under review

குமார எட்டப்ப மகாராஜா

From Tamil Wiki
எட்டப்ப என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: எட்டப்ப (பெயர் பட்டியல்)
குமார என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குமார (பெயர் பட்டியல்)

குமார எட்டப்ப மகாராஜா (ராஜா ஜெகவீரா ராம குமார III எட்டப்ப நாயக்கர்) (தங்கசாமி பாண்டியன்) (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) எட்டப்ப நாயக்கர்களில் ஒருவர். ஒன்பதாவது ஜமீன்தாராக இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

குமார எட்டப்ப மகாராஜா 'தாத்தா மகாராஜா' என்று அழைக்கப்பட்டார். தங்கசாமி பாண்டியன் என்பது இயற்பெயர். ஒன்பதாவது ஜமீன்தார். 1928-1934 காலகட்டத்தில் ஜமீன்தாராக இருந்தார். இவரின் மகன்கள் தங்க மகாராஜா, காசி மகாராஜா. இவருக்கு முன் அரசராக இருந்தவர் ஜகவீர ராம வெங்கடேஸ்வரா II எட்டப்ப நாயக்கர்.

மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் மிகப்பெரிய பாளையங்களில் ஒன்றாக எட்டையபுரம் இருந்தது. எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி, போடிநாயக்கனூர், சேந்தமங்கலம், சாப்டூர் போன்ற பாளையங்களை எட்டப்பர் வம்சத்தினைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்தனர்.

பூர்விகம்

பொ.யு. 856-ல் ஆந்திரம் மாநிலம் சந்திரகிரியில் பெரியப்பா நாயக்கர் என்னும் சிற்றரசு ஆட்சியை நிறுவியது. இவர்கள் ராஜகம்பளம் இனத்தில் உள்ள சில்லவார் பிரிவைச் சேர்ந்தவர்கள். முகலாய மன்னர்களில் ஒருவர் கம்பளத்து இனத்தின் பெண்ணைக் கேட்டதாகவும் அதனால் தங்கள் இனப் பெண்களைக் காப்பாற்ற தெற்கு நோக்கி வந்ததாக நம்பப்படுகிறது. இக்கதை தொட்டிய நாயக்கர்களின் கதையினை போலவே உள்ளதாக அறிஞர்கள் கருதினர். தமிழகத்தில் இவ்வினத்து மக்கள் மேற்கு பகுதிகளிலும், வளமான பகுதிகளிலும் குடிபெயர்ந்தனர்.

கலைப் பங்களிப்பு

"குமார எட்டப்ப மகாராஜா கலையுணர்ச்சி உள்ளவர். எட்டயபுரத்தில் ஊருக்குப் பொதுவாக நாடக அரங்குகள் அமைத்தார். இதைத் தவிர அரசருக்குத் தனியாகவும் அவரின் புதல்வர்களுக்குத் தனியாகவும் என நாடக அரங்குகள் அமைத்தார்." என டி.கே.ஷண்முகம் எனது நாடக வாழ்க்கை என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Sep-2024, 18:53:22 IST