செல்லூர் கொற்றனார்
From Tamil Wiki
செல்லூர் கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
செல்லூர் கொற்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.செல்லூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
செல்லூர் கொற்றனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 363-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டச் செல்வதாக உள்ள தலைவனின் செயலை அறிந்த தோழி, தலைவியை பிரிவதால் உண்டாகும் துன்பத்தை உரைப்பதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- மேய்ச்சலுக்கு விடப்படும் மலை எருதின் கொம்பில் மலர் மாலை சூட்டி அலங்கரிப்பர்.
- மலை எருதானது உகாய் மரத்தின் நிழலில் நின்றவாறு அருகம்புல்லை மேயும் காட்டு பசுவினை ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருக்கும்.
பாடல் நடை
குறுந்தொகை - 363
- திணை: பாலை
- கூற்று: பிரிவுணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது
கண்ணி மருப்பின் அண்ணநல் லேறு
செங்கோற் பதவின் வார்குரல் கறிக்கும்
மடக்கண் மரையா நோக்கிவெய் துற்றுப்
புல்லரை உகாஅய் வரிநிழல் வதியும்
இன்னா அருஞ்சுரம் இறத்தல்
இனிதோ பெரும இன்றுணைப் பிரிந்தே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Apr-2025, 12:01:57 IST