கே.ஜி. குப்புசாமி நாயுடு
From Tamil Wiki
- குப்புசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குப்புசாமி (பெயர் பட்டியல்)
- நாயுடு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நாயுடு (பெயர் பட்டியல்)
கே.ஜி. குப்புசாமி நாயுடு (தாரை குப்புசாமி) (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) தமிழ் நாடக நடிகர், நாடக ஆசிரியர். சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர். சிறந்த பெண் வேடதாரியாக அறியப்பட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
கே.ஜி. குப்புசாமி நாயுடு 'தாரா சஷாங்கம்' நாடகத்தில் தாரையாக நடித்துப் புகழ் பெற்றதால் 'தாரை குப்புசாமி' என்று அழைக்கப்பட்டார்.
நாடக வாழ்க்கை
கே.ஜி. குப்புசாமி நாயுடு நாடக உலகில் சிறந்த பெண் வேடதாரியாக இருந்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் அவரின் வேண்டுதலின் பேரில் நாடக ஆசிரியராக இருந்தார். கே.ஜி. குப்புசாமி நாயுடு சுவாமிகளின் சபையில் சேர்ந்தபின் ஏற்கனவே இருந்த நாடகங்களுடன் வேறு சில நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன.
அரங்கேற்றிய நாடகங்கள்
- ஞானசெளந்தரி
- தாரா ஷஷாங்கம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Aug-2024, 13:51:17 IST