வெட்சிக்கரந்தை மஞ்சரி
From Tamil Wiki
- மஞ்சரி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மஞ்சரி (பெயர் பட்டியல்)
வெட்சிக்கரந்தை மஞ்சரி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பல சிறு மலர்களின் தொகுப்பான மலர்க்கொத்தே மஞ்சரி என்பது.பாடல்களைச் மலர்க்கொத்து போல் பாடுவது 'மஞ்சரி’.
அரசன் வெட்சிப்பூ சூடிக்கொண்டு மாற்றாரின் ஆநிரைகளைக் கவர்ந்துவர, ஆநிரைகளை இழந்தவர் கவர்ந்தவரின் ஊருக்கே சென்று தம் ஆநிரைகளை மீட்டிவருவதைப் பாடுவது வெட்சிக்கரந்தை மஞ்சரி. [1] [2][3].
இவற்றையும் காண்க
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
அடிக்குறிப்புகள்
- ↑ பிரபந்த தீபிகை 15,
- ↑ பிரபந்த தீபம் 43
- ↑ முத்துவீரியம், பாடல் 109
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Jan-2023, 18:01:50 IST