் கழக மூதவை (Senate) உறுப்பினர்
Line 38: Line 59:
* ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் துணைத் தலைவர்.
* ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் துணைத் தலைவர்.
[[File:ஞானப்பிரகாசர் அஞ்சல்தலை.png|thumb|255x255px|ஞானப்பிரகாசர் அஞ்சல்தலை]]
[[File:ஞானப்பிரகாசர் அஞ்சல்தலை.png|thumb|255x255px|ஞானப்பிரகாசர் அஞ்சல்தலை]]
== நினைவு முத்திரை வெளியீடு ==
== நினைவு முத்திரை வெளியீடு ==
சுவாமி ஞானப்பிரகாசருக்கு மதிப்பளிக்கும் விதமாக இலங்கை அரசு அவரது படத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை ஒன்றும், சிறப்பு முதல் நாள் உறை ஒன்றையும் மே 22, 1981-ல் வெளியிட்டது. பொதுவாக தலைநகர் கொழும்பில் வெளியிடப்படும் நினைவு முத்திரை ஞானப்பிரகாசரின் ஊரான யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. வீரசிங்கம் மண்டபத்திலுள்ள அஞ்சல் அலுவலகத்தில் யாழ் ஆயர் எஸ். தியோகுப்பிள்ளை ஆண்டகை முன்னிலையில், யாழ்ப்பாணம் பிரதம அஞ்சல் அதிபர் தி. தியாகராசாவிடமிருந்து நினைவு முத்திரையுடன் கூடிய முதல் நாள் தபால் உறையை மாவட்ட அமைச்சர் யு.பி. விஜயக்கோன் பெற்றுக் கொண்டார்.

== விருதுகள் ==
== விருதுகள் ==
* தமிழ்நாட்டுப் புலவர்களையும், ஈழநாட்டுப் புலவர்களையும் கொண்ட தமிழ்ப்புலவர் மன்றம் 1944-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சுவாமி ஞானப் பிரகாசரின் தமிழ்ப் பணியையும், ஆராய்ச்சித் திறனையும் பாராட்டி நடத்திய விழாவில் அவருக்கு ‘சொற்கலைப் புலவர்’ என்னும் பட்டமளித்தது.
* தமிழ்நாட்டுப் புலவர்களையும், ஈழநாட்டுப் புலவர்களையும் கொண்ட தமிழ்ப்புலவர் மன்றம் 1944-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சுவாமி ஞானப் பிரகாசரின் தமிழ்ப் பணியையும், ஆராய்ச்சித் திறனையும் பாராட்டி நடத்திய விழாவில் அவருக்கு 'சொற்கலைப் புலவர்’ என்னும் பட்டமளித்தது.
* கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் 1936-ல், தமிழ்ச் சொற்பிறப்புக்காக சுவாமி ஞானப் பிரகாசருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
* கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் 1936-ல், தமிழ்ச் சொற்பிறப்புக்காக சுவாமி ஞானப் பிரகாசருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
* ஞானப்பிரகாசரின் ஆராய்ச்சியைப் பாராட்டி ஜெர்மனி நாட்டு அரசு அவரைக் கௌரவித்து, அவரது உருவம் பதித்த முத்திரை வெளியிட்டது.
* ஞானப்பிரகாசரின் ஆராய்ச்சியைப் பாராட்டி ஜெர்மனி நாட்டு அரசு அவரைக் கௌரவித்து, அவரது உருவம் பதித்த முத்திரை வெளியிட்டது.
== மறைவு ==
== மறைவு ==
ஜனவரி 22, 1947-ல் தன்னுடைய 71-வது வயதில் ஞானப்பிரகாசர் காலமானார்.
ஜனவரி 22, 1947-ல் தன்னுடைய 71-வது வயதில் ஞானப்பிரகாசர் காலமானார்.
[[File:பண்டைத்தமிழர்.jpg|thumb|பண்டைத்தமிழர்]]
== வாழ்க்கை வரலாறுகள்,மதிப்பீடுகள் ==
ஞானப்பிரகாசர் சிந்தனையும் பணியும் - பேராசிரியர் இந்திரபாலா ( [https://noolaham.net/project/50/4983/4983.pdf இணையநூலகம்] )
== இலக்கிய இடம் ==
ஈழநாட்டின் பன்மொழிப்புலவர்களான தமிழாய்வாளர்கள் என நால்வர் குறிப்பிடப்படுகிறார்கள். ஞானப்பிரகாசர், [[சுவாமி விபுலானந்தர்]], பேராசிரியர் கணபதிப் பிள்ளை, [[சேவியர் தனிநாயகம் அடிகள்]] ஆகியோர்.
 
ஞானப்பிரகாசர் முதன்மையாக அவருடைய மொழியியல் ஒப்பீட்டு ஆய்வுகளுக்காக நினைவுகூரப்படுகிறார். தமிழ்மொழியின் கட்டமைப்பு, வேர்ச்சொல் ஆகியவற்றை ஆராய்ந்து தமிழின் தனித்தியங்கும் தன்மையை ஆய்வுலகில் நிறுவியவர். தமிழுக்கும் பிற தொல்மொழிகளுக்கும் இடையேயான ஒப்பீட்டின் வழியாக தமிழின் தொன்மையையும் நிறுவினார். அவ்வகையில் [[மறைமலையடிகள்]] போன்றவர்களுக்கு சமகாலத்தவராகவும் [[தேவநேயப் பாவாணர்]] [[இலக்குவனார்]] போன்றவர்களுக்கு முன்னோடியாகவும் ஞானப்பிரகாசரை குறிப்பிடலாம். அவருடைய ஆய்வுகளில் பல இன்று முறையான தரவுகளின்றி, முன்முடிவுகளுடன் அணுகப்பட்டவையாக கருதப்பட்டாலும் தமிழின் வேர்ச்சொல் அமைப்பை கொண்டு அதன் முன்னோடி வடிவங்களை ஆராயலாம் என வழிகாட்டியவர் என்பதனால் அவர் குறிப்பிடத்தக்கவர்.

"தமிழிலே பற்றுடையவராக அவர் ஆய்வு செய்ய முயன்றதனால் சில வேளைகள் அவருடைய விளக்கங்களில் அறிவியல்வாதத்திற்கு பதிலாக உணர்வு மேலோங்குவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதன் காரணமாகவே சில சந்தர்ப்பங்களிலே தக்க சான்றாதாரங்களுடன் நிரூபிக்கமுடியாத பல கூற்றுக்கள் அவர் கூறியிருத்தலை நாம் காண முடிகிறது. எப்படி இருப்பினும் சுவாமி அவர்களுடைய தமிழ்மொழி ஆராய்ச்சியிலே புதிய நுண்ணிதான தகவல்கள் எமக்கு தரப்பட்டுள்ளன." என்றும் கலாநிதி அ.சண்முகதாஸ் 'சுவாமி ஞானப்பிரகாசரும் மொழியாய்வும்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை
* சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை
Line 65: Line 89:
* மொழிக்குடும்பம்
* மொழிக்குடும்பம்
* தருக்க சாத்திரம்
* தருக்க சாத்திரம்
==== சமய நூல்கள் ====
==== சமய நூல்கள் ====
* ஆண்டவர் சரித்திரம்
* ஆண்டவர் சரித்திரம்
Line 77: Line 100:
* இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை வரலாறு
* இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை வரலாறு
* ஆதிகாலத்துப் பாப்புமார் சரித்திரம்
* ஆதிகாலத்துப் பாப்புமார் சரித்திரம்
 
====== நாவல் ======
*செகராசசேகரன்’
==== வாழ்க்கை வரலாற்று நூல்கள் ====
==== வாழ்க்கை வரலாற்று நூல்கள் ====
* உபதேசியார் சந்தியாபிள்ளை நற்சரிதை
* உபதேசியார் சந்தியாபிள்ளை நற்சரிதை
Line 83: Line 107:
* Life of Cecilia Rasamma
* Life of Cecilia Rasamma
* Chryasanthus Daria
* Chryasanthus Daria
==== ஆங்கில நூல்கள் ====
==== ஆங்கில நூல்கள் ====
* kings of Jaffna during the portuguers period
* kings of Jaffna during the portuguers period
Line 104: Line 127:
* Root words of the Dravidian groupof Languages
* Root words of the Dravidian groupof Languages
* The Proposed comparative Tamil Lexicon
* The Proposed comparative Tamil Lexicon
== இதர இணைப்புகள் ==
== இதர இணைப்புகள் ==
* [https://youtu.be/G_QxPjeW4Rs நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் காணொளி]
* [https://youtu.be/G_QxPjeW4Rs நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் காணொளி]
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/7628/1/%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D.html சா._ஞானப்பிரகாசர் | ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua]
* [https://www.hindutamil.in/news/blogs/230789-10.html சா.ஞானப்பிரகாசர் தமிழ் ஹிந்து]
* யாழ்ப்பாண வைபவ விமரிசனம் - தமிழரசர் உகம் A Critical History of Jaffna The Tamil Era - Nallur, Swamy Gnanapirakasar
* யாழ்ப்பாண வைபவ விமரிசனம் - தமிழரசர் உகம் A Critical History of Jaffna The Tamil Era - Nallur, Swamy Gnanapirakasar
* [https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-may19/37206-2019-05-10-08-33-02 தமிழ் ‘வேர்ச் சொல்’ அறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர்]
* [https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-may19/37206-2019-05-10-08-33-02 தமிழ் 'வேர்ச் சொல்’ அறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர்]
* [https://www.hindutamil.in/news/blogs/230789-10-2.html சா. ஞானப்பிரகாசம் 10 | சா. ஞானப்பிரகாசம் 10 - hindutamil.in]
* [https://www.hindutamil.in/news/blogs/230789-10-2.html சா. ஞானப்பிரகாசம் 10 | சா. ஞானப்பிரகாசம் 10 - hindutamil.in]
* [http://nakkeran.com/index.php/2022/02/01/commemorating-the-75th-death-anniversary-of-nallur-gnanapragasa-swamigal/ நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் (1895 – 1947) மறைந்து 75 ஆவது நிறைவு – Nakkeran]
* [http://nakkeran.com/index.php/2022/02/01/commemorating-the-75th-death-anniversary-of-nallur-gnanapragasa-swamigal/ நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் (1895 – 1947) மறைந்து 75 ஆவது நிறைவு – Nakkeran]
{{Standardised}}
*[https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A3._%E0%AE%9A%E0%AE%BE._%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D நல்லூர் ஸ்வாமி வண. சா. ஞானப்பிரகாசர் இணையநூலகம்]
*[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்]
*[https://tamilera.blogspot.com/ யாழ்ப்பாண வைபவ விமர்சனம் இணையப்பக்கம்]
*[http://nakkeran.com/index.php/2022/02/01/commemorating-the-75th-death-anniversary-of-nallur-gnanapragasa-swamigal/ ஞானப்பிரகாசர் நக்கீரன் கட்டுரை]
*[https://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D பண்டைத்தமிழர் ஞானப்பிரகாசரின் ஆய்வுக்கட்டுரைகள்]
*
 
{{Finalised}}
 
{{Fndt|15-Nov-2022, 13:33:25 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 16:23, 13 June 2024

சா. ஞானப்பிரகாசர்
ஞானப்பிரகாசர்
பண்டைத்தமிழர்

சா. ஞானப்பிரகாசர் (S.Gnanaprakasham) (ஆகஸ்ட் 30, 1875 - ஜனவரி 22, 1947) இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர், பன்மொழிப் புலவர், மறைநூல் வல்லுநர், மொழி வல்லுநர், மத போதகர், மொழி ஆராய்ச்சியாளர், தமிழின் தொன்மையை ஆய்வு செய்தவர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர். சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி முக்கியமான பங்களிப்பு. 'சொற்கலைப் புலவர்’ என்று அழைக்கப்படுகிறார்.

(பார்க்க : ஞானப்பிரகாசர்)

ஞானப்பிரகாசர் நூல்

பிறப்பு, கல்வி

ஞானப்பிரகாசர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது பரராசசேகரனின் வழித்தோன்றலான ராசலிங்கம் சாமிநாதப் பிள்ளைக்கும், தங்கமுத்துவுக்கும் மகனாக மானிப்பாய் என்ற ஊரில் ஆகஸ்ட் 30, 1875-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம். இவருக்கு ஐந்து வயதாக இருந்த போது தந்தை காலமானார். தங்கமுத்து அம்மையார் கத்தோலிக்கரான தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் புரிந்தார். தாயும் மகனும் ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவினர். அதன்பின் ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

ஞானப்பிரகாசர் வரலாறு

சா. ஞானப்பிரகாசர் அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் தொடக்கக் கல்வியைக் கற்றார். யாழ் புனித பத்ரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார். இளமையிலேயே உரிய ஆசிரியர்களிடம் வயலின் வாசிக்கவும் மத்தளம் அடிக்கவும் கற்றுக்கொண்டார் சபாபதிக் குருக்களிடம் சமஸ்கிருதம் படித்தார்.

தனிவாழ்க்கை

ஞானப்பிரகாசத்துக்கு பதினெட்டு வயது நடக்கும் போது நாவலப்பிட்டியில் இருந்த அவரது தாய்மாமனுடன் சிறிது காலம் தோட் டத்தில் கணக்கு எழுதுபவராக வேலை செய்து வந்தார். 1893-ம் ஆண்டில் சா. ஞானப்பிரகாசர் ரயில்வே கணக்காய தேர்வில் முதற்தரமாக வென்றமையால் கடிகமுவ என்னும் இடத்தில் ரயில்நிலைய உதவியாளராக வேலை பெற்றார். பின்னர் கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலத்தில் வேலை செய்ய அனுப்பப் பட்டார்.

கத்தோலிக்க குரு பட்டம்

ஞானப்பிரகாசரின் அன்னை அவர் கத்தோலிக்க குருவாக வேண்டும் என விரும்பி அதை கத்தோலிக்க மதத்தலைவர் ஜூல்ஸ் கோலின் அவர்களுக்கு கடிதம் வழியாக தெரிவித்துக் கொண்டிருந்தார். ஆனால் தம்பிமுத்துப் பிள்ளை அதற்கு உடன்படாமையால் சிறிதுகாலம் சா. ஞானப்பிரகாசர் தன் சிறிய தந்தையின் அச்சகத்தில் உதவியாளராக இருந்தார். ஜூன்ஸ் கோலின் அவர்களின் தம்பியும் கத்தோலிக்க மதகுருவுமான சார்ல்ஸ் கோலின் அவர்களுடைய வலியுறுத்தலால் கத்தோலிக்க மதகுருவாக ஆனார். சா. ஞானப்பிரகாசர் 1895-ம் ஆண்டு இறைப்பணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ் குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். டிசம்பர் 1, 1901-ல் குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

மதப்பணியும் சமூகப்பணியும்

சுவாமி ஞானப்பிரகாசர் குருவாகப்

பட்டம் பெற்றபின் முதல் முறையாக ஊர்காவற்றுறை என்னும் ஊரில் தொண்டு செய்யத் தொடங்கினர். அங்கே கத்தோலிக்க நூல்நிலையம் ஒன்றை நிறுவி, நூல்களை இரவலாக கொடுத்து வாங்கி, மக்கள் இலகுவாக நூல்களைப் பெற்று வாசிக்க வழிகோலினார். இதுவே ஊர்காவற்றுறையில் முதல் முதல் ஏற்பட்ட நூல் நிலையமாகும். சுவாமி ஞானப்பிரகாசர் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணத்து ஆசனக்கோவிலில் சில மாதங்கள் சேவை செய்தபின் நல்லூரைச் சேர்ந்த திருநெல்வேலி என்னும் ஊரை தமது தலைமைத் தானமாகக் கொண்டு 1902-ம் ஆண்டு தொடக்கம் சமயத் தொண்டை விரிவாகச் செய்யத் தொடங்கினுர்

சா. ஞானப்பிரகாசர் திருநெல்வேலி, நல்லூர், கொக்குவில், கோண்டாவில், நீர்வேலி, வடகோப்பாய், தென்கோப்பாய், உரும்பிராய், மல்வத்தை (உடுவில்), கூரம்பன் (உடுவில்), சண்டிலிப்பாய், மானிப்பாய், மூளாய்,கச்சாய், மந்துவில், முகமாலை முதலிய இடங்களில் தேவாலயங்கள் நிறுவி அவற்றுடன் பாடசாலை களையும் ஆரம்பித்து நடத்தினார் நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வதற்காக நிலத்தை வாங்கி ஓர் ஊரையே அமைத்தார். மறைப்பணி புரிந்த ஜூலன் (யூலன்) பாதிரியார் பெயரில் அவ்வூருக்கு யூலனூர் என பெயரிட்டார்.

1901-ம் ஆண்டில் யாழ், புனித மரியாள் பேராலயத்தில் 'நற்கருணை ஆராதனை இயக்கத்தைத்' தொடங்கினர். 'குடும்ப வாசக சபை'யை தொடங்கி சிறு நூல்களை வெளியிட்டார். ஞானப்பிரகாசர் முப்பதுக்கும் மேற்பட்ட கத்தோலிக்க நூல்களை எழுதியும், பதிப்பித்தும் இருக்கிறார். அவற்றில் யோசேவாஸ் முனிவர் சரித்திரம், சத்தியவேதபோதகச் சுருக்கம், லூர்தில் நடக்கும் அதிசயங்கள் போன்ற நூல்கள் புகழ்பெற்றிருந்தன.

இலக்கிய வாழ்க்கை

ஞானப்பிரகாசரின் சிறிய தந்தை தம்பிமுத்துப் பிள்ளை தமது அச்சகத்தில் சன்மார்க்க போதினி என்னும் இதழ் ஒன்றை வெளியிட்டு வந்தார். அதில் ஞானப்பிரகாசம் பிழைநோக்கவும் குறிப்புகளை எழுதவும் தொடங்கினார். புலவர் தம்பிமுத்துப்பிள்ளையிடமிருந்து செய்யுள் இலக்கணத்தைக் கற்றுக்கொண்டு அவ்விதழில் செய்யுள்களும் எழுதி வெளியிட்டார்.

சா. ஞானப்பிரகாசர் இலத்தின், கிரேக்கம் முதலாய பதினெட்டு மொழிகளில் புலமை பெற்றவராக இருந்தார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். யாழ் புனித பத்ரிசியார் கல்லூரியில் கற்ற தமிழும் ஆங்கிலமும், எழுதுவினைஞராக கடமையாற்றிய போது கற்ற சிங்களமும், யாழ் குருமடத்தில் கற்ற லத்தீன், பிரெஞ்சு ஆகிய மொழிகளும் அவருக்கு ஆய்வில் உதவின. இந்த மொழிகளுக்கிடையே ஒருவகை தொடர்பு இருப்பதைக் கண்டுணர்ந்து மொழிகளுக்கிடையேயான ஒப்பீட்டு இலக்கணத்தை உருவாக்க முயன்றார். மொழி ஆய்வில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தாமே இயற்றி முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார்.

மொழியியல் ஆய்வுகள்

ஞானப்பிரகாசர் தன் ஆய்வின் அடிப்படையை தன்னுடைய தமிழ் அமைப்புற்ற வரலாறு என்னும் நூலில் குறிப்பிடுகிறார் "தமிழ்மொழியின்கண் பொருந்திய அழகுகளில் ஒன்று யாதெனின் அதன் பன்னூற்றுத்தொகைப் பட்ட சொற்களில் பெரும்பாலானவை தம்முள் இனங்கொண்ட கூட்டம்கூட்டமாய் இயலுதலாகும்" தமிழ்ச்சொற்கள் ஒரே வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்து சிறு சொற்கூட்டங்களாக இயங்குவதை கண்ட ஞானப்பிரகாசர் அந்த வேர்ச்சொற்கள் வேறு மொழிகளின் வேர்ச்சொற்களுடன் எவ்வண்ணம் உறவுகொண்டுள்ளன என ஆராய்ந்தார். அதனூடாக தமிழ் வேர்ச்சொற்களின் தொன்மையையும் தனித்தியங்கும் தன்மையையும் கண்டறிந்ததுடன் தமிழ் வேர்ச்சொற்கள் உருமாறி வெவ்வேறு மொழிகளில் இலங்குவதையும் அறிந்துகொண்டார்.

சா. ஞானப்பிரகாசர் வரலாறு, அரசியல், மானிடவியல், சமூகவியல், எழுத்துமுறை, சொல் ஒற்றுமை, இடப்பெயர்கள், சமய வரலாறு, சமய வழிபாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகிய களங்களில் ஆராய்ச்சிகளை மேற் கொண்டார். 'சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற தமிழ் ஒப்பியல் அகராதி நூலை எழுதினார்.

சா. ஞானப்பிரகாசர் தமது ஆராய்ச்சி முடிவுகளை ஆங்கிலம், தமிழில் எழுதியுள்ளார். 'தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும்’ எனும் நூலில், பழந்தமிழ், ஆரியத் தொடர்புகள், பழைய தமிழ் நூல்கள், பழந்தமிழர் மத்தியில் நிலவிய சமூக நிலைமைகள் குறித்து ஆராய்ந்து விரிவாக எழுதினார். 'தமிழ் அமைப்புற்ற வரலாறு’ (How Tamil was built up) என்ற நூல் தமிழ் சொற்களின் தமிழின் இன்றைய கட்டமைப்பு உருவாகி வந்ததை விளக்கும் நூல். இந்நூலில் தமிழ் சொற் தொகுதிகள், இடம் பற்றிய பெயரிடு, முதற் சொல்லடிகள், வழிச் சொல்லடிகள், சொல் அர்த்தங்கள் விரிந்த விசித்திரம், பிரதிப் பெயர்கள், பெயர் விகுதிகள், வேற்றுமை உருபுகள், காலங் காட்டும் இடைநிலைகள், செயவெனச்சம், வியங் கோள், எதிர்மறை, பிறமொழிகளிற் தமிழடிகள் முதலிய தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியுள்ளார்.

சா. ஞானப்பிரகாசர் எழுதிய தமிழ்ச் சொற் பிறப்பாராய்ச்சி (Studies in Tamil Etymology) என்னும் நூலில் தமிழ் அடிச் சொல் இயல்பு, வழிச் சொல்லாக்கக் கட்டளைகள், மேலும் நான்கு கட்டளைகள், சொற்சிதைவு, பொருள் வேறுபாட்டு முறை, ஆரிய மொழிகளில் வழிச் சொல்லாக்கம் முதலிய ஆராய்சி கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.மொழி ஆராய்ச்சியில் வேர்ச்சொல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதால் 'வேர்ச்சொல் அறிஞர்’ என்றும் அழைக்கப்பட்டார்.

வரலாற்று ஆய்வுகள்

சா. ஞானப்பிரகாசர் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை அறிந்தவராயினும் அவர் மரபுவழித் தமிழ்க்கல்வியாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். 1936-ல், சிந்து சமவெளியின் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளை படித்தறிவதில் ஸ்பெயின் நாட்டு கிறிஸ்தவ சமயத்துறைவியும், மும்பை பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், இந்திய புதை பொருளாராய்ச்சிக்குக் கழகத் தலைவருமான அறிஞர் ஹெராஸ் பாதிரியாருக்கு ஞானப்பிரகாசர் உதவினார். சிந்து சமவெளி நாகரிகம் திராவிடப் பண்பாடுடன் பொருந்துவதைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகளுக்கு இவை உதவின.

ஞானப்பிரகாசர் அவர் காலகட்டத்தில் வரலாற்றாய்வுகளைச் செய்துகொண்டிருந்த கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.என். சிவராஜ பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை போன்றவர்களுடன் நேரடி தொடர்பு இருக்கவில்லை என்றும், முறைசாரா ஆய்வுகள் செய்துகொண்டிருந்தவர்களுடனேயே அவர் தொடர்பிலிருந்தார் என்றும், இதனால் அவருடைய வரலாற்றாய்வுகள் கூர்மையிழந்தன என்றும் க.கைலாசபதி குறிப்பிடுகிறார். (ஞானப்பிரகாசர் சிந்தனையும் பணியும். இணையநூலகம்)

புனைவு

ஞானப்பிரகாசர் செகராசசேகரன்’ என்னும் புனைவுநூலை எழுதியுள்ளார். இது நவீன நாவலுக்கு அணுக்கமான வடிவம் கொண்டது.

யாழ்ப்பாண வைபவ விமரிசனம்

18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால் யாழ்ப்பாண வரலாற்றை எடுத்துரைக்கும் பொருட்டு எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட வரலாற்று முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் ஞானப்பிரகாசர் எடுத்துக் காட்டியுள்ளார். (இணைய நூல் )

ஞானஉணர்ச்சி

ஞான உணர்ச்சி எனும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டதென்ற கருத்துரையை மறுத்து யாக்கோமே கொன்சால்வெஸ் என்னும் சாங்கோபாங்க சுவாமிகள் அந்நூலை எழுதியதை சா. ஞானப்பிரகாசர் நிறுவினார்.

தனித்தமிழ்வாதம்

"தமிழே உலகத் தாய்மொழியென்று பறையடித்தோதிய பன்மொழிப் புலவன்" என சுத்தானந்த பாரதி ஞானப்பிரகாசரை போற்றினார். ஆனால் அந்தவகையான பாராட்டுக்களால் அவர் ஒரு தமிழ்ப்பற்றாளர் என முத்திரையடிக்கப்பட்டு அவருடைய வரலாற்று ஆய்வுகள் வரலாற்றாசிரியர் கண்களுக்குப் படாமலாயின என க. கைலாசபதி கருதுகிறார். மொழிவெறி ஞானப்பிரகாசரிடம் இருக்கவில்லை, அவர் புறவயமான தரவுகளை ஒட்டி ஆய்வுசெய்யும் அறிஞராகவே நீடித்தார் என்கிறார். 'தமிழின் தனிச்சிறப்புகளை ஆய்ந்தறிந்து கூறியவர், ஆயினும் தனித்தமிழ்வாதியாக இருக்க அவர் விரும்பவில்லை" என்று கூறும் கைலாசபதி தருக்கசாத்திரச் சுருக்கம் என்னும் நூலில் இருந்து ஞானப்பிரகாசரின் ஒரு மேற்கோளை அளிக்கிறார்.

"தமிழ்ச்சொற்களே அன்றி வடமொழிச் சொற்கலப்புள்ள தமிழ் தக்கதன்று என்று விலக்குகின்ற நவீன நூலாசிரியர் சில்லோரது அபிமதத்தை இந்நூலில் மேற்கொண்டிலேம், ஆரியர் தமிழ்நாட்டினுற் நுழைந்த பின்னர் தமிழில் எழுந்தனவான சாத்திரங்கள் சிறுபான்மையாயினும் வடமொழிக்கலப்பின்றி இயல மாட்டாதன ஆகின்றன. வடமொழிச் சொற்களை அடியோடு நீக்கி விடுவோமாயின் தருக்கம் ஆகிய சில சாத்திரங்கள் இருந்த இடம் தெரியாமற் போய்விடும். இதனாலன்றே வேண்டுமிடந்தோறும் இந்நூலின்கண் வடசொற்களையும் எடுத்தாண்டிருக்கின்றனம்"

இதழியல்

ஞானப்பிரகாசர் இலங்கையில் வெளிவந்த, ஈழகேசரி, இந்துசாதனம், பாது காவலன் மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவந்த கலாநிலையம், கலைமகள், ஞாயிறு உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். சென்னையில் இருந்து வெளிவந்த கத்தோலிக்க ஊழியன் இதழில் ஆண்டவர் சரித்திரம் என்னும் தொடரை எழுதினார்.

1897-ல் அமலோற்பவ இராக்கினி தூதன் என்னும் இதழை தொடங்கி நடத்தினார்.1905 முதல் அவ்விதழை ஆங்கிலத்தில் Messenger of our Imaculate Queen என்ற பெயரில் வெளியிட்டார். கத்தோலிக்கப் பாதுகாவலன் 1912 முதல் 1934 வரை இந்த மாத இதழ் வெளிவந்தது. ஞானப்பிரகாசர் சத்திய வேதப் பாதுகாவலன், குடும்ப வாசகம் உள்ளிட்ட மாத இதழ் களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.

பதவிகள்

  • இலங்கைப் பல்கலைக் கழக மூதவை (Senate) உறுப்பினர்
  • ஆசிய அரசவையின் இலங்கைக் கிளையின் உறுப்பினர்
  • இலங்கை யாழ்ப்பாண வரலாற்று சங்கத்தின் துணைத் தலைவர்
  • இலங்கை யாழ்ப்பாண வரலாற்று சங்கத்தின் தலைவர்
  • ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் துணைத் தலைவர்.
ஞானப்பிரகாசர் அஞ்சல்தலை

நினைவு முத்திரை வெளியீடு

சுவாமி ஞானப்பிரகாசருக்கு மதிப்பளிக்கும் விதமாக இலங்கை அரசு அவரது படத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை ஒன்றும், சிறப்பு முதல் நாள் உறை ஒன்றையும் மே 22, 1981-ல் வெளியிட்டது. பொதுவாக தலைநகர் கொழும்பில் வெளியிடப்படும் நினைவு முத்திரை ஞானப்பிரகாசரின் ஊரான யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. வீரசிங்கம் மண்டபத்திலுள்ள அஞ்சல் அலுவலகத்தில் யாழ் ஆயர் எஸ். தியோகுப்பிள்ளை ஆண்டகை முன்னிலையில், யாழ்ப்பாணம் பிரதம அஞ்சல் அதிபர் தி. தியாகராசாவிடமிருந்து நினைவு முத்திரையுடன் கூடிய முதல் நாள் தபால் உறையை மாவட்ட அமைச்சர் யு.பி. விஜயக்கோன் பெற்றுக் கொண்டார்.

விருதுகள்

  • தமிழ்நாட்டுப் புலவர்களையும், ஈழநாட்டுப் புலவர்களையும் கொண்ட தமிழ்ப்புலவர் மன்றம் 1944-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சுவாமி ஞானப் பிரகாசரின் தமிழ்ப் பணியையும், ஆராய்ச்சித் திறனையும் பாராட்டி நடத்திய விழாவில் அவருக்கு 'சொற்கலைப் புலவர்’ என்னும் பட்டமளித்தது.
  • கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் 1936-ல், தமிழ்ச் சொற்பிறப்புக்காக சுவாமி ஞானப் பிரகாசருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
  • ஞானப்பிரகாசரின் ஆராய்ச்சியைப் பாராட்டி ஜெர்மனி நாட்டு அரசு அவரைக் கௌரவித்து, அவரது உருவம் பதித்த முத்திரை வெளியிட்டது.

மறைவு

ஜனவரி 22, 1947-ல் தன்னுடைய 71-வது வயதில் ஞானப்பிரகாசர் காலமானார்.

வாழ்க்கை வரலாறுகள்,மதிப்பீடுகள்

ஞானப்பிரகாசர் சிந்தனையும் பணியும் - பேராசிரியர் இந்திரபாலா ( இணையநூலகம் )

இலக்கிய இடம்

ஈழநாட்டின் பன்மொழிப்புலவர்களான தமிழாய்வாளர்கள் என நால்வர் குறிப்பிடப்படுகிறார்கள். ஞானப்பிரகாசர், சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் கணபதிப் பிள்ளை, சேவியர் தனிநாயகம் அடிகள் ஆகியோர்.

ஞானப்பிரகாசர் முதன்மையாக அவருடைய மொழியியல் ஒப்பீட்டு ஆய்வுகளுக்காக நினைவுகூரப்படுகிறார். தமிழ்மொழியின் கட்டமைப்பு, வேர்ச்சொல் ஆகியவற்றை ஆராய்ந்து தமிழின் தனித்தியங்கும் தன்மையை ஆய்வுலகில் நிறுவியவர். தமிழுக்கும் பிற தொல்மொழிகளுக்கும் இடையேயான ஒப்பீட்டின் வழியாக தமிழின் தொன்மையையும் நிறுவினார். அவ்வகையில் மறைமலையடிகள் போன்றவர்களுக்கு சமகாலத்தவராகவும் தேவநேயப் பாவாணர் இலக்குவனார் போன்றவர்களுக்கு முன்னோடியாகவும் ஞானப்பிரகாசரை குறிப்பிடலாம். அவருடைய ஆய்வுகளில் பல இன்று முறையான தரவுகளின்றி, முன்முடிவுகளுடன் அணுகப்பட்டவையாக கருதப்பட்டாலும் தமிழின் வேர்ச்சொல் அமைப்பை கொண்டு அதன் முன்னோடி வடிவங்களை ஆராயலாம் என வழிகாட்டியவர் என்பதனால் அவர் குறிப்பிடத்தக்கவர்.

"தமிழிலே பற்றுடையவராக அவர் ஆய்வு செய்ய முயன்றதனால் சில வேளைகள் அவருடைய விளக்கங்களில் அறிவியல்வாதத்திற்கு பதிலாக உணர்வு மேலோங்குவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதன் காரணமாகவே சில சந்தர்ப்பங்களிலே தக்க சான்றாதாரங்களுடன் நிரூபிக்கமுடியாத பல கூற்றுக்கள் அவர் கூறியிருத்தலை நாம் காண முடிகிறது. எப்படி இருப்பினும் சுவாமி அவர்களுடைய தமிழ்மொழி ஆராய்ச்சியிலே புதிய நுண்ணிதான தகவல்கள் எமக்கு தரப்பட்டுள்ளன." என்றும் கலாநிதி அ.சண்முகதாஸ் 'சுவாமி ஞானப்பிரகாசரும் மொழியாய்வும்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

  • சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை
  • தமிழர் பூர்வீக சரித்திரம்
  • யாழ்ப்பாணத்தரசர்கள்
  • யாழ்ப்பாண சரித்திரம்
  • இந்திய நாகரிகம்
  • சுப்பிரமணியர் ஆராய்ச்சி
  • பிள்ளையார் ஆராய்ச்சி
  • தமிழர் வரலாறு
  • தமிழரிடையே ஜாதி பிறந்த முறை
  • தமிழ் சொற்பிதிர்
  • தமிழ்த் தாதுக்கள்
  • மொழிக்குடும்பம்
  • தருக்க சாத்திரம்

சமய நூல்கள்

  • ஆண்டவர் சரித்திரம்
  • சுப்பிரமணியர் ஆராய்ச்சி
  • பிள்ளையார் ஆராய்ச்சி
  • மிருகபலி ஆராய்ச்சி
  • மறுபிறப்பு ஆட்சேபம்
  • சைவர் ஆட்சேப சமாதானம்
  • புதுச் சைவம்
  • புதுச் சைவமும் புலால் உண்ணாமையும்
  • இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை வரலாறு
  • ஆதிகாலத்துப் பாப்புமார் சரித்திரம்
நாவல்
  • செகராசசேகரன்’

வாழ்க்கை வரலாற்று நூல்கள்

  • உபதேசியார் சந்தியாபிள்ளை நற்சரிதை
  • பரிமான் என். ஆர். முத்துக்குமாரு
  • Life of Cecilia Rasamma
  • Chryasanthus Daria

ஆங்கில நூல்கள்

  • kings of Jaffna during the portuguers period
  • Histroy of Jaffna under the portugues and Dutch Rule
  • Ancient kings of Jaffna
  • Early History of Tamils and the religion
  • 0rigin of caste among the Tamils
  • Indian ancient Chronology and Civilization
  • Life from the Excavations of the Indus Valley
  • Early History of the Ancient popes
  • Catholicism in Jaffna
  • 25 years of catholic progress inthe Diocase of Jaffna
  • Origin and History of the CatholicChurch in Ceylon
  • Philosophical Saivaism or SaivaSiddhanta
  • Historical aspect of Christianity and Buddhism
  • How Tamil was built up
  • An English – Tamil Dictionary
  • Some laws of Dravidian Etymology
  • The Dravidian Element in Sinhalese
  • Root words of the Dravidian groupof Languages
  • The Proposed comparative Tamil Lexicon

இதர இணைப்புகள்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:33:25 IST