under review

சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருதுகள்

From Tamil Wiki
யுவபுரஸ்கார் விருது

இந்திய இளைஞர்களிடையே இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சாகித்ய அகாதெமி நிறுவனம், அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் யுவபுரஸ்கார் விருதினை வழங்குகிறது. 2011 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.

யுவபுரஸ்கார் விருது

இந்திய இளைஞர்களிடையே இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இலக்கியத்திற்குச் சிறந்த பங்களிப்பாற்றும் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, சாகித்ய அகாதெமி நிறுவனம், ஆண்டுதோறும் யுவ புரஸ்கார் விருதினை வழங்குகிறது. 2011 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஐம்பதாயிரம் ரூபாய் பரிசினையும், சால்வையையும், கேடயத்தையும் கொண்டது.

யுவபுரஸ்கார் விருதாளர்கள் - 2022 வரை

ஆண்டு நூலாசிரியர் படைப்பு படைப்பின் தன்மை
2011 ம. தவசி சேவல்கட்டு நாவல்
2012 மலர்வதி தூப்புக்காரி நாவல்
2013 கதிர் பாரதி மெஸ்ஸியாவுக்கு மூன்று மச்சங்கள் கவிதை
2014 ஆர். அபிலாஷ் கால்கள் நாவல்
2015 வீரபாண்டியன் பருக்கை நாவல்
2016 லக்ஷ்மி சரவணகுமார் கானகன் நாவல்
2017 மனுஷி (ஜெ. ஜெயபாரதி) ஆதிக் காதலின் நினைவு குறிப்புகள் கவிதை
2018 சுனில் கிருஷ்ணன் அம்பு படுக்கை சிறுகதைத் தொகுப்பு
2019 சபரிநாதன் வால் கவிதை
2020 சக்தி மரநாய் கவிதை
2021 கார்த்திக் பாலசுப்ரமணியன் நட்சத்திரவாசிகள் நாவல்
2022 ப. காளிமுத்து தனித்திருக்கும் அரளிகளின் மதியம் கவிதை

உசாத்துணை

சாகித்ய அகாதெமி இணையதளம்


✅Finalised Page