கிருஷ்ணமூர்த்தி
- கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிருஷ்ணமூர்த்தி (பெயர் பட்டியல்)
To read the article in English: Krishnamurthy.
கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு: பிப்ரவரி 21, 1994) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், நாவலாசிரியர். யாவரும் மின்னிதழ் ஆசிரியர். சிறுகதைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதி வருகிறார். இலக்கிய உரைகளும் நிகழ்த்தி வருகிறார்.
பிறப்பு, கல்வி
கிருஷ்ணமூர்த்தி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில், கணபதி சுப்ரமணியம், ரமாலக்ஷ்மி இணையருக்கு பிப்ரவரி 21, 1994-ல் பிறந்தார். சேலத்திலுள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பள்ளி கல்வி பயின்றார்.கோவையில் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (Nehru Institute of technology) இளங்கலைப்பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
கிருஷ்ணமூர்த்தி கயல்விழியை மார்ச் 10, 2019-ல் திருமணம் செய்து கொண்டார். மகன் ஆதிரன். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இதழியல்
கிருஷ்ணமூர்த்தி ஆகஸ்ட் 2025 முதல் யாவரும் இணைய இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலக்கிய வாழ்க்கை
கிருஷ்ணமூர்த்தியின் முதல் படைப்பு 'பிருஹன்னளை' என்ற நாவல் 2013-ல் பூபாளம் பதிப்பகம் வெளியீடாக வந்தது. குடும்ப அமைப்பிற்குள் இயல்பாக உள்ள அதிகாரச் சிடுக்குகளை நுட்பமாக கதைகளில் அதிகமாகக் கையாள்பவர். மத்திய வர்க்க வாழ்க்கை அவரின் கதைக்களமாக பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதல் சிறுகதை "நாவலுக்கான 23 குறிப்புகள்" 2014-ல் உயிர் எழுத்து இதழில் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு 'சாத்தானின் சதைத் துணுக்கு' 2016-ல் யாவரும் பதிப்பகம் வெளியீடாக வந்தது. உயிர் எழுத்து, கணையாழி, சிற்றேடு, நவீன விருட்சம், புரவி, ஆவநாழி, Bynge, யாவரும், வாசகசாலை, சொல்வனம் ஆகிய இதழ்களில் இவரின் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. நூல் மதிப்புரைகளை முன்னணி இலக்கிய பத்திரிக்கைகளிலும், நாளேடுகளிலும், மின்னிதழ்களிலும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக அசோகமித்திரன், நகுலன், சாரு நிவேதிதாவைக் குறிப்பிடுகிறார்.
விருதுகள்
- நற்றிணை பதிப்பகம் நடத்திய ப.சிங்காரம் நினைவு நாவல்போட்டியில் "அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்" என்ற நாவல் மூன்றாம் பரிசு வென்றது.
- இளம் படைப்பாளர் விருது - ஆரணங்கு சிறுகதைத் தொகுப்பிற்காக - கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2026
இலக்கிய இடம்
தமிழ்ச்சிறுகதைகளிலும் நாவல்களிலும் நேர்கோடற்ற கதைப்பாணியையும், மாய யதார்த்தத்தன்மை கொண்ட புதியவகை கதைசொல்லும் முறையையும் உருவாக்கும் எழுத்தாளராக கிருஷ்ணமூர்த்தி கருதப்படுகிறார்.
நூல்கள் பட்டியல்
நாவல்
- பிருஹன்னளை (2013, பூபாளம் பதிப்பகம்)
- அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள் (2014, நற்றிணை)
- பாகன் (2021, யாவரும் பதிப்பகம்)
- தழல் (2024, யாவரும் பதிப்பகம்)
சிறுகதைத் தொகுப்பு
- சாத்தானின் சதைத் துணுக்கு (2016, யாவரும் பதிப்பகம்)
- காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு (2018, யாவரும் பதிப்பகம்)
- ஆரணங்கு (2025, யாவரும் பதிப்பகம்)
கட்டுரைத் தொகுப்பு
- மாபெரும் கருவி (2026, யாவரும் பதிப்பகம்)
வெளி இணைப்புகள்
- புதினங்கள் புதிது: எம்.கோபாலகிருஷ்ணன்
- பிருஹன்னளை நாவல் பற்றி...
- பாகன் - நாவல் விமர்சனம் சாய் வைஷ்ணவி
- கிருஷ்ணமூர்த்தியின் கதைகள்: மணல் கடிகை
- பாகம் நாவல் விமர்சனம் - விகடன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:15 IST