நாமலார் மகன் இளங்கண்ணன்
From Tamil Wiki
நாமலார் மகன் இளங்கண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
நாமலார் மகன் இளங்கண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இளங்கண்ணன் என்னும் இயற்பெயர் கொண்டவர். நாமலார் என்பது தந்தையின் பெயர்.
இலக்கிய வாழ்க்கை
நாமலார் மகன் இளங்கண்ணன் பாடிய பாடல் குறுந்தொகையில் 250-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. வினைமுடித்து வீட்டிற்கு திரும்பி வரும் தலைவன் தேர்பாகனிடம் மாலை நேரம் வருவதற்குள் விரைந்து வீடு சேருமாறு தேரினை ஓட்டுக என கூறுவதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- மாலை காலத்தில் பருக்கை கற்கள் தேங்கிய குட்டையில் உள்ள நீரை அருந்திய ஆண்மான், பெண்மானோடு துள்ளிக்குதித்து விளையாடும்.
- உவமை: ஆழ்ந்த நீர் நிரம்பிய குளத்தில் உள்ள கயல்மீன்கள் ஒன்றையொன்று எதிர்த்து போரிடுவது போல தலைவியின் கண்கள் துயர்சினத்தால் நிறம் மாறும்.
பாடல் நடை
குறுந்தொகை - 250
- திணை: பாலை துறை: தலைமகன் பாகற்கு உரைத்தது.
பரலவல் படுநீர் மாந்தித் துணையோ
டிரலை நன்மா னெறிமுத லுகளும்
மாலை வாரா வளவைக் காலியற்
கடுமாக் கடவுமதி பாக நெடுநீர்ப்
பொருகயன் முரணிய உண்கண்
தெரிதீங் கிளவி தெருமர லுயவே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- குறுந்தொகை - 250:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jan-2025, 19:19:19 IST