under review

பொ.மீ. இராமலிங்கக் கவிராயர்

From Tamil Wiki

பொ.மீ. இராமலிங்கக் கவிராயர் (பொ.யு. 20-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். அவதானச் செய்யுள்கள் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

பொ.மீ. இராமலிங்கக் கவிராயர் மதுரை திருமங்கலம் பிரிவு பேரையூரில் அட்டாவதானம் மீனாட்சி சுந்தரக் கவிராயருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையிடம் இயல், இசை, நாடகம் கற்றார். தந்தையிடமிருந்து அவதானக் கலையைக் கற்றார். பேரையூர் பெருநிலக்கிழார் முத்துவிசயத்தும்பையசாமி தும்பிச்சி நாயக்கரின் அவைக்களப்ப்புலவராக இருந்தார்.

கவிராயர் செய்த அவதானங்கள்

  • முதுகில் முறைப்படி எறிகிற சிறுகல், நெல்லை மொத்தம் சேர்த்து வைத்து தனித்தனியாக சொல்லுதல்.
  • இடைநடுவே ஒருவர் சொல்லிய தமிழ்ச்சொல்லை சிறிது நேரம் பொறுத்துச் சொல்லியவர் கேட்கும்போது தவறாது கூறல்.
  • கணக்குகளை ஒற்றையொழுகுத்தொகை, இரட்டையொழுகுத்தொகை, படியடித்தொகை இவைகளை தனித்தனி ஆயிரத்திற்குள் கேட்டால் மொத்தமாக ஒப்புவித்தல்
  • ஒற்றைவினாக் கணக்கு தீர்த்து விடை பகர்தல்
  • இருபது எழுத்துகளுக்குள் அடங்கக்கூடிய ஒரு தமிழ் மொழியை அல்லது செய்யுளை ஒருவர் எழுதிக் கொண்டு எழுத்துக்களை மாற்றி மாற்றிச் சொன்னால் அதை முறைப்படி சொல்லுதல்
  • ஒருவர் சொல்லிய தொகை எதுவோ அதனை மனைக்கு மனை மாறுபாடாக வந்த தொகை வராதபடி எழுதச் செய்து எவ்வரிசையில் நான்கு நான்கு மனையாய்ப் பார்க்கினும் சொல்லிய தொகை வரும்படி படைத்தல்
  • நூல்கள், பாடல்களைச் சொல்லி பொருளுரைத்தல்
  • எட்டெழுத்தாணிச் செய்யுள் சொல்லுதல்

இலக்கிய வாழ்க்கை

அவதானச் செய்யுள்கள் இயற்றினார். ஆசிரிய விருத்தச் செய்யுள்களில் பாடல் பாடினார். 1929-ல் அவதானம் செய்து பெருநிலக்கிழார் முத்துவிசயத்தும்பையசாமி தும்பிச்சியிடம் மதிப்புரை வாங்கினார். டிசம்பர் மாதம் 1926-ல் மதுரை தெற்கு சித்திரைத்தெருவில் வெள்ளியம்பலத்தில் அட்டாவதானச் செய்யுள் பாடினார். அங்கிருந்த வேம்பத்தூர் சிலேடைப்புலி பிச்சுவையர் மகனாகிய பாஸ்கரைய்யரிடம் பாராட்டு பெற்றார்.

பாராட்டியவர்கள்

  • முத்துவிசயத்தும்பையசாமி தும்பிச்சி
  • பாஸ்கரைய்யர்
  • விருதுநகர் ராமசாமிச்செட்டியார்
  • மதுரை சுப்பையர்
  • பேரையூர் மகாலிங்கம் செட்டியார்
  • மதுரை அம்மையப்ப பிள்ளை
  • சூரிய நாராயண செட்டியார்
  • ஸ்ரீவில்லிபுத்தூர் குருசாமி பாரதி
  • மதுரை சாமிநாதத் தம்பிரான்
  • சாலிச்சந்தை பேரம்பல நாடார்

பாடல் நடை

அவதானச் செய்யுள்

சீர்கொண்ட கடகரட தடவிகட வாரணத்
திவ்யமுக னைப்பணிந்து
திசைக்கரி பயத்தொடு திகைத்திட முகிற்றிரள்
சிதைந்திட வரைக்கு லங்கன்

உசாத்துணை


✅Finalised Page