under review

ராமானுஜ நூற்றந்தாதி

From Tamil Wiki

ராமானுஜ நூற்றந்தாதி திருவரங்கத்தமுதனார் இயற்றிய அந்தாதி என்னும் சிற்றிலக்கியம். வைணவர்கள் தினமும் ஓதும் பாசுரங்களில் இதுவும் ஒன்று.

நூல் பற்றி

திருவரங்கத்தமுதனார் தன் ஆசிரியர் ராமானுஜர் மீது ராமானுஜ நூற்றந்தாதி பாடினார். இந்நூல் அந்தாதி எனும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. இது நூற்றியெட்டு கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் அமைந்தது. இதில் ராமானுஜர், ஆழ்வார்களையும், சில ஆசார்யர்களையும் புகழ்ந்து பாடியுள்ளார். இந்நூல் திருவரங்கம் கோயில் முன்பு அரங்கேறியது.

ஆழ்வார்கள் அருளிய திவ்வியப் பிரபந்தங்களை நாதமுனிகள் தொகுத்தார். பின்னர் வந்த மணவாள மாமுனிகள் இதில் ராமானுஜ நூற்றந்தாதியையும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தமாகத் தொகுத்தார். நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் நூறு பதிகங்கள் உள்ளன. அதன் ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு பாடல் என்ற முறையில் இந்நூல் பாடப்பட்டது. வடமொழியில் இந்நூலைப் 'பிரபந்த காயத்ரி' என்பர்

பாடல் நடை

 
பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாற னடிப்பணிந் துய்ந்தவன் பல்கலையோர்
தாமன்ன வந்த இராமா நுசன்சர ணாரவிந்தம்
நாமன்னி வாழ்நெஞ் சேசொல்லு வோமவன் நாமங்களே

உசாத்துணை


✅Finalised Page