under review

மாலை இலக்கிய நூல்கள்-வைணவம்

From Tamil Wiki

’மாலை’ தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. மலர்களைத் தொடுத்து மாலை அமைக்கப்படுவது போல ஒரு பொருளை முன்னிட்டு, அப்பொருளைப் பற்றிய பல்வேறு அம்சங்களைக் குறித்து, ஒரே வகைப் பாவகையைக் கொண்டும், பல்வேறு வகைப் பாக்களையும், பாவினங்களையும் கொண்டும் பாடப்படுவது மாலை. மாலை இலக்கிய நூல்களில் வைணவ சமயம் சார்ந்து பல மாலை நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.

மாலை இலக்கிய நூல்கள் - வைணவ சமயம்

திருமாலின் பெருமை, காக்கும் கடவுளான அவன், பக்தர்களுக்கு அருள்புரியும் விதம், கருணை, அவனது பேராற்றல் போன்றவற்றையும், புராணக் கூறுகளையும், சமய தத்துவக் கருத்துக்களையும் கொண்டனவாக வைணவ சமயம் சார்ந்த மாலை இலக்கிய நூல்கள் அமைந்துள்ளன.

மாலை இலக்கிய நூல்கள் பட்டியல் - வைணவ சமயம்

வைணவ சமயம் சார்ந்து பல மாலை நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் சில..

வரிசை எண் நூல் பெயர் ஆசிரியர் பெயர்
1 அணிமாமால் மங்கைத் தாயார் மாலை பள்ளி கொண்டான் பிள்ளை
2 அரங்கர் அன்னை அடைக்கல மாலை பள்ளி கொண்டான் பிள்ளை
3 அரங்கர் அப்பன் அடிப்புகழ்ச்சி மாலை பள்ளி கொண்டான் பிள்ளை
4 அரங்கர் அலங்கார மாலை சோ. நாராயணசுவாமிகள்
5 அரங்கேசர் மாலை முத்து கிருஷ்ண நாவிதர்
6 அருள் சக்கிரபாணிசுவாமி மாலை குணபதி சுவாமிகள்
7 அலர்மேல் மங்கை மாலை இராமதாஸ்
8 அலர்மேல் மங்கைத் தாயார் மாலை பள்ளி கொண்டான் பிள்ளை
9 அலர்மேல் மங்கை நாயகி மாலை ஐயாச்சாமி முதலியார்
10 அழகர் சோடசகசக மாலை ஆளவந்தார்
11 அழகர் தூது மாலை சுந்தரராச வைணவதாசர்
12 ஆஞ்சநேய மாலை பெருமாள் ஐயங்கார்
13 ஆண்டாள் சந்திரகலா மாலை திருவடிதாசர்
14 ஆதிகேசவ மாலை இராசகோபாலதாசன்
15 ஆழ்வார்கள் அருள் மாலை சாமி சிதம்பரனார்
16 ஆழ்வார்கள் உயிர்வருக்க மாலை கா.ரா. கோவிந்தராச முதலியார்
17 யதீந்திர மாலை ஆளவந்தார்
18 உபதேச மாலை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
19 உபதேச ரத்தின மாலை மணவாள மாமுனிகள்
20 ருக்மணித்தாயார் மாலை பள்ளி கொண்டான் பிள்ளை
21 உலகளந்த பெருமாள் மாலை பள்ளி கொண்டான் பிள்ளை
22 என்னைப் பெற்ற தாயார் மாலை பள்ளி கொண்டான் பிள்ளை
23 ஐம்படை மாலை பள்ளி கொண்டான் பிள்ளை
24 கம்பர் மாலை திருமலை ஐயங்கார்
25 கருடன் வருக்க மாலை திருமலை ஐயங்கார்
26 கனகவல்லித் தாயார் மாலை பள்ளி கொண்டான் பிள்ளை
27 காரமடை ரங்கநாதர் மாலை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
28 குஞ்சரி மாலை இராமசாமி ஐயங்கார்
29 கோதைநாயகித் தாயார் மாலை பள்ளி கொண்டாள் பிள்ளை
30 சந்திரகலா மாலை ஆழ்வார்நகர் சடகோபன்
31 சடகோப மாலை பெருமாள் ஐயங்கார்
32 சடகோபன் சந்திரகலா மாலை அநந்தாசிரியர்
33 சீரங்கநாயகி மாலை ஐயாசாமி முதலியார்
34 சீரங்கநாயகி மாலை கோவிந்தப் பிள்ளை
35 சீரங்கநாயகி மாலை சீனிவாசாசாரியார்
36 குடிக் கொடுத்த நாச்சியார் தோத்திர மாலை அ.ரா. சுப்பையங்கார்
37 திருச்சின்னமாலை வேங்கடநாதாசாரியார்
38 திருப்புல்லாணி மாலை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
39 திருமகள் மாலை முத்தாண்டவராயர் பிள்ளை
40 திருமகள் மாலை இராகவன் முத்து
41 திருமயநல்லூர் அழகியவரதர்மாலை பெரியநாயகப் பெருமாள் நாயுடு
42 திருமாலை தொண்டரடிப் பொடியாழ்வார்
43 திருமலை அலர்மேல்மங்கை நாயகி மாலை ஐயாசாமி முதலியார்
44 திருமலை சிங்கார மாலை பாலசுப்பிரமணிய முதலியார்
45 திவ்வியப் பிரபந்த மாலை பி.பி. அண்ணங்கராசாரியார்
46 திருவரங்கச் சிலேடை மாலை அனந்தகிருஷ்ண ஐயங்கார்
47 திருவரங்கத்து மாலை பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
48 திருவடிச் சிலேடை மாலை கிருட்டிணமாசாரியார்
49 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மாலை சௌரிப் பெருமாள் தாசர்
50 திருவிடந்தைக் கோவிந்த ராச மாலை தெய்வநாயகப் பெருமாள் நாயுடு
51 திருவேங்கடமாலை பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
52 தோதாத்ரிப் பட்டர்பிரான் யோகி மாலை தெய்வநாயகப் பெருமாள் நாயுடு
53 தோத்திரச் செய்யுள் மாலை திருவேங்கடவன்
54 திருவேங்கடமாலை கவிகுஞ்சர பாரதி
55 திருவேங்கட வர்க்க மாலை ஈ.வேங்கடாசலன்
56 திருக்கண்ணமங்கை மாலை வீரராகவ முதலியார்
57 தில்லை கோவிந்தராச மாலை மாதவநாயுடு
58 திருவாய் மொழி வாசக மாலை திருக்கோளேரி தாஸர்
59 திவ்வியதேச மாலை அநந்த கிருட்டிண ஐயங்கார்
60 நம்மாழ்வார் நான்மணிமாலை பள்ளிகொண்டான் பிள்ளை
61 ஸ்ரீநிவாச மாலை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
62 நவரத்தின மாலை பிள்ளை லோகாசாரியர்
63 பஞ்சரத்திரன மாலை காசிக்கலியன் கவிராயர்
64 பார்த்தசாரதி மாயவன் மாலை பள்ளி கொண்டான் பிள்ளை
65 பார்த்தசாரதி பரஞ்சுடர் மாலை பள்ளி கொண்டான் பிள்ளை
66 பெருந்தேவித் தாயார் மாலை பள்ளி கொண்டான் பிள்ளை
67 மணவாள மாமுனிகள் நான்மணிமாலை பள்ளி கொண்டான் பிள்ளை
68 மணவாள மாமுனிகள் மாலை மணவாளமாமுனி ஐயர்
69 மாணிக்க மாலை அழகியமணவாளப் பெருமாள்
70 மாறன் இரட்டைமணிமாலை திருமலை ஐயங்கார்
71 மாறன் இரட்டைமணிமாலை திருக்குருகைப் பெருமாள் கவிராயர்
72 வார்த்தமாலை ஜீயர்
73 விஷ்ணு துவாதச மாலை பெருமாள் ஐயங்கார்
74 வேங்கடேசப் பெருமாள் போற்றி மாலை ஐயுலுநாயக்கர்
75 வீரராகவப் பெருமாள் மாலை பள்ளிகொண்டான் பிள்ளை
76 வேங்கடேசர் பல்சந்த மாலை விலட்சணாந்தர்
77 வேதநாராயணன் போற்றி மாலை சீனிவாச தாத்தாச்சாரியார்
78 வேதவல்லித் தாயார் மாலை பள்ளி கொண்டான் மாவை
79 அகராதி மாலை நீலகண்டதாசர்
80 அங்க மாலை நீலகண்டதாசர்
81 அணிமாமலர் மங்கைத் தாயார் மாலை பள்ளி கொண்டான் பிள்ளை
82 அந்தாதி மாலை கிருஷ்ணன்
83 அனுவாதநூல் மாலை ரமண மகரிஷி
84 அரங்க அன்னை அடைக்கல மாலை பள்ளிகொண்டான் பிள்ளை
85 அரங்கர் அப்பன் அடிப்புகழச்சி மாலை பள்ளிகொண்டான் பிள்ளை
86 அரங்கர் அலங்காரமாலை சோ. நாராயணசுவாமிகள்
87 அரங்ககேசர் மாலை முத்து கிருஷ்ண பாகவதர்
88 அருட்சக்கரபாணிச் சுவாதி மாலை குணபதிசுவாமிகள்
89 அருட்பா மாலை அழகிய திருச்சிற்றம்பல அடிகள்
90 அழகர் மாலை நற்றமிழன்பர்கள்
91 தோத்திர மாலை ஸ்ரீமான் எஸ். ஸ்ரீநிவாஸய்யங்கார்
92 தொண்டர் மாலை ஸ்ரீ பண்டித சிந்தாமணி கோபாலய்யங்கார்
93 கம்பர் மாலை ராமஸ்வாமி அய்யங்கார்
94 பரிமுக மாலை ஸ்ரீநிவாஸ ராகவாச்சாரியார்
95 ஸ்ரீஆண்டாள் மாலை திருமலை அய்யங்கார்
96 ஸ்ரீபார்த்தசாரதி மாலை கே.ஆர். ராமாநுஜம்
97 திருவருண்மாலை ஆர்.கேசவய்யங்கார்
98 புகழ் மாலை தமிழன்பர
99 ஸ்ரீவீரராகவமாலை இரா. கிருஷ்ணய்யங்கார்
100 திருமாமகள் மாலை எம். கிருஷ்ணஸ்வாமி அய்யர்
101 திருநரசிங்கர் மாலை ஆர். ராமஸ்வாமி அய்யர்
102 அழகியசிங்கர் மாலை பி. கிருஷ்ணஸ்வாமி அய்யர்
103 பொய்கையார் மாலை இராமாநுஜய்யங்கார்
104 ஸ்ரீஆண்டாள் சந்திரகலா மாலை சிறந்த தேசிக பக்தர்
105 வாரணமாயிர மாலை பி.எஸ். திருமலை அய்யங்கார்
106 ஸ்ரீபார்த்தசாரதியம்மான் பாமாலை பி.எஸ். கோவிந்ததாஸ அய்யங்கார்
107 திருச்சின்னமாலை கே. துரைசாமி அய்யங்கார்
108 திருவேங்கடவர் மாலை நான்மறையாளர்கள்
109 மார்கழி மாலை அச்சுத கோபாலச்சாரியார்
110 மதுரகவி மாலை எஸ். ஸ்ரீநிவாஸாசாரியர்
111 திருவருட் சதக மாலை என். கிருஷ்ணய்யங்கார்
112 சீரொன்று தூப்புற்றிவியன் மாலை அருள் வரதரடியார்
113 மும்முறை தெளிவுப் பொருள் மூதுரை மாலை ஆதி நாராயணசுவாமி ரெட்டியார்
114 அருளாளர் மாலை திண்டுக்கல் ராமஸ்வாமி அய்யங்கார்
115 பூங்கோதை மாலை பி.எஸ். கிருஷ்ணய்யங்கார்
116 பூமகள் மாலை பி. கோபாலாச்சாரியார்
117 இடைப்பிள்ளை மாலை பி.ஏ. சந்தானமய்யங்கார்
118 செந்தாமரையான் மாலை என். கிருஷ்ணஸ்வாமி அய்யர்
119 பெரிய பிராட்டியார் மாலை ஆர். கோபாலஸ்வாமி அய்யங்கார்
120 தேசிகரந்தாதி மாலை நரசிம்மாசாரியர்
121 இராமாவதார மாலை பி. நாராயணஸ்வாமி அய்யர்
122 ஸ்ரீவீரராகவ மாலை லக்ஷ்மி நரசிம்ஹப் பிள்ளை
123 ஆனை பரிதேரின் மேலழகர் மாலை என். கிருஷ்ணமாச்சாரி
124 வாழித்திருநாமப் பாமாலை என். கிருஷ்ணமாச்சாரி
125 அத்திகிரி வரதன் அந்தாதி மாலை அருள் வாதரடியார்
126 வேங்கடகிருஷ்ணன் மாமணிமாலை மூவந்தனர்
127 ஸ்ரீபெரும்புதூர் வள்ளல் மாலை அடியார்க்கு நல்லவர்
128 தசாவதார மாலை மாலோலன் மானடியார்
129 ஸ்ரீவிஜயராகவ மாலை மாலோலன் மானடியார்
130 சூடிக்கொடுத்த சுடர்க்கொடி மாலை மாலோலன் மானடியார்
131 ஸ்ரீவரதராஜ மாலை மாலோலன் மானடியார்
132 கோதை நாயகித் தாயார் மாலை கே. நரசிம்மய்யங்கார்
133 சரணாகதி மாலை கே. பாஷ்யம் அய்யங்கார்
134 திருவடி மாலை கே. துரைஸ்வாமி அய்யங்கார்
135 திருமலை மாலை வி.வி. பாஷ்யம் அய்யங்கார்
136 வேத முடித்தேசிக மாலை சிறந்த தேசிக பக்தர்
137 திருவத்திகரித் திருமாலை ப.ரெ. திருமலை அய்யங்கார்
138 பெருந்தேவித் தாயார் மாலை எஸ். பார்த்தசாரதி அய்யங்கார்
139 திருவாதி மாலை டாக்டர். ஐ. வெங்கடேசய்யர்
140 கல்யாணி மாலை கிருஷ்ணமாசாரியார்
141 ஹயக்கிரீவ மாலை வி. கிருஷ்ணஸ்வாமி சர்மா
142 சொன்ன வண்ணஞ் செய்த பெருமாள் மாலை ப.ரெ. திருமலை அய்யங்கார்
143 வேதாந்த குருமாலை வரதாசாரியார்
144 திருக்கோவிலூர் ஆயனார் மாலை கைலாஸமய்யர்
145 திருநின்றவூர் என்னைப் பெற்ற தாயார் மாலை கொத்தமங்கலம் சுப்பு
146 ஸ்ரீரங்கராஜ மாலை ஸ்ரீஆண்டவன் திருவடி
147 அற்புத கேஸரி மாலை பி.ஏ. சந்தானம் அய்யங்கார்
148 ஸரோஜா மாலை எஸ். கிருஷ்ணய்யர்
149 நல்வழி மாலை பி.ஏ. செல்வஸ்வாமி அய்யங்கார்
150 திருவேங்கடவன் திருக்குறட்பா விளக்க மாலை திருமலை அய்யங்கார்
151 அலங்காரர் மாலை பி.எஸ். கிருஷ்ணய்யங்கார்
152 தாம்பூல மாலை இளைஞர்
153 பெரியபெருமாள் மாலை ஸ்ரீநிவாஸ கோபாலய்யங்கார்
154 உத்தமன் சிறுவன் உவனிய மாலை பாலகிருஷ்ண சாஸ்திரி
155 ஸ்ரீரங்கநாயகியார் மாலை வி.எஸ். நரசிம்மன்
156 சகலகலா வல்லி மாலை நீலகண்ட சாஸ்திரியார்
157 இளையாழ்வார் மாலை பாஷ்யம் செட்டியார்
158 பெரிய திருவடி மாலை ப.ரெ. திருமலை அய்யங்கார்
159 ஆரணதேசிகன் அடைக்கல மாலை செந்தமிழ்ச் செல்வர்
160 சிறிய திருவடிமாலை கே.எஸ். ராஜகோபாலய்யங்கார்
161 ஸ்ரீ கண்ணபிரான் மாலை கே.எஸ். வாஞ்சி அய்யர்
162 ஸ்ரீசடகோப மாலை ரங்காச்சாரியார்
163 வைராக்கிய மாலை வி.எஸ். திருவேங்டத்தான்
164 முத்திருப்பதிற் திருப்புகழ்மாலை ஸ்ரீவைஷ்ணவதாஸர்
165 வேதாந்ததேசிகர் வைபவமாலை ஆர்.எஸ். அய்யங்கார்
166 திருத்தாள் மாலை பஞ்சாமிருதம்
167 முருகதாசர் தேசிக மாலை வி.எஸ். சிங்காரவேலு முதலியார்
168 கன்னித் திருவோணத்தாள் மாலை டாக்டர் கே. ராமஸ்வாமி அய்யங்கார்
169 ஸ்ரீகுணசேகரத்தான் மாலை சிறந்த ஆண்டவன் திருவடி
170 அபியுக்தர் மாலை ஸ்ரீநிவாஸலு நாயுடு
171 உலகளந்த உத்தமன் மாலை எஸ்.வி. ராமாநுஜம் அய்யங்கார்
172 திரு நதிமாலை நரசிம்மாச்சாரியார்
173 திருமலை ஆறு பதினெட்டடிப் பாமாலை ப.ரெ. திருமலை அய்யங்கார்
174 சவரிமோக்க நவ மணி மாலை எஸ். சேஷாசாரியார்
175 தேசிகபக்த சிகாமணிமாலை கே. துரைஸ்வாமி அய்யங்கார்
176 திருப்பாவை மாலை ஸௌந்திரராஜன்

உசாத்துணை


✅Finalised Page