under review

பராயனார்

From Tamil Wiki

பராயனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

பராயனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

பராயனார் பாடிய பாடல் நற்றிணையில் 155-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. முன்பு தன்னுடன் கூடிய தலைவியின் தனித்திருக்கும் நிலையை கண்டு தலைவன் பேசுதலும் தலைவி தன் ஏற்புநிலையை குறிப்பால் உணர்த்துவதும் தலைவனது கூற்றாக நெய்தல் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • காதல் கொண்ட மகளிர் தம் தோழியருடன் சேர்ந்து விளையாடுவதில்லை. நெய்தல் பூக்கும் விரிந்த இதழ் கொண்ட தொடலை மலர்களை சூடுவதில்லை. விரிந்த மணற்பரப்பின் மேல் அமைந்த பூமரத்தின் கீழ் தனித்து நிற்பர்.
  • குறையாத பேரழகுடைய அவர்கள் பெருங்கடலின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அணங்குகளை போல காட்சியளிப்பர். கழிமுகத்து அலைகளால் சலனமுறாது நிற்கும் மரங்களை போல இருப்பர்.
  • உவமை: புன்னகையில் தெரியும் தலைவியின் பற்கள் மீன் முள்ளின் வெண்ணிறத்தை ஒத்துள்ளது.

பாடல் நடை

நற்றிணை - 155

  • திணை: நெய்தல்
  • துறை: இரண்டாம் கூட்டத்துத்தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது; உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைவன் சொற்றதூஉம் ஆம்

 ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்,
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய்,
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்!
யாரையோ? நிற் தொழுதனெம் வினவுதும்:
கண்டோர் தண்டா நலத்தை- தெண் திரைப்
பெருங் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ?
இருங் கழி மருங்கு நிலைபெற்றனையோ?
சொல், இனி, மடந்தை!' என்றனென்: அதன் எதிர்
முள் எயிற்று முறுவல் திறந்தன;
பல் இதழ் உண்கணும் பரந்தவால், பனியே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 19:20:33 IST