திருவரங்கத்தமுதனார்
திருவரங்கத்தமுதனார் தமிழ்ப் புலவர், வைணவப் பெரியார்களுள் ஒருவர். ராமானுஜ நூற்றந்தாதி முக்கியமான படைப்பு.
வாழ்க்கைக் குறிப்பு
திருவரங்கத்தில் அணியரங்கத்தமுதனாருக்கு மகனாகப் பிறந்தார். மூங்கிற்குடியில் பிறந்தார். வைணவ சமய நூல்களைக் கற்றார். திருவரங்கம் பெரிய கோயில் ஆசாரியராய் இருந்தார். ’பெரிய நம்பி’ என்பது சிறப்புப் பெயர். இவருடைய வழிமரபினர் திருவரங்கம் வடக்குச் சித்திரை வீதியில் குடியிருந்து கோயில் சிறப்புகளைப் பெற்று வருகின்றனர். திருவரங்கம் கோயிலில் இருந்த ராமானுஜர் மற்றும் கூரத்தாழ்வாருடன் இணக்கமானார். அவர்களை ஆசிரியராகக் கருதினார் என்றும் நம்பப்படுகிறது. திருவரங்கரத்தமுதனாருக்குத் திருவரங்கத் திருக்கோவிலில் சிலை உள்ளது.
இலக்கிய வாழ்க்கை
திருவரங்கத்தமுதனார் தன் ஆசிரியர் ராமானுஜர் மீது [[ராமானுஜ நூற்றந்தாதி ]] பாடினார். இது கலித்துறையில் அமைந்தது. இதில் ராமானுஜர், ஆழ்வார்கள், சில ஆசாரிகளையும் புகழ்ந்து பாடினார். இந்நூல் திருவரங்கர் கோயில் முன்பு அரங்கேறியது. திருப்பதிக் கோவை என்ற பிரபந்தமும் பாடினார்.
பாடல் நடை
ராமானுஜ நூற்றந்தாதி
பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாற னடிப்பணிந் துய்ந்தவன் பல்கலையோர்
தாமன்ன வந்த இராமா நுசன்சர ணாரவிந்தம்
நாமன்னி வாழ்நெஞ் சேசொல்லு வோமவன் நாமங்களே
நூல் பட்டியல்
- ராமானுஜர் நூற்றந்தாதி
- திருப்பதிக் கோவை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Jul-2023, 06:26:26 IST