under review

சாதகம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected Category:சிற்றிலக்கிய வகைகள் to Category:சிற்றிலக்கிய வகைCorrected Category:தமிழறிஞர்கள் to Category:தமிழறிஞர்)
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 2: Line 2:
[[பன்னிரு பாட்டியல்]]<ref><poem>தோற்றிய சாதகம் சாற்றும் காலைப்
[[பன்னிரு பாட்டியல்]]<ref><poem>தோற்றிய சாதகம் சாற்றும் காலைப்
பற்றிய கலியுகத்து உற்ற யாண்டில்
பற்றிய கலியுகத்து உற்ற யாண்டில்
திருந்திய சகாத்தமும் ஆண்டும் பொருந்திய
திருந்திய சகாத்தமும் ஆண்டும் பொருந்திய
ஞாயிறுப் பக்கமும் மேய வாரமும்
ஞாயிறுப் பக்கமும் மேய வாரமும்
இராசியும் மன்னுற மொழிதற் குரிய</poem>
இராசியும் மன்னுற மொழிதற் குரிய</poem>
''- பன்னிரு பாட்டியல்''  - 100</ref>, முத்துவீரியம்<ref><poem>ஓரை திதிநிலை யோக நாள் மீனிலை
''- பன்னிரு பாட்டியல்''  - 100</ref>, முத்துவீரியம்<ref><poem>ஓரை திதிநிலை யோக நாள் மீனிலை
Line 25: Line 28:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|07-Mar-2023, 07:14:35 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:தமிழறிஞர்]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகை]]

Latest revision as of 12:19, 17 November 2024

சாதகம் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நாள், விண்மீன் போன்ற சோதிட நிலைகளைப் பற்றி இந்த சிற்றிலக்கிய வகை கூறுகிறது. [1] சாதகம் என்னும் இந்த இலக்கியம் பாட்டுடைத் தலைவனுக்கு சோதிடம் பார்க்கும் வழக்கத்தையொட்டி தோன்றியிருக்கலாம் என்று தமிழறிஞர்கள் எண்ணுகின்றனர். [2] பன்னிரு பாட்டியல்[3], முத்துவீரியம்[4], பிரபந்த தீபம்[5], பிரபந்தத் திரட்டு[6] ஆகிய பாட்டியல் நூல்கள் சோதிடக்கலையை ஓர் இலக்கிய வகையாக் குறித்துள்ளன. பாட்டியல் நூல்கள் சாதக இலக்கிய வகைக்கு இலக்கணம் கூறியிருப்பதை பார்க்கும்போது அக்காலத்தில் சாதகம் எழுதுதல் ஓர் இலக்கிய வகையாக இருந்திருக்கலாம் எனக் கருதமுடிகின்றது.

உசாத்துணை

சாதகம் - இலக்கணம்

இதர இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. 96 வகை சிற்றிலக்கியங்கள் - முனைவர் இரா.குணசீலன் -ஞானத்தமிழ்.காம்
  2. சிற்றிலக்கியங்களில் சோதிடம் ஆய்வு- அ. கணேசன்-அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
  3. தோற்றிய சாதகம் சாற்றும் காலைப்
    பற்றிய கலியுகத்து உற்ற யாண்டில்

    திருந்திய சகாத்தமும் ஆண்டும் பொருந்திய

    ஞாயிறுப் பக்கமும் மேய வாரமும்

    இராசியும் மன்னுற மொழிதற் குரிய

    - பன்னிரு பாட்டியல் - 100

  4. ஓரை திதிநிலை யோக நாள் மீனிலை
    வாரங் கரண நிலை வருகிரக
    நிலையெழு வவயவ நிலையையும் உணர்வுற்று
    அவற்றை அமைத்தவற்று ஆற்றலை மகனுக்கு
    அடைவன அறைதல் சாதகமென மொழிப

    - முத்து வீரியம் 1038

  5. சாதகம் என்பது திதிவாரம் நாள் மீன்
    யோகம் கிரணம் ஓரை கிரகம்
    இவ்வேழானும் இசைப்பது முறையே

    - பிரபந்ததீபம் 93

  6. திதிவாரம் நாள்யோகம் சேர்கரணம் கண்டு
    துதியார் இராசியிற் சூட்டி - விதிகோட்கண்
    மாதம் வருடம் மதித்துரைத்தல் மாந்தர்க்கு
    சாதகத்தின் சாதகமாச் சாற்று

    - பிரபந்த திரட்டு 2



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Mar-2023, 07:14:35 IST