under review

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர்

From Tamil Wiki
சர்க்கரைப்புலவர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சர்க்கரைப்புலவர் (பெயர் பட்டியல்)

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கியங்கள் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் இராமநாதபுரம் கடாரம் எனும் ஊரில் சாந்தா பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சிவக்கொழுந்து தேசிகரின் மாணவர். திருமலை சேதுபதிகளின்(1845-1670) ஆதரவைப் பெற்றவர். பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவரின் மகன்கள் சாந்துப்புலவர், சீனிச்சர்க்கரைப் புலவர், சீனிப்புலவர், முத்துமுருகப் புலவர், கம்பையூர் சர்க்கரைப்புலவர்.

இலக்கிய வாழ்க்கை

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் 'திருச்செந்தூர்க்கோவை', சேதுபதி அமைச்சர் தாமோதரன்மீது 'கேள்விக்கோவை', 'வேதாந்த சூடாமணி', 'சித்தாந்த உரை' ஆகிய நூல்களை இயற்றினார்.

மறைவு

பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் 1801-ல் தன் மகன் சாந்துப்புலவர் சிவகங்கை மருதுபாண்டியரின் பகைவர் கையில் சிக்குண்டதை அறிந்து வருந்தி சிறுகம்பையூரில் காலமானார்.

நூல் பட்டியல்

  • திருச்செந்தூர்க்கோவை
  • சேதுபதி அமைச்சர் தாமோதரன் கேள்விக்கோவை
  • வேதாந்த சூடாமணி
  • சித்தாந்த உரை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Sep-2023, 08:26:05 IST