under review

இதயம் பேசுகிறது (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 3: Line 3:
[[File:Idhayam Pesukirathu Magazine.jpg|thumb|இதயம் பேசுகிறது - 1983]]
[[File:Idhayam Pesukirathu Magazine.jpg|thumb|இதயம் பேசுகிறது - 1983]]
== பிரசுரம், வெளியீடு ==
== பிரசுரம், வெளியீடு ==
[[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] ஆசிரியராகப் பணியாற்றி வந்த [[மணியன்]], அவ்விதழிலிருந்து வெளியேறி, புதிதாகத் தொடங்கிய இதழ் ‘இதயம் பேசுகிறது’. ‘இதயம்’ என்ற பெயரில் இதழைத் தொடங்க நினைத்த மணியன், அப்பெயர் ஆற்காடு வீராச்சாமியால் பதிவு செய்யப்பட்டிருந்ததால், [[சா. விஸ்வநாதன் (சாவி)|சாவி]]யின் ஆலோசனையின் படி ‘இதயம் பேசுகிறது’ என்ற பெயரைச் சூட்டினார். அப்பெயரில் ஏற்கனவே மணியன், விகடன் இதழில் பல பயணக் கட்டுரைகளை எழுதிப் புகழடைந்திருந்ததால் அப்பெயரையே இதழுக்கு வைக்கும்படி சாவி பரிந்துரைத்தார்.
[[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] ஆசிரியராகப் பணியாற்றி வந்த [[மணியன்]], அவ்விதழிலிருந்து வெளியேறி, புதிதாகத் தொடங்கிய இதழ் ‘இதயம் பேசுகிறது’. ‘இதயம்’ என்ற பெயரில் இதழைத் தொடங்க நினைத்த மணியன், அப்பெயர் ஆற்காடு வீராச்சாமியால் பதிவு செய்யப்பட்டிருந்ததால், [[சாவி (எழுத்தாளர்)|சாவி]]யின் ஆலோசனையின் படி ‘இதயம் பேசுகிறது’ என்ற பெயரைச் சூட்டினார். அப்பெயரில் ஏற்கனவே மணியன், விகடன் இதழில் பல பயணக் கட்டுரைகளை எழுதிப் புகழடைந்திருந்ததால் அப்பெயரையே இதழுக்கு வைக்கும்படி சாவி பரிந்துரைத்தார்.
ஜனவரி, 1978-ல், தொடங்கப்பட்ட ‘இதயம் பேசுகிறது’ சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, நேர்காணல்கள், துணுக்குகள் என பல்சுவை அம்சங்கள் கொண்ட இதழாக வெளிவந்தது. [[தாமரைமணாளன்]] இவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ஆரம்பத்தில் இதழின் விலை 1 ரூபாய் 20 காசுகளாக இருந்தது. பின் கால மாற்றத்திற்கேற்ப விலை உயர்த்தப்பட்டு விற்பனை ஆனது.
ஜனவரி, 1978-ல், தொடங்கப்பட்ட ‘இதயம் பேசுகிறது’ சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, நேர்காணல்கள், துணுக்குகள் என பல்சுவை அம்சங்கள் கொண்ட இதழாக வெளிவந்தது. [[தாமரைமணாளன்]] இவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ஆரம்பத்தில் இதழின் விலை 1 ரூபாய் 20 காசுகளாக இருந்தது. பின் கால மாற்றத்திற்கேற்ப விலை உயர்த்தப்பட்டு விற்பனை ஆனது.
[[File:Manian .jpg|thumb|எழுத்தாளர் மணியன்]]
[[File:Manian .jpg|thumb|எழுத்தாளர் மணியன்]]

Revision as of 23:03, 1 June 2024

இதயம் பேசுகிறது இதழ் - 1982

இதயம் பேசுகிறது (1978) மணியனின் ஆசிரியத்துவத்தில் வெளியான பல்சுவை வார இதழ். சிறுகதை, தொடர்கதை, கட்டுரைகள், நேர்காணல்கள், துணுக்குகள், திரைப்படச் செய்திகள் போன்றவை இவ்விதழில் இடம் பெற்றன. மணியனின் மறைவுக்குப் பின் இவ்விதழை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் வாங்கி நடத்தியது. சில ஆண்டுகள் வெளியாகிப் பின் நின்றுபோனது.

இதயம் பேசுகிறது - 1983

பிரசுரம், வெளியீடு

ஆனந்த விகடனில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மணியன், அவ்விதழிலிருந்து வெளியேறி, புதிதாகத் தொடங்கிய இதழ் ‘இதயம் பேசுகிறது’. ‘இதயம்’ என்ற பெயரில் இதழைத் தொடங்க நினைத்த மணியன், அப்பெயர் ஆற்காடு வீராச்சாமியால் பதிவு செய்யப்பட்டிருந்ததால், சாவியின் ஆலோசனையின் படி ‘இதயம் பேசுகிறது’ என்ற பெயரைச் சூட்டினார். அப்பெயரில் ஏற்கனவே மணியன், விகடன் இதழில் பல பயணக் கட்டுரைகளை எழுதிப் புகழடைந்திருந்ததால் அப்பெயரையே இதழுக்கு வைக்கும்படி சாவி பரிந்துரைத்தார். ஜனவரி, 1978-ல், தொடங்கப்பட்ட ‘இதயம் பேசுகிறது’ சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, நேர்காணல்கள், துணுக்குகள் என பல்சுவை அம்சங்கள் கொண்ட இதழாக வெளிவந்தது. தாமரைமணாளன் இவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ஆரம்பத்தில் இதழின் விலை 1 ரூபாய் 20 காசுகளாக இருந்தது. பின் கால மாற்றத்திற்கேற்ப விலை உயர்த்தப்பட்டு விற்பனை ஆனது.

எழுத்தாளர் மணியன்

உள்ளடக்கம்

இதயம் பேசுகிறது இதழில் மணியனின் தொடர்கதைகள் வெளியாகின. தாமரைமணாளனின் சிறுகதைகள், ‘இந்திரவிழா', ‘அந்தப்புரம்’ போன்ற வரலாற்றுத் தொடர்கள் வெளியாகின. பல தொடர்களை, கட்டுரைகளை தன் நிஜப் பெயரிலும், புனை பெயரிலும் எழுதினார் தாமரைமணாளன். ‘நக்கீரன்’ என்ற புனை பெயரில் அரசியல் கட்டுரைகளையும், பொன். பாஸ்கர மார்த்தாண்டன் என்ற புனைபெயரில் பல ஆன்மிகப் பயணக் கட்டுரைகளையும் தாமரைமணாளன் எழுதினார். ஜெயகாந்தனின் ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்' இதயம் பேசுகிறது இதழில் தான் தொடராக வெளியானது. கமல்ஹாசன் எழுதிய ‘தாயம் ஒண்ணு’ தொடர் வெளியாகி வாசக வரவெற்பைப் பெற்றது. திரைப்படத் துறை சார்ந்தவர்களின் நேர்காணல்கள், செய்திகளுக்கு இதயம் பேசுகிறது இதழ் அதிக முக்கியத்துவம் அளித்து வெளியிட்டது. பொங்கல் மலர், தீபாவளி மலர், ஆண்டு மலர் தவிர்த்து அவ்வப்போது சிறப்பு மலர்களை இதயம் பேசுகிறது இதழ் வெளியிட்டது. சாவி ஆசிரியராக இருந்த ‘சாவி’ இதழ் மு. கருணாநிதி ஆதரவு இதழாக இருக்க, அதே காலக்கட்டத்தில் தோன்றிய ‘இதயம் பேசுகிறது’ இதழ் எம்.ஜி. ராமச்சந்திரன் ஆதரவு இதழாகச் செயல்பட்டது. ‘இதயம் பேசுகிறது’ என்ற அதே தலைப்பில் இவ்விதழில் மணியன் தனது பயணக்கட்டுரைகளைத் தொடராக எழுதினார்.

இதயம் பேசுகிறது - பொங்கல் சிறப்பிதழ் - 1983
மணியன்

பங்களிப்பாளர்கள்

மற்றும் பலர்

இதழ் நிறுத்தம்

மணியனின் மறைவுக்குப் பின் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன நிர்வாகத்தில் ‘இதயம் பேசுகிறது’ இதழ் வெளிவந்தது. பின்னர் இதழின் பெயர் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. சில ஆண்டுகளுக்குப் பின் நின்றுபோனது.

உசாத்துணை

சாவி 85: ராணிமைந்தன்: தமிழ் இணைய மின்னூலகம்


✅Finalised Page