under review

ஞானத்தச்ச நாடகம்

From Tamil Wiki

ஞானத்தச்ச நாடகம் மராட்டியர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட நாடக நூல்.

பார்க்க: மராட்டியர் ஆட்சி கால தமிழ் இலக்கியங்கள்

நூல் ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் வேதநாயக சாஸ்திரியார்.

காலம்

ஞானத்தச்ச நாடகம் பொ.யு. 1830-ம் ஆண்டு இயற்றப்பட்டது.

நூல் அமைப்பு

ஞானத் தச்ச நாடகம் ஞானத் தச்சனாகிய இறைவன் மனிதனைப் படைத்த மேன்மையும், அவர்களை ஏதேன் தோட்டத்தில் சீவ மரக்கனியை உண்ணக் கூடாது, நன்மை, தீமை அறியத்தக்க இந்த பழத்தை உண்டால் மரணம் ஏற்படும் எனக் கூறுவதுமாக நாடக வடிவில் அமைந்த பாடல்கள்.

பாடல் நடை

விதிவேத நாயகன் பாட்டென்று பாடி
மிக்கசர்போ சேந்திரன் மன்னவன் கேட்க

எனவும்,

சாஸ்திரக் கப்பற் றமிழரங் கேற்றித்
தஞ்சை அயினசு சரபோசேந்திரன் வாழ்க

என இரண்டாம் சரபோஜி மன்னரை போற்றி பாடுவதாக அமைந்தது.

பதிப்பு

இந்நூல் பொ.யு. 1897 ல் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது என ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page