under review

வெண்கொற்றன்

From Tamil Wiki

வெண்கொற்றன் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

வெண்கொற்றன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். கொற்றன் என்பது இயற்பெயர். வெண் என்பது சிறப்புப் பெயராக இருக்கலாம்.

இலக்கிய வாழ்க்கை

வெண்கொற்றன் எழுதிய பாடல் ஒன்று குறுந்தொகையில் 86-வது பாடலாக உள்ளது. தலைவன் பிரிவைத் தாங்கிக்கொள்ள மாட்டாள் என்று கவலைப்பட்ட தோழியிடம் தலைவி சொல்வதாக பாடல் உள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • கூதிர்காலம்: பெரிய மழைத்துளிகளை வாடைக்காற்று வீசித் தூவும். குளிர்ந்த ஊதைக் காற்று வீசும். இப்பருவத்தில் ஈ முதலிய சிற்றுயிர்களின் தோற்றம் மிகுதி.
  • நுளம்பு பசுவைக் கடிக்கும்போதெல்லாம் அது கடித்த இடத்தை தலையை உயர்த்தும் போது அது கழுத்தில் கட்டியிருந்த மணி ஒலித்தது. அந்த ஒலியைக் கேட்டு தலைவி காமநோயோடும் தனிமை வருத்துவதால் தலைவி கண்ணீர் துளித்துளியாக விட்டாள்.

பாடல் நடை

சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆனுளம் புலம்புதொ றுளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 19:54:30 IST