under review

ச. அர்ஜுன்ராச்

From Tamil Wiki
ச. அர்ஜுன்ராச்

ச. அர்ஜுன்ராச்( ச. அர்ஜுன்ராஜ்) (பிறப்பு: மார்ச் 04, 1984) தமிழ்க் கவிஞர். நவீன கவிதைகள் எழுதிவருகிறார்.

பிறப்பு, கல்வி

ச. அர்ஜுன்ராச்சின் இயற்பெயர் ச. அர்ஜுன்ராஜ். காஞ்சிபுரத்தில் சண்முகம் - அமிர்தம் இணையருக்கு மார்ச் 04, 1984-ல் பிறந்தார். ஆறாம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்றார். பின்னர் நெசவுத் தொழில் செய்து வந்தார். அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இறையன்புவால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்ட நிலவொளிப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்றார். அண்ணமாலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்விமுறையில் பயின்று ஆங்கிலம் & தொடர்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ச. அர்ஜுன்ராச் மோ. உஷாவை பிப்ரவரி 11, 2018-ல் திருமணம் செய்து கொண்டார். மகள் தயாழினி

இலக்கிய வாழ்க்கை

ச. அர்ஜுன்ராச்சின் முதல் படைப்பான கவிதை 2020-ம் வெளியானது. முதல் கவிதைத் தொகுப்பு 'ராஜ Single' யாவரும் பதிப்பக வெளியீடாக 2023-ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து மின்னிதழ்கள் மற்றும் அச்சிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார். ச, அர்ஜுன்ராச்சின் கவிதைகள் கனலி, அகழ், தடாரி, நீலம், சொல்வனம், உயிர்மை ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக சுந்தர ராமசாமி, இசை, மனுஷ்ய புத்திரன் ஆகியோரையும் சமகாலத்தில் சபரிநாதன், நெகிழன் ஆகியோரையும் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

கவிதை தொகுப்புகள்
  • ராஜ Single (2023, யாவரும் பதிப்பகம்)
  • நகரத்தின் இருப்பதிலேயே மிக மலிவான பிராண்ட் (உயிர்மை பதிப்பகம்)

இணைப்புகள்



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2026, 18:45:03 IST