under review

செங்கை ஆழியான்

From Tamil Wiki
நன்றி:கீற்று இதழ்

செங்கை ஆழியான்(க.குணராசா, நீலவண்ணன்)(ஜனவரி 25,1941- பிப்ரவரி 28, 2016) ஈழ எழுத்தாளர், நாவலாசிரியர், வரலாற்றாய்வாளர், பதிப்பாளர்.

பிறப்பு, கல்வி

க. குணராசா ஜனவரி 25,1941 அன்று யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் கந்தையா – அன்னம்மா இணையருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார்.ஆரம்பக் கல்வியை யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையிலும்,இடைநிலைக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் புவியியலில் சிறப்புப் பட்டதாரியாகத் தேர்ச்சி பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 1984-ம் ஆண்டு முதுகலைப் பட்டமும், 1991-ம் ஆண்டு 'கலாநிதி' பட்டமும் பெற்றார்.

தனி வாழ்க்கை

குணராசா பேராதனைப் பல்கலைக்கழத்தில் பயிற்சியாளராகவும், கொழும்பு பல்கலைக் கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றினார். கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையில் வருகைதரு விரிவுரையாளராகவும், ஆறு ஆண்டுகள் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1971-ல் இலங்கை நிர்வாக சேவைத் தேர்வில் தேர்ச்சி பெற்று , கிண்ணியா, செட்டிக்குளம் ஆகிய ஊர்களில் காரியாதிகாரியாகப் பணியாற்றினார். உதவி அரசாங்க அதிபராகவும், மேலதிக அரசாங்க அதிபராகவும், பிரதிக்காணி ஆணையாளராகவும் செயல்பட்டார். கிளிநொச்சி மாவட்டம் உருவாகியபோது, அம்மாவட்டத்தின் நிர்வாகத்தினை ஒழுங்குபடுத்திய நிர்வாக சேவை அதிகாரிகளில் ஒருவராகச் செயல்பட்டார். நிர்வாக சேவை அதிகாரியாக வன்னிப் பிரதேசத்தில் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பிரதேச செயலாளராக பதவி வகித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பதிவாளராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். இறுதியாக நல்லூர் பிரதேசச் செயலாளராக கடமையாற்றி 2001-ம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்றார்.

ஓய்வு பெற்ற பின்னரும் சங்கானை, தெல்லிப்பனை ஆகிய பிரதேசங்களின் பிரதேசச் செயலாளராகவும் , வடக்கு கிழக்கு மகாணத்தின் வடபிராந்திய ஆணையாளராகவும் பதவி வகித்தார். பின்னர் ஓராண்டு காலம் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளராகப் பணிபுரிந்தார்.

குணராசாவின் மனைவி கமலாம்பிகை. மகள்கள் ரேணுகா, பிரியா, ஹம்சா

இலக்கிய வாழ்க்கை

செங்கை ஆழியானின் சிறுகதைகள் ஈழநாடு, வீரகேசரி, தினகரன், புதினம், செய்தி, சஞ்சீவி, சுதந்திரன், சிந்தாமணி, இளங்கதிர், தமிழின்பம், கதம்பம், கலைச்செல்வி, தேனருவி, அமுதம், விவேகி, இலக்கியம், மலர், அஞ்சலி, மல்லிகை, மாணிக்கம், அமிர்தகங்கை, மாலைமுரசு, வெளிச்சம், நான், ஆதாரம், அறிவுக்களஞ்சியம் , அர்ச்சுனா, ஈழமுரசு, நுண்ணறிவியல், சிரித்திரன், தினக்குரல், ஈழமுரசு, மறுமலர்ச்சி , ஈழநாதம், புதிய உலகம் முதலிய இலங்கை இதழ்களிலும் , உமா, தாமரை , கணையாழி, குமுதம், சுபமங்களா , கலைக்கதிர், கலைமகள், ஆனந்தவிகடன் முதலிய தமிழ்நாட்டு இதழ்களிலும், ஈழநாடு ( பாரீஸ்) , ஈழகேசரி ( லண்டன்) , கனடாவிலிருந்து வெளிவரும் 'நம்நாடு', 'தாயகம்', 'செந்தாமரை', 'உதயன்' முதலிய இதழ்களிலும் வெளிவந்ததுள்ளன.

இவரது 'இரவு நேரப் பயணிகள்' என்ற சிறுகதைத் தொகுப்பு, ‘ராத்திரி நொனசாய்’ எனச் சிங்களத்தில் சாமிநாதன் விமல் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ‘காட்டாறு’ என்ற நாவல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘வன மத கங்க’ என்ற பெயரிலும், ‘வாடைக்காற்று’ என்ற நாவலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டு உள்ளது.

புவியியல் தொடர்பான எழுத்து

Geography of Ceylon , Geography of World, Geography of India, Environmental Geography, Physical Geography, Human Geography, Topography உட்பட 35-க்கும் மேலான புவியியல் சம்பந்தமான நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘பூமியின் கதை’ என்ற புவியியல் நூல் பல பல்கலைக் கழகங்களில் பாடநூலாக இடம் பெற்றுள்ளது.

ஆவணப்படுத்தல்

மட்டக்களப்பில் ஏற்பட்ட சூறாவளியைப் பற்றி அவர் எழுதிய '12 மணி நேரம்' என்கிற நூலும், ஆகஸ்ட் 1977-ன் இனக்கலவரத்தின் முதல் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச வன்முறைகள் பற்றி அவர் எழுதிய '24 மணி நேரம்' என்கிற நூலும் முக்கியமான ஆவணங்கள். இந்த இரண்டு நூல்களையும் 'நீல வண்ணன்' என்ற புனைபெயரில் எழுதினார்.

விருதுகள், பரிசுகள்

  • இலங்கை தேசிய சாகித்திய மண்டலப் பரிசுகள் ( நான்கு) ,
  • சென்னை இலக்கியச் சிந்தனைப் பரிசு,
  • ஈழ நாடு 10 ஆவது ஆண்டு நாவல் பரிசு மற்றும் சிறு கதைப் பரிசு,
  • வடகிழக்கு மாகாண சாகித்திய விருதுகள் (ஆறு) ,
  • இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசு (ஐந்து) ,
  • கொழும்பு தமிழ்ச் சங்கப் பரிசுகள் (இரண்டு) ,
  • தமிழ்நாடு லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கியப் பரிசு,
  • கலைமகள் குறுநாவல் போட்டி பரிசு,
  • விஜயகுமாரதுங்க கலாச்சார விருது,
  • அரசகரும மொழித் திணைக்கள கலாச்சார நிகழ்ச்சித் திட்டப் பரிசு,
  • அமுதம் சிறுகதைப் போட்டி பரிசு,
  • இளங்கதிர் குறுநாவல் போட்டி பரிசு,
  • வீரகேசரி அகில இலங்கை நாவல் போட்டி பரிசு
  • இலங்கை இந்து கலாச்சார அமைச்சின், ‘ இலக்கியச் செம்மல்’ பட்டம்
  • .கனடா சி.வை. தாமோதரம்பிள்ளை ஒன்றியம் ‘புனைகதைப் புரவலர்’ விருது
  • வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு ‘ஆளுநர் விருது’
  • இலங்கை அரசு இலக்கியத் துறையின் உயர்ந்த விருதான ‘சாகித்திய ரத்னா’ ( 2009)
  • ‘கலைஞானச் சுடர்’ ‘கலாபூஷணம்’ பட்டங்கள்

இலக்கிய இடம்

ஈழத்தின் இன்றைய படைப்பாளர்களுள் செங்கை ஆழியான் மிகவும் வெற்றிகரமானவர்” என ஈழத்து மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பி புகழ்ந்துரைத்துள்ளார்.

“இலங்கை எழுத்தாளர்களில் டேனியலும் செங்கை ஆழியானும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் தம் நாவல்களில் இடம் பெறும் மனிதர்கள் பற்றிய சமூகச் சூழல் , பொருளியல் சூழல், வரலாற்று விபரங்கள் ஆகியவற்றை நிறையத் தருவதில் தமிழ் நாட்டு முற்போக்காளர்களைவிடச் சிறந்து இருக்கிறார்கள்.” என ‘ மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் ’ என்ற நூலில் இலக்கிய விமர்சகர் கோவை ஞானி பாராட்டியுள்ளார்.

மறைவு

செங்கை ஆழியான் பிப்ரவரி 28, 2016 அன்று காலமானார்.

படைப்புகள்

நாவல்கள், குறுநாவல்கள்
  • நந்திக்கடல்
  • சித்திரா பௌர்ணமி
  • ஆச்சி பயணம் போகிறாள்
  • முற்றத்து ஒற்றைப் பனை
  • வாடைக்காற்று
  • காட்டாறு
  • இரவின் முடிவு
  • ஜன்ம பூமி
  • கந்தவேள் கோட்டம்
  • கடற்கோட்டை
சிறுவர் இலக்கியம்
  • பூதத்தீவுப் புதிர்கள்
  • ஆறுகால்மடம்
வரலாற்று நூல்கள்
  • இலங்கைச் சுருக்க வரலாறு
  • சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு
  • ஈழகேசரிச் சிறுகதைகள்
  • ஈழத்தவர் வரலாறு (கி.மு 500 - கி.பி 1621)
யாழ்ப்பாண அரச பரம்பரை
  • நல்லை நகர் நூல்
  • 24 மணிநேரம்
  • மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்
ஆய்வு நூல்கள்
  • ஈழத்துச் சிறுகதை வரலாறு
தொகுப்புக்கள்
  • மல்லிகைச் சிறுகதைகள் - 1
  • மல்லிகைச் சிறுகதைகள் - 2
  • சுதந்திரன் சிறுகதைகள்
  • மறுமலர்ச்சிச் சிறுகதைகள்
  • ஈழகேசரிச் சிறுகதைகள்
  • முனியப்பதாசன் கதைகள்
  • ஆயிரமாயிரம் ஆண்டுகள்
புவியியல்
  • அடிப்படைப் புவியியல் உலகம் இலங்கை
  • இலங்கைப் புவியியல்
  • அடிப்படைப் புள்ளிவிபரவியல்
  • அடிப்படைப் புவியியல்
  • அபிவிருத்திப் புவியியல் (1985)
  • அபிவிருத்திப் புவியியல் (1988)
  • அபிவிருத்திப் புவியியல் (1992)
  • அபிவிருத்திப் புவியியல் (1994)
  • அபிவிருத்திப் புவியியல் இந்தியா
  • ஆரம்பப் புவியியல் எட்டாம் வகுப்புக்குரியது: உலகம் இலங்கை பாடப்பயிற்சி
  • ஆரம்பப் புவியியல்: எட்டாம் வகுப்புக்குரியது
  • இலங்கைப் புவியியல்
  • இலங்கைப் புவியியல் (1988)
  • இலங்கைப் புவியியல் (1995)
  • இலங்கைப் புவியியல் 1965
  • இலங்கைப் புவியியல் 1973
  • இலங்கைப் புவியியல் 1994
  • இலங்கையின் புவிச்சரிதவியல்
  • பொருளாதாரப் புவியியல்
  • பொருளாதாரப் புவியியல் (1972)
  • பொருளாதாரப் புவியியல் (1975)
  • சுற்றாடற் புவியியல்
  • சுற்றாடற் புவியியல் (2007)
  • சுற்றாடற் புவியியல் 1995
  • ஆரம்பப் புவியியல் எட்டாம் வகுப்புக்குரியது: உலகம் இலங்கை பாடப்பயிற்சி
  • ஆரம்பப் புவியியல்: எட்டாம் வகுப்புக்குரியது
  • ஏழாந்தரப் புவியியற் படவேலை
  • ஐக்கிய அமெரிக்காவின் புவியியல்
  • ஐக்கிய இராச்சியம்
  • ஐக்கிய இராச்சியம் (1989)
  • புவியியல் தரம் 6 (மாதிரி வினாவிடை)
  • புவியியல் தேசப்படத் தொகுதி
  • புவியியல் தேசப்படத் தொகுதி (1987)
  • புவியியல் தேசப்படத் தொகுதி (1993)
  • புவியியல் புள்ளிவிபரவியல்
  • புவியியல் வழிகாட்டி
  • புவிவெளியுருவவியல்
  • புவிவெளியுருவவியல் (1978)
பிற
  • நல்லை நகர் நூல்
  • ஈழத்தவர் வரலாறு

ஆவணப்பதிவுகள்

  • 12 மணி நேரம்
  • 24 மணி நேரம்
  • The Jaffna Dynasty
  • அக்கினி
  • அக்கினிக் குஞ்சு
  • அடிப்படைப் புள்ளிவிபரவியல்
  • அலையின் கீதம்
  • ஆச்சி பயணம் போகிறாள்
  • ஆயிரமாயிரம் ஆண்டுகள்
  • ஆய்ந்தறிதல் திறன்
  • ஆறாந்தரப் படவேலை சமூகக்கல்வி
  • ஆறுகால்மடம்
  • இடவிளக்கவியற் படங்கள்
  • இந்தியத் துணைக்கண்டப் புவியியல்
  • இரவு நேரப் பயணிகள்
  • இலங்கை சுருக்க வரலாறு (கி.மு. 6ம் நூற்றாண்டு முதல் 2007 வரை
  • இலங்கைச் சுருக்க வரலாறு
  • ஈழகேசரிச் சிறுகதைகள்
  • ஈழத்தவர் வரலாறு (கி.மு 500 - கி.பி 1621)
  • ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
  • ஈழத்துச் சிறுகதை வரலாறு
  • ஈழராஜா எல்லாளன்
  • உலகப் புவியியல்
  • உலகப் புவியியல் (1972)
  • எச்சாட்டி அம்மன் ஆலய வரலாறு
  • எட்டாந்தரப் படவேலை சமூகக்கல்வி
  • எஸ். ஜோனின் யாழ்ப்பாணச் சரித்திரம் 1878: ஓர் மீள்வாசிப்பு
  • ஏன் எப்படி எவரால்
  • ஏழாந்தரப் புவியியற் படவேலை
  • ஒரு மைய வட்டங்கள்
  • ஓ அந்த அழகிய பழைய உலகம்
  • கங்கைக்கரை ஓரம்
  • கடல் கோட்டை
  • கதைப் பூங்கா
  • கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள்
  • களம் பல கண்ட யாழ் கோட்டை
  • காட்டாறு
  • காற்றில் கலக்கும் பெருமூச்சுகள்
  • காவோலை
  • கிடுகு வேலி
  • கிரகித்தல்
  • கிரகித்தல் (1989)
  • குந்தி இருக்க ஒரு குடிநிலம்
  • குவேனி
  • கூடார வாழ்க்கை
  • கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத ஆமைகளும்
  • கொத்தியின் காதல்
  • கொழும்பு லொட்ஜ்
  • சந்திரனின் கதை
  • சமூகக்கல்வி: தரம் 10
  • சமூகக்கல்வி: தரம் 10 (1978)
  • சாம்பவி
  • சிங்களச் சிறுகதைகள்
  • சித்திரா பௌர்ணமி
  • சுதந்திரன் சிறுகதைகள்
  • சுனாமி கடற்கோள் 26/12 (2004)
  • சுருட்டுக் கைத்தொழில்
  • சுற்றுச் சூழலியல்
  • சூரியனின் கதை
  • சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு
  • சூழலியல்
  • சூழலியல் (2002)
  • செய்கைமுறைப் படவேலை
  • செய்கைமுறைப் படவேலை (1967)
  • செய்கைமுறைப் படவேலை (1978)
  • ஜன்ம பூமி
  • ஞாயிற்றுத் தொகுதி
  • தீம்தரிகிட தித்தோம்
  • தேவன் யாழ்ப்பாணம் சிறுகதைகள்
  • நடந்தாய் வாழி வழுக்கியாறு
  • நந்திக் கடல்
  • நல்லூர்க் கந்தசுவாமி கோயில்
  • நல்லை நகர் நூல்
  • நானும் எனது நாவல்களும்
  • நுண்ணறிவு (குணராசா, க.)
  • படம் வரைகலை
  • படவரைகலையில் எறியங்கள்
  • படவரைகலையில் எறியங்கள் (1965)
  • படவரைகலையில் எறியங்கள் (1999)
  • படவேலை
  • பனங்கூடல்
  • பிரபஞ்சம்
  • பிரளயம்
  • பிரித்தானிய தீவுகளின் புவியியல்
  • புதிய சமூகக்கல்வி பயிற்சிகள் ஆண்டு 10 (வினா விடைகள்)
  • புதிய புவியியல் - இலங்கை
  • புதிர்கள்
  • புள்ளிவிபரப் படவரைகலையியல்
  • பூதத்தம்பி
  • பூதத்தீவுப் புதிர்கள்
  • பூமித்தாய்
  • பூமியின் கதை
  • பெளதிகச் சூழல் நிலவுருவங்கள்
  • பெளதிகச் சூழல் நிலவுருவங்கள் (1994)
  • பெளதீகச்சூழல் காலநிலையியல்
  • பொது அறிவு (1993)
  • பொது அறிவு (குணராசா, க.)
  • பொது அறிவு: பகுதி 2
  • பொது அறிவுச் சோதனை
  • பொது உளச்சார்பு
  • பொது உளச்சார்பு (1990)
  • பொது விவேகப் பயிற்சிகள்
  • பொருளாதாரப் புவியியல்
  • பொருளாதாரப் புவியியல் (1972)
  • பொருளாதாரப் புவியியல் (1975)
  • போரே நீ போ
  • பௌதிகச் சூழல் காலநிலையியல் 1979
  • பௌதிகச் சூழல் காலநிலையியல் 1984
  • பௌதிகச் சூழல் நிலவுருவங்கள் 1982
  • பௌதிகப் புவியியல்: க.பொ.த உயர்தரம்
  • பௌதிகப் புவியியல்: க.பொ.த உயர்தரம் (1968)
  • பௌதிகப் புவியியல்: க.பொ.த உயர்தரம் (1975)
  • பௌதீகப் புவியியல் 2
  • மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்
  • மண்ணின் தாகம்
  • மறுமலர்ச்சிக்கதைகள்
  • மல்லிகைச் சிறுகதைகள்
  • மல்லிகைச் சிறுகதைகள் 2
  • மழைக்காலம்
  • மழைக்காலம் (1988)
  • மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து
  • மாணவர் இலகு தேசப்படத் தொகுதி
  • மானிடப் புவியியல்
  • மானிடப் புவியியல் (1997)
  • மானிடப்புவியியல்
  • மாமன்னன் சங்கிலியன்
  • மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது
  • மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது (2003)
  • மீண்டும் வருவேன்
  • முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள்
  • முற்றத்து ஒற்றைப்பனை
  • மெல்ல இருள் இனி விலகும்
  • யாககுண்டம்
  • யானை
  • யானை (1991)
  • யாழ்ப்பாண அரச பரம்பரை
  • யாழ்ப்பாண தேசம்
  • யாழ்ப்பாண வைபவமாலை
  • யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு
  • யாழ்ப்பாணச் சரித்திரம் 1912: ஒரு மீள்வாசிப்பு
  • யாழ்ப்பாணத்து ஆறுமுகசுவாமி
  • யாழ்ப்பாணத்து இராத்திரிகள்
  • யாழ்ப்பாணம் பாரீர்
  • யுத்த பூமி
  • ருத்திர தாண்டவம்
  • வரலாறு: ஆண்டு 11
  • வரலாறும் சமூகக் கல்வியும் பட வேலை பயிற்சிகள்: ஆண்டு 11
  • வற்றா நதி
  • வாடைக்காற்று
  • வானும் கனல் சொரியும்
  • விடியலைத் தேடி
  • விமான ஒளிப்படங்கள்
  • விமான ஒளிப்படங்கள் (1997)

உசாத்துணை


✅Finalised Page