under review

வேளாதத்தர்

From Tamil Wiki

வேளாதத்தர் (மதுரை வேளாதத்தர்) சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது

வாழ்க்கைக் குறிப்பு

வேளாதத்தர் மதுரையில் பிறந்தவர். தத்தன் என்பது இயற்பெயர். வேளாளன் தத்தன் என்பது வேளாதத்தன் என்று மருவியதாக சிலர் கூறுவர்.

இலக்கிய வாழ்க்கை

வேளாதத்தர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் 315-ஆவது பாடலாக உள்ளது. குறிஞ்சித் திணைப் பாடல். ”வரைவிடை ஆற்றகிற்றியோ என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது” என்ற துறையில் வரும். தலைவன் பிரிவால் வாடும் தலைவியை நெருஞ்சி மலருக்கு ஒப்பாக கூறப்பட்டது.

பாடல் வழி அறிய வரும் செய்திகள்
  • நெருஞ்சி மலர் காலையில் கிழக்குத் திசையில் மலர்ந்து, கதிரவன் இயங்கும் திசையையே நோக்கித் தானும் இயங்கும். மாலையில் கதிரவன் மறைந்தவுடன் நெருஞ்சி மலர் கூம்பிவிடும்.

பாடல் நடை

  • குறுந்தொகை 315 (திணை: குறிஞ்சி)

எழுதரு மதியங் கடற்கண் டாஅங்
கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன்
ஞாயி றனையன் தோழி
நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே.

உசாத்துணை


✅Finalised Page