under review

தேவார வைப்புத் தலங்கள்

From Tamil Wiki

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுவை தேவார வைப்புத் தலங்களாகும். வைப்புத் தலம் என்பது தனிப்பதிகம் பெறாது வேற்றூர் தேவாரப் பதிகத்தின் இடையிலும், பொதுப் பதிகத்தின் இடையிலும் தலப் பெயர் பெற்று வரும் தலங்களைக் குறிக்கும் சொல்..

தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கை

தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கையில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. க. வெள்ளைவாரணனாரின்’ பன்னிரு திருமுறை வரலாறு’ நூல், 237 தலங்களை தேவார வைப்புத் தலங்களாகக் கூறியுள்ளது. அண்மைய ஆய்வுகளின் படி தேவார வைப்புத் தலங்களின் எண்ணிக்கை 241 ஆக உள்ளது. 300-க்கும் மேற்பட்ட தேவாரத் திருத்தலங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேவார வைப்புத் தலங்கள் பட்டியல்

எண் தேவாரத் தலத்தின் பெயர் பாடியவர் திருமுறை பதிக எண் பாடலின் எண்
1 அகத்திச்சுரம் அப்பர் 6 71 8
2 அசோகந்தி அப்பர் 6 71 9
6 71 10
3 அக்கீச்சுரம் அப்பர் 6 71 8
4 அணி அண்ணாமலை அப்பர் 4 63 1
4 63 4
5 அண்ணல்வாயில் அப்பர் 6 71 7
6 அத்தங்குடி சம்பந்தர் 2 39 10
7 அத்தீச்சுரம் அப்பர் 6 71 8
8 அத்தி சம்பந்தர் 2 39 2
9 அயனீச்சுரம் அப்பர் 6 71 6
10 அரிச்சந்திரம் அப்பர் 6 51 10
11 அளப்பூர் அப்பர், சுந்தரர் 6 51 3
6 70 4
6 71 4
7 47 4
12 அறப்பள்ளி சம்பந்தர், அப்பர் 2 39 4
5 34 1
6 70 1
6 71 1
13 ஆடகேச்சரம் அப்பர் 6 71 8
14 ஆழியூர் அப்பர், சுந்தரர் 6 70 7
7 12 7
15 ஆறைமேற்றளி சுந்தரர் 7 35 1
16 ஆன்பட்டி (பேரூர்) அப்பர் 6 7 10
17 இராப்பட்டிச்சரம் அப்பர் 6 25 10
18 இடைக்குளம் அப்பர் 6 71 10
19 இடங்கொளூர் அப்பர் 7 31 3
20 இரும்புதல் அப்பர் 6 51 6
21 இடவை அப்பர் 6 70 3
22 இளையான்குடி சுந்தரர் 7 31 1
23 இறையான்சேரி அப்பர் 6 70 4
24 ஈசனூர் சுந்தரர் 7 31 8
25 உஞ்சேனை மாகாளம் அப்பர் 6 70 8
26 உருத்திரகோடி அப்பர் 6 70 8
27 ஊற்றத்தூர் அப்பர் 6 70 10
6 71 4
28 எழுமூர் அப்பர் 6 70 5
29 ஏமநல்லூர் அப்பர் 6 70 4
30 ஏழூர் அப்பர் 6 70 5
31 ஏமப்பேறூர் அப்பர் 6 70 3
32 ஏர் (ஏரகரம்) அப்பர் 6 51 6
6 70 3
33 கச்சிப்பலதளி அப்பர் 6 70 4
34 கச்சிமயானம் அப்பர் 6 97 10
35 கஞ்சாறு அப்பர் 6 70 8
36 கடம்பை இளங்கோவில் அப்பர் 6 70 5
37 கடையக்குடி அப்பர் 6 71 3
38 கண்ணை அப்பர் 6 70 6
39 கந்தமாதனம் அப்பர் 6 71 9
40 கரபுரம் அப்பர் 6 7 7
41 கருந்திட்டைக்குடி அப்பர் 6 71 3
42 கருப்பூர் சுந்தரர் 7 98 3
43 கருமாரி அப்பர் 6 7 11
44 களந்தை சுந்தரர் 7 39 6
46 கழுநீர்க்குன்றம் அப்பர் 6 13 4
47 கறையூர் அப்பர், சுந்தரர் 9 70 10
7 48 1
48 காட்டூர் சம்பந்தர், சுந்தரர் 2 39 7
7 47 1
49 காம்பீலி அப்பர் 6 70 2
50 காரிகரை சுந்தரர் 7 31 3
51 காறை அப்பர் 6 70 6
52 கிள்ளிக்குடி சுந்தரர் 7 12 7
53 கிழையம் சுந்தரர் 7 12 5
54 கீழையில் சுந்தரர் 7 12 7
55 குக்குடேச்சரம் அப்பர் 6 71 8
56 குடப்பாச்சில் சுந்தரர் 7 15 6
57 குணவாயில் அப்பர், சம்பந்தர் 6 71 7
2 39 7
58 குண்டையூர் சுந்தரர் 7 20 1
59 குத்தங்குடி சம்பந்தர் 2 39 10
60 குமரி கொங்கு அப்பர் 6 70 9
61 குரக்குத்தளி சுந்தரர் 7 47 2
62 குருக்கேத்திரம் சுந்தரர் 7 78 6
63 குன்றியூர் சம்பந்தர், அப்பர் 2 39 1
6 70 5
64 கூரூர் சம்பந்தர் 2 39 1
65 கூந்தலூர் அப்பர் 6 70 9
66 கூழையூர் அப்பர் 6 70 9
67 கொங்கணம் அப்பர் 6 70 5
68 கொண்டல் அப்பர், சுந்தரர் 6 51 9
7 12 2
69 சடைமுடி அப்பர் 6 70 3
70 சித்தவடம் அப்பர் 4 2 3
71 சிறப்பள்ளி சம்பந்தர் 2 39 4
72 சிவப்பள்ளி அப்பர் 6 71 1
73 சூலமங்கை அப்பர் 6 70 10
74 செங்குன்றூர் அப்பர் 6 70 5
75 சாலைக்குடி அப்பர் 6 71 3
76 செம்பங்குடி அப்பர் 6 71 3
77 தக்களூர் அப்பர், சுந்தரர் 6 2 1
6 51 8
6 70 3
7 12 1
78 தகட்டூர் சுந்தரர் 7 12 1
79 தஞ்சை சுந்தரர் 7 12 9
80 தஞ்சாக்கை சுந்தரர் 7 12 9
81 தஞ்சை தளிக்குளம் அப்பர் 6 51 8
82 தண்டங்குறை சுந்தரர் 7 12 2
83 தண்டந்தோட்டம் சுந்தரர் 7 12 2
84 தவத்துறை அப்பர் 6 71 11
85 தளிசாத்தங்குடி அப்பர் 6 25 10
86 திங்களூர் அப்பர், சுந்தரர் 6 25 3
7 31 6
87 திண்டீச்சரம் அப்பர் 6 7 8
6 70 9
88 திரிபுராந்தகம் அப்பர் 6 7 5
89 திருமலை சுந்தரர் 7 12 7
90 திருவாதிரையான்பட்டிணம் சுந்தரர் 7 31 6
91 திருவேகம்பத்து அப்பர் 6 70 4
92 திருவேட்டி அப்பர் 6 7 7
93 திருச்சிற்றம்பலம் சுந்தரர் 7 12 4
94 துடையூர் அப்பர் 6 71 4
95 தெள்ளாறு அப்பர் 6 71 10
96 தென்களக்குடி அப்பர் 6 71 3
97 தென்னூர் சுந்தரர் 7 12 6
98 தேவனூர் சுந்தரர் 7 12 6
99 தேனூர் சம்பந்தர், அப்பர் 1 61 9
6 41 9
100 தோழூர் அப்பர் 6 70 5
6 71 4
101 நந்திகேச்சரம் அப்பர் 6 71 8
102 நல்லக்குடி அப்பர் 6 71 1
103 நல்லாற்றூர் அப்பர் 6 71 4
104 நாகளேச்சுரம் அப்பர் 6 71 8
105 நாங்கூர் சுந்தரர் 7 12 4
7 47 6
106 நாலூர் சுந்தரர் 7 31 6
107 நியமம் அப்பர் 6 13 4
108 நெடுவாயில் சம்பந்தர், அப்பர் 2 39 9
6 71 7
109 நெய்தல்வாயில் அப்பர் 6 71 7
110 நெற்குன்றம் சம்பந்தர் 2 39 9
111 நற்குன்றம் சம்பந்தர் 2 39 9
112 பஞ்சாக்கை அப்பர் 6 70 8
113 பரப்பள்ளி அப்பர் 6 71 1
114 பழையாறு சம்பந்தர், அப்பர் 2 39 5
6 13 1
115 பாவநாசம் அப்பர் 6 7 6
116 பிடவூர் அப்பர், சுந்தரர் 6 7 6
6 70 2
7 96 6
117 பிரம்பில் அப்பர் 6 70 6
118 புதுக்குடி அப்பர் 6 71 3
119 புரிசை நாட்டுப் புரிசை சுந்தரர் 7 12 6
120 புலிவலம் அப்பர் 6 51 11
6 70 11
121 பூந்துறை அப்பர் 6 51 11
6 70 11
122 பெருந்துறை அப்பர் 6 70 2
6 71 11
123 பேராவூர் அப்பர் 6 70 2
6 71 4
124 பேரூர் அப்பர், சுந்தரர் 6 51 8
6 70 2
7 47 4
7 90 10
125 பொதியல், பொதியமலை சம்பந்தர், அப்பர் 1 50 10
1 79 1
6 70 8
126 பொன்னூர் நாட்டுப் பொன்னூர் சுந்தரர் 7 12 6
127 பொய்கைநல்லூர் அப்பர் 6 70 11
128 மணற்கால் அப்பர் 6 25 10
129 மந்தாரம் அப்பர் 6 70 6
130 மாதானம் அப்பர் 6 70 8
131 மாகுடி அப்பர் 6 71 3
132 மாணிகுடி அப்பர் 6 71 3
133 மாட்டூர் (சேவூர்) சம்பந்தர், சுந்தரர் 2 39 7
7 47 1
134 முழையூர் அப்பர் 6 70 1
135 மூவலூர் அப்பர் 5 65 8
136 மூலனூர் சுந்தரர் 7 12 3
137 மிழலை நாட்டு மிழலை சுந்தரர் 7 12 5
138 வண்குடி சம்பந்தர் 2 39 10
139 வழுவூர் அப்பர் 6 70 1
6 71 2
140 வளைகுளம் அப்பர் 6 50 8
6 71 10
141 வாதவூர் சம்பந்தர் 2 39 7
142 வாரணாசி சம்பந்தர், அப்பர் 2 39 7
6 70 6
143 வடகஞ்சனூர் சுந்தரர் 7 12 8
144 விடங்களூர் சுந்தரர் 7 31 3
145 வரிஞ்சை சுந்தரர் 7 39 7
146 விராடபுரம் அப்பர் 6 70 6
147 விடைவாய்க்குடி அப்பர் 6 71 3
148 விளத்தொட்டி அப்பர் 6 70 6
149 வெற்றியூர் சம்பந்தர், அப்பர், சுந்தரர் 2 39 6
6 70 8
7 12 3
150 வேதீச்சுரம் அப்பர் 6 70 8
151 வெகுளீச்சுரம் அப்பர் 6 7 11
152 அத்தமயனமலை அப்பர் 6 71 9
153 அமுதனூர் சுந்தரர் 7 12 1
154 அரணநல்லூர் அப்பர் 6 7 7
155 ஆறை சம்பந்தர் 2 39 5
156 இடைத்தானம் அப்பர் 6 70 8
157 இடைப்பள்ளி சம்பந்தர் 2 39 4
158 இளங்கோவில் அப்பர் 6 71 5
159 இளமர் அப்பர் 6 70 4
160 இறைக்காடு சுந்தரர் 7 47 3
161 உண்ணீர் அப்பர் 6 7 7
162 உதயமலை அப்பர் 6 71 9
163 எங்களூர் சுந்தரர் 7 31 6
164 எச்சிலிளமர் அப்பர் 6 70 4
165 ஏறனூர் சுந்தரர் 7 31 9
166 ஏமகூடமலை அப்பர் 6 70 5
6 71 9
6 51 10
167 ஏயீச்சுரம் அப்பர் 6 7 8
168 ஓரேடகம் அப்பர் 6 7 10
169 கச்சையூர் சுந்தரர் 7 31 4
170 கடங்களூர் சுந்தரர் 7 31 3
171 கருகற்குரல் சுந்தரர் 7 47 5
172 காவம் சுந்தரர் 7 31 4
173 காளிங்கம் அப்பர் 6 7 5
174 கீழைவழி சுந்தரர் 7 12 5
175 குன்றையூர் சுந்தரர் 7 39 1
176 குருத்தங்குடி சம்பந்தர் 2 39 10
177 கூறனூர் சுந்தரர் 7 32 9
178 கைம்மை சுந்தரர் 7 12 5
179 கொழுநல் சுந்தரர் 7 47 1
180 கொடுங்கோளூர் அப்பர் 6 70 5
181 கொங்கணம் அப்பர் 6 70 5
182 கோட்டுக்கா அப்பர் 6 7 5
183 கோட்டுக்காடு அப்பர் 6 70 2
184 கோத்திட்டை அப்பர், சுந்தரர் 6 70 3
6 71 2
7 3 1
185 சாலைக்குடி அப்பர் 6 70 3
186 சிறப்பள்ளி சம்பந்தர் 2 39 4
187 சேற்றூர் அப்பர் 6 71 4
188 சையமலை அப்பர் 6 71 10
189 ஞாழல்வாயில் அப்பர் 6 71 7
190 ஞாழற்கோவில் அப்பர் 6 71 5
191 தங்களூர் சுந்தரர் 7 31 6
192 தவப்பள்ளி அப்பர் 6 71 1
193 தாழையூர் சுந்தரர் 7 12 1
194 திருக்குளம் அப்பர் 6 71 10
195 துவையூர் அப்பர் 6 71 4
196 தென்பனையூர் சுந்தரர் 7 12 8
197 தேங்கூர் சுந்தரர் 7 12 4
7 47 6
198 தேசனூர் சுந்தரர் 7 31 8
199 தேரூர் அப்பர் 6 25 3
200 தேறனூர் சுந்தரர் 7 31 9
201 நங்களூர் சுந்தரர் 7 31 6
202 நல்லேமம் அப்பர் 7 12 3
203 நாலாறு அப்பர் 6 71 10
204 நாற்றானம் சுந்தரர் 7 38 4
205 நியமநல்லூர் அப்பர் 6 70 5
206 நிறைக்காடு சுந்தரர் 7 47 3
207 நிறையனூர் சுந்தரர் 7 31 5
208 தீலமலை அப்பர் 6 71 9
209 பந்தையூர் சுந்தரர் 7 31 1
210 பவ்வந்திரி அப்பர் 6 71 6
211 பாங்கூர் சுந்தரர் 7 12 4
212 பாசனூர் சுந்தரர் 7 31 8
213 பாட்டூர் சுந்தரர் 7 47 1
214 பிறையனூர் அப்பர்
215 புற்குடி அப்பர் 6 71 3
216 பூங்கூர் சுந்தரர் 7 12 4
217 பூழியூர் சம்பந்தர் 2 39 8
218 பேறனூர் அப்பர் 6 31 9
219 பொய்கை அப்பர் 6 70 11
220 பொருப்பள்ளி அப்பர் 6 71 1
221 போற்றூர் சம்பந்தர் 2 39 8
222 மகேந்திரமலை அப்பர் 6 71 9
223 மணிமுத்தம் அப்பர் 6 7 6
224 மறையனூர் சுந்தரர் 7 31 5
225 மாகாளேச்சுரம் அப்பர் 6 71 8
226 மாநதி அப்பர் 6 7 4
227 மாநிரூபம் அப்பர் 6 7 12
228 மாவூர் அப்பர் 6 25 3
229 மிறைக்காடு சுந்தரர் 7 47 3
230 முதல்வனூர் சுந்தரர் 7 12 3
231 முந்தையூர் சுந்தரர் 7 31 1
232 வடபேறூர் சுந்தரர் 7 31 4
233 வரந்தை சம்பந்தர் 1 61 3
234 வளவி அப்பர் 6 13 1
235 விந்தமாமலை அப்பர் 6 71 9
236 விளத்தூர் சுந்தரர் 7 12 8
237 வெள்ளாறு சுந்தரர் 7 38 4
238 வேங்கூர் அப்பர், சுந்தரர் 6 70 7
7 47 6
239 வேதம் அப்பர் 6 71 9
240 வேலனூர் சுந்தரர் 7 12 3
241 வேளார் நட்டு வேளூர் சுந்தரர் 7 12 8

தேவார வைப்புத் தலப் பாடல்கள்

சுந்தரர் பாடல்கள்

(சுந்தரர் பதிகம் - ஏழாம் திருமுறை; 47-வது பதிகம்; பாடல் எண் - 1 மற்றும் 2)

காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூர் அரசே கொழுநல் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட்டூரானே
மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே. (1)

கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா
மங்குல் திரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
கங்குல் புறங்காட்டு ஆடீ அடியார் கவலை களையாயே. (2)

திருஞான சம்பந்தர் பாடல்கள்

(திருஞானசம்பந்தர் பதிகம் - இரண்டாம் திருமுறை; 39-வது பதிகம்; பாடல்கள் எண் 1 மற்றும் 2)

ஆரூர் தில்லையம்பலம் வல்லம் நல்லம் வடகச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல்சூழ் தென்கோடி பீடார்
நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும், குருகாவையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே. (1)

அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும்
கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண் ஆர் மொழி மங்கை ஓர் பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே
எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்கடல் நீந்தலாம் காரணமே. (2)

திருநாவுக்கரசர் பாடல்கள்

(திருநாவுக்கரசர் பதிகம் - ஆறாம் திருமுறை; 51-வது பதிகம்; பாடல் எண்-1 - திருவீழிமிழலை தலத்திற்குரிய பதிகம்)

கயிலாயமலை உள்ளார் காரோணத்தார்
கந்தமாதனத்து உளார் காளத்தியார்
மயிலாடுதுறை உளார் மாகாளத்தார்
வக்கரையார் சக்கரம் மாற்கு ஈந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமும் காபாலமும்
அமரும் திருக்கரத்தார் ஆன் ஏறு ஏறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
வீழிமிழலையே மேவினாரே.

உசாத்துணை


✅Finalised Page