under review

பிரேமா பிரசுரம்

From Tamil Wiki

பிரேமா பிரசுரம் (1952) எழுத்தாளரும், பதிப்பாளரும், இதழாளருமான அரு. ராமநாதனால் தோற்றுவிக்கப்பட்டது. மர்ம நாவல்கள், புராண நூல்கள், கதை நூல்கள், உலக விஞ்ஞானிகள், சாதனையாளர்கள் எனப் பல்வேறு வகையான தலைப்புகளில், அரு. ராமநாதன் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். அரு. ராமநாதனின் மகனான ரவி ராமநாதனின் மேற்பார்வையில், 70 ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் பிரேமா பிரசுரம் செயல்பட்டு வருகிறது.

அரு. ராமநாதன்

பதிப்பு, வெளியீடு

தான் வெளியிட்ட மர்மக் கதை நூல்களைத் தனிப் புத்தகமாக வெளியிடுவதற்காக, அரு. ராமநாதன், 1952-ல், சென்னை கோடம்பாக்கத்தில் பிரேமா பிரசுரத்தைத் தொடங்கினார். தான் குடியிருந்த வீட்டின் ஒரு பகுதியையே அலுவலகமாக மாற்றிய ராமநாதன், பிரேமா பிரசுரம் மூலம் பல நூல்களைக் குறைந்த விலையில் வெளியிட்டார்.

நூல்களின் வகைகள்

  • சிறார் நூல்கள்
  • கதை நூல்கள்
  • வரலாற்று நூல்கள்
  • பொன் மொழிகள் நூல் வரிசை
  • சிந்தனையாளர் வரிசை
  • மர்ம நாவல்கள்
  • புராண நூல்கள்
  • இலக்கிய நூல்கள்
  • தத்துவ விளக்க நூல்கள்
  • ஜோதிட நூல் வரிசை
  • ஆராய்ச்சி நூல் வரிசை

- எனப் பல்வேறு வகைமைகளில் பிரேமா பிரசுரம் நூல்களை வெளியிட்டது.

பிரேமா பிரசுர நூல்கள்

பிரேமா பிரசுரம் வெளியிட்ட நூல்கள்

சிறார் நூல்கள்
  • ஒட்டுக்குடுமி பட்டுசாமி
  • மர்மக் குதிரைகள்
  • டமாரக் குட்டி
  • தங்கமணி (சிறார் நாவல்)
  • சின்னஞ்சிறு தேவதை
  • நான்கு மேதாவிகள்
  • நீளமூக்கு நெடுமாறன்
  • சிலந்திக் கூடு – பாலர் நாவல்
கதை நூல்கள்
  • விக்கிரமாதித்தன் கதைகள்
  • வேதாளம் சொன்ன கதைகள்
  • மதனகாமராஜன் கதைகள்
  • கதைக்கடல்
  • திராவிட நாட்டுக் கதைகள்
  • குரங்கு மாமுனிவர் கதைகள்
  • ஹாத்திம் தாய்
  • பாட்டி சொன்ன கதைகள்
  • போதிச்சத்துவர் கதைகள்
  • தெனாலிராமனின் கதைகள்
  • இராயர் அப்பாஜி கதைகள்
  • அவந்தி சுந்தரி கதை
  • ஈசாப் கதைகள்
  • பீர்பால் கதைகள்
  • மரியாதைராமன் கதைகள்
  • அறுபத்து மூவர் கதைகள்
  • பைபிள் கதைகள்
  • பன்னிரு ஆழ்வார்கள் கதைகள்
  • சீனத்துச் சிங்காரக் கதைகள்
  • மங்கம்மா சத்திரத்து மனமோகனக் கதைகள் - இரண்டு பாகங்கள்
  • சிந்தைக்கு விருந்தாகும் குட்டிக் கதைகள்
வரலாற்று நூல்கள்
  • ராணி மங்கம்மாள்
  • வீரபாண்டிய கட்டபொம்மன்
  • கூளப்ப நாயக்கன் காதல்
  • வீரபாண்டியன் மனைவி
  • ராஜ ராஜ சோழன் (நாடகம்)
  • வெற்றிவேல் வீரத்தேவன
  • அசோகன் காதலி
சமூக நாவல்கள்
  • குண்டு மல்லிகை
  • நாயனம் சௌந்தரவடிவு
நாடகங்கள்
  • வானவில்
  • சுந்தரமூர்த்தி நாயனார்
சிறுகதைகள்
  • முதற்காதல்
  • முதல் முத்தம்
  • இரண்டாம் முத்தம்
  • லைலா மஜ்னு
  • பில்கணன்
  • மனோரஞ்சிதம்
  • அம்பிகாபதி
  • பழையனூர் நீலி
  • கதாநாயகி
  • அரு.ராமநாதன் சிறுகதைகள்- தொகுதி-1
பொன்மொழி நூல்கள் வரிசை
  • விவேக சிந்தாமணி பொன்மொழிகள்
  • ஒளவையார் பொன்மொழிகள்
  • பஞ்சதந்திரம் பொன்மொழிகள்
  • புத்தர் பொன்மொழிகள்
  • சங்கரர் பொன்மொழிகள்
  • மகாகவி பாரதியார் பொன்மொழிகள்
  • மகாத்மா காந்தி பொன்மொழிகள்
  • இக்பால் பொன்மொழிகள்
  • குர் ஆன் பொன்மொழிகள்
  • அதி வீரராம பாண்டியன் பொன்மொழிகள்
  • பைபிள் பொன்மொழிகள்
  • பாரதிதாசன் பொன்மொழிகள்
சிந்தனையாளர் வரிசை
  • டார்வின்
  • பிளேட்டோ
  • சிரஞ்சீவி
  • கார்ல் மார்க்ஸ்
  • ரூஸோ
  • பெஞ்சமின் பிராங்ளின்
  • மார்கரெட் கசின்ஸ்
  • சிக்மண்ட் ஃப்ராய்ட்
  • மாக்கியவெல்லி
  • சித்தர் பாடல்கள்
மர்ம நாவல்கள்
  • ரத்தப் பசி
  • மர்மத் தீவு
  • காதலன் கொலை வழக்கு (இரண்டு பாகங்கள்)
  • இரட்டைக் கொலை
  • அபாய அறிவிப்பு
  • மர்மக் கொலை
  • துப்பறியும் ராஜு
  • நீதி மயக்கம்
  • நுழையக் கூடாத அறை
  • பாதி வளையல்
  • பேய் வீடு
  • மனம் போல் வாழ்வு
  • ரகசிய அறை
புராண நூல்கள்
  • விநாயக புராணம்
  • விஷ்ணு புராணம்
  • கந்த புராணம்
  • தேவிபாகவதம்
  • சுந்தரரின் பக்தியும் காதலும்
  • பெரிய புராணம் மற்றும் பல

பிரேமா பிரசுரம் பதிப்பித்த எழுத்தாளர்கள்

மதிப்பீடு

குறைந்த விலையில் நூல்களை வெளியிடுவதைத் தனது லட்சியமாகக் கொண்டு பிரேமா பிரசுரம் செயல்பட்டது. பல நூற்றுக்கணக்கான நூல்களைக் குறைந்த விலையில் வெளியிட்டது. சிறார்களுக்கான நூல்கள், மர்ம நாவல்கள், சமூக நாவல்கள், சிறுகதைகள், கட்டுரை நூல்கள், பொன்மொழிகள் வரிசை, சிந்தனையாளர்கள் வரிசை, புராண நூல்கள், ஜோதிட நூல்கள் எனப் பல்வேறு வகைமைகளில் தனது நூல்களை வெளியிட்டது.

அரு. ராமநாதனின் மகனான ரவி ராமநாதனின் மேற்பார்வையில், 70 ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் பிரேமா பிரசுரம் செயல்பட்டு வருகிறது.

உசாத்துணை


✅Finalised Page