under review

திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளை

From Tamil Wiki
திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்
திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளை, நன்றி - மங்கல இசை மன்னர்கள்

திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளை (1903-அக்டோபர் 21, 1958) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

திருவாரூர் மாவட்டத்தில் திருக்களர் என்ற ஊரில் 1903-ம் ஆண்டு நாதஸ்வரக் கலைஞர் அய்யாக்கண்ணு பிள்ளை - தையல்நாயகி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள்:

  • தெய்வயானை அம்மாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் தேவப்பட்டணம் விஸ்வநாத பிள்ளை)
  • அஞ்சம்மாள் (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் புத்தூர் கடைத்தெரு வடிவேல் பிள்ளை)
  • கருப்பையா பிள்ளை (விவசாயம்)
  • ஷண்முகசுந்தரம் பிள்ளை (நாதஸ்வரம்)

கோவிந்தஸ்வாமி பிள்ளை கோட்டூர் சௌந்தரராஜ பிள்ளையிடம் நாதஸ்வரம் பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

தவில்கலைஞர் தஞ்சாவூர் நாகலிங்கம் பிள்ளையின் மகள் செல்லம்மாளை மணந்தார். இவர்களுக்கு குழ்ந்தைகள் இல்லை.

இசைப்பணி

கோவிந்தஸ்வாமி பிள்ளையின் ஒற்றை நாதஸ்வர வாசிப்பில் ஏழெட்டு நாதஸ்வரங்கள் இசைக்கும் ஒலி ஒலிக்கும். கீர்த்தனைகளில் அழகான பொருத்தமான சங்கதிகளை அடுக்கடுக்காக இசைப்பதில் வல்லவர்.

கோவிந்தஸ்வாமி பிள்ளை காரைக்குடி, தேவகோட்டை போன்ற செட்டிநாட்டு ஊர்களில் பல தங்கப்பதக்கங்களும் சாதராக்களும் பரிசாகப் பெற்றிருக்கிறார்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மாணவர்கள்

திருக்களர் கோவிந்தஸ்வாமி பிள்ளையிடம் கற்ற மாணவர்களில் முக்கியமானவர் கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை.

மறைவு

அக்டோபர் 21, 1958 அன்று கோவிந்தஸ்வாமி பிள்ளையும் அதன் பின்னர் ஒரு வாரத்தில் அவரது மனைவியும் மறைந்தனர்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page