கோவை அன்புமுத்து
கோவை அன்புமுத்து (இரா. அன்புமுத்து) (பிறப்பு: ஜனவரி 04, 1936) நாடக நடிகர், இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், இதழாளர். நடிப்பிற்காகவும், நாடக இயக்கத்திற்காகவும் பரிசுகள் பெற்றவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இரா. அன்புமுத்து எனும் கோவை அன்புமுத்து, ஜனவரி 04, 1936 அன்று, கோயம்புத்தூரில், எஸ். இராமசாமி - ஜானகி அம்மாள் இணையருக்குப் பிறந்தார்.
நாடக வாழ்க்கை
கோவை அன்புமுத்து, தனது ஒன்பது வயது முதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி பெற்றார். வைரம் நாடக சபாவில் சேர்ந்து பல நாடகங்களில் நடித்தார். தமிழகமெங்கும் சென்று பல்வேறு வேடமேற்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார்.
கோவை அன்புமுத்து திரைப்பட நடிகர் முத்துராமன், டி. பாலசுப்பிரமணியன், கவிஞர் சுப்பு ஆறுமுகம், சுகி. சுப்பிரமணியன், தேவிகா ராணி உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்தார்.
பொறுப்பு
கோவை மாவட்ட நாடக மற்றும் திரைப்படத் துணை நடிகர்கள் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர்
ஊடகம்
கோவை அன்புமுத்து, நாற்பதுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களில் நடித்தார்.
இதழியல்
கோவை அன்புமுத்து, 1963-ல், சென்னையிலிந்து வெளியான 'தேசியக் குரல்' இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். அவ்விதழில் 'நாடகக் கலை' பற்றிய பல கட்டுரைகளை எழுதினார்.
விருதுகள்
கோவை மாவட்டக் கலை மாமன்றம் 1984-ல் நடத்திய நான்காம் ஆண்டு நாடகக் கலை விழாவில் 'மஞ்சள் மலர் குங்குமம்' என்ற நாடகத்தில் நடித்தமைக்காகச் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான முதல்பரிசு பெற்றார்.
கோவை மாவட்டக் கலை மாமன்றம் 1984-ல் நடத்திய நான்காம் ஆண்டு நாடகக் கலை விழாவில் 'குலப் பெருமை' என்னும் நாடகத்தை இயக்கியமைக்காக சிறந்த இயக்குநருக்கான முதல் பரிசு பெற்றார்.
உசாத்துணை
நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Feb-2025, 09:53:01 IST