under review

குறுங்கீரனார்

From Tamil Wiki

குறுங்கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

குறுங்கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கீரனார் என்ற இயற்பெயரை கொண்டவர். குறுமை என்ற சொல்லுக்கு சிறியது என பொருள். எனவே குள்ளமான தோற்றத்தை கொண்டவராக இருந்திருக்கலாம் ஊகிக்கப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

குறுங்கீரனார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 382-வது பாடலாக அமைந்துள்ளது. பொருளீட்டச் சென்ற தலைவன் கார்க்காலத்தில் திரும்பி வராமை கண்டு வாடிய தலைவியை தேற்ற தோழி கூறியதாக முல்லை திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • குளிர்ந்த மழைத்துளிகள் விழுந்து பசுமையான முல்லை கொடியில் பூத்து நிற்கும் பூக்களின் மணம், புதரில் இருக்கும் செம்முல்லை பூவின் நறுமணத்தை ஒத்திருக்கிறது.

பாடல் நடை

குறுந்தொகை - 382

முல்லை திணை

  • துறை: பருவ வரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி, "பருவமன்று.வம்பு"என்று வற்புறீஇயது.

 தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை
முகைதலைத் திறந்த நாற்றம் புதல்மிசை
பூமலி தளவமொடு தேங்கமழ்பு கஞல
வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று
காரிது பருவம் ஆயின்
வாரா ரோநம் காத லோரே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Dec-2024, 10:48:08 IST