காசியபன்: Difference between revisions
(Corrected text format issues) Tag: Reverted |
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்Corrected Category:நாவலாசிரியர்கள் to Category:நாவலாசிரியர்) |
||
(8 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=காசி|DisambPageTitle=[[காசி (பெயர் பட்டியல்)]]}} | |||
{{Read English|Name of target article=Kasiyaban|Title of target article=Kasiyaban}} | {{Read English|Name of target article=Kasiyaban|Title of target article=Kasiyaban}} | ||
[[File:Kasiyapan.png|thumb|காசியபன்]] | [[File:Kasiyapan.png|thumb|காசியபன்]] | ||
காசியபன் (பி. குளத்து ஐயர்) (1919-2004) | காசியபன் (பி. குளத்து ஐயர்) (1919-2004) கவிஞர், நாவலாசிரியர். திருவனந்தபுரத்தில் இருந்த இலக்கியக்குழுவில் உருவான படைப்பாளி. 'அசடு' நாவல் குறிப்பிடத்தக்க படைப்பு. | ||
== | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
காசியபன் 1919-ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். தத்துவத்தில் பி.ஏ.படித்தார். கேரளப் | காசியபன் 1919-ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். தத்துவத்தில் பி.ஏ.படித்தார். கேரளப் பல்கலைகழகத்தில் தமிழை இரண்டாவது மொழியாக எடுத்துப் படித்தார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றினார். ஆரம்பக் கல்வியை கேரளாவில் படித்தால் மலையாளம் நன்கறிந்தவர். வடமொழி, ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர். பன்னாட்டு இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்தார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
காசியபன் என்பது புனைபெயர். காசியபன் தன் | காசியபன் என்பது புனைபெயர். தமிழில் மௌனி, க.நா.சு இருவரையும் தன் ஆதர்சங்களாகக் கொண்டார். | ||
காசியபன் தன் 53-ஆவது வயதில் தான் எழுதத் துவங்கினார். அவரது 'முகமது கதைகள்' கணையாழி இதழில் வெளியாகி பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. முகமது என்ற ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பல்வேறு கதைகளில் தோன்றிமறைவது ஒரு முன்னோடியான இலக்கிய முயற்சியாகக் கருதப்பட்டது. | |||
அவரது முதல் நாவல் 'அசடு' 1978-ல் வெளியானது. 1994-ல் ஆண்டு விருட்சம் பதிப்பகம் சார்பில் வந்த இதன் மறுபதிப்புக்கு [[நகுலன்]] முன்னுரை எழுதினார். | |||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
காசியபன் நவீனத்துவ எழுத்து உருவான தொடக்க காலத்தில் குறைத்துச்சொல்வது, ஒரு தனிமனிதனின் வாழ்க்கையை விவரிப்பது, அன்றாடநிகழ்வுகளை மட்டுமேகொண்டு புனைவுகளை எழுதுவது ஆகியவற்றை தொடங்கிவைத்த எழுத்தாளர். அவ்வகை எழுத்தின் தொடக்கப்புள்ளி என்னும் இடம் கொண்டவர். | |||
”காசியபன் குறைத்துச் சொல்லுதல் என்னும் அழகியல் பாணியை கடைப்பிடித்தவர். உணர்ச்சிகளோ காட்சிகளோ எவ்வளவு சுருக்கமாகச் சொல்லப்பட முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முயன்றவர். இவருடைய அசடு தமிழின் நல்ல நாவல்களில் ஒன்று” என்று [[சுந்தர ராமசாமி]] குறிப்பிடுகிறார். | ”காசியபன் குறைத்துச் சொல்லுதல் என்னும் அழகியல் பாணியை கடைப்பிடித்தவர். உணர்ச்சிகளோ காட்சிகளோ எவ்வளவு சுருக்கமாகச் சொல்லப்பட முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முயன்றவர். இவருடைய அசடு தமிழின் நல்ல நாவல்களில் ஒன்று” என்று [[சுந்தர ராமசாமி]] குறிப்பிடுகிறார். | ||
"எந்தச் சமூகம் தொடர்ந்து கணேசனை வெளியே தள்ளுகிறதோ அந்தச் சமூகத்தின் மதிப்புக்கும் மதிப்பின்மைக்குமான உரைகல் இந்தப் படைப்பு" என்கிறார் நகுலன். | "எந்தச் சமூகம் தொடர்ந்து கணேசனை வெளியே தள்ளுகிறதோ அந்தச் சமூகத்தின் மதிப்புக்கும் மதிப்பின்மைக்குமான உரைகல் இந்தப் படைப்பு" என்கிறார் நகுலன். | ||
'காசியபனின் சிறப்பு அவர் எழுத்தில் உருவாகும் மெல்லிய கேலியான தொனி , அது அற்புதமானது." என எழுத்தாளர் எஸ். | |||
'காசியபனின் சிறப்பு அவர் எழுத்தில் உருவாகும் மெல்லிய கேலியான தொனி , அது அற்புதமானது." என எழுத்தாளர் [[எஸ். ராமகிருஷ்ணன்]] குறிப்பிடுகிறார்.<ref>[https://www.sramakrishnan.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/ சிதறி வீழ்ந்த நட்சத்திரம். – எஸ். ராமகிருஷ்ணன் (sramakrishnan.com)]</ref> | |||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
===== நாவல் ===== | ===== நாவல் ===== | ||
Line 23: | Line 31: | ||
== அடிக்குறிப்புகள் == | == அடிக்குறிப்புகள் == | ||
<references /> | <references /> | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:31:55 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:நாவலாசிரியர்]] | ||
[[Category: | [[Category:எழுத்தாளர்]] |
Latest revision as of 12:10, 17 November 2024
- காசி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காசி (பெயர் பட்டியல்)
To read the article in English: Kasiyaban.
காசியபன் (பி. குளத்து ஐயர்) (1919-2004) கவிஞர், நாவலாசிரியர். திருவனந்தபுரத்தில் இருந்த இலக்கியக்குழுவில் உருவான படைப்பாளி. 'அசடு' நாவல் குறிப்பிடத்தக்க படைப்பு.
வாழ்க்கைக் குறிப்பு
காசியபன் 1919-ல் திருவனந்தபுரத்தில் பிறந்தார். தத்துவத்தில் பி.ஏ.படித்தார். கேரளப் பல்கலைகழகத்தில் தமிழை இரண்டாவது மொழியாக எடுத்துப் படித்தார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றினார். ஆரம்பக் கல்வியை கேரளாவில் படித்தால் மலையாளம் நன்கறிந்தவர். வடமொழி, ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர். பன்னாட்டு இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
காசியபன் என்பது புனைபெயர். தமிழில் மௌனி, க.நா.சு இருவரையும் தன் ஆதர்சங்களாகக் கொண்டார்.
காசியபன் தன் 53-ஆவது வயதில் தான் எழுதத் துவங்கினார். அவரது 'முகமது கதைகள்' கணையாழி இதழில் வெளியாகி பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. முகமது என்ற ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பல்வேறு கதைகளில் தோன்றிமறைவது ஒரு முன்னோடியான இலக்கிய முயற்சியாகக் கருதப்பட்டது.
அவரது முதல் நாவல் 'அசடு' 1978-ல் வெளியானது. 1994-ல் ஆண்டு விருட்சம் பதிப்பகம் சார்பில் வந்த இதன் மறுபதிப்புக்கு நகுலன் முன்னுரை எழுதினார்.
இலக்கிய இடம்
காசியபன் நவீனத்துவ எழுத்து உருவான தொடக்க காலத்தில் குறைத்துச்சொல்வது, ஒரு தனிமனிதனின் வாழ்க்கையை விவரிப்பது, அன்றாடநிகழ்வுகளை மட்டுமேகொண்டு புனைவுகளை எழுதுவது ஆகியவற்றை தொடங்கிவைத்த எழுத்தாளர். அவ்வகை எழுத்தின் தொடக்கப்புள்ளி என்னும் இடம் கொண்டவர்.
”காசியபன் குறைத்துச் சொல்லுதல் என்னும் அழகியல் பாணியை கடைப்பிடித்தவர். உணர்ச்சிகளோ காட்சிகளோ எவ்வளவு சுருக்கமாகச் சொல்லப்பட முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முயன்றவர். இவருடைய அசடு தமிழின் நல்ல நாவல்களில் ஒன்று” என்று சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.
"எந்தச் சமூகம் தொடர்ந்து கணேசனை வெளியே தள்ளுகிறதோ அந்தச் சமூகத்தின் மதிப்புக்கும் மதிப்பின்மைக்குமான உரைகல் இந்தப் படைப்பு" என்கிறார் நகுலன்.
'காசியபனின் சிறப்பு அவர் எழுத்தில் உருவாகும் மெல்லிய கேலியான தொனி , அது அற்புதமானது." என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.[1]
நூல் பட்டியல்
நாவல்
- அசடு (1978)
- கிரகங்கள் (1980)
- வீழ்ந்தவர்கள்
பிற
- பேசாத மரங்கள் (கவிதை தொகுதி)
- கோணல் மரம் (சிறுகதைகள்)
உசாத்துணை
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:55 IST