under review

திருவாரூர் தேவாசிரியன் மண்டபம் ஓவியங்கள்: Difference between revisions

From Tamil Wiki
(More details...)
(Corrected Category:ஆலய ஓவியங்கள் to Category:ஆலய ஓவியம்Corrected Category:ஓவியங்கள் to Category:ஓவியம்)
 
(207 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
திருவாரூர் () ஆரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தேவாசிரியன் மண்டபத்தின் விதானத்திலும்(உட்கூரை) சுவரிலும் கி.பி. 1700-ல் தஞ்சை மராத்தியர் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன. தேவாசிரிய மண்டப ஓவியங்களை வரைந்தவர் ஓவியன் சிங்காதனம் ஆவார்.
{{OtherUses-ta|TitleSection=திருவாரூர்|DisambPageTitle=[[திருவாரூர் (பெயர் பட்டியல்)]]}}
[[File:குரங்கு முகம் கொண்ட அரசன் முசுகுந்தனின் ஓவியம்.jpg|thumb|தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள குரங்கு முகம் கொண்ட அரசன் முசுகுந்தனின் ஓவியம், புகைப்படம்: வி.கே. ரமணி|400x400px]]
[[File:தேவாசிரியன் மண்டப ஓவியக்காட்சி.jpg|thumb|தேவாசிரியன் மண்டபத்தின் மேற்கூரையில் உள்ள ஓவியக்காட்சிகள்|316x316px]]
[[File:Devasiriyan_Mandapam_front_view_Thiruvarur_Thyagarajaswamy_temple.jpg|thumb|தேவாசிரியன் மண்டபம் வெளிப்புறம்]]
[[File:தேவேந்திரன் முசுகுந்தனுக்கு பாரிசாத மாலையை கொடுக்கும் காட்சி.jpg|thumb|தேவேந்திரன் முசுகுந்தனுக்கு பாரிசாத மாலையை கொடுக்கும் காட்சி, புகைப்படம்: வி.கே. ரமணி|315x315px]]
[[File:தேவேந்திரனும் வாரகலியும் போரிடும் காட்சி.jpg|thumb|தேவேந்திரனும் வாரகலியும் போரிடும் காட்சி]]
[[File:திருமாலும் வாரகலி அசுரனும் போர் புரியும் காட்சி.jpg|thumb|திருமால் வாரகலி அசுரனுடன் போர் புரியும் காட்சி]]
[[File:போர் காட்சியின் ஒரு பகுதி.jpg|alt=போர்க்காட்சி|thumb|போர் காட்சியின் ஒரு பகுதி|270x270px]]
[[File:தியாகராஜர் உருவத்தை தன்னுடன் எடுத்து செல்ல விஷ்ணுவிடம் அனுமதி கேட்கும் முசுகுந்தன்.jpg|alt=தியாகராஜர் உருவத்தை தன்னுடன் எடுத்து செல்ல விஷ்ணுவிடம் அனுமதி கேட்கும் முசுகுந்தன்|thumb|தியாகராஜர் உருவத்தை தன்னுடன் எடுத்து செல்ல விஷ்ணுவிடம் அனுமதி கேட்கும் முசுகுந்தன்; தேவாசிரியன் மண்டப ஓவியக்காட்சி, புகைப்படம்: வி.கே. ரமணி|274x274px]]
[[File:ஒன்பது வீரர்களுடன் அமர்ந்திருக்கும் முசுகுந்த சக்கரவர்த்தியின் முன் கட்டியங்காரன் வ.jpg|alt=முசுகுந்த சக்கரவர்த்தியின் முன் கட்டியங்காரன் வந்து நிற்கும் காட்சி|thumb|ஒன்பது வீரர்களுடன் அமர்ந்திருக்கும் முசுகுந்த சக்கரவர்த்தியின் முன் கட்டியங்காரன் வந்து நிற்கும் காட்சி, புகைப்படம்: வி.கே. ரமணி]]
[[File:இந்திரன்.jpg|thumb|வஜ்ரம், குத்துவாள் ஏந்தி நான்கு கைகளுடன் இந்திரன்|300x300px]]
[[File:அரம்பை.jpg|alt=நடனமங்கை அரம்பை|thumb|தேவலோக நடனமங்கை அரம்பை|290x290px]]
[[File:புல்லாங்குழல்காரன்.jpg|thumb|புல்லாங்குழல்காரன்|299x299px]]
[[File:காளிதேவியின் ஓவியம்.jpg|thumb|காளிதேவியின் ஓவியம், புகைப்படம்: வி.கே. ரமணி]]
[[File:மனிதர்களும் வானவர்களும் தியாகராஜரை வழிபடும் காட்சியின் ஒரு பகுதி.jpg|thumb|தியாகராஜரை வழிபடுபவர்களின் ஒரு பகுதியினர்|290x290px]]
[[File:Manuneethi chola puranam scene.jpg|alt=மனுநீதி சோழன் புராண ஓவியக் காட்சி|thumb|தேவாசிரியன் மண்டபத்தில் வரையப்பட்டுள்ள மனுநீதி சோழன் புராண ஓவியக் காட்சி]]
[[File:மூவரில் நடுவில் இருப்பவர் ஓவியன் சிங்காதனம்.jpg|alt=ஓவியன் சிங்காதனம்|thumb|மூவரில் நடுவில் இருப்பவர் ஓவியன் சிங்காதனம்|300x300px]]
[[File:ஆரூரில் சந்திரசேகரர் விழா ஊர்வலம்.jpg|thumb|ஆரூரில் சந்திரசேகரர் விழா ஊர்வலம், புகைப்படம்: வி.கே. ரமணி|300x300px]]
[[File:இந்திரலோகம் நோக்கி செல்லும் முசுகுந்தனின் படை. இதில் ஒரு பிரிவினர் துப்பாக்கி ஏந்தியு.jpg|alt=முசுகுந்தனின் படை|thumb|இந்திரலோகம் நோக்கி செல்லும் முசுகுந்தனின் படை. இதில் ஒரு பிரிவினர் துப்பாக்கி ஏந்தியுள்ளனர்|330x330px]]
திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தேவாசிரியன் மண்டபத்தின் விதானத்திலும் (உட்கூரை), சுவரிலும் ஓவியங்கள் உள்ளன. இவை 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தஞ்சை மராத்தியர் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்டவை. பிற்கால நாயக்கர் பாணி அல்லது ஆரம்பகால மராட்டியர் பாணியில் வரையப்பட்டுள்ள இவ்வோவியங்கள் தென்னிந்தியாவில் இன்று எஞ்சியிருக்கும் சிறந்த சுவரோவியத் தொகுப்புகளில் ஒன்றாக கருதப்படுகின்றன.
 
தேவாசிரியன் மண்டப ஓவியங்கள் ஸ்தல புராணமான முசுகுந்த புராணம், மனுநீதிச் சோழன் புராணம் ஆகியவற்றின் காட்சி விளக்கங்களாக உள்ளன. இதில் முசுகுந்த புராண ஓவியங்களே இன்று பெரும்பாலும் காணக்கிடைக்கின்றன. முசுகுந்த புராண ஓவியங்களை வரைந்தவர் ஓவியர் சிங்காதனம். மனுநீதிச் சோழன் புராண ஓவியங்கள் பணி முடியாமலும், இருக்கும் ஓவியங்கள் சிதைந்து தெளிவில்லாமலும் உள்ளன.
 
== இடம் ==
== இடம் ==
சென்னையில்(பாண்டிச்சேரி, சிதம்பரம், மயிலாடுதுறை வழி) இருந்து 300 கி.மீ, தஞ்சாவூரில் இருந்து 61 கி.மீ, கும்பகோணத்தில் இருந்து 40 கி.மீ, காரைக்காலில் இருந்து 39 கி.மீ தூரத்தில் திருவாரூர் அமைந்துள்ளது. தேவாசிரிய மண்டபம் அமைந்திருக்கும் புகழ்பெற்ற தியாகராஜர் கோயில் திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
தேவாசிரியன் மண்டபம் தமிழ்நாட்டில் திருவாரூரில் புகழ்பெற்ற தியாகராஜசுவாமி கோயிலில் அமைந்துள்ளது.  
== ஓவியக் காட்சிகள் ==
== தேவாசிரியன் மண்டப அமைப்பு ==
முசுகுந்த புராணம், மனுநீதி சோழன் புராணம் ஆகிய இரண்டு புராணங்கள் காட்சி விளக்கங்களோடு தேவாசிரிய மண்டபத்தின் விதானத்திலும்(உட்கூரை) சுவரிலும் வரையப்பட்டுள்ளது. கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தில் கந்த விரதப் படலம் என்ற பகுதி உள்ளது. அதில் முசுகுந்தன் என்ற அரசன் எவ்வாறு விரதமிருந்து தியாகேச(தியாகராஜ) மூர்த்தியையும் பிற விடங்கர்களையும் விண்ணுலகிலிருந்து இவ்வுலகிற்கு கொண்டு வந்து திருவாரூரிலும் மற்ற ஆறு விடங்கத் தலங்களிலும் ஸ்தாபித்தார் என்பது கூறப்பட்டுள்ளது. முசுகுந்தன் இந்திரனுக்குப் போர் உதவி செய்வதற்காக நவவீரர்களுடன் தேவலோகம் சென்று வாரகலி அசுரனுடன் போரிடும் காட்சிகள், யானை, குதிரை, காலாட் படைகளின் அணிவகுப்பு, இந்திரனை வெற்றி பெறச்செய்து விட்டு தேவலோகத்தில் சில நாட்கள் தங்கியிருந்த போது இந்திரன் பூஜிக்கும் தியாகராஜ மூர்த்தியின் திருவுருவம் தனக்கு வேண்டும் என்று முசுகுந்தன் கேட்பது, இந்திரன் அதை கொடுக்க மனமில்லாமல் அது போன்ற ஆறு திருவுருவங்களை தேவதச்சன் உதவியுடன் செய்து ஏழு திருவுருவங்களையும் ஓரிடத்தில் வைத்து எந்த மூர்த்தியை வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல கூறுதல், ஈசன் அருளால் உண்மையான தியாகவிடங்கரை முசுகுந்தன் கண்டுபிடித்து எடுப்பது, ஏமாற்றமடைந்த இந்திரன் மற்ற ஆறு திருவுருவங்களையும் பூலோகத்திற்கு எடுத்துச் செல்லும்படி வேண்ட அதன்படி முசுகுந்தன் பூலோகம் எடுத்து வருதல், தேவதச்சன் உதவியுடன் திருவாரூரே மூல விடங்கர் வைக்க ஏற்ற தலம் என அறிய முசுகுந்தனும் தியாகேசரை திருவாரூரில் வைத்து தரிசித்து அம்மூர்த்திக்கு விழா எடுப்பது வரை தேவாசிரிய மண்டப உட்கூரையில் ஓவிய காட்சிகளாக தீட்டப்பட்டுள்ளது. இந்திரனும் முசுகுந்தனும் செலுத்தும் அம்புகளில் செயம் என்றும் வாரகலி அசுரன் செலுத்தும் அம்புகளில் அவஜெயம் என்றும் எழுதப்பட்டிருப்பது இந்திரனின் வெற்றியை காட்டுகிறது. இக்காட்சித் தொடருக்கு அருகே இந்திரனுக்கு தியாகராஜ மூர்த்தி எவ்வாறு கிடைத்தார் என்ற மற்றொரு புராணமும் தீட்டப்பட்டுள்ளது. திருமால் தியாகராஜர் திருவுருவத்தை படைத்து தன் மார்பில் வைத்து பூசித்ததாகவும் பின்பு இந்திரன் திருமாலிடம் இருந்து அந்த திருவுருவத்தை பெற்று பூசித்ததாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சிக்கு கீழாக ஓலையில் எழுதப்பட்டது போன்று காட்சி விளக்கம் எழுதப்பட்டுள்ளது. திருவாரூர் கோவிலில் உள்ள விக்கிரம சோழனின் கல்வெட்டில், சேக்கிழாரின் பெரிய புராணத்தில் விரிவாக உள்ள மனுநீதிச் சோழன் வரலாறு தேவாசிரிய மண்டப சுவரில் தீட்டப்பட்டிருந்தாலும் அவ்வோவியங்கள் பணி முடியாத நிலையிலேயே உள்ளது. காட்சி விளக்க குறிப்புகளும் குறைவாகவே காணப்படுகின்றன. ஓவிங்களில் இடம்பெற்றுள்ள தெய்வ உருவங்களும், மனிதர்களும் அணிந்துள்ள ஆடை ஆபரணங்களில் பல்வேறு வகையான நுட்பங்களும் வகைகளும் உள்ளது. ஆரூர் கோவிலின் அமைப்பு, மற்ற கோவில்கள், மண்டபங்கள் என பலவிதமான கட்டடங்களை தேவாசிரிய மண்டப ஓவியங்களில் காணமுடிகிறது. அரசவை நாட்டியக் காட்சிகள், இறைவன் வீதி உலா வரும் போது நிகழும் நாட்டியக் காட்சிகள், தேவலோகத்தில் நிகழும் நாட்டியக் காட்சிகள், வீதியில் நிகழும் ஶ்ரீ பலி பூசையின் போது நிகழும் நாட்டியம் என நாட்டியக் கலையின் பல்வேறு கூறுகள், திருவாரூர் கோவிலுக்குரிய பூத நிருத்தம் என்ற மத்தளம் இசைக்கும் மரபு, பஞ்சமுக வாத்தியம் இசைத்தல், திருவாரூர் கோவிலில் கொடியேற்று விழா துவங்கி நாள்தோறும் நிகழும் மகோஸ்தவ நிகழ்வுகள் இந்த ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. வானத்தில் செல்லும் ராக்கெட் வாணம், தரையில் சுற்றும் வாணம், கோலில் சுற்றும் வாணம் என பல வகை வாணங்கள் இந்த ஓவியங்களில் குறிப்பாக விழாக் காட்சிகளில் இடம் பெற்றுள்ளன. ஒரு வாணத்தின் மீது நிலச்சக்கர வாணம் என எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேவாசிரியன் மண்டபம் தமிழக சைவ மரபில் முக்கியத்துவம் கொண்டதாகக் கருதப்படுகிறது. புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் தேவாசிரியன் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் தான் 9-ம் நூற்றாண்டில் [[சுந்தரமூர்த்தி நாயனார்]] 63 நாயன்மார்களையும் ஒரே நேரத்தில் தரிசித்ததாக சைவ நம்பிக்கை உள்ளது. சுந்தரரின் [[திருத்தொண்டத் தொகை]] இந்த மண்டபத்தில் அரங்கேறியதாக சொல்லப்படுகிறது 
== வரலாற்றுச் சிறப்புகள் ==
 
18-ஆம் நூற்றாண்டில் தஞ்சையை மராத்திய மன்னர்களான சகஜியும் பின்னர் முதல் சரபோஜியும் ஆட்சி புரிந்தபோது திருவாரூரில் அம்மன்னர்களின் பிரதிநிதியாய் சாமந்தனர்(படைத்தலைவர்) ஒருவர் அரசு அலுவல்களை மேற்கொண்டு வந்தார். அவரது பிரதானியாய் பணிபுரிந்தவர் ஓவியன் சிங்காதனம். ராயசாமந்தனாரின் பிரதானியாய் அரசு அலுவல்களை பார்த்ததோடு ஓவியக் கலையிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார் சிங்காதனம். திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தேவாசிரிய மண்டப ஓவியக் காட்சிகளை அன்றைய தஞ்சை மராத்திய அரசின் ஆதரவோடு ஓவியன் சிங்காதனம் வரைந்தார். அஜந்தா குகை ஓவியங்கள், தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சோழர்கால ஓவியங்கள் உட்பட பண்டைய இந்திய ஓவியங்கள் எதிலும் அந்த ஓவியங்களை வரைந்தவர் பற்றிய குறிப்புகள் இல்லை. தேவாசிரிய மண்டப ஓவியங்களை படைத்த ஓவியன் சிங்காதனம் தன் பெயரை மட்டுமல்லாமல் தன் உருவத்தையும் தான் தீட்டிய ஓவியங்களில் இடம்பெறச் செய்துள்ளார். புராண காட்சிகளுக்கு இடையூறாக இல்லாமல் தன் காலத்தில் நிகழ்ந்த ஆரூர் விழாக்களின் சித்தரிப்புகள் திருக்கோயில்கள் ஆகியவற்றில் தன் உருவத்தை இடம்பெறச் செய்து அருகே பெயரையும் விளக்கக் குறிப்பையும் எழுதியுள்ளார் சிங்காதனம். தலையில் முண்டாசு, முகத்தில் தாடி மீசை, இடுப்பில் வேஷ்டி, அதன் மேல் சுற்றப்பட்ட துண்டு, நெற்றியில் திருநீறு, காதுகளில் காதணி, இறைவனை வணங்கும் கூப்பிய கரங்கள் ஆகியவை சிங்காதனத்தின் தோற்றமாக உள்ளது. சில இடங்களில் சிங்காதனம் தரித்துள்ள துண்டில் சிங்காதனம் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கிறது. சில காட்சிகளில் சிங்காதனம் உருவத்தின் காலுக்கு கீழ் ராயசாமந்தனார் வாசல் பிரதானி சித்திர வேலை சிங்காதனம் என்றும் இந்த சித்திரம் எழுதுகிற சித்திர வேலை சிங்காதனம் சதா சேவை என்றும் எழுதப்பட்டுள்ளது. தன் உருவத்தை காட்டும் இடங்களிலெல்லாம் ஆரூரில் அவர் காலத்தில் வாழ்ந்த பலரின் உருவத்தையும் ஓவியமாக தீட்டி அருகே அவர்கள் யார் என்ற குறிப்புகளையும் சேர்த்துள்ளார் ஓவியன் சிங்காதனம்.
தேவாசிரியன் என்ற சொல் முதன்முதலாக [[சேக்கிழார்|சேக்கிழாரின்]] [[பெரிய புராணம்|பெரிய புராணத்தில்]] தடுத்தாட்கொண்ட புராணம்<ref>[https://www.tamilvu.org/slet/l4100/l4100son.jsp?subid=1456 வான் உற நீள் திரு வாயில் நோக்கி மண்ணுற ஐந்து உறுப்பால் வணங்கி...தடுத்தாட்கொண்ட புராணம்-124]</ref> பகுதியில் வருகிறது. இம்மண்டபத்துக்கு திருக்காவணம் (பந்தல்) என்ற பெயரும் வழங்கி வந்துள்ளது. இந்த மண்டபம் முதற் குலோத்துங்கனின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொன்மையான தேவாசிரியன் மண்டபத்தை (வன்மீகாதிபதியின் சபை) மூன்றாம் குலோத்துங்கன் புதுப்பித்ததற்கான கல்வெட்டு சான்று திருபுவனம் கோவிலில் உள்ளது.
 
உற்சவ மூர்த்தியான தியாகராஜர் வருடத்திற்கு இருமுறை கோவிலை விட்டு தேவாசிரியன் மண்டபத்தில் தற்காலிகமாக தங்குவார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழாவின் போது தியாகராஜ சுவாமியின் திருமேனியை இம்மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்து சித்திரை பெருவிழா நடத்தப்படுகிறது. சோழர் காலத்தில் சிறந்த கலைஞர்களான தலைக்கோலிகளின் நடனங்கள் திருவாரூர் இறைவன் முன்னிலையில் நடத்தப்பட்ட இடமாகவும், ஊர்ச்சபையினர் கூடும் பொது மன்றமாகவும், கோயிலின் கருவூலம் செயல்பட்ட இடமாகவும் இருந்துள்ளது.
 
தேவாசிரிய மண்டபமே இக்கோவிலில் உள்ள மண்டபங்களில் பெரியது. 210 அடி நீளமும் 140 அடி அகலமும் உடைய இம்மண்டபம் உயர்ந்த மேடையின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் முன் உள்ள 300-க்கும் மேற்பட்ட தூண்களையும் சேர்த்து இப்பகுதி ஆயிரங்கால் மண்டபம் என்று குறிப்பிடப்படுகிறது.  
 
மண்டப அமைப்பையும், கலை அமைதியையும் கொண்டு, வரலாற்றாய்வாளர்கள் மண்டபத்தின் வடபகுதியை மட்டும் முற்கால கட்டுமானமாகவும், நீண்டுள்ள முன் பகுதிகளை பிற்காலத்தியதாகவும் கணிக்கின்றனர்.  
 
மண்டபத்தின் உள்ளே மையத்தில் உயர்ந்த மேடை (சபை) உள்ளது. இதில் ஏழு வரிசைகளாக 42 தூண்கள் உள்ளன. இந்த மேடைத் தூண்களில் கீழ்ப்புறம் பதஞ்சலி, மேல்புறம் வியாஹ்ரபாதர் (பாம்புடல் மற்றும் புலிக்கால் முனிவர்கள்) வணங்கிய நிலையில் சிற்பங்கள் இருப்பது இந்த மேடையை இறைவனின் 'சபாமண்டபம்' என்று அடையாளம் காட்டுகிறது. இந்த மேடையில் விழாக்காலத்தில் இறையுருவங்கள் எழுந்தருள்கின்றன.    
 
மண்டபத்தில் முன்பகுதியை 324 தூண்கள் தாங்கி நிற்கின்றன. மண்டபத்தின் நடுப்பகுதியில் உட்கூரை (விதானம்) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இடமே நடனங்கள் நிகழ்ந்த இடமாகக் கருதப்படுகின்றது. மண்டபத்தின் தூண்களிலும், சுற்றியுள்ள சுவர்களிலும் சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன.        
 
தேவாசிரியன் மண்டபத்தின் உட்கூரையிலும் சுவர்களிலும் ஓவியங்கள் உள்ளன. இவை முசுகுந்த புராணம், மனுநீதிச் சோழன் புராணம் ஆகியவற்றின் காட்சி விளக்கங்களாக உள்ளன.     
 
== ஓவியங்கள் வரைய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ==
தேவாசிரியன் மண்டப ஓவியங்கள் கிரானைட் கற்கள் வரிசையாக அடுக்கப்பட்ட மேற்கூரை கல் மேற்பரப்பின் மேல் பூசப்பட்ட சுண்ணாம்பு பரப்பில் வரையப்பட்டுள்ளது. தண்ணீரில் கரையக்கூடிய பசை போன்றவை பிணைப்பு ஊடகமாக டெம்பரா (tempera) முறைப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிங்காதனம் தேவாசிரிய மண்டபத்து ஓவியங்களின் கீழ் எழுதியுள்ள புராண விளக்கங்களும் விழாக்கள் பற்றிய செய்திகளும் மக்களின் பேச்சு வழக்குகள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்று குடவாயில் பாலசுப்பிரமணியம் 'ஓவியன் சிங்காதனம்' என்ற தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக சுவரோவியங்களில் முதலில் சிறிது தடினமான சுண்ணாம்பு பரப்பு பூசுப்படும். அதற்குமேல் மெல்லிய சுண்ணாம்பு பரப்பை( intonaco) பூசி அதன்மேல் ஓவியம் வரையப்படும். ஆனால் தேவாசிரியன் மண்டபத்தில் முதலில் தடினமான சுண்ணாம்பு பரப்பை பூசாமல் கல் மேற்பரப்பில் நேரடியாக மெல்லிய சுண்ணாம்பு பரப்பு (intonaco) பூசப்பட்டு ஓவியம் வரையப்பட்டுள்ளது. பல இடங்களில் சுண்ணாம்பு(lime) பரப்பு 4 அல்லது 5 மிமீ அளவுக்கு மெல்லியதாக உள்ளது. 
 
ஓவியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சிவப்பு நிறத்திற்கு சிவப்பு நிறமியும் (red ochre), மஞ்சள் நிறத்திற்கு மஞ்சள் நிறமியும் (yellow ochre), பச்சைக்கு பச்சை நிறமி (malachite), வெள்ளைக்கு சுண்ணம், கறுப்பு நிறத்திற்கு விளக்குப்புகைக் கரியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
== ஓவிய பாணி ==
தேவாசிரிய மண்டப ஓவியங்கள் மராத்திய மன்னர்களின் ஆதரவில் வரையப்பட்டன. ஆனால் இந்த ஓவியங்களின் பாணி சமகாலத்து மராத்திய பாணி ஓவியங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை போல பிற்கால நாயக்கர் பாணியை கொண்டுள்ளது.
 
== ஓவியர் சிங்காதனம் ==
தஞ்சையை மராட்டிய மன்னர்களான சகஜி பொ.யு. 1684 முதல் பொ.யு. 1712 வரையும், முதலாம் சரபோஜி பொ.யு. 1712 முதல் பொ.யு. 1728 வரையும் ஆட்சி புரிந்தனர். அப்போது திருவாரூரில் அம்மன்னர்களின் பிரதிநிதியாய் அரசு அலுவல்களை மேற்கொண்டு வந்த சாமந்தனர் (படைத்தலைவர்) ஒருவரின் பிரதானியாய்ப் பணிபுரிந்தவர் சிங்காதனம் என்று கருதப்படுகிறது. சிங்காதனம் ஓவியக் கலையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இவரே தேவாசிரியன் மண்டப ஓவியங்களை வரைந்தவர். 
 
பொதுவாக அஜந்தா குகை ஓவியங்கள், தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள சோழர்கால ஓவியங்கள் போன்ற பண்டைய இந்திய சுவரோவியங்களில், அந்த ஓவியங்களை வரைந்தவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறுவதில்லை.  சில பழைய ஓவியங்களை வரைந்த ஓவியர்களின் பெயர்கள் மட்டும் கிடைக்கின்றன.   
 
ஆனால் தேவாசிரிய மண்டப ஓவியங்களைப் படைத்த ஓவியன் சிங்காதனம் தன் பெயரை மட்டுமல்லாமல் தன் உருவத்தையும் தான் தீட்டிய ஓவியங்களில் இடம்பெறச் செய்துள்ளார். புராணக் காட்சிகளுக்கு இடையூறாக இல்லாமல், தன் காலத்தில் நிகழ்ந்த ஆரூர் விழாக்களின் சித்தரிப்புகள், திருக்கோயில்கள் ஆகியவற்றில் தன் உருவத்தை இடம்பெறச் செய்து அருகே பெயரையும் விளக்கக் குறிப்பையும் எழுதியுள்ளார் சிங்காதனம். தலையில் முண்டாசு, முகத்தில் தாடி மீசை, இடுப்பில் வெண்துகில் (வேட்டி), அதன் மேல் சுற்றப்பட்ட துண்டு, காதுகளில் காதணி, உடலெங்கும் திருநீறு, இறைவனை வணங்கும் கூப்பிய கரங்களுடன் திகழ பணிவான கோலத்தில் சிங்காதனத்தின் தோற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது.   
 
சிங்காதனம் ஐந்து காட்சிகளில் (காட்சி எண்கள் 24, 25, 32, 34, 37) தனது ஓவியத்தையும், அதன் விளக்கத்தையும் தந்துள்ளார். திருவாரூர் கோவிலில் திருவிழா துவங்கும் காட்சியில் முதன்முதலாக சிங்காதனத்தின் உருவம் வரையப்பட்டுள்ளது. சில காட்சிகளில் சிங்காதனம் உருவத்தின் காலுக்கு கீழ் 'இந்த சித்திரம் எழுதுகிற சிங்காதனம் நித்தம் சதா சேவை'('னித்தசதா சேர்வை' என்ற சொல், சிங்காதனம் தினமும் இறைவனை வணங்குவதைக் குறிக்கிறது) என்றும், 'ராயசாமந்தனார் வாசல் பிரதானி சித்திரவேலை சிங்காதனம்' என்றும் வரிகள் காணப்படுகிறது. குறிப்பாகப் பலர் இடம்பெறும் ஓவியங்களில், சிங்காதனம் தனது உருவத்தைக் காட்டத் தான் அணிந்துள்ள உடையிலோ அல்லது வேட்டியின் மேலோ சிறிய எழுத்துகளில் 'சிங்காதனம்' என்று குறித்துள்ளதால் அவரை பலர் நடுவில் அடையாளம் காண முடிகிறது. தன் உருவத்தைக் காட்டும் இடங்களில் எல்லாம், ஆரூரில் அவர் காலத்தில் வாழ்ந்த பலரின் உருவங்களையும் ஓவியமாக தீட்டி அருகே அவர்கள் யார் என்ற குறிப்புகளையும் சேர்த்துள்ளார்.   
 
சேப்பெருமாள், பெத்தபசிவன் உதயமூர்த்தி குருக்கள், வளவன் போன்ற பெயர்கள் அவற்றுள் சில. தெய்வ சன்னதிகளின் முன் வணங்கி நிற்கும் அடியவர்களாய் காட்டப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் 'கெங்கையாடி சன்முக செட்டியார் சதா சேர்வை', 'அகோர தம்பிரான் நித்த சதா சேவை', 'சமயல்வ வைத்தியநாதர் நித்த சதா சேவை', 'அருனாசலம் பிள்ளை நித்த சதா சேவை' என்று எழுதப்பட்டுள்ளன. 
== முசுகுந்த புராணம் ==
பொ.யு. 8-ம் நூற்றாண்டில் [[கச்சியப்பர்|கச்சியப்ப சிவாச்சாரியாரால்]] இயற்றப்பட்ட [[கந்த புராணம்|கந்தபுராணத்திலும்,]] அதற்கு நெருக்கமான சம்ஸ்கிருத ஆக்கமான சிவ-ரகஸ்ய-கந்த என்ற நூலிலும் முசுகுந்தன் கதையை முருகனுடன் இணைத்து சொல்லப்பட்டுள்ளது.         
 
திருப்பரங்குன்றத்தில் நடந்த முருகன்-தெய்வயானை திருமணத்திற்கு ஹரிச்சந்திரனின் வழி வந்தவனும் கருவூரின் அரசனும் ஆன முசுகுந்தன் அழைக்கப்பட்டதாகவும், முசுகுந்தனுக்கு முருகப் பெருமான் புகழ்பெற்ற ஒன்பது படை வீரர்களை வழங்கினார் என்றும் அதில் ஒருவரான வீரபாகுவின் மகள் சித்ரவள்ளியை முசுகுந்தன் மணமுடித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. முசுகுந்தனின் திருமணம் பற்றிய கதைக்கு பிறகே சோமாஸ்கந்தரை மண்ணிற்கு முசுகுந்தன் கொண்டு வந்த கதை கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது கந்தபுராணத்தில் உள்ள தட்சகாண்டம் கந்தவிரதப் படலம் என்ற பகுதியில் பாடல் எண் 10,000-ல் துவங்கி 10,078 வரை விவரிக்கப்பட்டுள்ளது. அக்கதையில் முசுகுந்தன் எவ்வாறு விரதமிருந்து சோமாஸ்கந்த(தியாகராஜ) மூர்த்தியையும் பிற விடங்கர்களையும் விண்ணுலகிலிருந்து இவ்வுலகிற்கு கொண்டு வந்து திருவாரூரிலும் மற்ற ஆறு விடங்கத் தலங்களிலும் ஸ்தாபித்தார் என்பது கூறப்பட்டுள்ளது.         
 
முசுகுந்தன் கதையின் முழு வடிவம் 16-ம் நூற்றாண்டில் (பொ.யு.  1592) [[சம்பந்தமுனிவர்]] எழுதிய [[திருவாரூர் புராணம்(சம்பந்த முனிவர்)|திருவாரூர் புராணத்தில்]] உள்ள தியாகராஜ சருக்கம், திருவிழா சருக்கம் என்ற இரு பகுதிகளில் கூறப்பட்டுள்ளது. [[மறைஞான சம்பந்தர்|சிதம்பரம் கண்கட்டி ஶ்ரீமறைஞானசம்பந்த நாயனார்]] எனும் முனிவரால் எழுதப்பட்ட [[கமலாலய சிறப்பு எனும் திருவாரூர் புராணத்தில்]] (பொ.யு.  1547) முசுகுந்தன் கதை சில மாற்றங்களுடன் சொல்லப்பட்டுள்ளது.         
 
17-ம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட தேவாசிரியன் மண்டப ஓவியம் வரையப்பட்ட அதே காலகட்டத்தில், பார்வையற்றவரான [[அந்தகக்கவி வீரராகவ முதலியார்|அந்தகக்கவி]]யால் எழுதப்பட்ட [[திருவாரூர் உலா]] நூலிலும் இக்கதை உள்ளது. மற்ற விடங்க தலங்களை பற்றி உருவான எழுத்துக்களான 17-ம் நூற்றாண்டில் [[பரஞ்சோதி முனிவர்]] இயற்றிய [[வேதாரண்ய புராணம்]], 19-ம் நூற்றாண்டில் திரிசிரபுரம் மகாவித்துவான் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]] எழுதிய [[திருநாகைக்காரோணம் தல புராணம்]] போன்றவற்றிலும் முசுகுந்தன் கதையின் பிற்கால வடிவங்கள் உள்ளன. பொதுவாக தமிழில் கிடைக்கும் முசுகுந்த புராணக் கதைகளில் சிறு வேறுபாடுகள் இருந்தாலும் ஏறத்தாழ ஒத்துப் போகின்றன.       
 
====== முசுகுந்தன் கதை சுருக்கம் ======
திருமால் தனக்கு புத்திரபாக்கியம் வேண்டி யாகம் செய்ய அதன்படி மன்மதன் திருமாலுக்குக் குழந்தையாகப் பிறந்தான். சக்தியை வணங்காமல் யாகம் செய்ததால் சக்தியின் சாபத்துக்கு ஆளானார் திருமால். பின்பு மறுபடியும் சாப விமோசனம் பெற சிவனைப் பூஜித்த போது சிவன் உமை, குழந்தை முருகனுடன் உள்ள சோமாஸ்கந்தர் (தியாகராஜர்) திருமேனியை திருமாலுக்கு அளித்தார் சிவன். அதனை திருமால் பாற்கடல் சென்று தன் மார்பில் வைத்து பூஜித்தார். வாரகலி அசுரனால் தோற்கடிக்கப்பட்ட இந்திரன் விஷ்ணுவின் உதவியை நாடினான். விஷ்ணுவின் உதவியுடன் வாரகலி அசுரன் வீழ்த்தப்பட்டது மட்டுமல்லாமல் விஷ்ணு தன் மார்பில் வைத்து பூஜித்த சிவன் உமை கந்தனுடன் இருக்கும் சோமாஸ்கந்தர்(தியாகராஜர்) மூர்த்தியையும் பெற்றுக் கொண்டான் இந்திரன். அதன்பிறகு பல காலம் தியாகராஜர் தேவலோகத்தில் இந்திரனால் வழிபடப்பட்டார்.
 
பின்னாளில், வலன் எனும் அசுரன் இந்திரலோகத்தை வெற்றி கொண்ட போது திருவாரூரில் ஆட்சி புரிந்த சோழ மன்னன் முசுகுந்தனிடம் உதவி வேண்டினான் இந்திரன். முசுகுந்தன் முந்தைய பிறவியில் குரங்காக இருந்து தன்னையறியாமல் சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, சிவனின் அருளால் குரங்கு முகம் கொண்ட சோழ மன்னாகப் பிறந்தவன் (ஆனால் தேவாசிரியன் மண்டப ஓவியத்தில் முசுகுந்தன் அயோத்தியாபுரியின் மன்னனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான்). இந்திரனின் வேண்டுகோளின்படி வாலாசுரனுடன் போர் புரிந்து தேவலோகத்தை இந்திரனுக்கு முசுகுந்தன் மீட்டளித்தான். தேவலோகத்தில் முசுகுந்தனின் கனவில் தியாகராஜர் தோன்றி தன்னை பூலோகத்திற்கு எடுத்து செல்ல அறிவுறுத்தினார். அதன்படி முசுகுந்தன் தேவலோகத்தில் இருந்து விடை பெறும் நேரம் வந்த போது இந்திரன் முசுகுந்தனிடம் விரும்புவதை கேட்கச் சொல்ல, இந்திரன் பூஜித்து வரும் தியாகராஜரை கேட்டான் முசுகுந்தன். இதை எதிர்பார்க்காத இந்திரன், இது மகாவிஷ்ணு வழிபட்ட கடவுளுருவம், ஆதலால் விஷ்ணு அனுமதித்தால் தியாகராஜரைத் தருகிறேன் என்று பதிலளித்தான். முசுகுந்தன் திருமால் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடலுக்கு விரைந்தோடி திருமாலின் அனுமதியையும் பெற்று வந்தான்.
 
ஆனால் தியாகராஜரைப் பிரிய மனமில்லாத தேவேந்திரன், அதேபோல் ஆறு தியாகராஜர் உருவங்களை விஸ்வகர்மா உதவியுடன் செய்து முசுகுந்தன் முன் வைத்து சரியானதைத் தேர்வு செய்யக் கூறினான். தியாகராஜர் அருளால் சரியான விடங்கமூர்த்தியை முசுகுந்தன் தேர்ந்தெடுக்க, திருமால் கொடுத்த தியாகராஜரை மட்டுமல்லாமல் தான் உருவாக்கிய மற்ற ஆறு தியாகராஜ மூர்த்திகளையும் சேர்த்து முசுகுந்தனிடம் கொடுத்தான் இந்திரன். பின்பு  பூலோகத்திற்குச் சென்று எந்த தலத்தில் தியாகராஜரை ஸ்தாபிக்கலாம் என அறிந்து வருமாறு விசுவகர்மாவை அனுப்பினான் முசுகுந்தன். விசுவகர்மாவும் பூலோகம் வந்து திருவாரூரில் அமர்ந்து துலாக்கோலை பிடித்து ஒரு தட்டில் திருவாரூரையும் மறுதட்டில் பூலோகத்தையும் நிறுக்கவே, எடைமிகுதியாக திருவாரூர் உள்ள தட்டே திகழ்ந்தது. அதன்படி மகாவிஷ்ணு கொடுத்த தியாகராஜரை திருவாரூரில் வன்மீகநாதர் கோவிலுக்கு தென்புறம் பிரதிஷ்டை செய்தான் முசுகுந்தன். மற்ற ஆறு தியாகராஜர் உருவங்களை திருக்காரவாசல், திருக்குவளை, திருவாய்மூர், திருமறைக்காடு (வேதாரண்யம்), நாகப்பட்டினம், திருநள்ளாறு ஆகிய ஆறு இடங்களில் பிரதிஷ்டை செய்தான்.
== முசுகுந்தன் புராண ஓவியக் காட்சிகள் ==
தேவாசிரிய மண்டபத்தின் தென்புற வாயிலை ஒட்டிய இரண்டாவது (அங்கணத்தில்) பிரிவில் தொடங்குகிறது முசுகுந்த புராணத்தின் முதல் ஓவியக்காட்சி. தென்புற வாயிலை ஒட்டிய இரண்டு நடைகளில் கிழக்கு மேற்காகத் தொடரும் இக்காட்சித்தொகுப்பு பின்பு மண்டபத்தின் கீழ் திசையில் இரண்டாம் நடையில் தொடங்கி வடக்காக செல்கிறது.  முசுகுந்த புராண ஓவியத் தொடரின் ஒவ்வொரு ஓவியக்காட்சிக்கும் தமிழில் காட்சி விளக்கம் எழுதப்பட்டுள்ளது. ஓவியக் காட்சிகளின் வரிசையமைப்பு வலமிருந்து இடமாக செல்ல, காட்சி விளக்க குறிப்புகள் இடமிருந்து வலமாக செல்கிறது. சில ஓவியங்களில் காட்சி விளக்க எழுத்துக்கள் அழிந்து விட்டதால் படிக்க இயல்வதில்லை.
 
====== கட்டியங்காரன் அழைப்பு ======
தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள முசுகுந்த புராண ஓவியத் தொடரின் முதல் காட்சியில் வாலாசுரனை அழிப்பதற்காக முசுகுந்தனை அழைத்து வாருங்கள் என்று தேவேந்திரன் சொன்னதன் பொருட்டு கட்டியங்காரன் வந்து கொலு வீற்றிருக்கும் முசுகுந்த சக்கரவர்த்தியின் முன் நிற்கிறான். குரங்கு முகம் கொண்ட முசுகுந்தனின் பின்னால் வாளேந்திய ஒன்பது வீரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ஓவியத்தில் முசுகுந்தன் அயோத்தியாபுரியின் மன்னனாக சொல்லப்பட்டுள்ளான். ஒன்பது வீரர்களும் முசுகுந்தனின் தம்பியர்களாய் சொல்லப்பட்டுள்ளனர். இந்த முதல் ஓவியக்காட்சிக்கு கீழ் பின்வருமாறு தமிழில் (17-ம் நூற்றாண்டு காலகட்ட எழுத்துருக்களில்) காட்சி விளக்கம் எழுதப்பட்டுள்ளது:
 
'கோசலையினோடு அயோத்தியாபுரி பட்டினத்திலே முசுகுந்த சக்ரவர்த்தி நவ வீராள் ஒன்பது பேரும் சுப்பிரமணிய சுவாமி அனுக்ரகத்தினாலே முசுகுந்த சக்ரவர்த்திக்கு தம்பிமார்களாய் இருக்க இப்படி வெகுகாலம் பரிபாலனம் பண்ணிக் கொண்டு கொலுவாயிருக்கையிலே தேவேந்திரன் வாலாசுரனை சங்காரம் பண்ணுவதற்காக முசுகுந்தனை அழைத்து வாருங்கள் என்று சொன்ன பிரகாரம் கட்டியங்காரன் வந்து முசுகுந்த சக்கரவர்த்தியை அழைக்கிறது இவ்விடம்'.
 
====== வாலாசுரனுடன் போர் ======
குரங்கு முகம் கொண்ட முசுகுந்தன் இந்திரனுக்குப் போர் உதவி செய்வதற்காக நவவீரர்களுடன் தேவலோகம் சென்று வாலாசுரனுடன் போரிடும் காட்சிகள், யானை, குதிரை, காலாட் படைகளின் அணிவகுப்பு வரையப்பட்டுள்ளது. இந்திரன் நான்கு கைகளுடன் காட்டப்பட்டுள்ளார். இந்திரனும் முசுகுந்தனும் செலுத்தும் அம்புகளில் செயம் என்றும் வாலாசுரன் செலுத்தும் அம்புகளில் அவஜெயம் என்றும் எழுதப்பட்டிருப்பது இந்திரனின் வெற்றியை காட்டுகிறது. வாலாசுரனை அழித்த பிறகு தேவேந்திரனும் முசுகுந்தனும் தேவலோகம் செல்லும் காட்சியில் முசுகுந்தன் ஏறிச் செல்லும் வெள்ளை யானை முன்பு முசுகுந்தனின் ஒன்பது வீரர்கள் ஒன்பது பாயும் வண்ணக் குதிரைகளின் மீது ஏறிச் செல்கின்றனர். 
 
குதிரை வீரர்களின் உடல், ஆடை அல்லது குதிரையின் மீது ஒன்பது வீரர்களின் (வீராள்) பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளது. முதலில் பச்சை வண்ணக் குதிரை மீது சாம்பல் வண்ணத்தில் வீரபாகு தேவர் இருக்கிறார். அடுத்து மஞ்சள் குதிரையில் வீரமகேந்திரனும், சிவப்பு குதிரையில் வீரகேசரியும், கருப்பு குதிரையில் வீரமகேசனும், சிவப்பு குதிரையில் வீரபுரந்திரனும், மஞ்சள் குதிரையில் வீரராட்சதனும், சாம்பல் நிறக் குதிரையில் வீரமார்த்தாண்டனும் உள்ளார்கள். மற்ற இரு குதிரைகளில் உள்ள வீரர்களின் பெயர்கள் அழிந்துள்ளன. 
 
இந்திரனின் தேரில் வஜ்ஜிரக்கொடி பறக்கிறது. வாழை மரங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்திரனை வெற்றி பெறச்செய்து விட்டு தேவலோகத்தில் தங்கியிருந்த போது முசுகுந்தனின் கனவில் சிவன் தோன்றி தன்னை பூலோகத்தில் எடுத்துச் செல்ல அறிவுறுத்தல், தேவலோகத்தில் இருந்து விடைபெறும் போது இந்திரன் பூஜிக்கும் தியாகராஜ மூர்த்தியின் திருவுருவம் தனக்கு வேண்டும் என்று முசுகுந்தன் கேட்பது, இந்திரன் அதை கொடுக்க மனமில்லாமல் அது போன்ற ஆறு திருவுருவங்களை தேவதச்சன் உதவியுடன் செய்து ஏழு திருவுருவங்களையும் ஓரிடத்தில் வைத்து எந்த மூர்த்தியை வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல கூறுதல், ஈசன் அருளால் உண்மையான தியாகவிடங்கரை முசுகுந்தன் கண்டுபிடித்து எடுப்பது, ஏமாற்றமடைந்த இந்திரன் மற்ற ஆறு திருவுருவங்களையும் பூலோகத்திற்கு எடுத்துச் செல்லும்படி வேண்ட அதன்படி முசுகுந்தன் பூலோகம் எடுத்து வருதல், தேவதச்சன் உதவியுடன் திருவாரூரே மூல விடங்கர் வைக்க ஏற்ற தலம் என அறிந்த பிறகு முசுகுந்தன் தியாகேசரை திருவாரூரில் வைத்து தரிசித்து அம்மூர்த்திக்கு விழா எடுப்பது வரை தேவாசிரிய மண்டப உட்கூரையில் ஓவிய காட்சிகளாக தீட்டப்பட்டுள்ளது. 
 
தேவேந்திரன் அளிக்கும் மூர்த்தியை வாங்கும் முன் தேவேந்திரனின் காலில் விழுந்து வணங்குகிறான் முசுகுந்தன். வீழ்ந்து வணங்குதல், எழுந்து வாங்குதல் ஆகிய இரண்டும் ஒரே காட்சியில் இரண்டு உருவங்களாக இடம்பெற்றுள்ளன. விசுவகர்மா திருவாரூர் கோவிலின் நடுவில் துலாக்கோலுடன் அமர்ந்துள்ள காட்சியில் துலாக்கோலில் கீழே இறங்கியுள்ள தட்டில் 'திருவாரூர்' என்றும் மறுதட்டில் 'பூமண்டலம்' என்றும் விசுவகர்மாவின் கீழ் 'விசுவகர்மா' என்றும் எழுதப்பட்டுள்ளது. இக்காட்சியில் ஆரூர் கோவிலின் வரைபடம் முழுவதுமாக உள்ளது. இதில் சிவலிங்கத்துடன் உள்ள வன்மீகரின் கோவிலுக்கு அருகில் காட்டப்பட்டுள்ள தியாகராஜர் கோவிலில் தெய்வம் எதுவும் இல்லை. தியாகராஜரை பூலோகம் எடுத்து வந்த பிறகு உள்ள காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ள திருவாரூர் ஆலய வரைபடத்தில் உள்ள தியாகராஜர் கோவிலில் தியாகராஜர் திருமேனி இடம் பெற்றுள்ளது. 
 
====== விடங்கர்களுடன் பூலோகம் செல்லல் ======
முசுகுந்தன் தியாகராஜரையும் மற்ற ஆறு விடங்கர்களையும் தேரில் வைத்து எடுத்துக் கொண்டு தேவலோகத்தில் இருந்து பூலோகம் செல்லும் காட்சியில் தேரின் முன் வட்டம் வட்டமாக மலைகள் காண்பிக்கப்பட்டுள்ளது. மலைகளுக்கு பின்பு ஓர் கோவிலில் சிவலிங்கம் உள்ளது. மலைகளின் மேல் 'நல்லூர் ஆண்டார் சவுநாகபறுவதம்' என்று தமிழிலும், தேவநாகரியிலும் எழுதப்பட்டுள்ளன.
 
பூலோகம் வந்த முசுகுந்தனும், மன்னன் ஒருவனும் தியாகராஜ மூர்த்தியை கைகளில் தாங்கி நிற்க, மற்ற ஒன்பது வீரர்களும் ஆறு விடங்கர்களை தாங்க பல தேசத்து அரசர்கள் எல்லாம் வணங்கி நிற்க வண்ண குடைகள், சாமரங்கள், தோரணங்கள் பிடிக்கப்பட, கொம்பு, மத்தளம் முழங்க மிகுந்த ஆரவாரத்தோடு தியாகராஜரை எடுத்து வலம் வரும் காட்சி வரையப்பட்டுள்ளது.  

Painting from the late Nayaka or early Maratha period style among the finest to have survived fromlate medieval South India.  
சிங்காதனம் தன் கதைசொல்லலுக்கு கதாபாத்திரங்களை திரும்ப திரும்ப ஓவியங்களில் பயன்படுத்துகிறார். முசுகுந்த புராண ஓவியத் தொகுப்பில் 23 கதாபாத்திரங்கள் வருகிறது. முசுகுந்தன் காணும் கனவை ஆறு கட்டங்களாக சிங்காதனம் வரைந்துள்ளார். 2 முறை திருவாரூர் கோவில் சித்தரிக்கப்பட்டுள்ளது. 11 முறை தியாகராஜரின் உருவம் வரையப்பட்டுள்ளது. தியாகராஜரின் உருவம் கோவில் சன்னதியில் வீற்றிருப்பதாக சித்தரிக்கப்படும் இடத்தில் கோவிலுக்கு வெளியே மனிதர்களும் வானவர்களும் தியாராஜரை வழிபடுவதாக வரையப்பட்டுள்ளனர்.  

Mid seventeenth century- probably from the decade of the 1660's or 1670's
ஓவியத்தில் தியாகராசரை அலங்காரங்களால் மறைக்கப்பட்டு மூடி வழிபடும் நிலையை காண முடிகிறது. தியாகராஜ சுவாமியை இந்திரன் இரத்தின சிம்மாசனத்தில் வைத்து பூஜை செய்யும் ஒரு காட்சியில் காட்டப்பட்டுள்ள மரங்களில் ஒன்றில் 'மந்தாரை' என்று எழுதப்பட்டுள்ளது. சந்திரசேகர சுவாமியை ஊர்வலமாக எடுத்து வரும் காட்சியில் பெரிய மடம் ஒன்றுள்ளது. அதனுள் துர்வாச முனிவர், ஏழு முனிவர்கள் உருவங்கள் உள்ளன. மடத்துக்கு பின்புறம் 4 தென்னை மரங்கள், அவற்றில் குரங்குகள், ஓணான், அணில், கிளி போன்ற உயிரினங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது.

Mucukunda- the monkey faced Chola king
கீழக்குப் பகுதியில் ஓர் அரங்கம் முழுவதும் இந்திரனுக்கு தியாகராஜ மூர்த்தி எவ்வாறு கிடைத்தார் என்ற மற்றொரு புராண கிளைக்கதை (முன்கதை) தீட்டப்பட்டுள்ளது. இதில் 6 ஓவியப்பகுதிகள் (43-வது முதல் 48-வது காட்சி வரை) முற்றிலும் சிதைந்துள்ளதால் காட்சியோ எழுதப்பட்டுள்ள விளக்கமோ காணமுடியவில்லை. இத்தொடரில் திருமால், தியாகராஜர் திருவுருவத்தை படைத்து தன் மார்பில் வைத்து பூசித்ததாகவும் பின்பு இந்திரன் திருமாலிடம் இருந்து அந்த திருவுருவத்தை பெற்று பூசித்ததாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. திருமால் இருக்கும் பாற்கடலில் நண்டு, மீன்கள் எல்லாம் காட்டப்பட்டுள்ளன. வாரகலி அசுரனை விஷ்ணு கொல்லும் காட்சி, விஷ்ணு கொடுத்த மூர்த்தியுடன் தேவேந்திரன் தேரில் தேவலோகத்தில் வரும் போது தேரின் முன் மேனகை, திலோத்தமை, ஊர்வசி, அரம்பை ஆகிய தேவலோக நடனமங்கைகள் நடனமாடுவது வரையப்பட்டுள்ளது. நடனமங்கைகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்காட்சியில் நட்டுவனார்க்கு பின்புறம் புல்லாங்குழல்காரன் என பெயர் குறிக்கப்பட்டுள்ள ஒருவன் குழலிசைக்கிறான்.

They cover four and a half long serial rows on the ceiling of the Tevaciriya mandapam located in the third prakara of the temple
====== இந்திரனின் சிதம்பர தரிசனம் ======
திருமால் சொன்னதன்படி இந்திரன் சிதம்பரத்தில் சென்று சபாபதியை ( நடராஜர்) தரிசனம் செய்யும் காட்சியும் ஓவியத் தொடரில் உள்ளது. அதில் நடராஜரும், சிவகாமி அம்மையும் அமர்ந்திருக்க, இந்திரன் மகுடம் இல்லாமல் குடுமியுடன் தரையில் அமர்ந்த நிலையில் அக்கமாலை கொண்டு ஜெபிப்பதாக வரையப்பட்டுள்ளது.   

This mandapais itself a site of unique cultural importance,  for it is here that the 9th century poet Sundaramurti Nayanar had a vision of all the assembled 63 nayanar, the tamil saints of Siva,  at the start of his pivotal career as the first major systemaiser of Tamil Saiva hagiography.  
இந்திரன் மகாவிஷ்ணுவிடம் இருந்து சோமாஸ்கந்த மூர்த்தியை பெற்றுக் கொண்டு வந்து இரத்தின சிம்மாசனத்தில் வைத்து பூசை செய்யும் காட்சியுடன் தேவாசிரிய மண்டபத்தின் கூரையில் தீட்டப்பட்டுள்ள முசுகுந்தன் புராணகதையின் முற்பகுதி நிறைவு பெறுகிறது.  

Two scenes show us the Tiruvarur temple itself. Both scenes are situated in the middle of a long panel. The first one comes right after a major climax in the narrative: Indira gaves Mucukunda the Tyagarajar icon.  
இவ்வாறு இரண்டு இடங்களில் கதை தொடரப்பட்டு, ஓரிடத்தில் இணைந்து முழு புராணமும் காட்டப்பட்டுள்ளது.  

unlike Valmikanatha, Tyagaraja os a mobile image. Twice a yearhe leaves his home inside the innermost domain of the temple to take up temporary residence in the Tevaciraya Mandapa in the outer prakara.
====== ஓவியங்களில் சமூகச் சித்தரிப்புகள் ======
முசுகுந்த ஓவியங்களில் இடம்பெற்றுள்ள தெய்வ உருவங்களும், மனிதர்களும் அணிந்துள்ள ஆடை ஆபரணங்களில் பல்வேறு வகையான நுட்பங்களும் வகைகளும் உள்ளன. வானத்தில் இருந்து பூமாரி பொழியும் தேவர்களில் 'அக்கினி', 'பீமன்', 'ராசானியன்' போன்றவர்களுடைய பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. அன்ன வாலும், இறக்கைகளும் கொண்ட தேவ உருவங்கள் உள்ளன. ஆரூர் கோவிலின் அமைப்பு, மற்ற கோவில்கள், கோபுரங்கள், திருமதில்கள், பிரகாரங்கள், பிராகாரத்தில் உள்ள கோயில்கள், மண்டபங்கள், கிணறுகள் என பலவிதமான கட்டடங்களை தேவாசிரிய மண்டப ஓவியங்களில் காணமுடிகிறது. கோவில்களில் 'அசலேசம்', 'அனந்தீசம்', 'ஆடகேசம்', 'கமலாலயம்மன்', 'சித்தீசுரம்', 'சண்டிகேசுவரர் சன்னதி' என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளன. வன்மீகநாதரின் அருகில் அமர்ந்த நிலையில் உள்ள அம்மன் சிலையும், கமலாம்பாள் கோவிலுக்குள் கால்மேல் கால்வைத்து தவம் கொண்டுள்ள அம்மன் உருவமும் வரையப்பட்டுள்ளன.  

The paintings like the mandapa as a whole,  werewere, until recentlyrecently, in a state of extreme dilapidation. Decades of neglect have taken their toll. Damage from fire, water leakage, dust, mould, the predations of birds and insects, and other factors is severe. When we last saw these paintings in January 1988, they were in a much better state. On our visit to TiruvarurTiruvarur in March 2006, we were shocked to seethat whole panels are irreparably lost. Many of the 17th century inscriptions accompanying the painting are no longer legible. We are happy to note that these paintings have now been cleaned and preserved by the professional INTACH team headed by K.P. Madhu Rani- David Shulman and V.K. Rajamani in their book 'The Mucukunda murals in Tyagaraja Temple'.
இவை தற்போது திருவாரூர் கோவிலில் புற்றிடங்கொண்டார் சன்னதியில் உள்ள 'சோமகுலாம்பிகை' (பிரியாவிடை அம்மை) செப்புத் திருமேனி போன்றும், கமலாம்பாள் கோவிலின் மூலச் சிலை போன்றும் அப்படியே ஓவியத்தில் காணப்படுகின்றன.  

About 10 years ago one of the priest requested me to do something about the paintings on the roof of the Devasaraya Mandapam,  since the authorities were going to whitewash them. It took me 8 years to convince the authorities that these were among the finest frescoes of their time.
அரசவை நாட்டியக் காட்சிகள், இறைவன் வீதி உலா வரும் போது நிகழும் நாட்டியக் காட்சிகள், தேவலோகத்தில் நிகழும் நாட்டியக் காட்சிகள், வீதியில் நிகழும் ஶ்ரீ பலி பூசையின் போது நிகழும் நாட்டியம் என நாட்டியக் கலையின் பல்வேறு கூறுகள், திருவாரூர் கோவிலுக்குரிய பூத நிருத்தம் என்ற மத்தளம் இசைக்கும் மரபு, பஞ்ச குடமுழா என்ற முக வாத்தியம் இசைத்தல், திருவாரூர் கோவிலில் கொடியேற்று விழா துவங்கி நாள்தோறும் நிகழும் மகோத்ஸவ நிகழ்வுகள் இந்த ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.  

Irresponsible digging up of the terrace on the pretext of water-proofing it and then abandoning work on the roof over the 10 years ago had caused leakage, fungus and irreparable damage. Something needed to be done. Neither the Trustees nor the government took any action for over 8 years. Prakriti foundation found support for the project from only two caring and sincere friends- S. Aravind, a college mate form 80's and now a successful Silicon Valley czarczar,  and Ramani Sivasothy, a Srilankan Tamil devotee of Tiruvarur who lived in London and cared so deeply about the paintings that on her own she got a photographer to document them before they were ruined further. My deepest thanks and gratitude for supoort on what has been a lonely journey.
விழா தொடங்கும் காட்சியினூடே பூரணி, புஷ்கலையுடன் இருக்கும் ஐயனாரின் கோவில் ஒன்று காட்டப்பட்டுள்ளது. அதன் அருகே காளிதேவியின் கோவில் ஒன்றுள்ளது. அதில் தேவி எட்டு கரங்களுடன் தரையில் அரக்கன் ஒருவனை மிதித்து சூலத்தால் குத்தும் கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். கையில் மணி, கேடயம், திரிசூலம், உடுக்கு, குத்துவாள், நாகம் போன்றவை உள்ளன. இவை திருவிழாக்கள் நடக்கும் போது அய்யன், பிடாரி போன்ற எல்லை தெய்வங்களுக்கு பூஜை செய்யப்படுவதை குறிப்பிடும் வண்ணம் உள்ளது.  

Two years ago many difficulties later the entire ICKPAC team led by Madhurani and her deeply sincere associates have completed cleaning, restoring and reviving the magic of the story of Mucukunda and the prehistory of the temple of Tirucarir(as recorded in its Sthala Purana).  
விழாக்கோலமாக உள்ள ஒரு காட்சியின் கீழ் 'பைரவர் திருவிழா' என்றும் 'முதலிய மூவர் திருவிழா' என்றும் எழுதப்பட்டுள்ளது. முதலிய மூவர் என்பது சைவ சமயத்தின் மூவர் முதலிகள் என குறிப்பிடப்படும் தேவார ஆசிரியர்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர். விழா ஊர்வலத்தில் திரிசூல வடிவத்தில் இருக்கும் அஸ்திரதேவருக்கு முன்பு கையை நீட்டிக் கொண்டு நடனமாடும் ஒரு பெண்ணின் கீழ் 'கயிகாட்டு முறைகாரி' என்று எழுதப்பட்டுள்ளது.  

- Publishers Note(Ranvir R. Shah, Founder Trustee, Prakriti Foundation)
வானத்தில் வெடிக்கும் 'புஸ்' வாணம், தரையில் சுற்றும் வாணம், கோலில் சுற்றும் வாணம் என பல வகை வாணங்கள் இந்த ஓவியங்களில் குறிப்பாக விழாக் காட்சிகளில் இடம் பெற்றுள்ளன. ஒரு வாணத்தின் மீது நிலச்சக்கர வாணம் ('னில சக்கர வாணம்') என எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்டமாக காட்டப்பட்டிருக்கும் மனித உருவங்களில், ஒவ்வொரு உருவத்தின் நிறம், முகபாவம், அணிந்திருக்கும் உடை அலங்காரங்கள் எல்லாம் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளன. 

Red is identified as red ochre
போர்ப் படைகளின் உடை, அலங்காரம், கருவிகள் அனைத்தும் மராட்டியர் காலப் போர்ப்படையின் கூறுகளை கொண்டுள்ளன. தேவேந்திரனுக்கு உதவுவதற்காக செல்லும் முசுகுந்த சக்கரவர்த்தியின் காலாட்படையில் துப்பாக்கி ஏந்திய ஒரு வரிசையினர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Yellow is identified as yellow ochre
== மனுநீதிச் சோழன் ஓவியக் காட்சிகள் ==
பசுவிற்கு நீதி வழங்கும் பொருட்டு தன் மகன் மீது தேரை ஏற்றி கொன்ற மனுநீதிச் சோழனின் வரலாற்றோடு இணைந்த புராணக்கதையின் வண்ண ஓவியங்கள் தேவாசிரிய மண்டபத்தின் வடபுறச் சுவரில் தீட்டப்பட்டுள்ளன. அவ்வோவியங்கள் பணி முடியாத நிலையில் உள்ளன. காட்சி விளக்க குறிப்புகளும் குறைவாகவே காணப்படுகின்றன.

Green is identified as Malachite
இக்காட்சித் தொகுதி சுவரில் உள்ளதால், இயற்கையின் சீற்றங்களுக்கு உட்பட்டு மிகவும் தெளிவில்லாமல் உள்ளது. முசுகுந்த புராண ஓவியக் காட்சிகள் படைக்கப்பட்ட போதே மனுநீதிச் சோழன் புராண ஓவியங்களும் வரையப்பட்டிருக்க வேண்டும் என்று [[குடவாயில் பாலசுப்ரமணியன்]] தன் திருவாரூர் திருக்கோவில் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

White is identified as Calcium Carbonate(Chalk)
திருவாரூர் கோவிலில் உள்ள விக்கிரம சோழனின் கல்வெட்டில், சேக்கிழாரின் [[பெரிய புராணம்]] கூறும் மனுநீதிச் சோழன் வரலாறு விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Black is identified as Lamp black
== வரலாற்று சிறப்புகள் ==
சிங்காதனம் தேவாசிரிய மண்டபத்து ஓவியங்களின் கீழ் எழுதியுள்ள புராண விளக்கங்களும் விழாக்கள் பற்றிய செய்திகளும் மக்களின் பேச்சு வழக்குகள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்று குடவாயில் பாலசுப்பிரமணியம் 'ஓவியன் சிங்காதனம்' என்ற தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

On the stylistic grounds, the paintings appear to belong to the late Nayaga period,  the figures bearing a strong resemblance to those of the Ramalingavilasam palace of Ramanathapuram, which were done in the early 18th century.There is a school of thought that these paintings were produced under the patronage of the Maratha rulers of the Tyanjavur, and if this were so, even then the early Nayaka influence seems to be strongstrong,  since these paintings are quite different from the Maratha period paintings in other temples.
17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காவிரி டெல்டா பகுதி மக்களின் பேச்சுமொழி தமிழுக்குச் சான்றாக இந்த ஓவியங்களில் உள்ள விளக்கக் குறிப்புகள் விளங்குகின்றன. அக்காலத்தைய ஆரூர் கோவிலின் அமைப்பு, ஆரூரின் விழாக்கள், வீதிகளில் விழாக்கள் நிகழ்ந்த விதம், சடங்குகள், ஆரூர் மக்களின் கலாச்சாரம், அவர்கள் வளர்த்த இயல் இசை கூத்துகள், ஆரூரில் அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் பெயர்கள், அவர்களின் உருவ அமைப்புக்கள், தியாகராஜ சுவாமியின் புராணம், வாண வேடிக்கைகள், அணிகலன்கள், ஆடைகள், இசைக்கருவிகள், இசைக்கலைஞர்கள், ஆடற்கலையின் முத்திரைகள், இன்னபிற செய்திகள் அனைத்தையும் சிங்காதனம் வரைந்த திருவாரூர் தேவாசிரிய மண்டபம் ஓவியங்களில் காணமுடிகிறது.  

The paintings depict the Sthalapurana, that is, the local legend of the mythical monkey-faced king,  Mucukunda,  who was a great devotee of Lord Shiva and was able to bring the image of Tyagarajaswamy from the abode of Indra.  
தேவாசிரியன் மண்டப ஓவியத்தொகுப்பில் உள்ள தியாகராசர் புராணம், முந்தைய விஜயநகர மன்னர்கள் காலத்தில் திருவாரூர் கோவிலில் நிறுவப்பட்ட சந்திரசேகர மண்டபத்துச் சிற்பங்கள் காட்டும் தியாகராசர் புராணத்தில் இருந்து வேறுபட்டும், கால வளர்ச்சியினால் விரிவுற்றும் காணப்படுகிறது. சந்திரசேகர மண்டப சிற்பத்தில், திருமால் தனுசு பெற யாகம் வளர்த்து சிவனருள் பெறுகிறார். தேவாசிரிய மண்டபம் ஓவியத்தொகுப்பில் திருமால் புத்திரபாக்கியம் வேண்டி யாகம் செய்து சோமாஸ்கந்தரைப் பெறுகிறார். சிற்பத்தில் திருமால் தலை இழப்பதும் நான்முகன் அருளால் தலையைப் பெற்ற பின்பு சிவனிடம் இருந்து சோமாஸ்கந்தரைப் பெறுவதும் கூறப்பட்டுள்ளன. நான்முகன் துலாத்தட்டில் நிறுத்தி ஆரூரை சிறந்த தலம் என்று தேர்ந்தெடுப்பதும் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. ஓவியத்தில் விஸ்வகர்மா துலாத்தட்டு நிறுத்தி ஆரூரை தேர்ந்தெடுக்கிறார். சந்திரசேகர மண்டப சிற்பங்களில் முசுகுந்தன் இல்லை. புற்று வழிபாடு கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் விஜயநகர காலத்தில் ஆரம்ப நிலையில் சொல்லப்பட்ட திருவாரூர் புராணம், தஞ்சை மராட்டிய மன்னர்களின் காலத்தில் முழு வளர்ச்சி பெற்று புழக்கத்தில் இருந்தது என்பது தெளிவாகிறது.  

ஓவியத்தில் உள்ள சில காட்சிகள் திருவாரூர் சம்பந்தப்பட்ட எந்தப் புராணங்களிலும் குறிப்பிடவில்லை. உதாரணத்திற்கு, தேவலோகத்திற்கு சென்ற முசுகுந்தனை, இந்திரனின் தாய் அதிதி வரவேற்கும் காட்சி. முசுகுந்த புராண ஓவியங்கள் 17-ம் நூற்றாண்டில் இக்கோவிலைப் பற்றி திருவாரூரில் நிலவிய வாய்மொழி கதையின் தாக்கத்தால் வரையப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
== இன்றைய நிலை ==
== இன்றைய நிலை ==
1988-ஆம் ஆண்டு திருவாரூர் தியாகராஜர் கோயில் குடமுழுக்கிற்காக திருப்பணிகள் நடந்த போது தேவாசிரியன் மண்டபம் ஓவியங்கள் பழுதடைந்தன. பின்னர் தனிநபர் ஒருவர் தற்போதைய வண்ணங்களை(color paint) கொண்டு பழுதடைந்த ஓவியங்களை சரி செய்ய முற்பட்டார். அதற்கு பக்தர்களும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை இந்த ஓவிங்களை 18-ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டது போன்று அதன் பழைமை மாறாமல் மூலிகை இயற்கை வண்ணங்களை பயன்படுத்தி வரைய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது வரை பணி முடிக்கப்படாமல் தேவாசிரியன் மண்டபம் ஓவியங்கள் பழுதடைந்தே உள்ளன.
பராமரிப்பில்லாமல் அழிவின் விளிம்பில் இருந்த தேவாசிரியன் மண்டபம் முசுகுந்த ஓவியங்களை மீட்க குஜராத் ஜைனரும் சென்னை தொழிலதிபருமான ரன்வீர் ஷா பெருமுயற்சியெடுத்தார். எஸ். அரவிந்த், இலங்கை தமிழரான ரமணி சிவசோதி ஆகியோர் இந்த முயற்சிக்கு உதவினர். இந்த உதவியுடன் கே.பி. மதுராணி (INTACH, Bangalore) தலைமையிலான நிபுணர் குழு 2008 முதல் 2010 வரை இரு வருடங்கள் உழைத்து முசுகுந்தன் ஓவியங்களை மீட்டது.  

தற்போது திருவிழா காலங்களில் மட்டும் தேவாசிரியர் மண்டபம் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் பூட்டப்பட்டு பராமரிக்காமல் உள்ளதால் வௌவால்களின் புகலிடமாக மாறி மீண்டும் தேவாசிரிய மண்டப ஓவியங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
== நூல்கள் ==
* திருவாரூர் திருக்கோவில், குடவாயில் பாலசுப்ரமணியன், அகரம் பதிப்பகம். திருவாரூர் கோவில் சார்ந்த அனைத்து செய்திகளுடன் எழுதப்பட்டுள்ள இந்நூலில் தேவாசிரிய மண்டபத்தில் உள்ள ஓவியங்களை பற்றிய தகவல்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.
* The Mucukunda Murals in the Tyagarajasvami Temple, Tiruvarur, V.K. Rajamani and David Shulman, Publisher: Ranvir R. Shah, Prakriti Foundation. வி.கே. ரமணியின் புகைப்படங்கள், டேவிட் சுல்மனின் அறிமுக கட்டுரையுடன் இந்த புத்தகம் தேவாசிரிய மண்டபத்தில் உள்ள முசுகுந்தன் ஓவியங்களை பற்றிய முழுமையான பதிவாக உள்ளது. மாயா தேவன் தெவட்டின் விளக்க கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
தமிழகக்‌ கோயிற்கலை மரபு, ஆசிரியா்‌: முனைவர்‌. குடவாயில்‌ பாலசுப்ரமணியன்‌, வெளியீட்டு மேலாளர்‌ மற்றும்‌ காப்பாளர்‌: சரசுவதி மகால்‌ நூலகம்‌, தஞ்சாவூர்‌.
* திருவாரூர் திருக்கோவில், குடவாயில் பாலசுப்ரமணியன், அகரம் பதிப்பகம்.
 
* The Mucukunda Murals in the Tyagarajasvami Temple, Tiruvarur, V.K. Rajamani and David Shulman, Publisher: Ranvir R. Shah, Prakriti Foundation.
கலையியல் ரசனைக் கட்டுரைகள், குடவாயில்‌ பாலசுப்ரமணியன்‌, அகரம் பதிப்பகம்
* தமிழகக் கோயிற்கலை மரபு, ஆசிரியா்: முனைவர். குடவாயில் பாலசுப்ரமணியன், வெளியீட்டு மேலாளர் மற்றும் காப்பாளர்: சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
 
* கலையியல் ரசனைக் கட்டுரைகள், குடவாயில் பாலசுப்ரமணியன், அகரம் பதிப்பகம்.
திருவாரூர்‌ மாவட்டத்‌ தொல்லியல்‌ வரலாறு, ஆசிரியர்கள்‌: பெச. இராசேந்திரண்‌, வெ. வேதாசலம்‌, செ. சாந்தலிங்கம்‌, க. நெடுஞ்செழியன்‌, பொதுப்‌ பதிப்பாசிரியர்‌: கு. தரமோதரன்‌, இயக்குநர்‌, தொல்லியல்‌ துறை, வெளியீடு: தமிழ்நாடு தொல்லியல் துறை
* திருவாரூர் மாவட்டத் தொல்லியல் வரலாறு, ஆசிரியர்கள்: பெச. இராசேந்திரண், வெ. வேதாசலம், செ. சாந்தலிங்கம், க. நெடுஞ்செழியன், பொதுப் பதிப்பாசிரியர்: கு. தரமோதரன், இயக்குநர், தொல்லியல் துறை, வெளியீடு: தமிழ்நாடு தொல்லியல் துறை.
* [https://tamil.abplive.com/news/thanjavur/request-to-restore-400-year-old-paintings-at-thiruvarur-thiyagaraja-swamy-temple-21961 திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியங்களை மீட்டெடுக்க கோரிக்கை]
* [https://www.dailythanthi.com/News/State/damage-paintings-in-temple-869475 பழுதடைந்து வரும் தேவாசிரியர் மண்டபத்தில் மூலிகை ஓவியங்கள் பாதுகாக்கப்படுமா? தினத்தந்தி]

The Mucukunda Murals in the Tyagarajasvami Temple, Tiruvarur, V.K. Rajamani and David Shulman
== அடிக்குறிப்புகள் ==
<references />

https://tamil.abplive.com/news/thanjavur/request-to-restore-400-year-old-paintings-at-thiruvarur-thiyagaraja-swamy-temple-21961
{{Finalised}}
{{Fndt|19-Jul-2024, 11:53:08 IST}}

{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஓவியம்]]
[[Category:ஆலய ஓவியம்]]

Latest revision as of 18:10, 17 November 2024

திருவாரூர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: திருவாரூர் (பெயர் பட்டியல்)
தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள குரங்கு முகம் கொண்ட அரசன் முசுகுந்தனின் ஓவியம், புகைப்படம்: வி.கே. ரமணி
தேவாசிரியன் மண்டபத்தின் மேற்கூரையில் உள்ள ஓவியக்காட்சிகள்
தேவாசிரியன் மண்டபம் வெளிப்புறம்
தேவேந்திரன் முசுகுந்தனுக்கு பாரிசாத மாலையை கொடுக்கும் காட்சி, புகைப்படம்: வி.கே. ரமணி
தேவேந்திரனும் வாரகலியும் போரிடும் காட்சி
திருமால் வாரகலி அசுரனுடன் போர் புரியும் காட்சி
போர்க்காட்சி
போர் காட்சியின் ஒரு பகுதி
தியாகராஜர் உருவத்தை தன்னுடன் எடுத்து செல்ல விஷ்ணுவிடம் அனுமதி கேட்கும் முசுகுந்தன்
தியாகராஜர் உருவத்தை தன்னுடன் எடுத்து செல்ல விஷ்ணுவிடம் அனுமதி கேட்கும் முசுகுந்தன்; தேவாசிரியன் மண்டப ஓவியக்காட்சி, புகைப்படம்: வி.கே. ரமணி
முசுகுந்த சக்கரவர்த்தியின் முன் கட்டியங்காரன் வந்து நிற்கும் காட்சி
ஒன்பது வீரர்களுடன் அமர்ந்திருக்கும் முசுகுந்த சக்கரவர்த்தியின் முன் கட்டியங்காரன் வந்து நிற்கும் காட்சி, புகைப்படம்: வி.கே. ரமணி
வஜ்ரம், குத்துவாள் ஏந்தி நான்கு கைகளுடன் இந்திரன்
நடனமங்கை அரம்பை
தேவலோக நடனமங்கை அரம்பை
புல்லாங்குழல்காரன்
காளிதேவியின் ஓவியம், புகைப்படம்: வி.கே. ரமணி
தியாகராஜரை வழிபடுபவர்களின் ஒரு பகுதியினர்
மனுநீதி சோழன் புராண ஓவியக் காட்சி
தேவாசிரியன் மண்டபத்தில் வரையப்பட்டுள்ள மனுநீதி சோழன் புராண ஓவியக் காட்சி
ஓவியன் சிங்காதனம்
மூவரில் நடுவில் இருப்பவர் ஓவியன் சிங்காதனம்
ஆரூரில் சந்திரசேகரர் விழா ஊர்வலம், புகைப்படம்: வி.கே. ரமணி
முசுகுந்தனின் படை
இந்திரலோகம் நோக்கி செல்லும் முசுகுந்தனின் படை. இதில் ஒரு பிரிவினர் துப்பாக்கி ஏந்தியுள்ளனர்

திருவாரூர் தியாகராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தேவாசிரியன் மண்டபத்தின் விதானத்திலும் (உட்கூரை), சுவரிலும் ஓவியங்கள் உள்ளன. இவை 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தஞ்சை மராத்தியர் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்டவை. பிற்கால நாயக்கர் பாணி அல்லது ஆரம்பகால மராட்டியர் பாணியில் வரையப்பட்டுள்ள இவ்வோவியங்கள் தென்னிந்தியாவில் இன்று எஞ்சியிருக்கும் சிறந்த சுவரோவியத் தொகுப்புகளில் ஒன்றாக கருதப்படுகின்றன.

தேவாசிரியன் மண்டப ஓவியங்கள் ஸ்தல புராணமான முசுகுந்த புராணம், மனுநீதிச் சோழன் புராணம் ஆகியவற்றின் காட்சி விளக்கங்களாக உள்ளன. இதில் முசுகுந்த புராண ஓவியங்களே இன்று பெரும்பாலும் காணக்கிடைக்கின்றன. முசுகுந்த புராண ஓவியங்களை வரைந்தவர் ஓவியர் சிங்காதனம். மனுநீதிச் சோழன் புராண ஓவியங்கள் பணி முடியாமலும், இருக்கும் ஓவியங்கள் சிதைந்து தெளிவில்லாமலும் உள்ளன.

இடம்

தேவாசிரியன் மண்டபம் தமிழ்நாட்டில் திருவாரூரில் புகழ்பெற்ற தியாகராஜசுவாமி கோயிலில் அமைந்துள்ளது.

தேவாசிரியன் மண்டப அமைப்பு

தேவாசிரியன் மண்டபம் தமிழக சைவ மரபில் முக்கியத்துவம் கொண்டதாகக் கருதப்படுகிறது. புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில் தேவாசிரியன் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் தான் 9-ம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி நாயனார் 63 நாயன்மார்களையும் ஒரே நேரத்தில் தரிசித்ததாக சைவ நம்பிக்கை உள்ளது. சுந்தரரின் திருத்தொண்டத் தொகை இந்த மண்டபத்தில் அரங்கேறியதாக சொல்லப்படுகிறது

தேவாசிரியன் என்ற சொல் முதன்முதலாக சேக்கிழாரின் பெரிய புராணத்தில் தடுத்தாட்கொண்ட புராணம்[1] பகுதியில் வருகிறது. இம்மண்டபத்துக்கு திருக்காவணம் (பந்தல்) என்ற பெயரும் வழங்கி வந்துள்ளது. இந்த மண்டபம் முதற் குலோத்துங்கனின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொன்மையான தேவாசிரியன் மண்டபத்தை (வன்மீகாதிபதியின் சபை) மூன்றாம் குலோத்துங்கன் புதுப்பித்ததற்கான கல்வெட்டு சான்று திருபுவனம் கோவிலில் உள்ளது.

உற்சவ மூர்த்தியான தியாகராஜர் வருடத்திற்கு இருமுறை கோவிலை விட்டு தேவாசிரியன் மண்டபத்தில் தற்காலிகமாக தங்குவார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழாவின் போது தியாகராஜ சுவாமியின் திருமேனியை இம்மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்து சித்திரை பெருவிழா நடத்தப்படுகிறது. சோழர் காலத்தில் சிறந்த கலைஞர்களான தலைக்கோலிகளின் நடனங்கள் திருவாரூர் இறைவன் முன்னிலையில் நடத்தப்பட்ட இடமாகவும், ஊர்ச்சபையினர் கூடும் பொது மன்றமாகவும், கோயிலின் கருவூலம் செயல்பட்ட இடமாகவும் இருந்துள்ளது.

தேவாசிரிய மண்டபமே இக்கோவிலில் உள்ள மண்டபங்களில் பெரியது. 210 அடி நீளமும் 140 அடி அகலமும் உடைய இம்மண்டபம் உயர்ந்த மேடையின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் முன் உள்ள 300-க்கும் மேற்பட்ட தூண்களையும் சேர்த்து இப்பகுதி ஆயிரங்கால் மண்டபம் என்று குறிப்பிடப்படுகிறது.

மண்டப அமைப்பையும், கலை அமைதியையும் கொண்டு, வரலாற்றாய்வாளர்கள் மண்டபத்தின் வடபகுதியை மட்டும் முற்கால கட்டுமானமாகவும், நீண்டுள்ள முன் பகுதிகளை பிற்காலத்தியதாகவும் கணிக்கின்றனர்.

மண்டபத்தின் உள்ளே மையத்தில் உயர்ந்த மேடை (சபை) உள்ளது. இதில் ஏழு வரிசைகளாக 42 தூண்கள் உள்ளன. இந்த மேடைத் தூண்களில் கீழ்ப்புறம் பதஞ்சலி, மேல்புறம் வியாஹ்ரபாதர் (பாம்புடல் மற்றும் புலிக்கால் முனிவர்கள்) வணங்கிய நிலையில் சிற்பங்கள் இருப்பது இந்த மேடையை இறைவனின் 'சபாமண்டபம்' என்று அடையாளம் காட்டுகிறது. இந்த மேடையில் விழாக்காலத்தில் இறையுருவங்கள் எழுந்தருள்கின்றன.

மண்டபத்தில் முன்பகுதியை 324 தூண்கள் தாங்கி நிற்கின்றன. மண்டபத்தின் நடுப்பகுதியில் உட்கூரை (விதானம்) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இடமே நடனங்கள் நிகழ்ந்த இடமாகக் கருதப்படுகின்றது. மண்டபத்தின் தூண்களிலும், சுற்றியுள்ள சுவர்களிலும் சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன.

தேவாசிரியன் மண்டபத்தின் உட்கூரையிலும் சுவர்களிலும் ஓவியங்கள் உள்ளன. இவை முசுகுந்த புராணம், மனுநீதிச் சோழன் புராணம் ஆகியவற்றின் காட்சி விளக்கங்களாக உள்ளன.

ஓவியங்கள் வரைய பயன்படுத்தப்பட்ட பொருட்கள்

தேவாசிரியன் மண்டப ஓவியங்கள் கிரானைட் கற்கள் வரிசையாக அடுக்கப்பட்ட மேற்கூரை கல் மேற்பரப்பின் மேல் பூசப்பட்ட சுண்ணாம்பு பரப்பில் வரையப்பட்டுள்ளது. தண்ணீரில் கரையக்கூடிய பசை போன்றவை பிணைப்பு ஊடகமாக டெம்பரா (tempera) முறைப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக சுவரோவியங்களில் முதலில் சிறிது தடினமான சுண்ணாம்பு பரப்பு பூசுப்படும். அதற்குமேல் மெல்லிய சுண்ணாம்பு பரப்பை( intonaco) பூசி அதன்மேல் ஓவியம் வரையப்படும். ஆனால் தேவாசிரியன் மண்டபத்தில் முதலில் தடினமான சுண்ணாம்பு பரப்பை பூசாமல் கல் மேற்பரப்பில் நேரடியாக மெல்லிய சுண்ணாம்பு பரப்பு (intonaco) பூசப்பட்டு ஓவியம் வரையப்பட்டுள்ளது. பல இடங்களில் சுண்ணாம்பு(lime) பரப்பு 4 அல்லது 5 மிமீ அளவுக்கு மெல்லியதாக உள்ளது.

ஓவியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சிவப்பு நிறத்திற்கு சிவப்பு நிறமியும் (red ochre), மஞ்சள் நிறத்திற்கு மஞ்சள் நிறமியும் (yellow ochre), பச்சைக்கு பச்சை நிறமி (malachite), வெள்ளைக்கு சுண்ணம், கறுப்பு நிறத்திற்கு விளக்குப்புகைக் கரியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஓவிய பாணி

தேவாசிரிய மண்டப ஓவியங்கள் மராத்திய மன்னர்களின் ஆதரவில் வரையப்பட்டன. ஆனால் இந்த ஓவியங்களின் பாணி சமகாலத்து மராத்திய பாணி ஓவியங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை போல பிற்கால நாயக்கர் பாணியை கொண்டுள்ளது.

ஓவியர் சிங்காதனம்

தஞ்சையை மராட்டிய மன்னர்களான சகஜி பொ.யு. 1684 முதல் பொ.யு. 1712 வரையும், முதலாம் சரபோஜி பொ.யு. 1712 முதல் பொ.யு. 1728 வரையும் ஆட்சி புரிந்தனர். அப்போது திருவாரூரில் அம்மன்னர்களின் பிரதிநிதியாய் அரசு அலுவல்களை மேற்கொண்டு வந்த சாமந்தனர் (படைத்தலைவர்) ஒருவரின் பிரதானியாய்ப் பணிபுரிந்தவர் சிங்காதனம் என்று கருதப்படுகிறது. சிங்காதனம் ஓவியக் கலையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இவரே தேவாசிரியன் மண்டப ஓவியங்களை வரைந்தவர்.

பொதுவாக அஜந்தா குகை ஓவியங்கள், தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள சோழர்கால ஓவியங்கள் போன்ற பண்டைய இந்திய சுவரோவியங்களில், அந்த ஓவியங்களை வரைந்தவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறுவதில்லை. சில பழைய ஓவியங்களை வரைந்த ஓவியர்களின் பெயர்கள் மட்டும் கிடைக்கின்றன.

ஆனால் தேவாசிரிய மண்டப ஓவியங்களைப் படைத்த ஓவியன் சிங்காதனம் தன் பெயரை மட்டுமல்லாமல் தன் உருவத்தையும் தான் தீட்டிய ஓவியங்களில் இடம்பெறச் செய்துள்ளார். புராணக் காட்சிகளுக்கு இடையூறாக இல்லாமல், தன் காலத்தில் நிகழ்ந்த ஆரூர் விழாக்களின் சித்தரிப்புகள், திருக்கோயில்கள் ஆகியவற்றில் தன் உருவத்தை இடம்பெறச் செய்து அருகே பெயரையும் விளக்கக் குறிப்பையும் எழுதியுள்ளார் சிங்காதனம். தலையில் முண்டாசு, முகத்தில் தாடி மீசை, இடுப்பில் வெண்துகில் (வேட்டி), அதன் மேல் சுற்றப்பட்ட துண்டு, காதுகளில் காதணி, உடலெங்கும் திருநீறு, இறைவனை வணங்கும் கூப்பிய கரங்களுடன் திகழ பணிவான கோலத்தில் சிங்காதனத்தின் தோற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

சிங்காதனம் ஐந்து காட்சிகளில் (காட்சி எண்கள் 24, 25, 32, 34, 37) தனது ஓவியத்தையும், அதன் விளக்கத்தையும் தந்துள்ளார். திருவாரூர் கோவிலில் திருவிழா துவங்கும் காட்சியில் முதன்முதலாக சிங்காதனத்தின் உருவம் வரையப்பட்டுள்ளது. சில காட்சிகளில் சிங்காதனம் உருவத்தின் காலுக்கு கீழ் 'இந்த சித்திரம் எழுதுகிற சிங்காதனம் நித்தம் சதா சேவை'('னித்தசதா சேர்வை' என்ற சொல், சிங்காதனம் தினமும் இறைவனை வணங்குவதைக் குறிக்கிறது) என்றும், 'ராயசாமந்தனார் வாசல் பிரதானி சித்திரவேலை சிங்காதனம்' என்றும் வரிகள் காணப்படுகிறது. குறிப்பாகப் பலர் இடம்பெறும் ஓவியங்களில், சிங்காதனம் தனது உருவத்தைக் காட்டத் தான் அணிந்துள்ள உடையிலோ அல்லது வேட்டியின் மேலோ சிறிய எழுத்துகளில் 'சிங்காதனம்' என்று குறித்துள்ளதால் அவரை பலர் நடுவில் அடையாளம் காண முடிகிறது. தன் உருவத்தைக் காட்டும் இடங்களில் எல்லாம், ஆரூரில் அவர் காலத்தில் வாழ்ந்த பலரின் உருவங்களையும் ஓவியமாக தீட்டி அருகே அவர்கள் யார் என்ற குறிப்புகளையும் சேர்த்துள்ளார்.

சேப்பெருமாள், பெத்தபசிவன் உதயமூர்த்தி குருக்கள், வளவன் போன்ற பெயர்கள் அவற்றுள் சில. தெய்வ சன்னதிகளின் முன் வணங்கி நிற்கும் அடியவர்களாய் காட்டப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் 'கெங்கையாடி சன்முக செட்டியார் சதா சேர்வை', 'அகோர தம்பிரான் நித்த சதா சேவை', 'சமயல்வ வைத்தியநாதர் நித்த சதா சேவை', 'அருனாசலம் பிள்ளை நித்த சதா சேவை' என்று எழுதப்பட்டுள்ளன.

முசுகுந்த புராணம்

பொ.யு. 8-ம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட கந்தபுராணத்திலும், அதற்கு நெருக்கமான சம்ஸ்கிருத ஆக்கமான சிவ-ரகஸ்ய-கந்த என்ற நூலிலும் முசுகுந்தன் கதையை முருகனுடன் இணைத்து சொல்லப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் நடந்த முருகன்-தெய்வயானை திருமணத்திற்கு ஹரிச்சந்திரனின் வழி வந்தவனும் கருவூரின் அரசனும் ஆன முசுகுந்தன் அழைக்கப்பட்டதாகவும், முசுகுந்தனுக்கு முருகப் பெருமான் புகழ்பெற்ற ஒன்பது படை வீரர்களை வழங்கினார் என்றும் அதில் ஒருவரான வீரபாகுவின் மகள் சித்ரவள்ளியை முசுகுந்தன் மணமுடித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. முசுகுந்தனின் திருமணம் பற்றிய கதைக்கு பிறகே சோமாஸ்கந்தரை மண்ணிற்கு முசுகுந்தன் கொண்டு வந்த கதை கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது கந்தபுராணத்தில் உள்ள தட்சகாண்டம் கந்தவிரதப் படலம் என்ற பகுதியில் பாடல் எண் 10,000-ல் துவங்கி 10,078 வரை விவரிக்கப்பட்டுள்ளது. அக்கதையில் முசுகுந்தன் எவ்வாறு விரதமிருந்து சோமாஸ்கந்த(தியாகராஜ) மூர்த்தியையும் பிற விடங்கர்களையும் விண்ணுலகிலிருந்து இவ்வுலகிற்கு கொண்டு வந்து திருவாரூரிலும் மற்ற ஆறு விடங்கத் தலங்களிலும் ஸ்தாபித்தார் என்பது கூறப்பட்டுள்ளது.

முசுகுந்தன் கதையின் முழு வடிவம் 16-ம் நூற்றாண்டில் (பொ.யு. 1592) சம்பந்தமுனிவர் எழுதிய திருவாரூர் புராணத்தில் உள்ள தியாகராஜ சருக்கம், திருவிழா சருக்கம் என்ற இரு பகுதிகளில் கூறப்பட்டுள்ளது. சிதம்பரம் கண்கட்டி ஶ்ரீமறைஞானசம்பந்த நாயனார் எனும் முனிவரால் எழுதப்பட்ட கமலாலய சிறப்பு எனும் திருவாரூர் புராணத்தில் (பொ.யு. 1547) முசுகுந்தன் கதை சில மாற்றங்களுடன் சொல்லப்பட்டுள்ளது.

17-ம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட தேவாசிரியன் மண்டப ஓவியம் வரையப்பட்ட அதே காலகட்டத்தில், பார்வையற்றவரான அந்தகக்கவியால் எழுதப்பட்ட திருவாரூர் உலா நூலிலும் இக்கதை உள்ளது. மற்ற விடங்க தலங்களை பற்றி உருவான எழுத்துக்களான 17-ம் நூற்றாண்டில் பரஞ்சோதி முனிவர் இயற்றிய வேதாரண்ய புராணம், 19-ம் நூற்றாண்டில் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதிய திருநாகைக்காரோணம் தல புராணம் போன்றவற்றிலும் முசுகுந்தன் கதையின் பிற்கால வடிவங்கள் உள்ளன. பொதுவாக தமிழில் கிடைக்கும் முசுகுந்த புராணக் கதைகளில் சிறு வேறுபாடுகள் இருந்தாலும் ஏறத்தாழ ஒத்துப் போகின்றன.

முசுகுந்தன் கதை சுருக்கம்

திருமால் தனக்கு புத்திரபாக்கியம் வேண்டி யாகம் செய்ய அதன்படி மன்மதன் திருமாலுக்குக் குழந்தையாகப் பிறந்தான். சக்தியை வணங்காமல் யாகம் செய்ததால் சக்தியின் சாபத்துக்கு ஆளானார் திருமால். பின்பு மறுபடியும் சாப விமோசனம் பெற சிவனைப் பூஜித்த போது சிவன் உமை, குழந்தை முருகனுடன் உள்ள சோமாஸ்கந்தர் (தியாகராஜர்) திருமேனியை திருமாலுக்கு அளித்தார் சிவன். அதனை திருமால் பாற்கடல் சென்று தன் மார்பில் வைத்து பூஜித்தார். வாரகலி அசுரனால் தோற்கடிக்கப்பட்ட இந்திரன் விஷ்ணுவின் உதவியை நாடினான். விஷ்ணுவின் உதவியுடன் வாரகலி அசுரன் வீழ்த்தப்பட்டது மட்டுமல்லாமல் விஷ்ணு தன் மார்பில் வைத்து பூஜித்த சிவன் உமை கந்தனுடன் இருக்கும் சோமாஸ்கந்தர்(தியாகராஜர்) மூர்த்தியையும் பெற்றுக் கொண்டான் இந்திரன். அதன்பிறகு பல காலம் தியாகராஜர் தேவலோகத்தில் இந்திரனால் வழிபடப்பட்டார்.

பின்னாளில், வலன் எனும் அசுரன் இந்திரலோகத்தை வெற்றி கொண்ட போது திருவாரூரில் ஆட்சி புரிந்த சோழ மன்னன் முசுகுந்தனிடம் உதவி வேண்டினான் இந்திரன். முசுகுந்தன் முந்தைய பிறவியில் குரங்காக இருந்து தன்னையறியாமல் சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, சிவனின் அருளால் குரங்கு முகம் கொண்ட சோழ மன்னாகப் பிறந்தவன் (ஆனால் தேவாசிரியன் மண்டப ஓவியத்தில் முசுகுந்தன் அயோத்தியாபுரியின் மன்னனாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான்). இந்திரனின் வேண்டுகோளின்படி வாலாசுரனுடன் போர் புரிந்து தேவலோகத்தை இந்திரனுக்கு முசுகுந்தன் மீட்டளித்தான். தேவலோகத்தில் முசுகுந்தனின் கனவில் தியாகராஜர் தோன்றி தன்னை பூலோகத்திற்கு எடுத்து செல்ல அறிவுறுத்தினார். அதன்படி முசுகுந்தன் தேவலோகத்தில் இருந்து விடை பெறும் நேரம் வந்த போது இந்திரன் முசுகுந்தனிடம் விரும்புவதை கேட்கச் சொல்ல, இந்திரன் பூஜித்து வரும் தியாகராஜரை கேட்டான் முசுகுந்தன். இதை எதிர்பார்க்காத இந்திரன், இது மகாவிஷ்ணு வழிபட்ட கடவுளுருவம், ஆதலால் விஷ்ணு அனுமதித்தால் தியாகராஜரைத் தருகிறேன் என்று பதிலளித்தான். முசுகுந்தன் திருமால் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடலுக்கு விரைந்தோடி திருமாலின் அனுமதியையும் பெற்று வந்தான்.

ஆனால் தியாகராஜரைப் பிரிய மனமில்லாத தேவேந்திரன், அதேபோல் ஆறு தியாகராஜர் உருவங்களை விஸ்வகர்மா உதவியுடன் செய்து முசுகுந்தன் முன் வைத்து சரியானதைத் தேர்வு செய்யக் கூறினான். தியாகராஜர் அருளால் சரியான விடங்கமூர்த்தியை முசுகுந்தன் தேர்ந்தெடுக்க, திருமால் கொடுத்த தியாகராஜரை மட்டுமல்லாமல் தான் உருவாக்கிய மற்ற ஆறு தியாகராஜ மூர்த்திகளையும் சேர்த்து முசுகுந்தனிடம் கொடுத்தான் இந்திரன். பின்பு பூலோகத்திற்குச் சென்று எந்த தலத்தில் தியாகராஜரை ஸ்தாபிக்கலாம் என அறிந்து வருமாறு விசுவகர்மாவை அனுப்பினான் முசுகுந்தன். விசுவகர்மாவும் பூலோகம் வந்து திருவாரூரில் அமர்ந்து துலாக்கோலை பிடித்து ஒரு தட்டில் திருவாரூரையும் மறுதட்டில் பூலோகத்தையும் நிறுக்கவே, எடைமிகுதியாக திருவாரூர் உள்ள தட்டே திகழ்ந்தது. அதன்படி மகாவிஷ்ணு கொடுத்த தியாகராஜரை திருவாரூரில் வன்மீகநாதர் கோவிலுக்கு தென்புறம் பிரதிஷ்டை செய்தான் முசுகுந்தன். மற்ற ஆறு தியாகராஜர் உருவங்களை திருக்காரவாசல், திருக்குவளை, திருவாய்மூர், திருமறைக்காடு (வேதாரண்யம்), நாகப்பட்டினம், திருநள்ளாறு ஆகிய ஆறு இடங்களில் பிரதிஷ்டை செய்தான்.

முசுகுந்தன் புராண ஓவியக் காட்சிகள்

தேவாசிரிய மண்டபத்தின் தென்புற வாயிலை ஒட்டிய இரண்டாவது (அங்கணத்தில்) பிரிவில் தொடங்குகிறது முசுகுந்த புராணத்தின் முதல் ஓவியக்காட்சி. தென்புற வாயிலை ஒட்டிய இரண்டு நடைகளில் கிழக்கு மேற்காகத் தொடரும் இக்காட்சித்தொகுப்பு பின்பு மண்டபத்தின் கீழ் திசையில் இரண்டாம் நடையில் தொடங்கி வடக்காக செல்கிறது. முசுகுந்த புராண ஓவியத் தொடரின் ஒவ்வொரு ஓவியக்காட்சிக்கும் தமிழில் காட்சி விளக்கம் எழுதப்பட்டுள்ளது. ஓவியக் காட்சிகளின் வரிசையமைப்பு வலமிருந்து இடமாக செல்ல, காட்சி விளக்க குறிப்புகள் இடமிருந்து வலமாக செல்கிறது. சில ஓவியங்களில் காட்சி விளக்க எழுத்துக்கள் அழிந்து விட்டதால் படிக்க இயல்வதில்லை.

கட்டியங்காரன் அழைப்பு

தேவாசிரியன் மண்டபத்தில் உள்ள முசுகுந்த புராண ஓவியத் தொடரின் முதல் காட்சியில் வாலாசுரனை அழிப்பதற்காக முசுகுந்தனை அழைத்து வாருங்கள் என்று தேவேந்திரன் சொன்னதன் பொருட்டு கட்டியங்காரன் வந்து கொலு வீற்றிருக்கும் முசுகுந்த சக்கரவர்த்தியின் முன் நிற்கிறான். குரங்கு முகம் கொண்ட முசுகுந்தனின் பின்னால் வாளேந்திய ஒன்பது வீரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ஓவியத்தில் முசுகுந்தன் அயோத்தியாபுரியின் மன்னனாக சொல்லப்பட்டுள்ளான். ஒன்பது வீரர்களும் முசுகுந்தனின் தம்பியர்களாய் சொல்லப்பட்டுள்ளனர். இந்த முதல் ஓவியக்காட்சிக்கு கீழ் பின்வருமாறு தமிழில் (17-ம் நூற்றாண்டு காலகட்ட எழுத்துருக்களில்) காட்சி விளக்கம் எழுதப்பட்டுள்ளது:

'கோசலையினோடு அயோத்தியாபுரி பட்டினத்திலே முசுகுந்த சக்ரவர்த்தி நவ வீராள் ஒன்பது பேரும் சுப்பிரமணிய சுவாமி அனுக்ரகத்தினாலே முசுகுந்த சக்ரவர்த்திக்கு தம்பிமார்களாய் இருக்க இப்படி வெகுகாலம் பரிபாலனம் பண்ணிக் கொண்டு கொலுவாயிருக்கையிலே தேவேந்திரன் வாலாசுரனை சங்காரம் பண்ணுவதற்காக முசுகுந்தனை அழைத்து வாருங்கள் என்று சொன்ன பிரகாரம் கட்டியங்காரன் வந்து முசுகுந்த சக்கரவர்த்தியை அழைக்கிறது இவ்விடம்'.

வாலாசுரனுடன் போர்

குரங்கு முகம் கொண்ட முசுகுந்தன் இந்திரனுக்குப் போர் உதவி செய்வதற்காக நவவீரர்களுடன் தேவலோகம் சென்று வாலாசுரனுடன் போரிடும் காட்சிகள், யானை, குதிரை, காலாட் படைகளின் அணிவகுப்பு வரையப்பட்டுள்ளது. இந்திரன் நான்கு கைகளுடன் காட்டப்பட்டுள்ளார். இந்திரனும் முசுகுந்தனும் செலுத்தும் அம்புகளில் செயம் என்றும் வாலாசுரன் செலுத்தும் அம்புகளில் அவஜெயம் என்றும் எழுதப்பட்டிருப்பது இந்திரனின் வெற்றியை காட்டுகிறது. வாலாசுரனை அழித்த பிறகு தேவேந்திரனும் முசுகுந்தனும் தேவலோகம் செல்லும் காட்சியில் முசுகுந்தன் ஏறிச் செல்லும் வெள்ளை யானை முன்பு முசுகுந்தனின் ஒன்பது வீரர்கள் ஒன்பது பாயும் வண்ணக் குதிரைகளின் மீது ஏறிச் செல்கின்றனர்.

குதிரை வீரர்களின் உடல், ஆடை அல்லது குதிரையின் மீது ஒன்பது வீரர்களின் (வீராள்) பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளது. முதலில் பச்சை வண்ணக் குதிரை மீது சாம்பல் வண்ணத்தில் வீரபாகு தேவர் இருக்கிறார். அடுத்து மஞ்சள் குதிரையில் வீரமகேந்திரனும், சிவப்பு குதிரையில் வீரகேசரியும், கருப்பு குதிரையில் வீரமகேசனும், சிவப்பு குதிரையில் வீரபுரந்திரனும், மஞ்சள் குதிரையில் வீரராட்சதனும், சாம்பல் நிறக் குதிரையில் வீரமார்த்தாண்டனும் உள்ளார்கள். மற்ற இரு குதிரைகளில் உள்ள வீரர்களின் பெயர்கள் அழிந்துள்ளன.

இந்திரனின் தேரில் வஜ்ஜிரக்கொடி பறக்கிறது. வாழை மரங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்திரனை வெற்றி பெறச்செய்து விட்டு தேவலோகத்தில் தங்கியிருந்த போது முசுகுந்தனின் கனவில் சிவன் தோன்றி தன்னை பூலோகத்தில் எடுத்துச் செல்ல அறிவுறுத்தல், தேவலோகத்தில் இருந்து விடைபெறும் போது இந்திரன் பூஜிக்கும் தியாகராஜ மூர்த்தியின் திருவுருவம் தனக்கு வேண்டும் என்று முசுகுந்தன் கேட்பது, இந்திரன் அதை கொடுக்க மனமில்லாமல் அது போன்ற ஆறு திருவுருவங்களை தேவதச்சன் உதவியுடன் செய்து ஏழு திருவுருவங்களையும் ஓரிடத்தில் வைத்து எந்த மூர்த்தியை வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல கூறுதல், ஈசன் அருளால் உண்மையான தியாகவிடங்கரை முசுகுந்தன் கண்டுபிடித்து எடுப்பது, ஏமாற்றமடைந்த இந்திரன் மற்ற ஆறு திருவுருவங்களையும் பூலோகத்திற்கு எடுத்துச் செல்லும்படி வேண்ட அதன்படி முசுகுந்தன் பூலோகம் எடுத்து வருதல், தேவதச்சன் உதவியுடன் திருவாரூரே மூல விடங்கர் வைக்க ஏற்ற தலம் என அறிந்த பிறகு முசுகுந்தன் தியாகேசரை திருவாரூரில் வைத்து தரிசித்து அம்மூர்த்திக்கு விழா எடுப்பது வரை தேவாசிரிய மண்டப உட்கூரையில் ஓவிய காட்சிகளாக தீட்டப்பட்டுள்ளது.

தேவேந்திரன் அளிக்கும் மூர்த்தியை வாங்கும் முன் தேவேந்திரனின் காலில் விழுந்து வணங்குகிறான் முசுகுந்தன். வீழ்ந்து வணங்குதல், எழுந்து வாங்குதல் ஆகிய இரண்டும் ஒரே காட்சியில் இரண்டு உருவங்களாக இடம்பெற்றுள்ளன. விசுவகர்மா திருவாரூர் கோவிலின் நடுவில் துலாக்கோலுடன் அமர்ந்துள்ள காட்சியில் துலாக்கோலில் கீழே இறங்கியுள்ள தட்டில் 'திருவாரூர்' என்றும் மறுதட்டில் 'பூமண்டலம்' என்றும் விசுவகர்மாவின் கீழ் 'விசுவகர்மா' என்றும் எழுதப்பட்டுள்ளது. இக்காட்சியில் ஆரூர் கோவிலின் வரைபடம் முழுவதுமாக உள்ளது. இதில் சிவலிங்கத்துடன் உள்ள வன்மீகரின் கோவிலுக்கு அருகில் காட்டப்பட்டுள்ள தியாகராஜர் கோவிலில் தெய்வம் எதுவும் இல்லை. தியாகராஜரை பூலோகம் எடுத்து வந்த பிறகு உள்ள காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ள திருவாரூர் ஆலய வரைபடத்தில் உள்ள தியாகராஜர் கோவிலில் தியாகராஜர் திருமேனி இடம் பெற்றுள்ளது.

விடங்கர்களுடன் பூலோகம் செல்லல்

முசுகுந்தன் தியாகராஜரையும் மற்ற ஆறு விடங்கர்களையும் தேரில் வைத்து எடுத்துக் கொண்டு தேவலோகத்தில் இருந்து பூலோகம் செல்லும் காட்சியில் தேரின் முன் வட்டம் வட்டமாக மலைகள் காண்பிக்கப்பட்டுள்ளது. மலைகளுக்கு பின்பு ஓர் கோவிலில் சிவலிங்கம் உள்ளது. மலைகளின் மேல் 'நல்லூர் ஆண்டார் சவுநாகபறுவதம்' என்று தமிழிலும், தேவநாகரியிலும் எழுதப்பட்டுள்ளன.

பூலோகம் வந்த முசுகுந்தனும், மன்னன் ஒருவனும் தியாகராஜ மூர்த்தியை கைகளில் தாங்கி நிற்க, மற்ற ஒன்பது வீரர்களும் ஆறு விடங்கர்களை தாங்க பல தேசத்து அரசர்கள் எல்லாம் வணங்கி நிற்க வண்ண குடைகள், சாமரங்கள், தோரணங்கள் பிடிக்கப்பட, கொம்பு, மத்தளம் முழங்க மிகுந்த ஆரவாரத்தோடு தியாகராஜரை எடுத்து வலம் வரும் காட்சி வரையப்பட்டுள்ளது.

சிங்காதனம் தன் கதைசொல்லலுக்கு கதாபாத்திரங்களை திரும்ப திரும்ப ஓவியங்களில் பயன்படுத்துகிறார். முசுகுந்த புராண ஓவியத் தொகுப்பில் 23 கதாபாத்திரங்கள் வருகிறது. முசுகுந்தன் காணும் கனவை ஆறு கட்டங்களாக சிங்காதனம் வரைந்துள்ளார். 2 முறை திருவாரூர் கோவில் சித்தரிக்கப்பட்டுள்ளது. 11 முறை தியாகராஜரின் உருவம் வரையப்பட்டுள்ளது. தியாகராஜரின் உருவம் கோவில் சன்னதியில் வீற்றிருப்பதாக சித்தரிக்கப்படும் இடத்தில் கோவிலுக்கு வெளியே மனிதர்களும் வானவர்களும் தியாராஜரை வழிபடுவதாக வரையப்பட்டுள்ளனர்.

ஓவியத்தில் தியாகராசரை அலங்காரங்களால் மறைக்கப்பட்டு மூடி வழிபடும் நிலையை காண முடிகிறது. தியாகராஜ சுவாமியை இந்திரன் இரத்தின சிம்மாசனத்தில் வைத்து பூஜை செய்யும் ஒரு காட்சியில் காட்டப்பட்டுள்ள மரங்களில் ஒன்றில் 'மந்தாரை' என்று எழுதப்பட்டுள்ளது. சந்திரசேகர சுவாமியை ஊர்வலமாக எடுத்து வரும் காட்சியில் பெரிய மடம் ஒன்றுள்ளது. அதனுள் துர்வாச முனிவர், ஏழு முனிவர்கள் உருவங்கள் உள்ளன. மடத்துக்கு பின்புறம் 4 தென்னை மரங்கள், அவற்றில் குரங்குகள், ஓணான், அணில், கிளி போன்ற உயிரினங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது.

கீழக்குப் பகுதியில் ஓர் அரங்கம் முழுவதும் இந்திரனுக்கு தியாகராஜ மூர்த்தி எவ்வாறு கிடைத்தார் என்ற மற்றொரு புராண கிளைக்கதை (முன்கதை) தீட்டப்பட்டுள்ளது. இதில் 6 ஓவியப்பகுதிகள் (43-வது முதல் 48-வது காட்சி வரை) முற்றிலும் சிதைந்துள்ளதால் காட்சியோ எழுதப்பட்டுள்ள விளக்கமோ காணமுடியவில்லை. இத்தொடரில் திருமால், தியாகராஜர் திருவுருவத்தை படைத்து தன் மார்பில் வைத்து பூசித்ததாகவும் பின்பு இந்திரன் திருமாலிடம் இருந்து அந்த திருவுருவத்தை பெற்று பூசித்ததாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. திருமால் இருக்கும் பாற்கடலில் நண்டு, மீன்கள் எல்லாம் காட்டப்பட்டுள்ளன. வாரகலி அசுரனை விஷ்ணு கொல்லும் காட்சி, விஷ்ணு கொடுத்த மூர்த்தியுடன் தேவேந்திரன் தேரில் தேவலோகத்தில் வரும் போது தேரின் முன் மேனகை, திலோத்தமை, ஊர்வசி, அரம்பை ஆகிய தேவலோக நடனமங்கைகள் நடனமாடுவது வரையப்பட்டுள்ளது. நடனமங்கைகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இக்காட்சியில் நட்டுவனார்க்கு பின்புறம் புல்லாங்குழல்காரன் என பெயர் குறிக்கப்பட்டுள்ள ஒருவன் குழலிசைக்கிறான்.

இந்திரனின் சிதம்பர தரிசனம்

திருமால் சொன்னதன்படி இந்திரன் சிதம்பரத்தில் சென்று சபாபதியை ( நடராஜர்) தரிசனம் செய்யும் காட்சியும் ஓவியத் தொடரில் உள்ளது. அதில் நடராஜரும், சிவகாமி அம்மையும் அமர்ந்திருக்க, இந்திரன் மகுடம் இல்லாமல் குடுமியுடன் தரையில் அமர்ந்த நிலையில் அக்கமாலை கொண்டு ஜெபிப்பதாக வரையப்பட்டுள்ளது.

இந்திரன் மகாவிஷ்ணுவிடம் இருந்து சோமாஸ்கந்த மூர்த்தியை பெற்றுக் கொண்டு வந்து இரத்தின சிம்மாசனத்தில் வைத்து பூசை செய்யும் காட்சியுடன் தேவாசிரிய மண்டபத்தின் கூரையில் தீட்டப்பட்டுள்ள முசுகுந்தன் புராணகதையின் முற்பகுதி நிறைவு பெறுகிறது.

இவ்வாறு இரண்டு இடங்களில் கதை தொடரப்பட்டு, ஓரிடத்தில் இணைந்து முழு புராணமும் காட்டப்பட்டுள்ளது.

ஓவியங்களில் சமூகச் சித்தரிப்புகள்

முசுகுந்த ஓவியங்களில் இடம்பெற்றுள்ள தெய்வ உருவங்களும், மனிதர்களும் அணிந்துள்ள ஆடை ஆபரணங்களில் பல்வேறு வகையான நுட்பங்களும் வகைகளும் உள்ளன. வானத்தில் இருந்து பூமாரி பொழியும் தேவர்களில் 'அக்கினி', 'பீமன்', 'ராசானியன்' போன்றவர்களுடைய பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. அன்ன வாலும், இறக்கைகளும் கொண்ட தேவ உருவங்கள் உள்ளன. ஆரூர் கோவிலின் அமைப்பு, மற்ற கோவில்கள், கோபுரங்கள், திருமதில்கள், பிரகாரங்கள், பிராகாரத்தில் உள்ள கோயில்கள், மண்டபங்கள், கிணறுகள் என பலவிதமான கட்டடங்களை தேவாசிரிய மண்டப ஓவியங்களில் காணமுடிகிறது. கோவில்களில் 'அசலேசம்', 'அனந்தீசம்', 'ஆடகேசம்', 'கமலாலயம்மன்', 'சித்தீசுரம்', 'சண்டிகேசுவரர் சன்னதி' என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளன. வன்மீகநாதரின் அருகில் அமர்ந்த நிலையில் உள்ள அம்மன் சிலையும், கமலாம்பாள் கோவிலுக்குள் கால்மேல் கால்வைத்து தவம் கொண்டுள்ள அம்மன் உருவமும் வரையப்பட்டுள்ளன.

இவை தற்போது திருவாரூர் கோவிலில் புற்றிடங்கொண்டார் சன்னதியில் உள்ள 'சோமகுலாம்பிகை' (பிரியாவிடை அம்மை) செப்புத் திருமேனி போன்றும், கமலாம்பாள் கோவிலின் மூலச் சிலை போன்றும் அப்படியே ஓவியத்தில் காணப்படுகின்றன.

அரசவை நாட்டியக் காட்சிகள், இறைவன் வீதி உலா வரும் போது நிகழும் நாட்டியக் காட்சிகள், தேவலோகத்தில் நிகழும் நாட்டியக் காட்சிகள், வீதியில் நிகழும் ஶ்ரீ பலி பூசையின் போது நிகழும் நாட்டியம் என நாட்டியக் கலையின் பல்வேறு கூறுகள், திருவாரூர் கோவிலுக்குரிய பூத நிருத்தம் என்ற மத்தளம் இசைக்கும் மரபு, பஞ்ச குடமுழா என்ற முக வாத்தியம் இசைத்தல், திருவாரூர் கோவிலில் கொடியேற்று விழா துவங்கி நாள்தோறும் நிகழும் மகோத்ஸவ நிகழ்வுகள் இந்த ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

விழா தொடங்கும் காட்சியினூடே பூரணி, புஷ்கலையுடன் இருக்கும் ஐயனாரின் கோவில் ஒன்று காட்டப்பட்டுள்ளது. அதன் அருகே காளிதேவியின் கோவில் ஒன்றுள்ளது. அதில் தேவி எட்டு கரங்களுடன் தரையில் அரக்கன் ஒருவனை மிதித்து சூலத்தால் குத்தும் கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். கையில் மணி, கேடயம், திரிசூலம், உடுக்கு, குத்துவாள், நாகம் போன்றவை உள்ளன. இவை திருவிழாக்கள் நடக்கும் போது அய்யன், பிடாரி போன்ற எல்லை தெய்வங்களுக்கு பூஜை செய்யப்படுவதை குறிப்பிடும் வண்ணம் உள்ளது.

விழாக்கோலமாக உள்ள ஒரு காட்சியின் கீழ் 'பைரவர் திருவிழா' என்றும் 'முதலிய மூவர் திருவிழா' என்றும் எழுதப்பட்டுள்ளது. முதலிய மூவர் என்பது சைவ சமயத்தின் மூவர் முதலிகள் என குறிப்பிடப்படும் தேவார ஆசிரியர்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர். விழா ஊர்வலத்தில் திரிசூல வடிவத்தில் இருக்கும் அஸ்திரதேவருக்கு முன்பு கையை நீட்டிக் கொண்டு நடனமாடும் ஒரு பெண்ணின் கீழ் 'கயிகாட்டு முறைகாரி' என்று எழுதப்பட்டுள்ளது.

வானத்தில் வெடிக்கும் 'புஸ்' வாணம், தரையில் சுற்றும் வாணம், கோலில் சுற்றும் வாணம் என பல வகை வாணங்கள் இந்த ஓவியங்களில் குறிப்பாக விழாக் காட்சிகளில் இடம் பெற்றுள்ளன. ஒரு வாணத்தின் மீது நிலச்சக்கர வாணம் ('னில சக்கர வாணம்') என எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்டமாக காட்டப்பட்டிருக்கும் மனித உருவங்களில், ஒவ்வொரு உருவத்தின் நிறம், முகபாவம், அணிந்திருக்கும் உடை அலங்காரங்கள் எல்லாம் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளன.

போர்ப் படைகளின் உடை, அலங்காரம், கருவிகள் அனைத்தும் மராட்டியர் காலப் போர்ப்படையின் கூறுகளை கொண்டுள்ளன. தேவேந்திரனுக்கு உதவுவதற்காக செல்லும் முசுகுந்த சக்கரவர்த்தியின் காலாட்படையில் துப்பாக்கி ஏந்திய ஒரு வரிசையினர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மனுநீதிச் சோழன் ஓவியக் காட்சிகள்

பசுவிற்கு நீதி வழங்கும் பொருட்டு தன் மகன் மீது தேரை ஏற்றி கொன்ற மனுநீதிச் சோழனின் வரலாற்றோடு இணைந்த புராணக்கதையின் வண்ண ஓவியங்கள் தேவாசிரிய மண்டபத்தின் வடபுறச் சுவரில் தீட்டப்பட்டுள்ளன. அவ்வோவியங்கள் பணி முடியாத நிலையில் உள்ளன. காட்சி விளக்க குறிப்புகளும் குறைவாகவே காணப்படுகின்றன.

இக்காட்சித் தொகுதி சுவரில் உள்ளதால், இயற்கையின் சீற்றங்களுக்கு உட்பட்டு மிகவும் தெளிவில்லாமல் உள்ளது. முசுகுந்த புராண ஓவியக் காட்சிகள் படைக்கப்பட்ட போதே மனுநீதிச் சோழன் புராண ஓவியங்களும் வரையப்பட்டிருக்க வேண்டும் என்று குடவாயில் பாலசுப்ரமணியன் தன் திருவாரூர் திருக்கோவில் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திருவாரூர் கோவிலில் உள்ள விக்கிரம சோழனின் கல்வெட்டில், சேக்கிழாரின் பெரிய புராணம் கூறும் மனுநீதிச் சோழன் வரலாறு விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்புகள்

சிங்காதனம் தேவாசிரிய மண்டபத்து ஓவியங்களின் கீழ் எழுதியுள்ள புராண விளக்கங்களும் விழாக்கள் பற்றிய செய்திகளும் மக்களின் பேச்சு வழக்குகள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்று குடவாயில் பாலசுப்பிரமணியம் 'ஓவியன் சிங்காதனம்' என்ற தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காவிரி டெல்டா பகுதி மக்களின் பேச்சுமொழி தமிழுக்குச் சான்றாக இந்த ஓவியங்களில் உள்ள விளக்கக் குறிப்புகள் விளங்குகின்றன. அக்காலத்தைய ஆரூர் கோவிலின் அமைப்பு, ஆரூரின் விழாக்கள், வீதிகளில் விழாக்கள் நிகழ்ந்த விதம், சடங்குகள், ஆரூர் மக்களின் கலாச்சாரம், அவர்கள் வளர்த்த இயல் இசை கூத்துகள், ஆரூரில் அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் பெயர்கள், அவர்களின் உருவ அமைப்புக்கள், தியாகராஜ சுவாமியின் புராணம், வாண வேடிக்கைகள், அணிகலன்கள், ஆடைகள், இசைக்கருவிகள், இசைக்கலைஞர்கள், ஆடற்கலையின் முத்திரைகள், இன்னபிற செய்திகள் அனைத்தையும் சிங்காதனம் வரைந்த திருவாரூர் தேவாசிரிய மண்டபம் ஓவியங்களில் காணமுடிகிறது.

தேவாசிரியன் மண்டப ஓவியத்தொகுப்பில் உள்ள தியாகராசர் புராணம், முந்தைய விஜயநகர மன்னர்கள் காலத்தில் திருவாரூர் கோவிலில் நிறுவப்பட்ட சந்திரசேகர மண்டபத்துச் சிற்பங்கள் காட்டும் தியாகராசர் புராணத்தில் இருந்து வேறுபட்டும், கால வளர்ச்சியினால் விரிவுற்றும் காணப்படுகிறது. சந்திரசேகர மண்டப சிற்பத்தில், திருமால் தனுசு பெற யாகம் வளர்த்து சிவனருள் பெறுகிறார். தேவாசிரிய மண்டபம் ஓவியத்தொகுப்பில் திருமால் புத்திரபாக்கியம் வேண்டி யாகம் செய்து சோமாஸ்கந்தரைப் பெறுகிறார். சிற்பத்தில் திருமால் தலை இழப்பதும் நான்முகன் அருளால் தலையைப் பெற்ற பின்பு சிவனிடம் இருந்து சோமாஸ்கந்தரைப் பெறுவதும் கூறப்பட்டுள்ளன. நான்முகன் துலாத்தட்டில் நிறுத்தி ஆரூரை சிறந்த தலம் என்று தேர்ந்தெடுப்பதும் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. ஓவியத்தில் விஸ்வகர்மா துலாத்தட்டு நிறுத்தி ஆரூரை தேர்ந்தெடுக்கிறார். சந்திரசேகர மண்டப சிற்பங்களில் முசுகுந்தன் இல்லை. புற்று வழிபாடு கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் விஜயநகர காலத்தில் ஆரம்ப நிலையில் சொல்லப்பட்ட திருவாரூர் புராணம், தஞ்சை மராட்டிய மன்னர்களின் காலத்தில் முழு வளர்ச்சி பெற்று புழக்கத்தில் இருந்தது என்பது தெளிவாகிறது.

ஓவியத்தில் உள்ள சில காட்சிகள் திருவாரூர் சம்பந்தப்பட்ட எந்தப் புராணங்களிலும் குறிப்பிடவில்லை. உதாரணத்திற்கு, தேவலோகத்திற்கு சென்ற முசுகுந்தனை, இந்திரனின் தாய் அதிதி வரவேற்கும் காட்சி. முசுகுந்த புராண ஓவியங்கள் 17-ம் நூற்றாண்டில் இக்கோவிலைப் பற்றி திருவாரூரில் நிலவிய வாய்மொழி கதையின் தாக்கத்தால் வரையப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இன்றைய நிலை

பராமரிப்பில்லாமல் அழிவின் விளிம்பில் இருந்த தேவாசிரியன் மண்டபம் முசுகுந்த ஓவியங்களை மீட்க குஜராத் ஜைனரும் சென்னை தொழிலதிபருமான ரன்வீர் ஷா பெருமுயற்சியெடுத்தார். எஸ். அரவிந்த், இலங்கை தமிழரான ரமணி சிவசோதி ஆகியோர் இந்த முயற்சிக்கு உதவினர். இந்த உதவியுடன் கே.பி. மதுராணி (INTACH, Bangalore) தலைமையிலான நிபுணர் குழு 2008 முதல் 2010 வரை இரு வருடங்கள் உழைத்து முசுகுந்தன் ஓவியங்களை மீட்டது.

தற்போது திருவிழா காலங்களில் மட்டும் தேவாசிரியர் மண்டபம் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் பூட்டப்பட்டு பராமரிக்காமல் உள்ளதால் வௌவால்களின் புகலிடமாக மாறி மீண்டும் தேவாசிரிய மண்டப ஓவியங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நூல்கள்

  • திருவாரூர் திருக்கோவில், குடவாயில் பாலசுப்ரமணியன், அகரம் பதிப்பகம். திருவாரூர் கோவில் சார்ந்த அனைத்து செய்திகளுடன் எழுதப்பட்டுள்ள இந்நூலில் தேவாசிரிய மண்டபத்தில் உள்ள ஓவியங்களை பற்றிய தகவல்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.
  • The Mucukunda Murals in the Tyagarajasvami Temple, Tiruvarur, V.K. Rajamani and David Shulman, Publisher: Ranvir R. Shah, Prakriti Foundation. வி.கே. ரமணியின் புகைப்படங்கள், டேவிட் சுல்மனின் அறிமுக கட்டுரையுடன் இந்த புத்தகம் தேவாசிரிய மண்டபத்தில் உள்ள முசுகுந்தன் ஓவியங்களை பற்றிய முழுமையான பதிவாக உள்ளது. மாயா தேவன் தெவட்டின் விளக்க கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2024, 11:53:08 IST