under review

புளிமூட்டை ராமசாமி

From Tamil Wiki
ராமசாமிப் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமசாமிப் (பெயர் பட்டியல்)
புளிமூட்டை ராமசாமி

புளிமூட்டை ராமசாமி (டி.ஆர். ராமசுவாமி ஐயர்) (மே 15, 1912 - 1975) தமிழ் நாடக நடிகர், திரைப்பட நடிகர். நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

புளிமூட்டை ராமசாமியின் இயற்பெயர் ராமசுவாமி ஐயர். ராமசாமி மே 15, 1912-ல் தூத்துக்குடியில் பிறந்தார். தந்தை கோயில் குருக்களாக இருந்தவர். டி.கே.எஸ் சகோதரர்களின் கம்பெனி கலைக்கப்பட்டதும் தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்று அங்கேயே திருமணமும் செய்து கோவில் ஒன்றில் பட்டர் வேலையில் சேர்ந்தார். சில மாதங்களில் மனைவி இறந்ததும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

பெயர்க்காரணம்

1941-ல் வெளிவந்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தில் நடிக்கும் போது என்.எஸ். கிருஷ்ணன் இவரை 'புளிமூட்டை' என அழைத்ததால் 'புளிமூட்டை ராமசாமி' என்ற பெயர் நிலைத்தது.

புளிமூட்டை ராமசாமி

நாடக வாழ்க்கை

ராமசாமி தனது 14-ம் வயதில் சொந்த ஊரை விட்டு வெளியேறி பல நாடகக்குழுக்களில் சேர்ந்து பல நாடங்களில் நடித்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் கம்பெனியில் இருந்தார். பின்னர் என்.எஸ். கிருஷ்ணனின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். எஸ்.வி.சுப்பையா, சகஸ்ரநாமம், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர், ஏ.பி.நாகராஜன், பி.வி.நாராயணசாமி ஆகியோருடன் இணைந்து பல நாடகங்களில் நடித்தார். மனோகரா, மேனகா ஆகிய நாடகங்களில் என்எஸ்கே உடன் இணைந்து நடித்தார்.

திரை வாழ்க்கை

புளிமூட்டை ராமசாமி என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த பல திரைப்படங்களில் நடித்தார் 1941-ல் வெளிவந்த 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' படத்தில் ராமசாமி திருடர்களில் ஒருவராக நடித்தார். 'சதிலீலாவதி' திரைப்படத்தில் என்.எஸ்.கே.வுடன் அறிமுகமானார் ராமசாமி. எம்.ஜி.ஆருடன் 'வனமோகினி', 'மருதநாட்டு இளவரசி', 'சர்வாதிகாரி' ஆகிய படங்களில் நடித்தார். ரஞ்சனுடன் 'மங்கம்மா சபதம்' படத்திலும், பொன்னப்ப பாகவதருடன் 'பிரபாவதி' படத்திலும் நடித்தார். 'கன்னியின் காதலி', 'மதன மோகினி', 'நல்ல தம்பி' போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களிலும் நடித்தார்.

மறைவு

புளிமூட்டை ராமசாமி 1975-ல் காலமானார்.

நடித்த திரைப்படங்கள்

  • அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941)
  • கண்ணகி (1942)
  • குபேர குசேலா (1943)
  • மனோன்மணி (1943)
  • ஹரிதாஸ் (1944)
  • பிரபாவதி (1944)
  • தெய்வ நீதி (1947)
  • தன அமராவதி (1947)
  • ராஜகுமாரி (1947)
  • அபிமன்யு (1948)
  • மோகினி (1948)
  • மருதநாட்டு இளவரசி (1948)
  • விசித்ர வனிதா (1948)
  • பில்ஹணா (1948)
  • கன்னியின் காதலி (1949)
  • பாரிஜாதம் (1950)
  • வனசுந்தரி (1951)
  • மணமகள் (1951)
  • சர்வாதிகாரி (1951)
  • குமாரி (1952)
  • மதன மோகினி (1953)
  • நல்ல தங்கை (1955)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Oct-2024, 12:53:49 IST