under review

சப்த ஸ்தானம், திருவையாறு

From Tamil Wiki
ஏழூர் திருவிழா ஐயாறப்பர் எழுந்தருளல்
திருவையாறு பொம்மை பூச்சொரிதல் (விக்கிபீடியா)

சப்த ஸ்தானம் ( திருவையாறு) : தஞ்சையில் திருவையாறு ஐயாறப்பன் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ள ஏழு சிவன் கோயில்கள்.

(பார்க்க சப்த ஸ்தானம்)

தொன்மம்

ஏழு மாமுனிவர்களான (சப்தரிஷிகள்) காசியபர் (கண்டியூர்), கௌதமர் (பூந்துருத்தி), ஆங்கிரசர் (சோற்றுத்துறை), குத்ஸர் (பழனம்), அத்திரி (திருவேதிகுடி), பிருகு (நெய்த்தானம்), வசிட்டர் (ஐயாறு) ஆகியோர் இங்கு இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

ஏழூர் திருவிழா

சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று திருவையாறு உறையும் ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஏழு ஊர்களுக்கு பல்லக்கில் செல்வார். அங்குள்ள இறைவன்கள் அவரை எதிர்கொண்டு அழைப்பார்கள். மறு நாள் காலை ஏழு சிவமூர்த்திகளும் ஊர்வலமாகக் கிளம்பி திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவார்கள். தில்லைஸ்தானம் என்னும் இடத்தில் ஆற்றங்கரையில் வாணவேடிக்கை நிகழும். திருவையாறில் ஒரு பொம்மை ஏழு தெய்வங்களுக்கும் பூச்சொரிந்து வரவேற்கும் சடங்கு நிகழும்.

திருவையாறு சப்தஸ்தான ஆலயங்கள்

  • திருப்பழனம்
  • திருச்சோற்றுத்துறை
  • திருவேதிக்குடி
  • திருக்கண்டியூர்
  • திருப்பூந்துருத்தி
  • தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்)
  • திருவையாறு

உசாத்துணை


✅Finalised Page