under review

மணிமேகலைப் பிரசுரம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
(No difference)

Latest revision as of 09:01, 15 June 2024

மணிமேகலை பிரசுர வெளியீடுகள்

மணிமேகலைப் பிரசுரம் (1954), தமிழ்வாணன் தொடங்கி நடத்திய தமிழின் முன்னோடிப் பதிப்பகம். தமிழில் பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட நுால்களை வெளியிட்ட பதிப்பகமாக அறியப்படுகிறது.

தோற்றம், வெளியீடு

தமிழ்வாணன், 1954-ல், தனது நூல்களைத் தானே வெளியிடுவதற்காக ஆரம்பித்து நடத்திய பதிப்பகம் மணிமேகலைப் பிரசுரம். தனது மனைவி மணிமேகலையின் பெயரில் இப்பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார். 26 வருடங்கள் தனது புத்தகங்களை மட்டுமே வெளியிடுவது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். பின்னர் பிற எழுத்தாளர்களின் படைப்புகளையும் மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டது. தமிழ்வாணனின் மறைவுக்குப் பின் லேனா தமிழ்வாணனும், ரவி தமிழ்வாணனும் பிரசுரத்திற்குப் பொறுப்பேற்று நடத்தினர்.

நூல் வெளியீட்டுத் திட்டம்

மணிமேகலைப் பிரசுரம், எழுத்தாளர் - பதிப்பாளர் முதலீட்டுத் திட்டம் என்பதை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒரு நூலை அச்சிடுவதற்கு எழுத்தாளரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு நூலைப் பதிப்பித்தது. எழுத்தாளர்களுக்கு நூறு அல்லது நூற்றைம்பது பிரதிகளை அளித்தது. மீதிப் பிரதிகளில் நூறு பிரதிகளை நூலகங்களுக்கும், பல்வேறு பரிசுத்திட்டங்களுக்கும் அனுப்பியது. எஞ்சிய பிரதிகளைத் தனது விற்பனையகம் மூலம் விற்பனை செய்தது.

தங்கள் காட்சிக்கூடத்தின் மூலமும், அஞ்சல் வழி, புத்தக விற்பனையாளகள், நூல் விற்பனை நிலையங்கள் மற்றும் இணையம் வழியாகவும் நூல்களை விற்பனை செய்தது. உள்நாட்டு - வெளிநாட்டுப் புத்தக விற்பனைக் காட்சிகள் மூலமும், ஏற்றுமதியாளர்கள் மூலமும் நூல்களைக் கொண்டு சேர்த்தது.

நூல்களின் வகைகள்

மணிமேகலைப் பிரசுரம் தமிழ்வாணன் எழுதியுள்ள பல்துறை நூல்கள், லேனா தமிழ்வாணன் எழுதியுள்ள வாழ்வு முன்னேற்ற நூல்கள், நேர நிர்வாகம் பற்றிய நூல்கள், மொழி நூல்கள், மருத்துவம், ஜோதிடம், ஜாதகம், 1926-லிருந்து 2030 வரையிலான 105 வருடங்களுக்கான திருக்கணிதம் மற்றும் வாக்கியப் பஞ்சாங்கம், சங்கர்லால் துப்பறியும் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், சமையல், தையல், பக்தி, புராண நூல்கள், உளவியல், எண்கணிதம், கைரேகை அறிவியல் என 318 வகையான பிரிவுகளில் பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது.

5000-த்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் நூல்கள் மணிமேகலைப் பிரசுரம் மூலம் வெளியாகின. 450-க்கும் மேற்பட்ட இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட மணிமேகலைப் பிரசுர நூல்கள் தமிழக அரசின் பரிசு, தமிழ்ச் சங்கங்களின் பரிசு, பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகளைப் பெற்றன.

மணிமேகலை பிரசுர நூல்கள்

  • கோபத்தைக் குறைத்துக்கொள்வது எப்படி?
  • சந்தேகம் என்னும் நோயை விரட்டுவது எப்படி?
  • ஞாபக சக்தி இல்லையா?
  • விரக்தியை விரட்டுங்கள்!
  • பதற்றப்படாதீர்கள்!
  • மனமே உன்னிடம் என்னைச் சமர்ப்பிக்கிறேன்
  • நாகரிகமாய் நடந்துகொள்வது எப்படி?
  • மாறவேண்டிய மனப்பான்மைகள்
  • திறந்திடு மனசே!
  • சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்துபவராகத் திகழுங்கள்
  • மன நலமே மனித நலம்
  • நகரத்தார் கோயில்கள் ஒன்பதின் விவரங்களும் சிறப்புகளும்
  • நகரத்தார் மரபும் விசேடங்களும் ,
  • வரலாற்று நோக்கில் நகரத்தார் வாழ்வியல்
  • நகரத்தார் வளர்த்த கலைகள்
  • நகரத்தாரின் அறப்பணிகள்
  • நகரத்தாரின் ஒப்பற்ற பழக்க வழக்கங்கள்
  • ஒரு சுவையான சேவைப்பயணம்
  • அபூர்வ கேள்விகளின் அழகான சிந்தனைகள்
  • வெற்றிக்கு வயதேது?
  • வாழ்க்கையை கற்றுக்கொடுத்த வடுக்கள்
  • வியத்தகு விஷயங்களை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடி
  • பாலியல் வன்கொடுமைக்கு ஒரு விடியல்
  • சாதி உணர்வுகளை மறுப்போம் மறப்போம்
  • போலித்தனங்களை மாற்றுவோம், புனித வாழ்வை போற்றுவோம்
  • மண்ணிலிருந்து மறைவதற்குள் நல்லவை செய்வோம்!
  • நெஞ்சு பொறுக்குதில்லையே!
  • நெஞ்சிருக்கும் வரை
  • மனிதர்களின் அலட்சியங்களும் தீர்வுகளும்
  • வாழ்க்கை என்பது வாழத்தான்
  • காவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்
  • வீடு தேடி வரும் ஆபத்து!
  • தேவை பெண்கள் பாதுகாப்பு
  • இயற்கை வளங்களைக் காப்போம், இன்னலின்றி வாழ்வோம்
  • உலக அமைதிக்கு வழிகள்
  • பிறர் நலனுக்காகவும் வாழ்வோம்
  • கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும்
  • வாழ்வில் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்
  • ரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்
  • அக புற உலகம் பற்றிய அரிய சிந்தனைகள்
  • வாழ்வில் பின்பற்றவேண்டிய நற்பண்புகள்
  • அள்ளித்தந்த சூழலும் சொல்லித்தந்த சுற்றங்களும்
  • சிரத்தை கொள்வோம் சிகரத்தைத் தொடுவோம்!
  • காக்கியின் கதிர்வீச்சு
  • உயிரோடு இருப்பது போதாது உயிர்ப்போடு வாழவேண்டும்
  • கருப்பண்ணனின் கரிசல் மண் ஞாபகங்கள்
  • வாழும்போதே வாழ்த்துவோம்
  • ஒரு கல்வியாளரின் பன்முகச் சிந்தனைகள்
  • புதிய இந்தியாவை உருவாக்கப் புரட்சி செய்வோம்
  • மண்வளம் காக்க பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்
  • மாணவச் செல்வங்களே மாற்றி யோசியுங்கள்
  • தற்கொலை தீர்வல்ல
  • தி.மு.க.வின் தோற்றமும் வளர்ச்சியும்
  • அ.தி.மு.க.வின் தோற்றமும் வளர்ச்சியும்
  • தமிழ்வாணனின் தலைசிறந்த அரசியல் கேள்வி-பதில்கள்
  • இந்திய அரசியலில் டாக்டர் கலைஞரின் முக்கிய பங்கு
  • காங்கிரஸ் கட்சியின் வரலாறும் அரிய தகவல்களும்
  • அரசியல் தலைவர் - படிக்காதமேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை
  • கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் (நாடாளுமன்ற-சட்டமன்ற-பத்திரிகை)
  • பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத் தமிழ்
  • அரிஸ்டாட்டில் கலைஞர் அபூர்வ ஒப்பீடு
  • மும்மதத்தினரும் போற்றும் முதல்வர் ஜெயலலிதா
  • தென்னாட்டு காந்தி அறிஞர் அண்ணா (வெண்பா வடிவில்)
  • எளிமை, இனிமை, நேர்மை தோழர் ஆர்நல்லகண்ணு
  • தங்கத்தாரகை ஜெயலலிதா win வெற்றி வரலாறு
  • என் வாழ்க்கைப் பாதையிலே - புரூனே கலைமணி பாகம்-2
  • ஒரு கூலி கோடீஸ்வரரான கதை
  • நூலகங்களின் புரவலர் பொன் சுப்பையா
  • சுவையான தகவல்களும் பின்பற்ற வேண்டிய விஷயங்களும்
  • வெற்றிமீது ஆசை வைத்தேன்
  • உழைப்பில் மலர்ந்த ஒலிம்பியா
  • சிகரத்தை நோக்கி பாகம் - 2
  • ஒரு பேராசிரியரின் பயனுள்ள வாழ்க்கை அனுபவங்கள்
  • ஒரு பாமரப் பெண்ணின் சமூகச் சேவை
  • விமான நிலையத் தொழிற்சங்க தலைவரின் மறக்க முடியாத நாட்கள்
  • ஒரு டாக்டரின் இலட்சியப் பயணம்
  • வாழ்க்கை வரலாறு
  • போப்பாண்டவர்களின் வரலாறு
  • தமிழகத்தின் தனிப்பெரும் தொழில் மேதை ஜி.டி. நாயுடு
  • வேதங்களில் பெண்களின் பெருமைகள்!
  • உலகத்தைப் பற்றிய உன்னதச் சிந்தனைகள்
  • யோகிக்கு ஏற்பட்ட சோதனை
  • மக்களுக்குப் பயன்படும் ஆன்மிகச் சிந்தனைகள்
  • பொய்யனுக்குப் புதுவாழ்வு தந்த புண்ணியன்
  • சர்வசக்தி பெற அருமையான ஆலோசனைகள்
  • சுபிட்சம் தரும் சுந்தரகாண்டம்
  • விநாயகர் பற்றிய அற்புதமான விஷயங்கள்
  • சுந்தரகாண்டம் - எளிய கவிதை வடிவில்
  • கல்விக் கடவுள் சரஸ்வதியின் வரலாறும் பெருமைகளும்
  • கையளவு விஷயங்கள் கடலளவு சிந்தனைகள்
  • மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
  • திருவாசகத்தில் உன்னதமான உவமைகள்
  • ஆண்டாள் எனும் இலக்கிய ஆளுமையும் திருவில்லிபுத்தூரும்
  • திருமாலின் மச்ச, கூர்ம, வராக அவதாரங்கள்
  • திருமாலின் நரசிம்ம, வாமன அவதாரங்கள்
  • ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - ஓர் எளிய விளக்கம்
  • ஸ்ரீமத் பாகவதம் எளிய வடிவில்
  • இளைய தலைமுறையினருக்கு இனிக்கும் இஸ்லாமியக் கதைகள்
  • என்னைக் கவர்ந்த இனிய தலைவர் சிராஜூல் மில்லத் (அப்துல் ஸமது பற்றிய கட்டுரைகள்)
  • இஸ்லாமியக் காதல் கதைகள்
  • என் நினைவில் ஒரு கவிஞர் (அப்துல் காதர் லெப்பை பற்றிய கட்டுரைகள்)
  • மானாமக்கீனின் கதைமலர்கள்
  • ரமலான் நோன்பின் மகிமைகள்
  • தியாகத் திருநாள் கதைகள்
  • நீடூர் - நெய்வாசல் நெஞ்சங்கள்
  • திருக்குர்ஆன் மணிகள்
  • இஸ்லாமிய திருமண கையேடு
  • பகுத்தறிவின் நீதிமன்றம்
  • ஏகத்துவப் பாடல்கள்
  • ஈமானின் உண்மையை நீ அறிவாயா?
  • திருக்குர்ஆன் தீர்ப்பு-பாகம் 1
  • நபிகள் நாயகர் பன்னிரு பாடல்
  • கீழக்கரை நினைவலைகள்
  • ஒளி பிறந்தது
  • குர்ஆன் கூறும் நற்செயல்களில் நூறு
  • ஜோஸ்யம் கற்றுக்கொள்ளுங்கள்
  • பஞ்சபட்சி சாஸ்திரம் பார்ப்பது எப்படி?
  • கோட்சார பலன்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் முறைகள்
  • கிரேக்க ஜோதிடமும், அணுகுமுறையும்
  • வாழ்வில் வளம் சேர்க்கும் சாத்திரங்கள்
  • மூச்சு ஜோதிடம் பார்ப்பது எப்படி?
  • விஞ்ஞான ஜோதிடம்
  • ஜோதிடக் கலைக் களஞ்சியம்
  • அறிந்த சொற்களும் அறியாத விவரங்களும்
  • ஜோதிட மாமேதைகள் சொல்லும் சூசகங்களும் நுட்பங்களும்
  • குழந்தைகளுக்கு வரும் பாலகிரக தோஷமமும் பரிகாரங்களும்
  • பல்வகை ஆரூடங்களும் உங்களுக்கான பலன்களும்
  • புத்திர தோஷமும் பரிகாரமும்
  • ஏணியாகும் எண்ணங்கள்
  • தண்ணீரைப் போற்றுவோம்
  • என்றும் நீ வாழ்வாய்
  • துணிவை மட்டும் இழக்காதீர்!
  • உங்களுக்குள்ளே ஓர் அற்புத மனிதர்
  • உன்னைத் தோளில்வைத்து உலகைச்சுற்ற ஆசை!
  • இறவாத இலக்கியத்தை தமிழில் இயற்றுவோம்
  • உழவுக்கு வந்தனை செய்வோம்!
  • மௌனப் போர்வையில் மனது
  • நெஞ்சில் நீங்காத கிராமிய வாசம்
  • வந்துவிட்டாள் ஒரு புரட்சிப்பெண்
  • விடியலை நோக்கி விழித்தெழு
  • ஓடும் நதிக்கரையில் அழகான கவிதைகள்
  • மாறுமோ தமிழக வறட்சி நிலை?
  • நம்பிக்கைதானே எல்லாம்?
  • கவிஞர்கள் பாக்கியசாலிகள்
  • அம்மாவின் அன்பு மழையில்
  • துணிந்துவிடு துயரம் இல்லை
  • புதிதாய் ஒரு நான்
  • நாட்டுக்கோர் நற்கவிதை
  • அகவிதைகள்
  • அவளில்லாத சனி, ஞாயிறு
  • உன்னை வழியனுப்பி விழி நிறைந்து நின்றேனே!
  • இவ்வுலகில் யாரும் அநாதை இல்லை!
  • நல்வழிப் பாதையில் வாழ்க்கைப் பயணம்

மற்றும் பல

மணிமேகலை பிரசுரத்தில் நூல்களை வெளியிட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள்

மற்றும் பலர்

மதிப்பீடு

மணிமேகலைப் பிரசுரம் இளம் எழுத்தாளர்கள் பலரை அறிமுகம் செய்தது. அவர்களது முதல் நூல்களை வெளியிட்டு ஊக்குவித்தது. சிறார்களுக்கான நூல்கள், மர்ம நாவல்கள், சமூக நாவல்கள், சிறுகதைகள், கட்டுரை நூல்கள், புராண நூல்கள், ஜோதிட நூல்கள் எனப் பல்வேறு வகைமைகளில் தனது நூல்களை வெளியிட்டது. தென்னகத்தில், பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட நுால்களை வெளியிட்ட பதிப்பகமாக மணிமேகலைப் பிரசுரம் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page