under review

ஜெயன் கோபாலகிருஷ்ணன்

From Tamil Wiki
ஜெயன் கோபாலகிருஷ்ணன்

ஜெயன் கோபாலகிருஷ்ணன் (பிறப்பு: ஜூலை 3, 1984) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஜெயன் கோபாலகிருஷ்ணன் குமரி மாவட்டம் முருங்கவிளையில் கோபாலகிருஷ்ணன், லெட்சுமி இணையருக்கு ஜூலை 3, 1984-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் தம்பி பெருமாள். நாகர்கோயில் எஸ்.எல்.பி அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தெ.தி.இந்துக்கல்லூரியில் கணிப்பொறி அறிவியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். கணினி பயன்பாட்டியலில் (M.C.A) முதுகலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஜெயன் கோபாலகிருஷ்ணன் மென்பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார். ரதிமலரை அக்டோபர் 28, 2012-ல் திருமணம் செய்து கொண்டார். மகள் வெண்ணிலா, மகன் ஆதன். மென்பொறியாளராக சென்னையில் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

ஜெயன் கோபாலகிருஷ்ணனின் முதல் சிறுகதை 'அப்பாவின் குரல்' 2013-ல் ஜெயமோகன் தளத்தில் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு 'நின்றெரியும் சுடர்' யாவரும் பதிப்பகம் வெளியீடாக 2023-ல் வந்தது. யாவரும், வனம், கனலி, பதாகை ஆகிய இலக்கிய இணைய சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். தன் இலக்கிய ஆதர்சங்களாக ஜெயமோகன், சுந்தர ராமசாமி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

சிறுகதைத்தொகுப்பு
  • நின்றெரியும் சுடர் (2023)

இணைப்புகள்


✅Finalised Page