under review

சிதம்பரநாதத் தம்பிரான்

From Tamil Wiki

சிதம்பரநாதத் தம்பிரான் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். திரியுகங்கண்ட தேவி மாலை முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

சிதம்பரநாதத் தம்பிரான் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் 1849-ல் சுப்பிரமணிய பிள்ளைக்கும், முத்தம்மாளுக்கும் பிறந்தார். சிதம்பரம் என்பது இயற்பெயர். வள்ளியூரில் பள்ளிக் கல்வி பயின்றார். வயிற்று நோயால் பாதிக்கப்பட்டார். திருவாடுதுறை ஆதினம் பதினான்காவது பட்டம் சுப்பிரமணிய தேசிகரிடம் தீட்சையும் கல்லாடையும் பெற்றார். திருநெல்வேலி, திருவாடுதுறை, மதுரை, திருத்தில்லை ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று திருப்பணிகள் செய்தார். தன் இறுதி காலத்தில் திருநெல்வேலியை அடைந்து திருப்பணிகள் செய்து காலமானார்.

இலக்கிய வாழ்க்கை

சிதம்பரநாதத் தம்பிரான் தன் தீராத வயிற்றுவலியைப் போக்கிய திரியுகங்கண்ட தேவி மீது முப்பது பாடல்களைக் கொண்ட 'திரியுகங்கண்ட தேவி' மாலை நூலை இயற்றினார். தனிப்பாடல்கள் பல பாடியுள்ளார்.

நூல் பட்டியல்

  • திரியுகங்கண்ட தேவி மாலை

உசாத்துணை


✅Finalised Page