under review

சேந்தன் கீரனார்

From Tamil Wiki

சேந்தன் கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

சேந்தன் கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கீரனார் என்னும் இயற்பெயரை கொண்டவர். சேந்தன் என்பவரின் மகன் என கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

சேந்தன் கீரனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 311-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவனுக்கும் தனக்குமான காதல் ஊர் பெண்களின் அலர் கூறுதலுக்கு(புறம் பேசுதல்) இரையாகி விட்டதை அறிந்து வருந்திய தலைவி தோழியிடம் கூறுவதாக நெய்தல் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • புலவு மணம் வீசும் பெரிய கடலின் கரையில் தலைவனின் தேரை கல் என்று ஓசையெழுப்பியபடி தேர்ப்பாகன் ஓட்டுகிறான்.
  • வெண்மணல் மேட்டில் தாழ்ந்து வளர்ந்துள்ள புன்னை மரத்தின் மகரந்தம் நிறைந்த மலர்களை நள்ளிரவில் சென்று ஊர் பெண்கள் பறித்து வருவர்.

பாடல் நடை

குறுந்தொகை - 311

  • திணை: நெய்தல்
  • துறை: அலரஞ்சிய தலைமகள்,தலைமகன் சிறைப் புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

 அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற்
புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும்
நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர்
யான்கண் டனனோ இலனோ பானாள்
ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத்
தாதுசேர் நிகர்மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன்கண் டன்றே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jan-2025, 17:47:18 IST