under review

பொன்னாகனார்

From Tamil Wiki

பொன்னாகனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பொன்னாகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

பொன்னாகனார் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான குறுந்தொகையில் 114-வது பாடலாக உள்ளது. தோழி கூற்றாக அமைந்த இப்பாடல் நெய்தல் திணையில் அமைந்தது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • நெய்தல் நிலத்தில் சிறிய வீடுகட்டி உணவு சமைத்து பாவையைத் தன் சிறு பிள்ளையாக கற்பனை செய்து விளையாடும் விளையாட்டை இளம்பெண்கள் விளையாடுவர். அவ்வாறு பாவை விளையாடும் தோழி தலைவன் தலைவியை சந்தித்து முடித்த பின் விரைவில் வீடு திரும்ப வேண்டும், இல்லையேல் ஆரல் மீனை உண்ணும் நாரைகள் அவளின் பாவையை மிதித்துவிடும் என தலைவனுக்குக் குறிப்புணர்த்தியதாக பாடல் அமைந்துள்ளது.
  • நெய்தல்: ஆரல் மீனை உண்ணும் நாரைகள்

பாடல் நடை

  • குறுந்தொகை - 114 (திணை: நெய்தல்)

நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க
செல்கம் செலவியங் கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என்மகள் நுதலே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 20:01:38 IST