under review

எஸ். சுரேஷ்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
Tag: Manual revert
(Added First published date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 6: Line 6:
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
[[File:Bageshri.jpg|thumb|நன்றி:பனுவல்.காம்]]
[[File:Bageshri.jpg|thumb|நன்றி:பனுவல்.காம்]]
சுரேஷ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுபவர். இசை, சினிமா பற்றிய கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார். இவருடைய முதல் சிறுகதை 'மூக முனி' [[பதாகை]] இதழில் வெளிவந்தது. பதாகைக்கு எழுதிய 'மிருக கவிதைகள்' தொகுப்பு இலவச நூலாக வெளியிடப்பட்டது. பதாகைக்கு பெண் கவிஞர்களை முன்வைத்து 'கவியின் கண்' எனும் தொடரை எழுதினார். [[சொல்வனம்]] இணைய இதழில் இவர் இசை கட்டுரைகளையும், இந்திய செவ்வியல் புத்தக விமர்சனங்களையும், சினிமா விமர்சனங்களையும் எழுதியுள்ளார். பதாகையிலும் சொல்வனத்திலும் எழுதிய கதைகள் 'பாகேஶ்ரீ' என்ற தலைப்பில் தொகுக்கபட்டு 'யாவரும் - பதாகை' பிரசுரத்தால் வெளியிடப்பட்டது.  
சுரேஷ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுபவர். இசை, சினிமா பற்றிய கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார். இவருடைய முதல் சிறுகதை 'மூக முனி' [[பதாகை]] இதழில் வெளிவந்தது. பதாகைக்கு எழுதிய 'மிருக கவிதைகள்' தொகுப்பு இலவச நூலாக வெளியிடப்பட்டது. பதாகைக்கு பெண் கவிஞர்களை முன்வைத்து 'கவியின் கண்' எனும் தொடரை எழுதினார். [[சொல்வனம்]] இணைய இதழில் இவர் இசைக் கட்டுரைகளையும், இந்திய செவ்வியல் புத்தக விமர்சனங்களையும், சினிமா விமர்சனங்களையும் எழுதியுள்ளார். பதாகையிலும் சொல்வனத்திலும் எழுதிய கதைகள் 'பாகேஶ்ரீ' என்ற தலைப்பில் தொகுக்கபட்டு 'யாவரும் - பதாகை' பிரசுரத்தால் வெளியிடப்பட்டது.  
[[File:Nithyakanni-1.jpg|thumb|நித்ய கன்னி-ஆங்கில மொழிபெயர்ப்பு]]
[[File:Nithyakanni-1.jpg|thumb|நித்ய கன்னி-ஆங்கில மொழிபெயர்ப்பு]]
ஆங்கிலத்தில் இவர் எழுதிய இசைக் கட்டுரைகளை தொகுத்து 'Music without Boundaries' என்ற பெயரில் கிண்டிலில் வெளியிடப்பட்டது. குறுந்தொகை கவிதைகள் சிலவற்றையும், தெலுங்கு கவிஞர் க்ஷேத்ரய்யா கவிதைகள் சிலவற்றையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். அவை சாகித்ய அகாடெமியின் 'Indian Literature' என்னும் இதழில் வெளியிடப்பட்டன. [[எம்.வி. வெங்கட்ராம்|எம்.வி.வெங்கட்ரா]]ம் எழுதிய [[நித்ய கன்னி (நாவல்)|நித்யகன்னி]] நாவலைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
ஆங்கிலத்தில் இவர் எழுதிய இசைக் கட்டுரைகளை தொகுத்து 'Music without Boundaries' என்ற பெயரில் கிண்டிலில் வெளியிடப்பட்டது. குறுந்தொகை கவிதைகள் சிலவற்றையும், தெலுங்கு கவிஞர் க்ஷேத்ரய்யா கவிதைகள் சிலவற்றையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். அவை சாகித்ய அகாடெமியின் 'Indian Literature' என்னும் இதழில் வெளியிடப்பட்டன. [[எம்.வி. வெங்கட்ராம்|எம்.வி.வெங்கட்ரா]]ம் எழுதிய [[நித்ய கன்னி (நாவல்)|நித்யகன்னி]] நாவலைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
Line 25: Line 25:
* [https://sureshs65music.blogspot.com/ இசை கட்டுரைகளுக்கான வலைத்தளம்]
* [https://sureshs65music.blogspot.com/ இசை கட்டுரைகளுக்கான வலைத்தளம்]
* [https://mysteryofbooks.wordpress.com/ இலக்கிய விமர்சன கட்டுரைகளுக்கான வலைத்தளம்]
* [https://mysteryofbooks.wordpress.com/ இலக்கிய விமர்சன கட்டுரைகளுக்கான வலைத்தளம்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 13:30:47 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
Line 31: Line 37:
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]
[[Category:Spc]]

Latest revision as of 16:28, 13 June 2024

To read the article in English: S. Suresh. ‎

எஸ். சுரேஷ்

எஸ். சுரேஷ் (பிப்ரவரி 3, 1965) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். தொடர்ந்து கட்டுரைகள், சிறுகதைகள் எழுதிவருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

எஸ். சுரேஷ் விழுப்புரம் மாவட்டத்தில் சுந்தரேசன், பாமா தம்பதியினருக்கு பிப்ரவரி 3, 1965-ல் பிறந்தார். வளர்ந்தது சிகந்திரபாத். தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பி.டெக் (ரசாயனப் பொறியியல்) இளங்கலைப்பட்டமும், பெங்களூரு (IISC) இந்திய அறிவியல் நிறுவனத்தில் (எம்.டெக் ) முதுகலைப்பட்டமும் பெற்றார். பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத்துறையில் (Cloud technology Expert) பயிற்சி மையம் நடத்துகிறார். மனைவி காயத்ரி. மகள்கள் ஸ்ரீரஞ்சனி மற்றும் ஹரிணி

இலக்கிய வாழ்க்கை

நன்றி:பனுவல்.காம்

சுரேஷ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுபவர். இசை, சினிமா பற்றிய கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார். இவருடைய முதல் சிறுகதை 'மூக முனி' பதாகை இதழில் வெளிவந்தது. பதாகைக்கு எழுதிய 'மிருக கவிதைகள்' தொகுப்பு இலவச நூலாக வெளியிடப்பட்டது. பதாகைக்கு பெண் கவிஞர்களை முன்வைத்து 'கவியின் கண்' எனும் தொடரை எழுதினார். சொல்வனம் இணைய இதழில் இவர் இசைக் கட்டுரைகளையும், இந்திய செவ்வியல் புத்தக விமர்சனங்களையும், சினிமா விமர்சனங்களையும் எழுதியுள்ளார். பதாகையிலும் சொல்வனத்திலும் எழுதிய கதைகள் 'பாகேஶ்ரீ' என்ற தலைப்பில் தொகுக்கபட்டு 'யாவரும் - பதாகை' பிரசுரத்தால் வெளியிடப்பட்டது.

நித்ய கன்னி-ஆங்கில மொழிபெயர்ப்பு

ஆங்கிலத்தில் இவர் எழுதிய இசைக் கட்டுரைகளை தொகுத்து 'Music without Boundaries' என்ற பெயரில் கிண்டிலில் வெளியிடப்பட்டது. குறுந்தொகை கவிதைகள் சிலவற்றையும், தெலுங்கு கவிஞர் க்ஷேத்ரய்யா கவிதைகள் சிலவற்றையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார். அவை சாகித்ய அகாடெமியின் 'Indian Literature' என்னும் இதழில் வெளியிடப்பட்டன. எம்.வி.வெங்கட்ராம் எழுதிய நித்யகன்னி நாவலைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

தன் ஆதர்ச எழுத்தாளராக தமிழில் அசோகமித்திரன் மற்றும் ஜெயமோகன்-யும், உலக அளவில் டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, மர்க்வெஸ் மற்றும் ஜான்லிகாரே ஆகியோரையும் குறிப்பிடுகிறார். இந்திய மொழிகளில் பிடித்த எழுத்தாளர்களாக வைக்கம் முகமது பஷீர், பிபூதி பூஷன், தாரா ஷங்கர், பைரப்பா, பூர்ணசந்த்ர தேஜெஸ்வி, ராகவேந்திர பாட்டீல், பி.கே.பானர்ஜீ, நரேந்திராநாத் மித்ரா ஆகியோரைக் கூறுகிறார்.

இலக்கிய இடம்

எஸ். சுரேஷின் கதைகள் அசோகமித்திரனின் கதைகளத்துடன் நெருங்கியவை. செகந்திராபாத்தை களமாக கொண்டு அவர் எழுதிய கதைகள் குறிப்பிடத்தக்கவை. அவற்றுக்கென தனித்த மொழியை வெற்றிகரமாக கையாண்டுள்ளார்.

விருதுகள்

  • 'பாகேஶ்ரீ' தொகுப்புக்கு 'சுஜாதா உயிர்மை' விருது வழங்கப்பட்டது.
  • இவருடைய சிறுகதையான 'வன்மம்' இவரால் மொழிபெயர்க்கப்பட்டு 'DNA Out of Print' எனும் ஆங்கில இதழில் பிரசுரிக்கபட்டு முதல் பரிசு கொடுக்கபட்டது.

நூல்கள்

  • 'பாகேஶ்ரீ' சிறுகதை தொகுப்பு (தமிழ்)
  • 'Music without boundaries (ஆங்கிலம்)

மொழிபெயர்ப்பு

Nithya Kanni -Eternal Virgin

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:30:47 IST