under review

சித்திரவீதிக்காரன்

From Tamil Wiki

To read the article in English: Chithiraiveedhikaran ‎

சித்திரவீதிக்காரன் (இயற்பெயர்: சுந்தர்) (பிறப்பு: நவம்பர் 4, 1984) வரலாற்று, பண்பாட்டு வலைப்பதிவாளர், எழுத்தாளர். தமிழகத்தில் குறிப்பாக மதுரையைச் சுற்றியுள்ள பண்பாட்டு, நாட்டார் நிகழ்வுகளை பதிவு செய்து வருகிறார்.

பிறப்பு, கல்வி

சித்திரவீதிக்காரன் நவம்பர் 4, 1984 அன்று மதுரையில் சொக்கலிங்கம், ரேணுகா இணையருக்குப் பிறந்தார். மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையும், மதுரை செயிண்ட் பிரிட்டோ பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையும், திரு.வி.க. மாநகராட்சி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரையும் தமிழ் வழியில் பயின்றார். கருவியியல் & கட்டுப்பாட்டுத் துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றார். மதுரை புத்தகத் திருவிழா தொடங்கிய பிறகு தமிழ் மீதான ஆர்வத்தால் மதுரை காமராசர் பல்கலையில் தொலைநிலைக் கல்வி வழியாக தமிழில் இளங்கலை பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சித்திரவீதிக்காரன் ராணி மீனாட்சியை செப்டம்பர் 8, 2013 அன்று மணந்தார். மகள் மதுரா.

பண்பாட்டுப் பணி

சுந்தர் சித்திரவீதிக்காரன் என்ற பெயரில் 2010-ம் ஆண்டு முதல் வலைப்பதிவுகள் எழுதி வருகிறார். மதுரை சார்ந்தும், தமிழ் எழுத்துலகம், நாட்டாரியல் சார்ந்து தரவுகள், நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வருகிறார். மதுரையைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சுவடுகளை அடையாளப்படுத்தும் நோக்கில் செயல்படும் 'பசுமை நடை' குழுவின் தன்னார்வச் செயல்பாட்டாளராக உள்ளார். பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவனின் வெளிவராத உரைகளை எழுத்தாக்கம் செய்து 'நமது அறிவுச் செல்வம்' என்ற நூலாகத் தொகுத்திருக்கிறார்.

விருதுகள்

  • 2021-ம் ஆண்டிற்கான மதுரை மண்ணின் மைந்தர்கள் விருது
  • 2023-ம் ஆண்டிற்கான நூலக ஆர்வலர் விருது, தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை

நூல்கள்

  • திருவிழாக்களின் தலைநகரம் - மதுரை
  • கேட்டி வில்காக்ஸ் - மேற்கிலிருந்து வந்த செம்பரிதி
தொகுப்பு
  • நமது அறிவுச் செல்வம் - தொ. பரமசிவன் உரைகள், வாசல் பதிப்பக வெளியீடு

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Aug-2026, 22:07:37 IST