தன்ராஜ் மணி
தன்ராஜ் மணி (பிறப்பு: ஜூன் 18, 1976) தமிழ் எழுத்தாளர். .தமிழ் இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதிவருகிறார். சிறுகதை தொகுதி வெளிவந்துள்ளது.
பிறப்பு, கல்வி
தன்ராஜ் மணி சேலம் மாவட்டத்தில் எஸ்.வி.மணி - காஞ்சனா இணையருக்கு ஜூன் 18, 1976-ல் பிறந்தார். உடன் பிறந்தோர் மூவர். தன்ராஜ் மணி உயர்கல்வியை பாலமந்திர் பள்ளியிலும் செயின்ட் பால் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைப் பள்ளி படிப்பையும் முடித்தார். சேலம் அரசுக் கலைக்கல்லூரியில் விலங்கியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிரிட்டனின் பக்கிங்ஹாம் நியூ பல்கலைக்கழகத்தில் வணிக தரவு தொழில்நுட்ப பிரிவில் (Business Information Technology) முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
தன்ராஜ் மணி லக்ஷ்மிப்பிரியாவை பிப்ரவரி 25, 2002-ல் மணந்தார். மகன்கள் ஆதித், அகில்.
தன்ராஜ் மணி குடும்பத்துடன் பிரிட்டனில் வசிக்கிறார்
இலக்கிய வாழ்க்கை
தன்ராஜ் மணியின் முதல் படைப்பு 2014-ல் சொல்வனம் இதழில் வெளியான பயணக்கட்டுரை. தன்ராஜ் மணி மின்னிதழில் தொடர்ந்து சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரது படைப்புகள் சொல்வனம், அம்ருதா, அகழ், பதாகை, அரூ, தமிழினி இதழ்களில் வெளிவந்துள்ளன.
அரூ இணைய இதழ் நடத்திய அறிபுனை சிறுகதை போட்டியில் 2020-ம் ஆண்டுக்கான முதல் பரிசை தன்ராஜ் மணி எழுதிய, "ஒழிவில் உடனாய் காலமெல்லாம் மன்னி" சிறுகதை வென்றது. தன்ராஜ் மணி ஆதர்ச படைப்பாளிகளாக புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், இசை, கபிலர், கம்பன் மற்றும் ஆழ்வார்களைக் குறிப்பிடுகிறார்.
நூல்கள்
சிறுகதை தொகுப்பு
- சாம்பனின் பாடல் (யாவரும் பதிப்பகம், 2021)
இணைப்புகள்
- சாம்பனின் பாடல் சிறுகதை தொகுப்பு குறித்து ரா. கிரிதரனின் மதிப்புரை
- அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020 முடிவுகள்
- தன்ராஜ் மணி கதைகள்: அரூ இதழில்
- சொல்வனம் இதழ்: தன்ராஜ் மணி படைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jun-2026, 17:33:19 IST
