தமிழ் நாடக வரலாறு: Difference between revisions
(10 intermediate revisions by 3 users not shown) | |||
Line 3: | Line 3: | ||
== தொன்மம் == | == தொன்மம் == | ||
இறைவன் ஆடிய கூத்தின் உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை. ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதினின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் ஒழுங்கும், நாட்டியக் கோப்பும், நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்த நூலில் உள்ளது. | இறைவன் ஆடிய கூத்தின் உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை. ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதினின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் ஒழுங்கும், நாட்டியக் கோப்பும், நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்த நூலில் உள்ளது. | ||
== சங்ககாலம் == | == சங்ககாலம் == | ||
அகத்தியம் என்ற சங்ககால நூலில் தமிழ் நாடகங்களின் தோற்றத்தைக் காணலாம். சங்கக் காலத்தில் குணநூல், [[கூத்தநூல்|கூத்த நூல்]], சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர்,முறுவல் போன்ற நாடக நூல்கள் இருந்தன என்பது [[அடியார்க்கு நல்லார்]] எழுதிய சிலப்பதிகார உரையில் உள்ளது. [[தொல்காப்பியம்]], [[சிலப்பதிகாரம்]] ஆகிய சங்க நூல்களில் தமிழ் நாடகக்கலை பற்றிய சான்றுகள் உள்ளன. "பாடல் சான்ற புலநெறி வழக்கம்" என்ற வரிகளின் வழி தொல்காப்பியர் வாழ்ந்ததற்கு முற்பட்ட காலகட்டங்களிலேயே தமிழில் நாடகமும், நாடகங்களில் பாடல்களும் இடம் பெற்றிருந்ததை அறியலாம். | அகத்தியம் என்ற சங்ககால நூலில் தமிழ் நாடகங்களின் தோற்றத்தைக் காணலாம். சங்கக் காலத்தில் குணநூல், [[கூத்தநூல்|கூத்த நூல்]], சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர்,முறுவல் போன்ற நாடக நூல்கள் இருந்தன என்பது [[அடியார்க்கு நல்லார்]] எழுதிய சிலப்பதிகார உரையில் உள்ளது. [[தொல்காப்பியம்]], [[சிலப்பதிகாரம்]] ஆகிய சங்க நூல்களில் தமிழ் நாடகக்கலை பற்றிய சான்றுகள் உள்ளன. "பாடல் சான்ற புலநெறி வழக்கம்" என்ற வரிகளின் வழி தொல்காப்பியர் வாழ்ந்ததற்கு முற்பட்ட காலகட்டங்களிலேயே தமிழில் நாடகமும், நாடகங்களில் பாடல்களும் இடம் பெற்றிருந்ததை அறியலாம். | ||
===== தொல்காப்பியம் ===== | ===== தொல்காப்பியம் ===== | ||
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் நாடகத்தின் கூறான மெய்ப்பாடு பற்றிய செய்தி உள்ளது. | தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் நாடகத்தின் கூறான மெய்ப்பாடு பற்றிய செய்தி உள்ளது. | ||
<poem> | <poem> | ||
நகையே அழுகை இனிவரல் மருட்கை | நகையே அழுகை இனிவரல் மருட்கை | ||
Line 13: | Line 13: | ||
அப்பா லெட்டாம் மெய்ப்பா என்பர் | அப்பா லெட்டாம் மெய்ப்பா என்பர் | ||
</poem> | </poem> | ||
== சிலப்பதிகாரம் == | == சிலப்பதிகாரம் == | ||
சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் நாடக அரங்கம், நாடகத்திரைகள் பற்றிய செய்திகள் உள்ளன. | சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் நாடக அரங்கம், நாடகத்திரைகள் பற்றிய செய்திகள் உள்ளன. | ||
Line 51: | Line 50: | ||
ஆடற்கு அமைந்த ஆசான்- தன்னோடும் | ஆடற்கு அமைந்த ஆசான்- தன்னோடும் | ||
</poem> | </poem> | ||
== கடைச்சங்கக் காலம் == | == கடைச்சங்கக் காலம் == | ||
[[கபிலர்|கபிலரின்]] அகநாநூற்றுப் பாடல் ஒன்றில் "மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்குகளிலே உலவி ஆடுகின்ற மயில் இனங்கள், களத்திலே புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டினன் என்ற வரி உள்ளது. | [[கபிலர்|கபிலரின்]] அகநாநூற்றுப் பாடல் ஒன்றில் "மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்குகளிலே உலவி ஆடுகின்ற மயில் இனங்கள், களத்திலே புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டினன் என்ற வரி உள்ளது. | ||
Line 58: | Line 56: | ||
விளைவுகள விறலியிற் தோன்று நாடன் | விளைவுகள விறலியிற் தோன்று நாடன் | ||
</poem> | </poem> | ||
ஆடல் அரங்குகள் பற்றிய சான்றுகள் உள்ளன. | |||
<poem> | <poem> | ||
படுகண் இமிழ்கொளை பயின்றனர் ஆடும் | படுகண் இமிழ்கொளை பயின்றனர் ஆடும் | ||
Line 65: | Line 63: | ||
</poem> | </poem> | ||
கடைச்சங்கக் காலம் வரை நாடகக்கலை உயிர்ப்புடன் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் உள்ளன. | கடைச்சங்கக் காலம் வரை நாடகக்கலை உயிர்ப்புடன் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் உள்ளன. | ||
== பொ.யு. 3 முதல் 19-ம் நூற்றாண்டு வரை == | |||
== பொ.யு. 3 முதல் 19- | |||
* பொ.யு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பொ.யு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நாட்டில் புத்த-சமண மதங்கள் பரப்பப்பட்டன. அச்சமயம் இருந்த நாடகங்களை "சிற்றின்ப வேட்கையினை எழுப்புவது" என்ற கருத்து நிலவியதால் நாடகக்கலை தொய்வுற்றது. | * பொ.யு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பொ.யு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நாட்டில் புத்த-சமண மதங்கள் பரப்பப்பட்டன. அச்சமயம் இருந்த நாடகங்களை "சிற்றின்ப வேட்கையினை எழுப்புவது" என்ற கருத்து நிலவியதால் நாடகக்கலை தொய்வுற்றது. | ||
* பொ.யு. 900 முதல் 1300 வரை சோழமன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தின் கலைகள் வளர்ச்சியடையத் தொடங்கின. | * பொ.யு. 900 முதல் 1300 வரை சோழமன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தின் கலைகள் வளர்ச்சியடையத் தொடங்கின. | ||
* பொ.யு. | * பொ.யு. 846-ம் ஆண்டு விஜயாலய சோழனால் எழுச்சிப் பெற்ற சோழப்பேரரசு முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் பின்னர் வலுப்பெற்றது. | ||
* பொ.யு. 1246 முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்தில் நாடகக்கலை வளர்ச்சி பெற்றது. | * பொ.யு. 1246 முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்தில் நாடகக்கலை வளர்ச்சி பெற்றது. | ||
*பொ.யு. 17- | *பொ.யு. 17--ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சோழ அரசர்களின் ஆதரவில் அரண்மனைகள், கோயில்கள் போன்றவற்றில் நடத்தப்பெற்ற நாடகங்கள் மக்கள் மன்றங்களில் நடத்தப்பட்டன. சங்ககாலத்தில் நடைபெற்ற பொதுவியற் கூத்துகள் போலவே நாடகக்கலை மக்களின் கலையாக வளர்ச்சிப் பெற்றது. பள்ளு, குறவஞ்சி, நொண்டி போன்ற நாடகங்கள் இக்காலக்கட்டத்தில் தோன்றின. | ||
==நவீன நாடகம் == | ==நவீன நாடகம் == | ||
பார்க்க: [[தமிழ் நவீன நாடக வரலாறு]] | பார்க்க: [[தமிழ் நவீன நாடக வரலாறு]] | ||
== உசாத்துணை == | |||
==உசாத்துணை == | |||
*[https://www.tamilvu.org/ta/courses-degree-p203-p2034-html-p2034335-30389 நவீன நாடகங்கள்: முனைவர் கு.மகுடீஸ்வரன்: tamilvu] | *[https://www.tamilvu.org/ta/courses-degree-p203-p2034-html-p2034335-30389 நவீன நாடகங்கள்: முனைவர் கு.மகுடீஸ்வரன்: tamilvu] | ||
*[https://folklore.tamilheritage.org/2019/01/03/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/ நவீன நாடக உருவாக்கமும் சமூகத் தேவையும்: G. பழனி: TamilHeritage] | *[https://folklore.tamilheritage.org/2019/01/03/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/ நவீன நாடக உருவாக்கமும் சமூகத் தேவையும்: G. பழனி: TamilHeritage] | ||
*[https://ramasamywritings.blogspot.com/2009/06/blog-post_9007.html தமிழில் நவீன நாடகங்கள்: அ.ராமசாமி எழுத்துக்கள்] | *[https://ramasamywritings.blogspot.com/2009/06/blog-post_9007.html தமிழில் நவீன நாடகங்கள்: அ.ராமசாமி எழுத்துக்கள்] | ||
*[https://uyirmmai.com/article/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/ நாடகம்: நவீனமான கதை: உயிர்மை: அ.ராமசாமி] | *[https://uyirmmai.com/article/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/ நாடகம்: நவீனமான கதை: உயிர்மை: அ.ராமசாமி] | ||
* [https://www.andhimazhai.com/special-section/special-pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D தமிழ் நாடக மரபு: வேர்களும் விழுதுகளும் - andhimazhai] | |||
==இணைப்புகள் == | ==இணைப்புகள் == | ||
*[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU0jZQy&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D#book1/ தமிழ் நாடகம்: நேற்றும் இன்றும்: முனைவர் கு. பகவதி: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்: tamilvu] | *[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU0jZQy&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D#book1/ தமிழ் நாடகம்: நேற்றும் இன்றும்: முனைவர் கு. பகவதி: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்: tamilvu] | ||
*[https://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=5 சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை: tamilvu] | *[https://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=5 சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை: tamilvu] | ||
* [https://www.jeyamohan.in/48715/ நாடக முகம்: வடக்குமுகம் நூலின் முதல் பதிப்பிற்கு 2002ல் எழுதப்பட்ட முன்னுரை: ஜெயமோகன்] | |||
{{Finalised}} | |||
{{Fndt|05-Jun-2023, 09:27:01 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 14:03, 9 November 2024
தமிழ் நாடக வரலாறு சங்ககாலத்திலிருந்து ஆரம்பமாகிறது.
தொன்மம்
இறைவன் ஆடிய கூத்தின் உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை. ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதினின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் ஒழுங்கும், நாட்டியக் கோப்பும், நாடக வகைகளும் தோன்றின எனக் கூத்த நூலில் உள்ளது.
சங்ககாலம்
அகத்தியம் என்ற சங்ககால நூலில் தமிழ் நாடகங்களின் தோற்றத்தைக் காணலாம். சங்கக் காலத்தில் குணநூல், கூத்த நூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர்,முறுவல் போன்ற நாடக நூல்கள் இருந்தன என்பது அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரையில் உள்ளது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய சங்க நூல்களில் தமிழ் நாடகக்கலை பற்றிய சான்றுகள் உள்ளன. "பாடல் சான்ற புலநெறி வழக்கம்" என்ற வரிகளின் வழி தொல்காப்பியர் வாழ்ந்ததற்கு முற்பட்ட காலகட்டங்களிலேயே தமிழில் நாடகமும், நாடகங்களில் பாடல்களும் இடம் பெற்றிருந்ததை அறியலாம்.
தொல்காப்பியம்
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் நாடகத்தின் கூறான மெய்ப்பாடு பற்றிய செய்தி உள்ளது.
நகையே அழுகை இனிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பா லெட்டாம் மெய்ப்பா என்பர்
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் நாடக அரங்கம், நாடகத்திரைகள் பற்றிய செய்திகள் உள்ளன.
நாடக அரங்கம்
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோலளவு இருப்பத்து நல்விரலாக
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பின தாகி
உத்திரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக
ஏற்ற வாயில் இரண்டுடன்
தோன்றிய அரங்கில்
நாடகத்திரைகள்
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்கு எனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்
நடிப்பும், இசையும்
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினில் புணர்ந்து
பதினோர் ஆடலும், பாடலும், கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து - ஆங்கு
ஆடலும், பாடலும், பாணியும், தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும் காலை,
பாண்டியும், பிணையலும், எழில் கையும், தொழில் கையும்
கொண்டவகை அறிந்து, கூத்து வரு காலை
கூடை செய்த கை பிண்டியில் களைதலும்
ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான்- தன்னோடும்
கடைச்சங்கக் காலம்
கபிலரின் அகநாநூற்றுப் பாடல் ஒன்றில் "மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்குகளிலே உலவி ஆடுகின்ற மயில் இனங்கள், களத்திலே புகுந்து ஆடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டினன் என்ற வரி உள்ளது.
கழைவளர் அடுக்கத்து இயலி யாடுமயில்
விளைவுகள விறலியிற் தோன்று நாடன்
ஆடல் அரங்குகள் பற்றிய சான்றுகள் உள்ளன.
படுகண் இமிழ்கொளை பயின்றனர் ஆடும்
களிநாள் அரங்கின் அணிநலம் புரையும்
கடைச்சங்கக் காலம் வரை நாடகக்கலை உயிர்ப்புடன் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் உள்ளன.
பொ.யு. 3 முதல் 19-ம் நூற்றாண்டு வரை
- பொ.யு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பொ.யு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நாட்டில் புத்த-சமண மதங்கள் பரப்பப்பட்டன. அச்சமயம் இருந்த நாடகங்களை "சிற்றின்ப வேட்கையினை எழுப்புவது" என்ற கருத்து நிலவியதால் நாடகக்கலை தொய்வுற்றது.
- பொ.யு. 900 முதல் 1300 வரை சோழமன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தின் கலைகள் வளர்ச்சியடையத் தொடங்கின.
- பொ.யு. 846-ம் ஆண்டு விஜயாலய சோழனால் எழுச்சிப் பெற்ற சோழப்பேரரசு முதலாம் பராந்தக சோழன் ஆட்சியின் பின்னர் வலுப்பெற்றது.
- பொ.யு. 1246 முதல் 1272 வரை ஆட்சி செய்த மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்தில் நாடகக்கலை வளர்ச்சி பெற்றது.
- பொ.யு. 17--ம் நூற்றாண்டின் காலப்பகுதியில் சோழ அரசர்களின் ஆதரவில் அரண்மனைகள், கோயில்கள் போன்றவற்றில் நடத்தப்பெற்ற நாடகங்கள் மக்கள் மன்றங்களில் நடத்தப்பட்டன. சங்ககாலத்தில் நடைபெற்ற பொதுவியற் கூத்துகள் போலவே நாடகக்கலை மக்களின் கலையாக வளர்ச்சிப் பெற்றது. பள்ளு, குறவஞ்சி, நொண்டி போன்ற நாடகங்கள் இக்காலக்கட்டத்தில் தோன்றின.
நவீன நாடகம்
பார்க்க: தமிழ் நவீன நாடக வரலாறு
உசாத்துணை
- நவீன நாடகங்கள்: முனைவர் கு.மகுடீஸ்வரன்: tamilvu
- நவீன நாடக உருவாக்கமும் சமூகத் தேவையும்: G. பழனி: TamilHeritage
- தமிழில் நவீன நாடகங்கள்: அ.ராமசாமி எழுத்துக்கள்
- நாடகம்: நவீனமான கதை: உயிர்மை: அ.ராமசாமி
- தமிழ் நாடக மரபு: வேர்களும் விழுதுகளும் - andhimazhai
இணைப்புகள்
- தமிழ் நாடகம்: நேற்றும் இன்றும்: முனைவர் கு. பகவதி: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்: tamilvu
- சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை: tamilvu
- நாடக முகம்: வடக்குமுகம் நூலின் முதல் பதிப்பிற்கு 2002ல் எழுதப்பட்ட முன்னுரை: ஜெயமோகன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
05-Jun-2023, 09:27:01 IST