மாலை இலக்கிய நூல்கள்-வைணவம்
From Tamil Wiki
'மாலை' தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. மலர்களைத் தொடுத்து மாலை அமைக்கப்படுவது போல ஒரு பொருளை முன்னிட்டு, அப்பொருளைப் பற்றிய பல்வேறு அம்சங்களைக் குறித்து, ஒரே வகைப் பாவகையைக் கொண்டும், பல்வேறு வகைப் பாக்களையும், பாவினங்களையும் கொண்டும் பாடப்படுவது மாலை. மாலை இலக்கிய நூல்களில் வைணவ சமயம் சார்ந்து பல மாலை நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.
மாலை இலக்கிய நூல்கள் - வைணவ சமயம்
திருமாலின் பெருமை, காக்கும் கடவுளான அவன், பக்தர்களுக்கு அருள்புரியும் விதம், கருணை, அவனது பேராற்றல் போன்றவற்றையும், புராணக் கூறுகளையும், சமய தத்துவக் கருத்துக்களையும் கொண்டனவாக வைணவ சமயம் சார்ந்த மாலை இலக்கிய நூல்கள் அமைந்துள்ளன.
மாலை இலக்கிய நூல்கள் பட்டியல் - வைணவ சமயம்
வைணவ சமயம் சார்ந்து பல மாலை நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் சில..
| வரிசை எண் | நூல் பெயர் | ஆசிரியர் பெயர் |
|---|---|---|
| 1 | அணிமாமால் மங்கைத் தாயார் மாலை | பள்ளி கொண்டான் பிள்ளை |
| 2 | அரங்கர் அன்னை அடைக்கல மாலை | பள்ளி கொண்டான் பிள்ளை |
| 3 | அரங்கர் அப்பன் அடிப்புகழ்ச்சி மாலை | பள்ளி கொண்டான் பிள்ளை |
| 4 | அரங்கர் அலங்கார மாலை | சோ. நாராயணசுவாமிகள் |
| 5 | அரங்கேசர் மாலை | முத்து கிருஷ்ண நாவிதர் |
| 6 | அருள் சக்கிரபாணிசுவாமி மாலை | குணபதி சுவாமிகள் |
| 7 | அலர்மேல் மங்கை மாலை | இராமதாஸ் |
| 8 | அலர்மேல் மங்கைத் தாயார் மாலை | பள்ளி கொண்டான் பிள்ளை |
| 9 | அலர்மேல் மங்கை நாயகி மாலை | ஐயாச்சாமி முதலியார் |
| 10 | அழகர் சோடசகசக மாலை | ஆளவந்தார் |
| 11 | அழகர் தூது மாலை | சுந்தரராச வைணவதாசர் |
| 12 | ஆஞ்சநேய மாலை | பெருமாள் ஐயங்கார் |
| 13 | ஆண்டாள் சந்திரகலா மாலை | திருவடிதாசர் |
| 14 | ஆதிகேசவ மாலை | இராசகோபாலதாசன் |
| 15 | ஆழ்வார்கள் அருள் மாலை | சாமி சிதம்பரனார் |
| 16 | ஆழ்வார்கள் உயிர்வருக்க மாலை | கா.ரா. கோவிந்தராச முதலியார் |
| 17 | யதீந்திர மாலை | ஆளவந்தார் |
| 18 | உபதேச மாலை | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 19 | உபதேச ரத்தின மாலை | மணவாள மாமுனிகள் |
| 20 | ருக்மணித்தாயார் மாலை | பள்ளி கொண்டான் பிள்ளை |
| 21 | உலகளந்த பெருமாள் மாலை | பள்ளி கொண்டான் பிள்ளை |
| 22 | என்னைப் பெற்ற தாயார் மாலை | பள்ளி கொண்டான் பிள்ளை |
| 23 | ஐம்படை மாலை | பள்ளி கொண்டான் பிள்ளை |
| 24 | கம்பர் மாலை | திருமலை ஐயங்கார் |
| 25 | கருடன் வருக்க மாலை | திருமலை ஐயங்கார் |
| 26 | கனகவல்லித் தாயார் மாலை | பள்ளி கொண்டான் பிள்ளை |
| 27 | காரமடை ரங்கநாதர் மாலை | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 28 | குஞ்சரி மாலை | இராமசாமி ஐயங்கார் |
| 29 | கோதைநாயகித் தாயார் மாலை | பள்ளி கொண்டாள் பிள்ளை |
| 30 | சந்திரகலா மாலை | ஆழ்வார்நகர் சடகோபன் |
| 31 | சடகோப மாலை | பெருமாள் ஐயங்கார் |
| 32 | சடகோபன் சந்திரகலா மாலை | அநந்தாசிரியர் |
| 33 | சீரங்கநாயகி மாலை | ஐயாசாமி முதலியார் |
| 34 | சீரங்கநாயகி மாலை | கோவிந்தப் பிள்ளை |
| 35 | சீரங்கநாயகி மாலை | சீனிவாசாசாரியார் |
| 36 | குடிக் கொடுத்த நாச்சியார் தோத்திர மாலை | அ.ரா. சுப்பையங்கார் |
| 37 | திருச்சின்னமாலை | வேங்கடநாதாசாரியார் |
| 38 | திருப்புல்லாணி மாலை | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 39 | திருமகள் மாலை | முத்தாண்டவராயர் பிள்ளை |
| 40 | திருமகள் மாலை | இராகவன் முத்து |
| 41 | திருமயநல்லூர் அழகியவரதர்மாலை | பெரியநாயகப் பெருமாள் நாயுடு |
| 42 | திருமாலை | தொண்டரடிப் பொடியாழ்வார் |
| 43 | திருமலை அலர்மேல்மங்கை நாயகி மாலை | ஐயாசாமி முதலியார் |
| 44 | திருமலை சிங்கார மாலை | பாலசுப்பிரமணிய முதலியார் |
| 45 | திவ்வியப் பிரபந்த மாலை | பி.பி. அண்ணங்கராசாரியார் |
| 46 | திருவரங்கச் சிலேடை மாலை | அனந்தகிருஷ்ண ஐயங்கார் |
| 47 | திருவரங்கத்து மாலை | பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
| 48 | திருவடிச் சிலேடை மாலை | கிருட்டிணமாசாரியார் |
| 49 | திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை | சௌரிப் பெருமாள் தாசர் |
| 50 | திருவிடந்தைக் கோவிந்த ராச மாலை | தெய்வநாயகப் பெருமாள் நாயுடு |
| 51 | திருவேங்கடமாலை | பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
| 52 | தோதாத்ரிப் பட்டர்பிரான் யோகி மாலை | தெய்வநாயகப் பெருமாள் நாயுடு |
| 53 | தோத்திரச் செய்யுள் மாலை | திருவேங்கடவன் |
| 54 | திருவேங்கடமாலை | கவிகுஞ்சர பாரதி |
| 55 | திருவேங்கட வர்க்க மாலை | ஈ.வேங்கடாசலன் |
| 56 | திருக்கண்ணமங்கை மாலை | வீரராகவ முதலியார் |
| 57 | தில்லை கோவிந்தராச மாலை | மாதவநாயுடு |
| 58 | திருவாய் மொழி வாசக மாலை | திருக்கோளேரி தாஸர் |
| 59 | திவ்வியதேச மாலை | அநந்த கிருட்டிண ஐயங்கார் |
| 60 | நம்மாழ்வார் நான்மணிமாலை | பள்ளிகொண்டான் பிள்ளை |
| 61 | ஸ்ரீநிவாச மாலை | ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை |
| 62 | நவரத்தின மாலை | பிள்ளை லோகாசாரியர் |
| 63 | பஞ்சரத்திரன மாலை | காசிக்கலியன் கவிராயர் |
| 64 | பார்த்தசாரதி மாயவன் மாலை | பள்ளி கொண்டான் பிள்ளை |
| 65 | பார்த்தசாரதி பரஞ்சுடர் மாலை | பள்ளி கொண்டான் பிள்ளை |
| 66 | பெருந்தேவித் தாயார் மாலை | பள்ளி கொண்டான் பிள்ளை |
| 67 | மணவாள மாமுனிகள் நான்மணிமாலை | பள்ளி கொண்டான் பிள்ளை |
| 68 | மணவாள மாமுனிகள் மாலை | மணவாளமாமுனி ஐயர் |
| 69 | மாணிக்க மாலை | அழகியமணவாளப் பெருமாள் |
| 70 | மாறன் இரட்டைமணிமாலை | திருமலை ஐயங்கார் |
| 71 | மாறன் இரட்டைமணிமாலை | திருக்குருகைப் பெருமாள் கவிராயர் |
| 72 | வார்த்தமாலை | ஜீயர் |
| 73 | விஷ்ணு துவாதச மாலை | பெருமாள் ஐயங்கார் |
| 74 | வேங்கடேசப் பெருமாள் போற்றி மாலை | ஐயுலுநாயக்கர் |
| 75 | வீரராகவப் பெருமாள் மாலை | பள்ளிகொண்டான் பிள்ளை |
| 76 | வேங்கடேசர் பல்சந்த மாலை | விலட்சணாந்தர் |
| 77 | வேதநாராயணன் போற்றி மாலை | சீனிவாச தாத்தாச்சாரியார் |
| 78 | வேதவல்லித் தாயார் மாலை | பள்ளி கொண்டான் மாவை |
| 79 | அகராதி மாலை | நீலகண்டதாசர் |
| 80 | அங்க மாலை | நீலகண்டதாசர் |
| 81 | அணிமாமலர் மங்கைத் தாயார் மாலை | பள்ளி கொண்டான் பிள்ளை |
| 82 | அந்தாதி மாலை | கிருஷ்ணன் |
| 83 | அனுவாதநூல் மாலை | ரமண மகரிஷி |
| 84 | அரங்க அன்னை அடைக்கல மாலை | பள்ளிகொண்டான் பிள்ளை |
| 85 | அரங்கர் அப்பன் அடிப்புகழச்சி மாலை | பள்ளிகொண்டான் பிள்ளை |
| 86 | அரங்கர் அலங்காரமாலை | சோ. நாராயணசுவாமிகள் |
| 87 | அரங்ககேசர் மாலை | முத்து கிருஷ்ண பாகவதர் |
| 88 | அருட்சக்கரபாணிச் சுவாதி மாலை | குணபதிசுவாமிகள் |
| 89 | அருட்பா மாலை | அழகிய திருச்சிற்றம்பல அடிகள் |
| 90 | அழகர் மாலை | நற்றமிழன்பர்கள் |
| 91 | தோத்திர மாலை | ஸ்ரீமான் எஸ். ஸ்ரீநிவாஸய்யங்கார் |
| 92 | தொண்டர் மாலை | ஸ்ரீ பண்டித சிந்தாமணி கோபாலய்யங்கார் |
| 93 | கம்பர் மாலை | ராமஸ்வாமி அய்யங்கார் |
| 94 | பரிமுக மாலை | ஸ்ரீநிவாஸ ராகவாச்சாரியார் |
| 95 | ஸ்ரீஆண்டாள் மாலை | திருமலை அய்யங்கார் |
| 96 | ஸ்ரீபார்த்தசாரதி மாலை | கே.ஆர். ராமாநுஜம் |
| 97 | திருவருண்மாலை | ஆர்.கேசவய்யங்கார் |
| 98 | புகழ் மாலை | தமிழன்பர |
| 99 | ஸ்ரீவீரராகவமாலை | இரா. கிருஷ்ணய்யங்கார் |
| 100 | திருமாமகள் மாலை | எம். கிருஷ்ணஸ்வாமி அய்யர் |
| 101 | திருநரசிங்கர் மாலை | ஆர். ராமஸ்வாமி அய்யர் |
| 102 | அழகியசிங்கர் மாலை | பி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் |
| 103 | பொய்கையார் மாலை | இராமாநுஜய்யங்கார் |
| 104 | ஸ்ரீஆண்டாள் சந்திரகலா மாலை | சிறந்த தேசிக பக்தர் |
| 105 | வாரணமாயிர மாலை | பி.எஸ். திருமலை அய்யங்கார் |
| 106 | ஸ்ரீபார்த்தசாரதியம்மான் பாமாலை | பி.எஸ். கோவிந்ததாஸ அய்யங்கார் |
| 107 | திருச்சின்னமாலை | கே. துரைசாமி அய்யங்கார் |
| 108 | திருவேங்கடவர் மாலை | நான்மறையாளர்கள் |
| 109 | மார்கழி மாலை | அச்சுத கோபாலச்சாரியார் |
| 110 | மதுரகவி மாலை | எஸ். ஸ்ரீநிவாஸாசாரியர் |
| 111 | திருவருட் சதக மாலை | என். கிருஷ்ணய்யங்கார் |
| 112 | சீரொன்று தூப்புற்றிவியன் மாலை | அருள் வரதரடியார் |
| 113 | மும்முறை தெளிவுப் பொருள் மூதுரை மாலை | ஆதி நாராயணசுவாமி ரெட்டியார் |
| 114 | அருளாளர் மாலை | திண்டுக்கல் ராமஸ்வாமி அய்யங்கார் |
| 115 | பூங்கோதை மாலை | பி.எஸ். கிருஷ்ணய்யங்கார் |
| 116 | பூமகள் மாலை | பி. கோபாலாச்சாரியார் |
| 117 | இடைப்பிள்ளை மாலை | பி.ஏ. சந்தானமய்யங்கார் |
| 118 | செந்தாமரையான் மாலை | என். கிருஷ்ணஸ்வாமி அய்யர் |
| 119 | பெரிய பிராட்டியார் மாலை | ஆர். கோபாலஸ்வாமி அய்யங்கார் |
| 120 | தேசிகரந்தாதி மாலை | நரசிம்மாசாரியர் |
| 121 | இராமாவதார மாலை | பி. நாராயணஸ்வாமி அய்யர் |
| 122 | ஸ்ரீவீரராகவ மாலை | லக்ஷ்மி நரசிம்ஹப் பிள்ளை |
| 123 | ஆனை பரிதேரின் மேலழகர் மாலை | என். கிருஷ்ணமாச்சாரி |
| 124 | வாழித்திருநாமப் பாமாலை | என். கிருஷ்ணமாச்சாரி |
| 125 | அத்திகிரி வரதன் அந்தாதி மாலை | அருள் வாதரடியார் |
| 126 | வேங்கடகிருஷ்ணன் மாமணிமாலை | மூவந்தனர் |
| 127 | ஸ்ரீபெரும்புதூர் வள்ளல் மாலை | அடியார்க்கு நல்லவர் |
| 128 | தசாவதார மாலை | மாலோலன் மானடியார் |
| 129 | ஸ்ரீவிஜயராகவ மாலை | மாலோலன் மானடியார் |
| 130 | சூடிக்கொடுத்த சுடர்க்கொடி மாலை | மாலோலன் மானடியார் |
| 131 | ஸ்ரீவரதராஜ மாலை | மாலோலன் மானடியார் |
| 132 | கோதை நாயகித் தாயார் மாலை | கே. நரசிம்மய்யங்கார் |
| 133 | சரணாகதி மாலை | கே. பாஷ்யம் அய்யங்கார் |
| 134 | திருவடி மாலை | கே. துரைஸ்வாமி அய்யங்கார் |
| 135 | திருமலை மாலை | வி.வி. பாஷ்யம் அய்யங்கார் |
| 136 | வேத முடித்தேசிக மாலை | சிறந்த தேசிக பக்தர் |
| 137 | திருவத்திகரித் திருமாலை | ப.ரெ. திருமலை அய்யங்கார் |
| 138 | பெருந்தேவித் தாயார் மாலை | எஸ். பார்த்தசாரதி அய்யங்கார் |
| 139 | திருவாதி மாலை | டாக்டர். ஐ. வெங்கடேசய்யர் |
| 140 | கல்யாணி மாலை | கிருஷ்ணமாசாரியார் |
| 141 | ஹயக்கிரீவ மாலை | வி. கிருஷ்ணஸ்வாமி சர்மா |
| 142 | சொன்ன வண்ணஞ் செய்த பெருமாள் மாலை | ப.ரெ. திருமலை அய்யங்கார் |
| 143 | வேதாந்த குருமாலை | வரதாசாரியார் |
| 144 | திருக்கோவிலூர் ஆயனார் மாலை | கைலாஸமய்யர் |
| 145 | திருநின்றவூர் என்னைப் பெற்ற தாயார் மாலை | கொத்தமங்கலம் சுப்பு |
| 146 | ஸ்ரீரங்கராஜ மாலை | ஸ்ரீஆண்டவன் திருவடி |
| 147 | அற்புத கேஸரி மாலை | பி.ஏ. சந்தானம் அய்யங்கார் |
| 148 | ஸரோஜா மாலை | எஸ். கிருஷ்ணய்யர் |
| 149 | நல்வழி மாலை | பி.ஏ. செல்வஸ்வாமி அய்யங்கார் |
| 150 | திருவேங்கடவன் திருக்குறட்பா விளக்க மாலை | திருமலை அய்யங்கார் |
| 151 | அலங்காரர் மாலை | பி.எஸ். கிருஷ்ணய்யங்கார் |
| 152 | தாம்பூல மாலை | இளைஞர் |
| 153 | பெரியபெருமாள் மாலை | ஸ்ரீநிவாஸ கோபாலய்யங்கார் |
| 154 | உத்தமன் சிறுவன் உவனிய மாலை | பாலகிருஷ்ண சாஸ்திரி |
| 155 | ஸ்ரீரங்கநாயகியார் மாலை | வி.எஸ். நரசிம்மன் |
| 156 | சகலகலா வல்லி மாலை | நீலகண்ட சாஸ்திரியார் |
| 157 | இளையாழ்வார் மாலை | பாஷ்யம் செட்டியார் |
| 158 | பெரிய திருவடி மாலை | ப.ரெ. திருமலை அய்யங்கார் |
| 159 | ஆரணதேசிகன் அடைக்கல மாலை | செந்தமிழ்ச் செல்வர் |
| 160 | சிறிய திருவடிமாலை | கே.எஸ். ராஜகோபாலய்யங்கார் |
| 161 | ஸ்ரீ கண்ணபிரான் மாலை | கே.எஸ். வாஞ்சி அய்யர் |
| 162 | ஸ்ரீசடகோப மாலை | ரங்காச்சாரியார் |
| 163 | வைராக்கிய மாலை | வி.எஸ். திருவேங்டத்தான் |
| 164 | முத்திருப்பதிற் திருப்புகழ்மாலை | ஸ்ரீவைஷ்ணவதாஸர் |
| 165 | வேதாந்ததேசிகர் வைபவமாலை | ஆர்.எஸ். அய்யங்கார் |
| 166 | திருத்தாள் மாலை | பஞ்சாமிருதம் |
| 167 | முருகதாசர் தேசிக மாலை | வி.எஸ். சிங்காரவேலு முதலியார் |
| 168 | கன்னித் திருவோணத்தாள் மாலை | டாக்டர் கே. ராமஸ்வாமி அய்யங்கார் |
| 169 | ஸ்ரீகுணசேகரத்தான் மாலை | சிறந்த ஆண்டவன் திருவடி |
| 170 | அபியுக்தர் மாலை | ஸ்ரீநிவாஸலு நாயுடு |
| 171 | உலகளந்த உத்தமன் மாலை | எஸ்.வி. ராமாநுஜம் அய்யங்கார் |
| 172 | திரு நதிமாலை | நரசிம்மாச்சாரியார் |
| 173 | திருமலை ஆறு பதினெட்டடிப் பாமாலை | ப.ரெ. திருமலை அய்யங்கார் |
| 174 | சவரிமோக்க நவ மணி மாலை | எஸ். சேஷாசாரியார் |
| 175 | தேசிகபக்த சிகாமணிமாலை | கே. துரைஸ்வாமி அய்யங்கார் |
| 176 | திருப்பாவை மாலை | ஸௌந்திரராஜன் |
உசாத்துணை
- மாலை இலக்கிய நூல்கள் பட்டியல்: தமிழ் இணைய மின்னூலகம் :
- மாலை இலக்கிய நூல்கள் பட்டியல்: ஆர்கைவ் தளம்
- பிரபந்த தீபிகை, முத்து வேங்கட சுப்பையர், தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை, மு. அருணாசலம், தி. பார்க்கர் வெளியீடு.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
06-Nov-2023, 08:32:38 IST