குழற்றத்தனார்
குழற்றத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
குழற்றத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். குழற்றத்தனார் என தொகை சொல்லாக அமைந்த இவரது பெயரை குழல், தத்தனார் என பிரிக்கப்படுகிறது. தத்தனார் என்பது இயற்பெயர். குழலிசைக்க வல்லவர் என கருதப்படுகிறார்.
இலக்கிய வாழ்க்கை
குழற்றத்தனார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 242-வது பாடலாக அமைந்துள்ளது. திருமணமான பிறகு மகளை அவளது இல்லத்தில் கண்டு வந்த செவிலித்தாய், நற்றாய்க்கு கூறியதாக முல்லை திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- வெண்ணிற புள்ளிகள் உடைய காட்டு சேவலின் கழுத்தில் புதரில் இருந்து பனிநீர் வழிந்து சொட்டும். கோழிகள் பல சேர்ந்து எழுப்பும் ஒலியை ஒற்றை காட்டு சேவல் கூவியவாறு கழுத்தை சிலுப்பி கொள்ளும்.
- பூக்கள் மலர்ந்து நறுமணம் வீசும் முல்லை நிலத்தில் அமைந்த சிற்றூர் அது.
- அரச பணிக்காக தேரில் அவ்வப்போது வெளியூர் சென்று வருகிறான் தலைவன்.
பாடல் நடை
குறுந்தொகை - 242
திணை :முல்லை துறை: கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.
கானங் கோழி கவர்குரற் சேவல்
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்
புதனீர் வாரும் பூநாறு புறவிற்
சீறூ ரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு தொழிலொடு செலினும்
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க.கோவிந்தன்
- குறுந்தொகை - 242:Nallkurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2024, 10:47:30 IST