under review

புதுமைப்பித்தன் கதைகள் பாடநீக்கம்

From Tamil Wiki

புதுமைப்பித்தன் கதைகள் பாடநீக்கம் (2014) சென்னை பல்கலைக் கழகம் அதன் பாடத்திட்டத்தில் இருந்து புதுமைப்பித்தனின் இரண்டு கதைகளை நீக்கியது. அதையொட்டி விவாதம் உருவானது. அது பிழையான வாசிப்பின் விளைவு என நவீன இலக்கியவாதிகள் கண்டித்தனர்.

பாடநீக்கம்

புதுமைப்பித்தன் எழுதிய 'துன்பக்கேணி', வண்ணநிலவன் எழுதிய 'கடல்புரத்தில்' ஆகிய இரு கதைகளையும் சென்னை பல்கலையில் முதுகலைப் படிப்புக்குப் பாடநூலில் இருந்து நீக்கம் செய்யவேண்டும், அக்கதைகள் தலித்துக்களுக்கு எதிரானவை என்று ஒரு தலித் செயல்பாட்டாளர் உயர்நீதிமன்றத்தில் புகார் தொடுத்தார். அக்கோரிக்கையை ஏற்று சென்னை பல்கலைக்கழகம் அந்த கதைகளை மார்ச் 3, 2014-ல் திரும்பப் பெற்றுக் கொண்டது. கூடவே எவரும் புகார் கொடுக்காமலேயே புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதையையும் திரும்பப் பெற்றுக்கொண்டது. அக்கதைகள் தலித் மாணவர்களுக்குச் சங்கடத்தை உருவாக்கும் என்று துணைவேந்தர் இரா.தாண்டவன் குறிப்பிட்டார்.

எதிர்ப்பு, விளக்கம்

இந்த தடைநீக்கத்தை கண்டித்து நவீன எழுத்தாளர்கள் பதிலுரைத்தனர். தலித் கோட்பாட்டாளரான து. ரவிக்குமார் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

புதுமைப்பித்தன் நூல்களின் பதிப்பாளரான காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் சுந்தரம் எழுதிய மறுப்பில் துன்பக்கேணி கதை தலித் மக்கள் சுரண்டப்பட்டதற்கு எதிராக அவர்களின் அவல நிலையை சுட்டிக்காட்டி அறச்சீற்றத்துடன் எழுதப்பட்ட ஆக்கம் என்றும், பொன்னகரம் கதை தலித் மக்களை குறிப்பிடும் கதையே அல்ல என்றும், இந்த நீக்கங்கள் இலக்கியத்தை கல்வித்துறை தவறாகப் புரிந்துகொள்வதன் விளைவாக நிகழ்வதாகவும் குற்றம் சாட்டினார்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Aug-2025, 14:13:49 IST